ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமத்தில் ப்ரதான அர்ச்சகர் என்று சொல்லக்கூடியவர் ( Head Priest ) கீழ்கண்ட நபர்களை தீக்சை செய்யவேண்டும் (இவர்கள் அனைவரும் நிரந்தரமாக கோயிலில் பெருமாள் கைங்கரியம் செய்யவேண்டும் ) 1) ஆசார்யன் - கர்சனதிப் பிரதிஷ்டைவரை செய்பவர் 2) அர்ச்சகர் - உதவி அர்ச்சகர் ( Helper ) 3)சன்னதிபரிசாரகர் - பெருமாள் பாத்திரத்தை சுத்தம் செய்பவர் மற்றும் திருமணி கைங்கரியம் செய்பவர் மற்றும் பெருமாளுக்கு தேவையான சந்தனாதி திரவியங்களை தயார் செய்து வைப்பவர் மற்றும் அர்ச்சகருக்கு தேவையான உதவி செய்பவர். 4) பரிசாரகர் (மடப்பள்ளி) - பெருமாளுக்கு தேவையான நித்யபடி மற்றும் அதிகப்படி உத்ஸவ காலங்களில் பொறுப்புடன் பெருமாள் தளிகை செய்பவர். 5) பிசக் (Dr) - கோயில் அர்ச்சகருக்கு மருத்துவம் பார்ப்பவர் 6) தைவக்ஞ்யன் ( Astrologer ) - கோயிலுக்கு ஜோதிடம் பார்ப்பவர் , உத்ஸவத்திற்கு மற்றும் பிரதிஷ்டைக்கு ( கும்பாபிஷத்துக்கு லக்கனம் மற்றும் முகூர்தம் வைத்து தருபவன் 7) கர்மஹ: ...
கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர் ! எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே !!