Monday 16 December 2013

 முழு இந்தியாவும் இன்று ராம நாமத்தை உச்சரித்துக்கொண்டு இருக்கிறது.ராமர் பாலம் சர்ச்சையினால் வந்த நன்மை இது.ராமனை வெறுக்கிறவர்கள் கூட ராமர்பாலம் என்று கூறும் போது தம்மையும் அறியாமல் ராமன் பெயரை சொல்லுகிறார்கள்.சகஸ்ர நாமங்களுக்கும் சமமான இந்த ராமநாமம் இப்படி எல்லோராலும் அநுஸந்திக்கப்படுவதற்கு சேது சமுத்திர சர்ச்சை தான் காரணம் என்றால் இந்த சர்ச்சை சில காலம் நீடிக்கட்டுமே என்று நினைக்கத் தூண்டுகிறது.
     இது இருக்கட்டும்.குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதே சிலருக்கு வேலையாகிப் போயிவிட்டது.பாலத்தை இடிப்பதா?வேண்டாமா? என்கிற சந்தடியின் நடுவே இதுதான் சமயம் என்று ஒருவர் ராமர் கடவுளே இல்லை என்ற அறிக்கை விட்டிருக்கிறார்.அந்த கூற்றுக்கு ஆதரமாக அந்த மேதை ராமாயண சுலோகத்தை மேற்கோளும் காட்டி இருக்கிறார்.(30.09.07 ஜீனியர் விகடன் பக்கம் 38)
         “ஆத்மாநம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்….”என்கிற பகுதி,தன்னைப் பார்த்து இறைவன் என்று புகழ்ந்த தேவர்களிடம் ராமன் சொன்னது.நான் இறைவன் இல்லை;என்னை தசரதனுடைய மகனாக,ராமனாக,ஒரு சாதாரண மனிதனாகத் தான் இந்த அவதாரத்தில் நினைக்கிறேன் என்று ராமன் மறுத்துப் பேசுகிறான்.தேவர்களுடைய கூற்று ஒரு புறம்,ராமனுடைய கூற்று ஒரு புறம்,என்ற இரு கூற்றுகளையும் தனித்தனியே சீர்தூக்கிப் பார்த்துவிட்டு   ஒரு மேதை ராமன் சொன்னதே சரி,தேவர்கள் சொன்னது தவறு என் கிறார்.அதாவது ஒருவனை, பகவானுடைய அவதாரமா? அல்லது சாதாரண மனிதனா? என்று கூட பேதம் பார்க்க முடியாத மடையர்களாக தேவர்கள் இருக்கிறார்கள் என்கிறார்.அப்படியானால் இந்த மடையர்களைப் படைக்கப்பட்ட உலகங்களுக்கு அதிகாரப்புருஷர்களாக்வும் முப்பத்து முக்கோடி தேவர்களாகவும்,இந்து மதம் ஏன் சிலாகித்துச் சொல்லவேண்டும்?இந்த கேள்விக்கு பதில் தேவை.கோடான கோடி மனிதர்களை ஆட்டி வைக்கும் இந்த தேவர்களுக்கு மனிதன் யார் பகவான் யார் என்று கூட கண்டுபிடிக்கத் தெரியாதா?
         நம் நாட்டு ஜனாதிகளும்,முதன் மந்திரிகளும் நீலகிரி,முதுமலை போன்ற மலைப்பிரதேசங்களில் வாழும் பழங்குடி மக்களைச் சந்திக்கும் போது அவர்களோடு சேர்ந்து ஆடிப்பாடுவது உண்டு.இதைப் பல புகைப்படங்களிலும்,செய்தி,திரைப்படச் சுருள்களிலும் பார்த்திருக்கிறோம்.அந்த ஆதிவாசிகளோடு ஆடும் போது நாங்களும் உங்களில் ஒருவர் தான்.எங்களை உங்கள் இனத்தவராகக் கருதுகிறோம்”,என்று சொல்வதுண்டு.’நான் ஒரு ஆதிவாசி’என்பதற்கும் “நான் என்னை ஒரு ஆதிவாசியாகக் கருதுகிறேன் என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.
     இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லும்பொழுது கருதுகிறேன் என்ற சொல்லை பயன்படுத்துவதுண்டு,உதாரணமாக ‘கல் விக்ரஹத்தைக் கடவுளாகக் கருதுகிறோம்’,’இந்தக் கதர் ஆடையைப் பொன்னாடையாகக் கருதுகிறோம்’,’பொன் வைக்க வேண்டிய  இடத்தில் இந்தப் பூவை வைத்து இதைப் பொன்னாகக் கருதி அளிக்கிறோம்’ என்று வரும் வாக்கியங்களில் இந்தப் பொருள் புலனாகும்.ராமனும் அப்படித்தான் சொன்னான்.’மந்யே’ என்ற ஸம்ஸ்கிருதச் சொல்லுக்கு இங்கே அதுதான் பொருள்.இந்த அடிப்படை இலக்கணம் கூட அந்த மேதைக்குத் தெரியவில்லையா?
   ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளால் போற்றப்படும் பகவானாக வாழ்வதைவிட பூமியில் தன் அன்பர்கள் மத்தியில் மனிதரோடு மனிதனாக வாழ்வதை எம்பெருமான் மிகவும் ரஸிக்கிறான்.விரும்புகிறான்.கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் கோவர்த்தன கிரியை தூக்கிப் பிடிப்பதைப் பார்த்து யாதவர்கள் “நீ தேவனோ பூதமோ” என்று அஞ்சிப் புலம்பிய போது, “இல்லை இல்லை நான் யசோதையின் மகன்,நந்தகோபன் குமரன்.உங்கள் உறவினன், சாதாரண யாதவன்”, என்று சொல்லிக் கொண்டான்.தன் அன்பரால் வணப்படும் இறைநிலை அந்தஸ்தை விட,அவர்களுக்கு நண்பனாய்,தொண்டனாய் இருப்பதையே பகவான் விரும்புகிறான்.இது அவனோடு என்றும் உறைகிற இறைமைக் குணம்.செளலப்யம் என்றும் செளசீல்யம் என்றும் இதை புகழ்ந்து சொல்வார்கள்.இப்படி அவன் பேசுகிறான் என்பதற்காக அவன் கடவுள் இல்லை என்று ஆகிவிடுமா?அவனை யாதவன் என்று நாம் நினைக்கலாமா?இப்படியெல்லாம் வக்கிரமாகப் பொருள் கொண்டால் இந்து மதம் சின்னாபின்னமாகிக் கேலிக் கூத்தாகிவிடுமே,இதையெல்லாம் அந்த மேதை உணர்கிறாரா?அல்லது உணராதது போல் நடிக்கிறார?
        ராமனை மட்டமாகப் பேசுவது மல்லாந்து படுத்துக்கொண்டு வான்நோக்கி உமிழ்வதற்குச் சமம்.எச்சில் நம் மார்பின் மீது தான் விழும்.இந்தியாவின் கௌரவம் ராமனால் நமக்கு ஏற்பட்ட கௌரவம்.ராமாயணம் என்ற காவியம் இந்தியர்களுக்கு உலக அரங்கில் எவ்வுளவு பெரிய மதிப்பை சம்பாதித்து கொடுத்திருக்கிறது எனபதை இன்று ராமதூஷணம் செய்கிறவர்கள் உணர்வதில்லை.ஹரே ராமா,ஹரே கிருஷ்ணா என்று வெள்ளையர்கள் ஏன் சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினார்கள்?ராமனுடைய பண்புகளைப் பற்றி அவர்கள் படித்த போது அவர்களுடைய நாட்டு மஹாங்களிடமும் தங்கள் தெய்னங்களிடமும் இல்லாத குணங்களை ராமனிடமும்,கண்ணனிடமும், பார்த்ததால் தானே அவர்கள் அப்படி மாறினார்கள்!
மேலும் பலவற்றை அடுத்த பாகத்தில் பார்ப்போம்! ஜெய்ஸ்ரீராம்!!!!!
முழு இந்தியாவும் இன்று ராம நாமத்தை உச்சரித்துக்கொண்டு இருக்கிறது.
