Monday, 14 October 2024

ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி





கண்ணன் கழலினை                                                                          எண்ணும் திருநாமம்

நண்ணும் மனமுடையீர் !                                                                   திண்ணம் நாரணமே !!

இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயில்

(ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ப்ராத்தனை ஸ்தலம்)

 

மெய்யன்பர்களுக்கு வணக்கம்!

தமிழ் மாதங்களின் படி, ஆண்டின் ஏழாவது மாதம் ஐப்பசி ஆகும். சூரிய பகவான் துலாம் ராசியில் பயணிக்கும் 29 நாட்கள் தான் ஐப்பசி மாதம் ஆகும். ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பார்கள். அத்துடன் ஐப்பசி, ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. இம்மாதத்தில் இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளி உட்பட பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது.

புனிதமான ஐப்பசி மாதத்தில் அனைத்து புனித நதிகளும், தமிழகத்தில் ஓடும் தெய்வீக நதியான காவிரி நதியில் சங்கமிப்பதாக ஐதீகம். அத்தகைய காவிரி கரையில் அமைந்துள்ள நம் கண்ணன் திருக்கோயிலின் ஐப்பசி மாத வைபவங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.

இந்த துலா மாதம் முழுமைக்கும் நம் திருக்கோயிலின் திருவாரதனம் மற்றும் ஆறு திருமஞ்சனங்கள் சேர்த்து ஒரு உபயதாரரின் பங்கு ரூபாய்.3000/- மட்டுமே !

ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் இந்த ஐப்பசியில் மஹாலக்ஷ்மியின் அருட்பார்வை கிட்ட ஆண்டிற்கு ஒரு முறை இந்த ஐப்பசியில் உங்கள் கைங்கர்யத்தை துவங்குங்கள், உங்கள் வம்சம் வளரும் வரையில்

 

தேவைப்படும் இந்த மாத உபயங்கள்:

1.       நித்யபடி திருவாராதனம்                                                       ரூ.3000/-

2.       திருவிளக்கீடு (1 டின்)                                                               ரூ.2000/-

3.       நித்யபடி புஷ்ப கைங்கர்யம்                                                ரூ.1500/-

4.       ஒரு சிப்பம் அரிசி                                                                 ரூ.1200/-

5.       திருமஞ்சனம்                                                                               ரூ.1000/-

6.       ஆறு திருமஞ்சனங்களுக்கு மாலை                                   ரூ.1500/-

7.       ஆறு திருமஞ்சனங்களுக்கு பால்                                        ரூ. 300/-

8.       ஆறு திருமஞ்சனங்களுக்கு தயிர்                                       ரூ. 300/-

9.       தீபாவளி மூலவர் வஸ்திரம்                                              ரூ.1100/-

10.  தீபாவளி வேணுகோபாலன் வஸ்திரம்                            ரூ.850/-

11.  தீபாவளி இராஜகோபாலன் வஸ்திரம்                             ரூ.750/-

12.  தீபாலளி தாயார் வஸ்திரம் (3 தாயார்)                            ரூ.1950/-

13.  தீபாவளி லக்ஷ்மி ஹயக்ரீவர் வஸ்திரம்                           ரூ.500/-

14.  தீபாவளி கருடாழ்வார் வஸ்திரம்                                       ரூ.400/-

15.  தீபாவளி ஆஞ்சநேயர் வஸ்திரம்                                         ரூ.500/-

16. தீபாவளி விஜய கணபதி வஸ்திரம்                                   ரூ.400/-

17. தீபாவளி பெரியாழ்வார் வஸ்திரம்                                    ரூ.400/-

வங்கி கணக்கு விபரம்

SRI KANNAN TRUST

CITY UNION BANK

THIRUKKATTUPPALLI BRANCH

SB ACCOUNT NO:019001000928885

IFSC CODE: CIUB0000019

GPAY / PHONEPE : 8056901601 (PURUSOTHAMAN)

 

 

Contact our Trustee's Mr.M.Chinna Durai 9942604383 Mr.J.Gopikrishnan 9500264545 Mr.S.P.Purusothaman 8056901601

Monday, 16 September 2024

நவராத்திரி உற்சவத்திற்கு உபயதாரர்கள் வரவேற்கப்படுகின்றனர்

_நம் திருக்கோயிலில் தாயார் எழுந்தருளி ஏற்கும் முதல் நவராத்திரி உற்சவம் என்பதால் இந்த உற்சவத்திற்கு உபயதாரர்கள் வரவேற்கப்படுகின்றனர்_.
*இந்த உற்சவத்தின் உபயத்தொகையில்*

