Tuesday 17 December 2013

பஞ்ச ஸம்ஸ்காரம்

                              ஒருவன் ஒரு ஆசார்யனிடத்தில் பஞ்ச ஸம்ஸ்காரம் பெறுவதன் மூலமாக ஸ்ரீவைஷ்ணவன் ஆகிறான். ஸம்ஸ்காரம் என்றால் தயார் செய்தல் என்று பொருள். ஒரு செயல் செய்யத் தகுதி இல்லாத ஒன்றை ஸம்ஸ்காரத்தின் மூலமாக தகுதி உள்ளதாக மாற்றுவர்.
 
பெரிய நம்பி ராமாநுஜருக்கு பஞ்ச ஸம்ஸ்காரம் செய்தல்
நாம் பஞ்ச ஸம்ஸ்காரத்தை “தாப: புண்ட்ர: ததா நாம: மந்த்ரோ யாகச் ச பஞ்சம:” என்கிற ப்ரமாணத்தைக் கொண்டு அறிகிறோம். பஞ்ச ஸம்ஸ்காரத்தின் பொழுது நடக்கும் ஐந்து செயல்களாவன:
  • தாபம் - சூடேற்றப்பட்ட சங்கு மற்றும் சக்கரத்தால் தோள்களில் பெறும் முத்திரை
  • புண்ட்ரம் - உடம்பில் பன்னிரு திருமண் மற்றும் ஸ்ரீசூர்ணம் சாற்றுதல்
  • நாமம் – எம்பெருமான் மற்றும் ஆசார்யனிடம் உள்ள தொடர்பை வெளியிடும் ஆசார்யன் இடும் தாஸ்ய நாமம் (ராமாநுஜ தாஸன், ஸ்ரீநிவாஸ தாஸன், ஸ்ரீவைஷ்ணவ தாஸன்)
  • மந்த்ரம் – ஆசார்யனிடத்தில் இருந்து பெறும் ரஹஸ்ய மந்த்ரங்கள் (மந்தரமாவது – தன்னை த்யானிப்பவரை க்லேசங்களில் இருந்து விடுவிப்பது – இங்கே நம்மை ஸம்ஸாரம் என்னும் துன்பத்தில் இருந்து விடுபடச்செய்யும் திருமந்திரம், த்வயம், சரம ச்லோகத்தில் நோக்கு)
  • யாகம் – தேவ பூஜை – திருவாராதன க்ரமத்தைக் கற்றறிதல்
நம் பூர்வாசார்யர்கள் விளக்கியுள்ளபடி, பஞ்ச ஸம்ஸ்காரத்தின் குறிக்கோள் இரண்டு பகுதியாக உள்ளது.:
  • தத்வ ஜ்ஞாநாந் மோக்ஷ லாப:” என்பதன்படி – உண்மை அறிவால் ஒருவன் மோக்ஷம் பெறுகிறான். சிஷ்யன் ஆசார்யனிடத்தில் இருந்து ரஹஸ்ய த்ரயத்தையும் கற்றுக்கொள்வதன் மூலம் அர்த்த பஞ்சகத்தை முழுமையாக அறிந்து நித்ய விபூதியில் ஸ்ரீமந் நாராயணனுக்குக் கைங்கர்யம் செய்யும் தகுதியைப் பெறுகிறான். அர்த்த பஞ்சகமாவது – ஜீவாத்ம ஸ்வரூபம், பரமாத்ம ஸ்வரூபம், உபாய ஸ்வரூபம், பல ஸ்வரூபம் மற்றும் விரோதி ஸ்வரூபம்.
  • இருக்கும் காலத்தில், பகவத் பாகவத ஆசார்ய கைங்கர்யத்தில் ஈடுபடுதல். நாம் இருக்கும் தற்போதைய நிலையில், திவ்ய தேசங்களில் எழுந்தருளியிருக்கும் அர்ச்சாவதார எம்பெருமான்களுக்கும் க்ருஹங்களில் எழுந்தருளியிருக்கும் அர்ச்சாவதார எம்பெருமான்களுக்கும் கைங்கர்யம் செய்வதே எளிதானது

No comments:

Post a Comment