ராமர் பாலம் சர்ச்சையினால் வந்த நன்மை இது.ராமனை வெறுக்கிறவர்கள் கூட ராமர்பாலம் என்று கூறும் போது தம்மையும் அறியாமல் ராமன் பெயரை சொல்லுகிறார்கள்.சகஸ்ர நாமங்களுக்கும் சமமான இந்த ராமநாமம் இப்படி எல்லோராலும் அநுஸந்திக்கப்படுவதற்கு சேது சமுத்திர சர்ச்சை தான் காரணம் என்றால் இந்த சர்ச்சை சில காலம் நீடிக்கட்டுமே என்று நினைக்கத் தூண்டுகிறது.
இது இருக்கட்டும்.குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதே சிலருக்கு வேலையாகிப் போயிவிட்டது.பாலத்தை இடிப்பதா?வேண்டாமா? என்கிற சந்தடியின் நடுவே இதுதான் சமயம் என்று ஒருவர் ராமர் கடவுளே இல்லை என்ற அறிக்கை விட்டிருக்கிறார்.அந்த கூற்றுக்கு ஆதரமாக அந்த மேதை ராமாயண சுலோகத்தை மேற்கோளும் காட்டி இருக்கிறார்.(30.09.07 ஜீனியர் விகடன் பக்கம் 38)
“ஆத்மாநம் மானுஷம் மன்யே ராமம் தசரதாத்மஜம்….”என்கிற பகுதி,தன்னைப் பார்த்து இறைவன் என்று புகழ்ந்த தேவர்களிடம் ராமன் சொன்னது.நான் இறைவன் இல்லை;என்னை தசரதனுடைய மகனாக,ராமனாக,ஒரு சாதாரண மனிதனாகத் தான் இந்த அவதாரத்தில் நினைக்கிறேன் என்று ராமன் மறுத்துப் பேசுகிறான்.தேவர்களுடைய கூற்று ஒரு புறம்,ராமனுடைய கூற்று ஒரு புறம்,என்ற இரு கூற்றுகளையும் தனித்தனியே சீர்தூக்கிப் பார்த்துவிட்டு ஒரு மேதை ராமன் சொன்னதே சரி,தேவர்கள் சொன்னது தவறு என் கிறார்.அதாவது ஒருவனை, பகவானுடைய அவதாரமா? அல்லது சாதாரண மனிதனா? என்று கூட பேதம் பார்க்க முடியாத மடையர்களாக தேவர்கள் இருக்கிறார்கள் என்கிறார்.அப்படியானால் இந்த மடையர்களைப் படைக்கப்பட்ட உலகங்களுக்கு அதிகாரப்புருஷர்களாக்வும் முப்பத்து முக்கோடி தேவர்களாகவும்,இந்து மதம் ஏன் சிலாகித்துச் சொல்லவேண்டும்?இந்த கேள்விக்கு பதில் தேவை.கோடான கோடி மனிதர்களை ஆட்டி வைக்கும் இந்த தேவர்களுக்கு மனிதன் யார் பகவான் யார் என்று கூட கண்டுபிடிக்கத் தெரியாதா?
நம் நாட்டு ஜனாதிகளும்,முதன் மந்திரிகளும் நீலகிரி,முதுமலை போன்ற மலைப்பிரதேசங்களில் வாழும் பழங்குடி மக்களைச் சந்திக்கும் போது அவர்களோடு சேர்ந்து ஆடிப்பாடுவது உண்டு.இதைப் பல புகைப்படங்களிலும்,செய்தி,திரைப்படச் சுருள்களிலும் பார்த்திருக்கிறோம்.அந்த ஆதிவாசிகளோடு ஆடும் போது நாங்களும் உங்களில் ஒருவர் தான்.எங்களை உங்கள் இனத்தவராகக் கருதுகிறோம்”,என்று சொல்வதுண்டு.’நான் ஒரு ஆதிவாசி’என்பதற்கும் “நான் என்னை ஒரு ஆதிவாசியாகக் கருதுகிறேன் என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.
