Skip to main content

திருவரங்கம் திருஅத்யன உற்சவம்

*இன்று அதைப் பற்றிய  கேள்விகள்*
1. எத்தனையோ பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்தாலும் ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா ஏன் சிறப்பு?

2. வைகுண்ட ஏகாதசி விழாவின் மிக முக்கிய சிறப்பு என்ன?

3. ஏகாதசி தோன்ற காரணம் என்ன?

4. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பது ஏன்?

5. ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா எத்தனை நாட்கள் நடைபெறும்?

6. பகல் பத்தின் பத்தாம் நாளில் நம் பெருமாள் எந்த கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார்?

7. ஏகாதசி அன்று உற்சவருக்கு செய்யப்படும் அலங்காரத்தின் சிறப்பு என்ன?

8. இராப்பத்தின் சிறப்புகள் என்னென்ன?

9. திருக்கைத்தல சேவை ஸ்ரீரங்கத்தில் எந்த நாளில் அனுசரிக்கப்படும்?

10. வேடுபறி சேவை எதற்காக ?யாருக்காக? எந்த நாளில்? அனுசரிக்கப்படும் ஸ்ரீரங்கத்தில்?

11. எந்தெந்த சேவைகளோடு  ஏகாதசி பெருவிழா ஸ்ரீரங்கத்தில் நிறைவு பெறும்?🙏🌹
*விடைகள்* 👇👇

1. ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம் என சிறப்பிக்கப்படுவதால் 
மற்ற பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா கொண்டாடினாலும் ஸ்ரீரங்கத்தில் இப்பபெருவிழா மிகவும் சிறப்பு அதுமட்டுமின்றி 

*ஸ்ரீ ரங்கநாதர்* *பாத* *தர்ஷன்* *மோட்ச* *விமோசனம்*


2. பன்னிரு ஆழ்வார்களின் ஒருவர் 
ஸ்ரீ ராமானுஜரின் அத்யந்த சீடர்
 கூரத்தாழ்வாரின் மகனான 
பராசர பட்டர் அருளிய 
திரு நெடுந் தாண்டகத்துடன்
 தொடங்கும் இப்பெருவிழா
பராசர பட்டரின் வாழ்க்கை வரலாறு படித்தால் திருநெடுந் தாண்டகத்தின் சிறப்பு நமக்கு புரியும்.

3. பகவான் பிரம்மனை படைக்கையில் இரு அசுபர்கள் அவர் காது வழியாக தோன்றினர்
அவர்கள் பிரம்மனை அளிக்க முயன்றனர்
பகவான் அவர்களைத் தடுத்து வரம் கேட்கச் சொல்ல அசுரர்களோ கர்வமுடனும் அலட்சியத்துடனும் தாங்கள் வரம் தருவதாக கூறினர்
உடனே பகவானும் சாதுரியமாக "என்னால் நீங்கள் வதம் செய்யப்பட வேண்டும் .பிறகு ராட்சசர்களாக பிறக்க வேண்டும் ",எனக் கேட்டார்
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அசுரர்கள் ஒரு மாத காலம் சண்டையிட்டு பின்  நாங்கள் உங்கள் அருளினால் மோட்சம் அடைய வேண்டும் என வேண்டினர் 
பகவானும் ஒத்துக்கொண்டு ஒரு மாத காலம் போரிட்டு தனது சக்தியில் உதித்த ஏகாதசி மூலம் பகவான் அவர்களை வதைத்தார்
ஏகாதசி தோன்றிய தினம் கைசீக ஏகாதசி என அழைப்பர்
திருக்குறுங்குடியில் நடைபெறும் கைசீக ஏகாதசி மிகவும் சிறப்பு இங்கு நம் பாடுவான் பற்றிய புராண நாடகம் அரங்கேறும்
நம் பாடுவான் ஏகாதசி விரதம் இருந்து பைரவி ராகத்தில்  கீர்த்தனைகளை
பகவானுக்கு பாடி மகிழ்விப்பதால் கைசீக ஏகாதசி அன்று பைரவி ராகம் மிகவும் சிறப்பு பெற்றது.

4. மகாவிஷ்ணுவின் குணங்களை உ ணர்ந்த அசுரர்கள் பரம பதத்தில் நித்தியவாசம் வேண்டினர்
 ஒரு மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று வைகுண்டத்தில் உள்ள வடக்கு நுழை வாசலை திறந்து அசுரர்களை பரமபதத்தில் பகவான் சேர்த்ததால் அந்த நாளில் வைகுண்ட வாசனை அன்றைய தினம் பக்தர்கள் சேவிக்க மோட்சம் கிடைக்க வேண்டும் என
 அசுரர்கள் யாசித்ததால் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

5. ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து இராப்பத்து இயற்பா என 21 நாட்கள் அரையர் சேவை மற்றும் திருவாய்மொழி என ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் முன்பு நடைபெறும்
மூலவருக்கு முத்தங்கி சேவை சமர்ப்பிக்கப்படும்.

