Monday, 17 February 2014

கழுத்தில் பச்சை வண்ணத்துடன் அருள் தரும் ஹயக்ரீவர்

ஸ்ரீவாதிராஜ என்கிற மாத்வ தீர்த்தருக்கு ஹயக்ரீவர் இஷ்ட தெய்வம். சிற்பி ஒருவர் விநாயகர் விக்ரகம் பஞ்சலோகத்தில் செய்ய முற்பட்டார். அச்சில் வார்த்து எடுத்து பார்த்த பொழுது அந்த சிலை குதிரை முகமும், நான்கு கைகளில் ஒரு கையில் புத்தகம்,ஒரு கையில் ஜபமாலை, ஒரு கையில் சங்கு இன்னொரு கையில் ஞானமுத்திரையுடன் அமைந்தது.

அதை எத்தனை முறை அழித்து செய்தாலும் விநாயக்ருக்கு பதில் ஹய்க்ரீவ விக்ரகம் தான் வந்தது. அவர் இந்த விக்ரகத்தை என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருக்கையில் அன்றிரவு இந்த விக்ரகத்தை ஸ்ரீவாதிராஜரிடம் ஒப்படைக்கச் சொல்லி கனவு வந்தது.

வாதிராஜர் ஹ்யக்கீரவருக்கு ஹய்க்ரீவ மட்டி எனும் பிரசாதம் செய்து நிவேதனம் செய்வார். (கடலைப்பருப்பில் வெல்லம், தேங்காய் சேர்த்து செய்யப்படும்) பூஜை முடிந்ததும் கதவுகளை மூடிக்கொண்டு பிரசாத பாத்திரத்தை தன் தலையில் வைத்துக்கொள்வார்.

ஸ்ரீ ஹயக்ரீவர் வெள்ளைக் குதிரை உரு கொண்டு வந்து தனது முன்னாங்கால்களை வாதிராஜர் தோளில் வைத்து கொஞ்சமே கொஞ்சம் பிரசாதமாக வைத்துவிட்டு மிச்சத்தை சாப்பிட்டு போகும் அதிசயம் நடந்தது. இப்படி எல்லாம் நடக்க சாத்தியமா என சந்தேகப்பட்டனர் சிலர்.

ஒரு நாள் பிரசாதத்தில் விஷம் கலந்து வைத்துவிட்டனர். அன்றைய தினம் குதிரை உருவில் வந்த ஹயக்ரீவர் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் பிரசாதம் முழுவதையும் தின்றுவிட்டார். அவரது உடல் முழுதும் பச்சை வண்ணமாயிற்று.

அதன்பிறகு கத்திரிக்காயை ஒரு விதமாக சமைத்து படைக்க அதை உண்டதும் பச்சை வண்ணம் நீங்கியது. அந்த நிகழ்வுக்கு சான்றாக கழுத்தில் மட்டும் பச்சை வண்ணத்தை தாங்கி அருள் பாலிக்கிறார் ஹயக்ரீவர். 


thanks: http://www.maalaimalar.com/2014/02/17152739/Lakshmi-hayagriva-worship.html

No comments:

Post a Comment