This Page content-இந்த
பக்கத்தில் நீங்கள் அறிய இருப்பவைகள்
- Pooja Timing - பூசை நேரம்
- Thirumanjanam Timing - திருமஞ்சன காலங்கள்
- Koshit Sevai Timing - கோஷ்டி சேவை காலங்கள்
- Kattalai Archanai - கட்டளை அர்ச்சனை
- பிராத்தனைகள்
பூசை நேரங்கள்:
ஸ்ரீ
கண்ணன் திருக்கோயிலில் திருவரங்க பஞ்சாங்கம் பின்பற்றப்பட்டு வருகின்றது. பூசைகள் பாஞ்சராத்ர
ஆகமங்கள் படி நடைபெற்று வருகின்றன.தென் கலை சம்பரதாயம் பின்பற்றபட்டு வருகின்றது.
இரண்டு கால பூசை நடைபெற்று வருகின்றது.
காலை வேளைகளில் பூசை மஹா நெய்வேத்யங்களுடன் நடைபெறும்.
திருமஞ்சன காலங்கள்:
மாதந்தோறும் உரோகிணி,திருவோண
திருநட்சத்திரங்கள் முறையே திருமஞ்சனங்கள் மூலவர் , ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு நடைபெறும்.
இது தவிர நடைபெறும் சிறப்பு திருமஞ்சனங்கள்
வ.எண்
|
நாள்
|
விபரம்
|
01
|
தமிழ்
வருடப்பிறப்பு
சித்திரை
முதல் நாள்
|
மூலவருக்கு
திருமஞ்சனம் நடைபெற்று தமிழ்பஞ்சாங்கம் படிக்கப்படும்
|
02
|
அஷ்ய
திருதியை
|
ஸ்ரீலக்ஷ்மிஹயக்ரீவருக்கு
இந்த திருமஞ்சனம் நடைபெறும்
|
03
|
திருவாடிப்பூரம்
|
மூலவருக்கு
இத்திருமஞ்சனம் நடைபெறும் மூலவர் ஆண்டாள் கொண்டை சாற்றி அலங்காரம்
|
04
|
ஆடிப்பெருக்கு
|
ஆடி
மாதம் 18ஆம் நாள் இந்த திருமஞ்சனம் ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவருக்கு நடைபெறும்
|
05
|
ஸ்ரீ
கருட நாக பஞ்சமி
|
ஸ்ரீ
கருடாழ்வாருக்கு விசேட திருமஞ்சனம் நடைபெறும்
|
06
|
புரட்டாசி
சனிக்கிழமைகள்
|
மூலவருக்கு
அனைத்து புரட்டாசி சனிக்கிழமைகளிலும் திருமஞ்சனம் நடைபெறும் திருத்துளவ மாலை சாற்றி
சேவை தருவார்
|
07
|
விஜய
தசமி
|
மூலவர்
திருமஞ்சனம் நடைபெறும்
|
08
|
தீபாவளி
|
புத்தாடையுடன்
அனைவருக்கும் திருமஞ்சனம் நடைபெறும்
|
09
|
பாஞ்சராத்ர தீபம்
|
மூலவர் திருமஞ்சனத்துடன்
பாஞ்சராத்ர தீபம் ஏற்றி வழிபாடு நடைபெறும்
|
10
|
நாச்சியார் திருக்கோலம்
|
மூலவர் திருமஞ்சனம்
நடைபெற்று உற்சவர் நாச்சியார் திருக்கோலத்துடன் உட்பிரகாரம் புறப்பாடு கண்டருளல்
|
11
|
பொங்கல் தைதிருநாள்
|
அனைத்து பெருமாளுக்கும்
திருமஞ்சனம் காலை கண்டருளி உற்சவர் மாலை வையாழி சேவைக்காக புறப்பாடு அதன்பின் ஊஞ்சல்
சேவை கண்டருளல்
|
கோஷ்டி சேவை காலங்கள்:
வாரந்தோறும் சனிக்கிழமைகள்
மாலை வேளையில் 7.00 மணியளவில் திருப்பாவை கோஷ்டி சேவை நடைபெறும். இதில் திருப்பாவை,
திருப்பல்லாண்டு, வாரனம் ஆயிரம், ஆழ்வார்களுக்கு ஒருபாசுரம் வீதம் 12 பாசுரங்கள் சேவிக்கப்படும்.
ஆழ்வார்களிலின் வருடாந்திர திருநட்சத்திரங்களில் அவர்கள் அருளிச்செயலில் அனைத்தும்
சேவிக்கப்படும்.
கட்டளை அர்ச்சனை:
மாதந்தோறும் நடைபெறும்
திருமஞ்சன காலங்களிலும், வியாழக்கிழமைகளிலும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு, சனிக்கிழமை
ஸ்ரீ கண்ணபிரானுக்கு மற்றும் பஞ்சமி திதிகளில் ஸ்ரீ கருடாழ்வாருக்கும் கட்டளை திருமஞ்சனம்
நடைபெறும்.
னைகள் :
மூலவர்:
v மூலவர்
ஸ்ரீ யாதவக்கண்ணன் வேண்டுவன எல்லாம் தரும் (காமதேனு) கோமாதாவுடன் இங்கே சேவை ஸாதிக்கிறார்,
ஆகையால்
தாங்கள் வேண்டுதலுக்கு
உடனே சேவி சாய்க்கிறார்.
v ஸ்ரீ
சந்தான கோபால கிருஷ்ணன் ஸ்த்சந்தானம் வழங்கவே உங்களுக்காக காத்துக்கொண்டு இருக்கிறான்.
