ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகமத்தில் ப்ரதான அர்ச்சகர் என்று சொல்லக்கூடியவர் ( Head Priest ) கீழ்கண்ட நபர்களை தீக்சை செய்யவேண்டும் (இவர்கள் அனைவரும் நிரந்தரமாக கோயிலில் பெருமாள் கைங்கரியம் செய்யவேண்டும் )
1) ஆசார்யன் - கர்சனதிப் பிரதிஷ்டைவரை செய்பவர்
2) அர்ச்சகர் - உதவி அர்ச்சகர் ( Helper )
3)சன்னதிபரிசாரகர் - பெருமாள் பாத்திரத்தை சுத்தம் செய்பவர் மற்றும் திருமணி கைங்கரியம் செய்பவர் மற்றும் பெருமாளுக்கு தேவையான சந்தனாதி திரவியங்களை தயார் செய்து வைப்பவர் மற்றும் அர்ச்சகருக்கு தேவையான உதவி செய்பவர்.
4) பரிசாரகர் (மடப்பள்ளி) - பெருமாளுக்கு தேவையான நித்யபடி மற்றும் அதிகப்படி உத்ஸவ காலங்களில் பொறுப்புடன் பெருமாள் தளிகை செய்பவர்.
5) பிசக் (Dr) - கோயில் அர்ச்சகருக்கு மருத்துவம் பார்ப்பவர்
6) தைவக்ஞ்யன் ( Astrologer ) - கோயிலுக்கு ஜோதிடம் பார்ப்பவர் , உத்ஸவத்திற்கு மற்றும் பிரதிஷ்டைக்கு ( கும்பாபிஷத்துக்கு லக்கனம் மற்றும் முகூர்தம் வைத்து தருபவன்
7) கர்மஹ: நாவிதன் ( சவரர் செய்பவன் )
8)குலால: கோயிலுக்கு தேவையான மண்பாண்டம் செய்பவன் (கலசம்)
9) பார்சவ: டவன்டை அடிப்பவன்.
10) வ்யாத: வாத்தியம் தயார் செய்பவன்.
11) தந்துவாய: நாதஸ்வரம் வாசிப்பவன்.
12) கோப: மாட்டை மேய்ப்பவன் ( பசுவை ரட்சிப்பவன் )
13) மாஹீச: எருமை மேய்ப்பவன் ( எருமை பால் கறப்பவன் )
14) கரிபந்தந: யானைக்காரன் ( யானையை பார்த்துக்கொள்பவன் )
15)சூளிக: ஆயுதம் இரும்பு வேலை செய்பவன்.
16) மணிவித்ரய: பத்தன் ( தங்கம் வேலை செய்பவன் ஆசாரி )
17) புஷ்பகார : மாலை கட்டுபவர்.
18) மாளவக: குதிரையை ரட்சிப்பவன்
19) சூத: வஸ்திரம் பார்த்துக்கொள்பவன் ( சலவை ரூம் )
20) சண்டாள: உத்ஸவம் மற்றும் மற்ற கோயில் வைபவங்களை மக்களுக்கு கூறுபவன்.
21) நத்தக: நாட்டியம் ஆடுபவன் .
22) பெளராணிக: புராணம் சொல்பவன்
23) தக்ஷ: ஸ்தபதி
24) ரதகார: வாகனம் செய்பவன்
25) தைலிக: எண்னை காப்பு தயார் செய்பவன்
இவர்கள் 25 பேர்களும் பாஞ்சராத்திர ஆகம கோயில்களில் மிக முக்கியமானவர்கள் இவர்கள் அனைவருக்கும் ப்ரதான அர்ச்சகர் தீக்சை செய்யவேண்டும்.
Thanks to சக்கரபாணி பட்டாச்சியர்
இப்படிக்கு,
R. சக்கரபாணி பட்டாச்சியர்,
திருக்குடந்தை,
9566206189.
No comments:
Post a Comment