Thursday 9 January 2014

நீராட்டம்
 தனியன்கள்
குருமுகமநதீத்ய ப்ராஹ வேதாநசேஷாந்
நரபதி பரிக்லுப்தம் சுல்கமாதாது காம: !
ச்வசுரமமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி !!

மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூ ரென்றொருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தா னென்றுரைத்தோம்கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து.

பாசுரங்கள்

வெண்ணையளைந்த குணுங்கும்
விளையாடு புழுதியும் கொண்டு,
திண்ணென இவ்விராவுன்னைத்
தேய்த்துக்கிடக்க நானொட்டேன்,
எண்ணெய் புளிப்பழங் கொண்டிங்
கெத்தனைபோதுமிருந்தேன்
நண்ணலரிய பிரானே‚
நாரணா நீராட வாராய் . . . . . . . . . . . ........ . . . . 1 .

கன்றுகளோடச் செவியில்
கட்டெறும்பு பிடித்திட்டால்,
தென்றிக்கெடுமாகில்
வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன்,
நின்ற மராமரம் சாய்த்தாய்‚
நீ பிறந்த திரு வோணம்
இன்று நீ நீராடவேண்டும்
எம்பிரான்‚ ஓடாதே வாராய். . . . . . . . . . . . . . 2 .

பேய்ச்சி முலையுண்ணக் கண்டு
பின்னையும் நில்லாதென்னெஞ்சம்,
ஆய்சியரெல்லாருங் கூடி
அழைக்கவும் நான் முலை தந்தேன்,
காய்ச்சின நீரொடு நெல்லி
கடாரத்தில் பூரித்து வைத்தேன்,
வாய்த்த புகழ்மணிவண்ணா‚
மஞ்சன மாட நீ வாராய். . . . . . . . . . . .. . . . . . 3 .

கஞ்சன் புணர்ப்பினில் வந்த
கடிய சகடமுதைத்து,
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச
வாய் முலை வைத்த பிரானே‚
மஞ்சளும் செங்கழுநீரின்
வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சன மும்கொண்டு வைத்தேன்
அழகனே‚ நீராட வாராய். . . . . . . . . . . .. . . . . . 4

அப்பம் கலந்த சிற்றுண்டி
அக்காரம் பாலில் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன்
தின்னலுறுதியேல் நம்பி
செப்பிள மென்முலையார்கள்
சிறுபுறம் பேசிச்சிரிப்பர்
சொப்பட நீராடவேண்டும்
சோத்தம்பிரான் இங்கே வாராய் . . . . . . . . . .. . . . . . 5

எண்ணைக் குடத்தையுருட்டி
இளம்பிள்ளை கிள்ளியெழுப்பிக்
கண்ணைப் புரட்டி விழித்துக்
கழகண்டு செய்யும்பிரானே‚
உண்ணக் கனிகள் தருவன்
ஒலிகடலோத நீர்போலே
வண்ணமழகிய நம்பீ ‚
மஞ்சனமாட நீ வாராய். . . . . . . . . . .. . . . . . . . . . . 6

கறந்த நற்பாலும் தயிரும்
கடைந்துறிமேல் வைத்த வெண்ணெய்
பிறந்ததுவே முதலாகப்
பெற்றறியேனெம்பிரானே‚
சிறந்தநற்றாயலர் து}ற்றும்
என்பதனால் பிறர்முன்னே
மறந்தும் உரையாடமாட்டேன்
மஞ்சனமாட நீவாராய் . . . . . . . . . .. . . . . . . . . . . 7

கன்றினை வாலோலைகட்டிக்
கனிகளுதிரவெறிந்து
பின்தொடர்ந் தோடியோர் பாம்பைப்
பிடித்துக்கொண்டாட்டினாய் போலும்
நின்திறத்தேனல்லேன் நம்பி ‚
நீ பிறந்த திரு நன்னாள்
நன்று நீ நீராடவேண்டும்
நாரணா ஓடாதே வாராய் . . . . . . . . . .. . . . . . . . .. 8

பூணித்தொழுவினில் புக்குப்
புழுதியளைந்த பொன்மேனி
காணப் பெரிதுமுகப்பன்
ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாணனெத்தனையுமிலாதாய்‚
நப்பின்னை காணிற் சிரிக்கும்
மாணிக்கமே என் மணியே‚
மஞ்சனமாட நீ வாராய். . . . . . . . . . .. . . . . . . . . . .9

கார்மலி மேனி நிறத்துக்
கண்ணபிரானையுகந்து
வார்மலி கொங்கையசோதை
மஞ்சனமாட்டியவாற்றைப்
பார்மலி தொல் புதுவைக்கோன்
பட்டர்பிரான் சொன்னபாடல்
சீர்மலி செந்தமிழ் வல்லார்
தீவினையாதுமிலரே. . . . . . . . . . .. . . . . . . . . . . .10


*இக்குறியிட்ட பாசுரங்கள், இரண்டுமுறை சொல்லவேண்டும்.   







No comments:

Post a Comment