இல்லாத ஒன்றை இருப்பதாகச் சொல்லும்பொழுது கருதுகிறேன் என்ற சொல்லை பயன்படுத்துவதுண்டு,உதாரணமாக ‘கல் விக்ரஹத்தைக் கடவுளாகக் கருதுகிறோம்’,’இந்தக் கதர் ஆடையைப் பொன்னாடையாகக் கருதுகிறோம்’,’பொன் வைக்க வேண்டிய இடத்தில் இந்தப் பூவை வைத்து இதைப் பொன்னாகக் கருதி அளிக்கிறோம்’ என்று வரும் வாக்கியங்களில் இந்தப் பொருள் புலனாகும்.ராமனும் அப்படித்தான் சொன்னான்.’மந்யே’ என்ற ஸம்ஸ்கிருதச் சொல்லுக்கு இங்கே அதுதான் பொருள்.இந்த அடிப்படை இலக்கணம் கூட அந்த மேதைக்குத் தெரியவில்லையா?
ஸ்ரீவைகுண்டத்தில் நித்யசூரிகளால் போற்றப்படும் பகவானாக வாழ்வதைவிட பூமியில் தன் அன்பர்கள் மத்தியில் மனிதரோடு மனிதனாக வாழ்வதை எம்பெருமான் மிகவும் ரஸிக்கிறான்.விரும்புகிறான்.கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் கோவர்த்தன கிரியை தூக்கிப் பிடிப்பதைப் பார்த்து யாதவர்கள் “நீ தேவனோ பூதமோ” என்று அஞ்சிப் புலம்பிய போது, “இல்லை இல்லை நான் யசோதையின் மகன்,நந்தகோபன் குமரன்.உங்கள் உறவினன், சாதாரண யாதவன்”, என்று சொல்லிக் கொண்டான்.தன் அன்பரால் வணப்படும் இறைநிலை அந்தஸ்தை விட,அவர்களுக்கு நண்பனாய்,தொண்டனாய் இருப்பதையே பகவான் விரும்புகிறான்.இது அவனோடு என்றும் உறைகிற இறைமைக் குணம்.செளலப்யம் என்றும் செளசீல்யம் என்றும் இதை புகழ்ந்து சொல்வார்கள்.இப்படி அவன் பேசுகிறான் என்பதற்காக அவன் கடவுள் இல்லை என்று ஆகிவிடுமா?அவனை யாதவன் என்று நாம் நினைக்கலாமா?இப்படியெல்லாம் வக்கிரமாகப் பொருள் கொண்டால் இந்து மதம் சின்னாபின்னமாகிக் கேலிக் கூத்தாகிவிடுமே,இதையெல்லாம் அந்த மேதை உணர்கிறாரா?அல்லது உணராதது போல் நடிக்கிறார?
ராமனை மட்டமாகப் பேசுவது மல்லாந்து படுத்துக்கொண்டு வான்நோக்கி உமிழ்வதற்குச் சமம்.எச்சில் நம் மார்பின் மீது தான் விழும்.இந்தியாவின் கௌரவம் ராமனால் நமக்கு ஏற்பட்ட கௌரவம்.ராமாயணம் என்ற காவியம் இந்தியர்களுக்கு உலக அரங்கில் எவ்வுளவு பெரிய மதிப்பை சம்பாதித்து கொடுத்திருக்கிறது எனபதை இன்று ராமதூஷணம் செய்கிறவர்கள் உணர்வதில்லை.ஹரே ராமா,ஹரே கிருஷ்ணா என்று வெள்ளையர்கள் ஏன் சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினார்கள்?ராமனுடைய பண்புகளைப் பற்றி அவர்கள் படித்த போது அவர்களுடைய நாட்டு மஹாங்களிடமும் தங்கள் தெய்னங்களிடமும் இல்லாத குணங்களை ராமனிடமும்,கண்ணனிடமும், பார்த்ததால் தானே அவர்கள் அப்படி மாறினார்கள்!
மேலும் பலவற்றை அடுத்த பாகத்தில் பார்ப்போம்! ஜெய்ஸ்ரீராம்!!!!!

No comments:

Post a Comment