உரோகிணி திருமஞ்சன தினங்களில் வெண்ணை,கற்கண்டு படைத்து புத்திர பாக்கியத்திற்கு பரிகாரம்
பண்ணிக்கொண்டால் பலன் கைமேல் கிடைக்கும்.
v புத்திர
பாக்கியத்திற்க்கு மட்டுமல்ல வீடு கட்ட இவ்மூலவரை வணங்குதல் சிறப்பு.
v கன்னிப்பெண்கள்
இவரை நோக்கி விரதமிருந்து சனிக்கிழமைகளில் திருப்பாவையை இத்திருக்கோயிலில் சேவித்து
வந்தால் நல்ல வரன் அமைவது திண்ணம்.
v வேண்டுவன
எல்லாமருளும் இப்பிரானை மார்கழி மாதம் முதல் புதன் கிழமைகளில் அவல் படைத்து வேண்டினால்
குபேரனாக்குவான். ஏனென்றால் அன்று தான் குசேலன குபேரனாக்கிய தினம்.
v திருமஞ்சன
காலங்களில் பாலாபிசேகம் செய்தால் தங்கள் பசுவினை காக்கின்றான். நெற்பயிர் வளம் பெற
மூலஸ்தான திருவீளக்கீடு கைங்கர்யத்தில் ஈடுபட்டால் உடனடி பலன் கிடைக்கும்
ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர்
ஞான
தேவதைகளுக்கு எல்லாம் ஞான தேவனை விளங்கும் இவரைப் பற்றி அறியாதர் இலர். இவரை ஸ்ரீ லக்ஷ்மி
சமேதராக இங்கு சேவிப்பதால் கல்வி(யும்)ச்செல்வத்தினை எளிதே இங்கு பெற இயலும்.
சிறப்புகள்:
- ஸ்ரீ
லக்ஷ்மி ஹயக்ரீவர் இவ்வாலத்தில் பிரதிஷ்டை செய்த ஆண்டு இவ்வூர் அரசு உயர்நிலைப்பள்ளி
மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
- ஸ்ரீ
லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு மாசி மாதங்களில் ஏகதின இலட்சார்ச்சனை, விஷேச ஹோமங்கள் நடைபெற்று
வருகின்றன.
- கடந்த ஆண்டு இவ்வூர் பள்ளி அரசு பொது மேல்நிலை தேர்வில் 100% தேர்ச்சி விழுக்காட்டினை பெற்றுள்ளது.
வழிபாடுகள்:
- வியாழக்கிழமைகளில்
மாணவர்களும் பெற்றோர்களும் ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
- கிராம்பு,ஏலக்காய்
மாலை சாற்றி வழிபடுகின்றனர்.
- மாதந்தோறும்
நடைபெறும் திருவோண திருமஞ்சனத்தில் பங்கு கொள்கின்றனர்.
- கட்டளை அர்ச்சனைகள் வாரந்தோறும் வியாழக்கிழமைகளிலும்
திருவோண திருமஞ்சன நாட்களிலும் பங்கு கொள்கிறனர்.
- திருமஞ்சனத்திற்கு
தேன் வழங்குகின்றனர்
- வழக்குகளில் வெற்றி
பெற இங்கு சிறப்பு வழிபாடு செய்கின்றனர்.
- இங்கு
உள்ள ஸ்ரீ ஹயக்ரீவர் ஸ்ரீலக்ஷ்மி சமேதராக உள்ளதால் திருமணம் விரைவாக நடைபெறவும்
அருளுகின்றர்.-பக்தர்கள் கண்ட உண்மை
ஸ்ரீ கருடாழ்வார்:
கஷ்யப
மகரிஷிக்கும், வினதைக்கும் பிறந்த குழந்தை கருடன். விஷ்ணுவின் வாகனமான இவருக்கு `பெரியதிருவடி'
என்ற சிறப்புப் பெயர் உண்டு. கருடனின் தாய் வினதையைக் கத்ரு என்பவள் அடிமையாக்கினாள்.
அவளை அடிமைத்தளையில் இருந்து விடுவிக்க, தேவலோகத்திலுள்ள அமுத கலசத்தைக் கொண்டு வர
நிபந்தனை விதித்தாள்.
நெருப்புக்குண்டத்தின் நடுவில் அந்தக் கலசம் இருந்தது. அதை தைரியமாக எடுத்து கொண்டு வந்து கொடுத்து அன்னையை விடுவித்தார், கருடன். இவர் பெருமாளின் பக்தர் என்பதால் `கருடாழ்வார்' என்று அழைக்கப்படுகிறார்.
நெருப்புக்குண்டத்தின் நடுவில் அந்தக் கலசம் இருந்தது. அதை தைரியமாக எடுத்து கொண்டு வந்து கொடுத்து அன்னையை விடுவித்தார், கருடன். இவர் பெருமாளின் பக்தர் என்பதால் `கருடாழ்வார்' என்று அழைக்கப்படுகிறார்.
கருட,நாக பஞ்சமி
நாக
சதுர்த்திக்கு அடுத்த நாள்
வருவது கருட பஞ்சமி விரதம். மகளிர் விரதமிருந்து கருடனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம்
கிடைக்கும். மகப்பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாக
தோஷங்கள் விலகிவிடும்.
ஆர்வம்
நிறைந்த ஆழ்ந்த பக்தியுடன் கருடனை வழிபட்டால், வழிபாட்டின் முடிவில் கருட தரிசனம் கிடைப்பது
உறுதியாகும். கருட தரிசனம் கிடைத்தால் விரதத்தை உடனே முடித்துக்கொண்டு உணவருந்தலாம்.
.
No comments:
Post a Comment