*1*.*தாயார் திருமஞ்சனம்* (_மூலவர் & உற்சவர் சேர்த்து_)

*2*.*இரண்டு புது புடவைகள்*
(_மூலவர் & உற்சவர் சேர்த்து_)

*3*.*உற்சவர் தாயார் புறப்பாடு*
(_புறப்பாடு அலங்காரம் உட்பட_)

*3*.*ஊஞ்சல் ஏழுந்தருளல் மங்களவாத்தியத்துடன் திருவாராதனை* 

*4*.*திருப்பாவை, நாச்சியார் திருமொழி கோஷ்டி* 

*5*.*தாம்பூலம் மரியாதை 9 சுமங்கலிப் பெண்களுக்கு*

*6*.*நைவேத்யம்* 
_அரை கிலோ பொங்கல்_ 
_இரண்டு கிலோ சுண்டல்_

*என இவைகள் அனைத்தும் அடங்கும்*
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
திருமகளும்மண்மகளும் ஆய்மகளும்சேர்ந்தால் * 
திருமகட்கேதீர்ந்தவாறென்கொல்? * - திருமகள்மேல் 
பாலோதம்சிந்தப் படநாகணைக்கிடந்த * 
மாலோதவண்ணர்மனம்
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

Sunday, 15 September 2024

Sri Hayagreevar Jayanthi 2024

*இளங்காடு கண்ணன் திருக்கோயிலின் ப்ரார்த்தனா மூர்த்தியாக விளங்கும் ஶ்ரீ திருமகள் உடனுறை பரிமுகப்பெருமானின் (ஶ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர்) திருஅவதார வைபவ தொகுப்பு*
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
https://photos.app.goo.gl/rsQKb5ZyKqYXLL5S9
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
வசையில்நான்மறைகெடுத்த அம்மலரயற்குஅருளி, *முன்பரிமுகமாய்* * 
இசைகொள்வேதநூலென்றிவைபயந்தவனே! எனக்குஅருள்புரியே * 
உயர்கொள்மாதவிப்போதொடுலாவிய மாருதம்வீதியின் வாய் * 
திசையெல்லாம்கமழும்பொழில்சூழ் திருவெள்ளறை நின்றானே

Wednesday, 11 September 2024

*ருண விமோசன விஜய கணபதி இளங்காடு கண்ணன் திருக்கோயிலில் விநாயகர் சதுர்த்தியில் சேவை ஸாதிக்கின்றபடி*



🪷🪷🪷🪷🪷🪷🪷
*விநாயகர் அகவல்*
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசைப் பாடப்
பொன் அரை ஞாணும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்,

பேழை வயிறும், பெரும்பாரக் கோடும்,
வேழ முகமும், விளங்குசிந் தூரமும்,
அஞ்சு கரமும், அங்குச பாசமும்,
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்,

நான்ற வாயும் நாலிரு புயமும்,
மூன்று கண்ணும், மும்மதச் சுவடும்,
இரண்டு செவியும், இலங்குபொன் முடியும்
திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும்

சொற்பதம் கடந்த துரிய மெய் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழம் கிகரும் மூக்ஷிக வாகன!
இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித்

தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்க மறுத்தே,
திருந்திய முதல்ஐந் தெழுத்துத் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து,

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இது பொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்,
கோடாயுதத்தாற் கொடுவினை களைந்தே

உவட்டா உபதேசம் புகட்டி என்செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கு முபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்,

கருவிக ளொடுங்குங் கருத்தினை யறிவித்,
திருவினை தன்னை அறுத்திருள் கடிந்து,
தலமொரு நான்குந் தந்தெனக் கருளி,
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே,

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத் தங்குச நிலையும்!
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே,

இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்,
கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி,
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்,

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்புங் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச்,

சண்முக தூலமுஞ் சதுர்முகச் சூக்கமும்
எண்முக மாக இனிதெனக் கருளிப்,
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்,

கருத்தினிற் கபால வாயில் கட்டி,
இருத்தி முத்தி இனிதெனக் கருளி,
என்னை அறிவித் தெனக்கருள் செய்து,
முன்னை வினையின் முதலைக் களைந்தே,

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து,
இருவெளி யிரண்டிற் கொன்றிட மென்ன
அருள்தரும் ஆனந்தத் தழுத்தி, என் செவியில்

எல்லை இல்லா ஆனந் தமளித்,
தல்லல் களைந்தே, அருள்வழி காட்டிச்,
சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச்,
சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி,

அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி,
வேடமும் நீரும் விளங்க நிறுத்திக்,
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்துத்,
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக, விரைகழல் சரணே.