6. ஆழ்வார்களின் ஆசைப்படி பெரிய ஆழ்வார்க்கும் நம்மாழ்வார்க்கும் பகவான் பராங்குச நாயகி பரகல நாயகி
என அவதானித்து அவர்களின் அன்பை பெற நினைத்த போதிலும் அவர்கள் கருணை என்னவோ தாயாரிடம் மட்டுமே இருந்தது எப்படி என இறைவன் கேட்க உனது கண்கள் சூரியன் சந்திரர்கள் அதனால் ஒரு பக்கம் குளிர்ச்சி ஒரு பக்கம் வெப்பம் 
ஆனால் தாயாருக்கு கருணை மிகுந்த கண்கள் அதனால் இரு கண்களிலும் குளிர்ச்சி மிக கண்கள் என சொல்லியதால்
 இறைவன் மிகவும் பெருமை அடைந்தான்
 தன்னைவிட தன்நாயகி உயர்வு
 என்பதை காட்டிட
 இப்படி ஓர் நிகழ்வு
 இதன் மூலம் நாம் அறிகிறோம்
இதனை உணர்த்தும் விதமாக 
உற்சவர்
ஸ்ரீ மோகினி அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து பவனி வருவார்.

7. ரத்தின அங்கி
அலங்காரத்தில் உற்சவர் ஆயிரம் கால் மண்டபத்தில் திருமணி மாட ஆஸ்தானத்தில் எழுந்தருள அவர் பாத தரிசனம் பாப விமோசனம்.

8. ரப்பத்தில் உற்சவருக்கு செய்யப்படும் சிறப்பு அலங்காரங்கள் சிறப்பு ரப்பத்தில் அணிவிக்கப்படும் ஆபரணங்கள் அதில் முக்கியமானது வைரமுடி சேவை விமான பதக்கம்  போன்றவை
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆபரண விசேஷங்கள் சிரசு முதல் பாதம் வரை கண்டு தரிசிக்க கண் கோடி வேண்டும்.

9. மார்கழி மாதம் நடைபெறும் ராப்பத்தில் ஏழாம் நாள் திருக்கைத் தல சேவை 
அன்று மட்டுமே உற்சவரை அடியார்கள் கைகளில் ஏந்தி திருமணிமாட ஆஸ்தானத்தில் சேர்ப்பர்.

10. 12 ஆழ்வார்களில் ஒருவர்
 திருமங்கை ஆழ்வார்
அவரை சிறப்பிக்கும் பொருட்டு இந்த நாளில் வேடுபறி சேவை வெகு சிறப்பாக  நடைபெறும்.

11. பத்தாம் நாள் நம்மாழ்வார் தீர்த்தவாரி
பின்பு நம்மாழ்வார் மோட்சம் சேவையோடு நிறைவு பெறும்
ஒரு பக்தன் வேடத்தில் நம்மாழ்வார் வெள்ளை உடை உடுத்தி பன்னிரு நாமம் துளசி மாலையும் தரித்து காட்சியளிப்பார் அவரை நம் பெருமாள் திருவடியில் நெற்றி படும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பிப்பர் வேதங்கள் வேத கோஷங்கள் முழங்க துளசியால் அர்ச்சிப்பர் பின்பு துளசியை விலக்கி மோட்சம் பெற்றதாக கூறி நம்மாழ்வாருக்கு நம் பெருமானின் கஸ்தூரி திலகம்
துளசி மாலை அணிவிக்கப்பட்டு நம்மாழ்வார் மோட்சம் நிறைவு பெறும்
 பிறகு இயற்பா பிரபந்தம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் முன்னிலையில் நடந்தேறும் அதன் பின்பு திருவாராதனம்
மற்றும் சாற்று மறையோடு விழா நிறைவு பெறும்

இந்த நாட்களில் அரையர் சேவை வீணை மீட்டி மூலஸ்தானம் சென்றடைதல் என உற்சவரின் கோலாகலங்கள் மிகவும் சிறப்பு🌹
சேவிப்போம் ஸ்ரீரங்கநாதரை🙏

சேமிப்போம்
அவரின் அருள் பார்வையை🙏🌹🙇‍♂️

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்

இன்று(11/11/2018),ஐப்பசி மூலம்-ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/அழகிய மணவாளர்/ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/வரவர முனி/இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்---ஸ்வாமிகளின் 649ஆவது,திருநட்சித்திரம். ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்; ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும்அறிந்ததே.ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி/கைங்கர்ய ங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் பல தெய்வீகத் தன்மைகள்/ஒற்றுமைகள்புலப்படுகின்றன அந்த நோக்கத்தில் அடியேனின்,ஒரு குறு முயற்சி. 1.ராமானுஜருக்கு அவருடைய தாய்மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,பெரிய திருமலைநம்பிகள்'இளையாழ்வார்' என்று பெயரிட்டார். மாமுனிகளுக்கு அவருடைய தாய்வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள் 'அழகியமணவாளன்'என்று பெயரிட்டார். 2.இளையாழ்வார்,தம்வைணவ வாழ்க்கைநெறிக்கும்,கைங்கர் யங்களுக்கும் இல்லறம் தடை யாக இ...