இளங்காடு லட்சுமி ஹயக்ரீவருக்கு ஹோமம் 23ம் தேதி நடக்கிறது
திருக்காட்டுப்பள்ளி, : திருக்காட்டுப்பள்ளி அடுத்த இளங் காடு ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு 23ம் தேதி மஹா ஹயக்ரீவ ஹோமம் நடக்கிறது. கல்விக் கடவுளாக போற்றப்படுபவர் ஸ்ரீசரஸ்வதி தேவி. ஸ்ரீசரஸ்வதி தேவிக்கே கல்வியை அளித்ததாக போற்றப்படுபவர் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர்.
இவரை வழிபடுவதால் கல்வியில் மேம்பட்டு விளங்கலாம் என்பது நம்பிக்கை. இளங்காடு ஸ்ரீகண்ணன் கோயிலில் அருள்பாலித்து வரும் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவருக்கு 23ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மஹா ஹயக்ரீவ ஹோமம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் 99426 04383 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று ஸ்ரீகண்ணன் அறக்கட்டளை செயலாளர் சின்னதுரை தெரிவித்துள்ளார்.
Source
No comments:
Post a Comment