கண்ணிநுண்சிறுத்தாம்பு | |
தனியன்கள் | |
அவிதித விஷயாந்தரசடாரே: உபநிஷதாமுபகாநமாத்ரபோக:
அபிசகுணவசாத் ததேகசேஷி மதுரகவிர் ஹ்ருதயே மமாவிரஸ்து |
|
வேறொன்றும்நானறியேன் வேதம் தமிழ்செய்த
மாறன்சடகோபன் வண்குருகூர் - ஏறெங்கள் வாழ்வாமென்றேத்தும் மதுரகவியார் எம்மை ஆள்வாரவரே யரண். |
|
பாசுரங்கள் | |
* கண்ணிநுண்நிறுத்தாம்பினால் கட்டுண்ணப் -
பண்ணியபெருமாயன், என்னப்பனில் நண்ணித்தென்குருகூர் நம்பியென்றக்கால் அண்ணிக்குமமுதூறும் என்நாவுக்கே. ---1) நாவினால்நவிற்றி இன்பமெய்தினேன் மேவினே;ன அவன்பொன்னடிமெய்ம்மையே தேவுமற்றறியேன் குருகூர்நம்பி பாவினின்னிசை பாடித்திரிவனே. ---2) திரிதந்தாகிலும் தேவபிரானுடைக் கரியகோலத் திருவுருக்காண்பன்நான் பெரியவண்குருகூர் நகர்நம்பிக்கா - ளுரியனாய், அடியேன் பெற்றநன்மையே. ---3) நன்மையால்மிக்க நான்மறையாளர்கள் புன்மையாகக் கருதுவராதலில் அன்னையாயத்தனாய் என்னையாண்டிடும் - தன்மையான், சடகோபனென்நம்பியே. ---4) நம்பினேன் பிறர்நன்பொருள் தன்னையும் நம்பினேன் மடவாரையுமுன்னெலாம் செம்பொன்மாடத் திருக்குருகூர்நம்பிக்கு - அன்பனாய், அடியேன் சதிர்த்தேனின்றே. ---5) இன்றுதொட்டும் எழுமையுமெம்பிரான் நின்றுதன்புகழ் ஏத்தவருளினான் குன்றமாடத் திருக்குருகூர்நம்பி என்றுமென்னை இகழ்விலன் காண்மினே. ---6) கண்டுகொண்டென்னைக் காரிமாறப்பிரான் பண்டைவல்வினை பாற்றியருளினான் எண்டிசையும் அறியவியம்புகேன் ஒண்டமிழ்ச் சடகோபனருளையே. ---7) அருள்கொண்டாடும் அடியவரின்புற அருளினான் அவ்வருமறையின் பொருள் அருள்கொண்டு ஆயிரமின்தமிழ்பாடினான் அருள்கண்டீர் இவ்வுலகினில்மிக்கதே. ---8) மிக்கவேதியர் வேதத்தினுட்பொருள் நிற்கப்பாடி என்நெஞ்சுள்நிறுத்தினான் தக்கசீர்ச் சடகோபனென்நம்பிக்கு, ஆட் - புக்ககாதல் அடிமைப்பயனன்றே. ---9) * பயனன்றாகிலும் பாங்கலராகிலும் செயல்நன்றாகத்திருத்திப் பணிகொள்வான் குயில்நின்றார்பொழில்சூழ் குருகூர்நம்பி! முயல்கின்றேன் உன்தன்மொய்கழற்கன்பையே.--10) *அன்பன்தன்னை அடைந்தவர்கட்கெல்லா - மன்பன், தென்குருகூர் நகர்நம்பிக்கு அன்பனாய் மதுரகவிசொன்னசொல் - நம்புவார்பதி, வைகுந்தங்காண்மினே. ( கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் - பண்ணியபெருமாயன் என்னப்பனில் நண்ணித்தென்குருகூர் நம்பியென்றக்கால் அண்ணிக்குமமுதூறும் என்நாவுக்கே. ) *இக்குறியிட்ட பாசுரங்கள், இரண்டுமுறை சொல்லவேண்டும். |
|
Thursday, 9 January 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment