Skip to main content
அமலனாதிப்பிரான்
 தனியன்கள்
ஆபாதசூடமநுபூய ஹரிம் சயாநம்
மத்யே கவேரதுஹிதுர் முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிச்சிகாய மநவை முநிவாஹநம் தம்
காட்டவேகண்டபாத கமலநல்லாடையுந்தி
தேட்டருமுதரபந்தம் திருமார்வு கண்டம் செவ்வாய்
வாட்டமில்கண்கள்மேனி முனியேறித்தனிபுகுந்து
பாட்டினால் கண்டுவாழும் பாணர்தாள்பரவினோமே
பாசுரங்கள்
*அமலனாதிபிரான் அடியார்க்கென்னை யாட்படுத்த
விமலன், விண்ணவர்கோன் விரையார்பொழில் வேங்கடவன்
நிமலன்நின்மலன் நீதிவானவன் நீள்மதிளரங்கத்தம்மான், திருக் -
கமலபாதமவந்து என்கண்ணிலுள்ளனவொக்கின்றவே. .     --- (1)

உவந்தவுள்ளத்தனாய் உலகமளந்தண்டமுற
நிவந்தநீள்முடியன் அன்றுநேர்ந்தநிசாசரரைக்
கவர்ந்தவெங்கணைக்காகுத்தன் கடியார்பொழிலரங்கத்தம்மான்,
அரைச்சிவந்தவாடையின்மேல் சென்றதாமெனசிந்தனையே.--(2)

* மந்திபாய் வடவேங்கடமாமலை, வானவர்கள் -
சந்திசெய்யநின்றான் அரங்கத்தரவினணையான்
அந்திபோல்நிறத்தாடையும அதன்மேலயனைப்படைத்ததோரெழில்
உந்திமேலதன்றோ அடியேனுள்ளத்தின்னுயிரே.                  ---(3)

சதுரமாமதிள்சூழ் இலங்கைக்கிறைவன் தலைபத்து -
உதிரவோட்டி, ஓர்வெங்கணையுய்த்தவன் ஓதவண்ணன்
மதுரமாவண்டுபாட மாமயிலாடரங்கத்தம்மான், திருவயிற் -
றுதரபந்தம் என்னுள்ளத்துள்நின்றுலாகின்றதே.                    ---(4)

பாரமாய பழவினைபற்றறுத்து, என்னைத்தன்
வாரமாக்கிவைத்தான் வைத்ததன்றியென்னுள்புகுந்தான்
கோரமாதவம் செய்தனன்கொலறியேன் அரங்கத்தம்மான்,
திருவாரமார்பதன்றோ அடியேனையாட்கொண்டதே.          ---(5)

துண்டவெண்பிறையன் துயர்தீர்த்தவன், அஞ்சிறைய -
வண்டுவாழ்பொழில்சூழ் அரங்கநகர்மேயவப்பன்
அண்டரண்டபகிரண்டத்து ஒருமாநிலமெழுமால்வரை, முற்றும்
உண்டகண்டம்கண்டீர் அடியேனையுய்யக்கொண்டதே.     ---(6)

கையினார்சுரிசங்கனலாழியர் நீள்வரைபோல் -
மெய்யனார், துளபவிரையார் கமழ்நீள்முடியெம் - ஐயனார்,
அணியரங்கனார் அரவினணைமிசைமேயமாயனார்
செய்யவாய் ஐயோ! என்னைச்சிந்தைகவர்ந்ததுவே.               --(7)

பரியனாகிவந்த அவுணனுடல்கீண்ட, அமரர்க் கரியவாதிப்பிரான்
அரங்கத்தமலன்முகத்துக் கரியவாகிப்புடைபரந்து
மிளிர்ந்துசெவ்வரியோடி, நீண்டவப் - பெரியவாயகண்கள்
என்னைப்பேதைமைசெய்தனவே.                                            ---(8)

*  ஆலமாமரத்தினிலைமேல் ஓருபாலகனாய்
ஞாலமேழுமுண்டான் அரங்கத்தரவினணையான்
கோலமாமணியாரமும் முத்துத்தாமமும் முடிவில்லதோரெழில்
நீலமேனிஐயோ! நிறைகொண்டதென்நெஞ்சினையே.         ---(9)

*  கொண்டல்வண்ணனைக் கோவலனாய்வெண்ணெய்
உண்டவாயன், என்னுள்ளம்கவர்ந்தானை
அண்டர்கோனணியரங்கன் என்னமுதினைக்
கண்டகண்கள்  மற்றொன்றினைக்காணாவே.                     --- (10)



அடிவரவு: கதிர்,கொழு,சுடர்,மேட்டு,புலம்,இரவி,அந்தரம்,வம்பவிழ்,ஏதம்,கடி.  *இக்குறியிட்ட பாசுரங்கள், இரண்டுமுறை சொல்லவேண்டும்.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

அன்றாட வழிபாடு : வழிகாட்டும் நாலாயிர திவ்ய பிரபந்தம்

பூஜை அறை கதவைத் திறத்தல்: 1.  ஆண்டாள் : திருப்பாவை : 489 நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். திருப்பள்ளியெழுச்சி பாடுதல் 2. தொண்டரடிப்பொடி ஆழ்வார் : திருப்பள்ளியெழுச்சி : 917 கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,  மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,  எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,  அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. துயில் எழுந்த பெருமாளை போற்றித் துதித்தல் 3.  ஆண்டாள் : திருப்பாவை  : 497 அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடை...