Skip to main content

திருவரங்கம் ஸ்ரீரங்கநாதர்

மூலவர் : ரங்கநாதர்
உற்சவர் : நம்பெருமாள்
அம்மன்/தாயார் : ரங்கநாயகி
தல விருட்சம் : புன்னை
தீர்த்தம் : சந்திர தீர்த்தம் மற்றும் 8 தீர்த்தங்கள்
ஆகமம்/பூஜை : பாஞ்சராத்திரம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவரங்கம்
ஊர் : ஸ்ரீரங்கம்
மாவட்டம் : திருச்சி
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
மங்களாசாசனம்
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,
நம்மாழ்வார், ஆண்டாள், பெரியாழ்வார்,
திருமங்கை ஆழ்வார், குலசேகர ஆழ்வார்,
திருமழிசை ஆழ்வார், திருப்பாணாழ்வார்,
தொண்டரடி பொடியாழ்வார்
பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா! அமரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.
-தொண்டரடிப்பொடியாழ்வார்
திருவிழா:
வைகுண்ட ஏகாதசி இந்த மாதத்தின் இறுதியில்
ஒரு தென்னை மரத்தின்
அடித்தண்டினை அவ்விழாவுக்குரிய பந்தலின்
முதற்கம்பாக நடுவதிலிருந்து தொடங்கும்.
பகல்பத்து, ராப்பத்து என்னும் இத்திருவிழா நாட்கள்
முழுவதிலும் சுவாமியின் திருமுன்னிலையில்
நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் முழுவதும்
ஓதவும், பாடவும் பெறும். பிரம்மாண்டமான இந்த
திருவிழாவில் 5 லட்சம் பக்தர்கள்
திரண்டு பெருமாளை வணங்குவர். அதோடு இத்தலத்தில்
நடக்கும் 3 பிரம்மோற்சவ விழாக்களிலும் (10 நாட்கள்)
லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வர். மாசி மாத
தெப்பத்திருவிழா 10 நாள் விழாவிலும்,
ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு கோயில்
விழாக்கோலம் பூண்டிருக்கும். தவிரமாதந்தோறும்
இக்கோயிலில் திருவிழாக்கள் நடந்தவண்ணம் இருக்கும்.
தமிழ் ஆங்கில வருடப் பிறப்பின்போதும் வாரத்தின்
சனிக்கிழமைகளிலும் கோயிலில் பெருமளவு பக்தர்கள்
வருகை இருக்கும்.
தல சிறப்பு:
நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய
மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும்
21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய
கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க
அளவில் உள்ளது. இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின்
மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்க
து. தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில்
பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம்.
புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலின
ின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது.
சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ
பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின்
விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார்
தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம்
ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. ராமாவதாரம்
முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில்.
பெருமாளின் 108 திருப்பதிகளில்
தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான்.
முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான
திருச்சிறுபுலியூருமே அவை. இத்தலத்து விமானம்
பிரணாவாக்ருதி எனப்படுகிறது. வட
இந்தியாவிலிருந்து பெருமளவில் பக்தர்கள்
வருகை தரும் சிறப்பு வாய்ந்த வைணவ தலம்.
இந்தியாவில் உள்ள சில பிரம்மாண்டமான கோயில்களில்
இதுவும் ஒன்று.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய
தேசங்களில் இது 1 வது திவ்ய தேசம்.
பொது தகவல்:
ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த
நாளில் இருந்து 48வது நாளில் "ஆடிப் பெருக்கு'
உற்சவம் கொண்டாடப் படுகிறது. சில ஆண்டுகளில்
ஆடி 18ம் தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம்
தேதியும் இந்த விழா கொண்டாடப்படும்.
ஆடிப்பெருக்கு விழா ஸ்ரீரங்கத்தில்க
ொண்டாடப்படுகிறது.
அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தரு ளுகிறார்.
அங்கு காவிரித்தாய்க்கு அவர் சார்பில்
பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய
பொருட்கள் சீதனமாக தரப்படும். இந்த
பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து, ஆற்றிற்குள்
சென்று மிதக்க விடுவார்கள்.
பிரார்த்தனை
மோட்சம் தரும் தலம் இது என்பதால்
இத்தலத்து பெருமாளை வணங்குவது பிறவிப்
பயனாகும். திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வி,
ஞானம், வியாபார விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம்
கிடைக்க, விவசாயம் செழிக்க
இத்தலத்து பெருமாளிடம் பக்தர்கள் வேண்டிக்
கொள்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு வெண்ணெய் பூசுதல்,
குங்குமப்பொடி சாத்துதல், சுவாமிக்கு மார்பிலும்
பாதங்களிலும் சந்தன குழம்பு அணிவிக்கலாம்.
சுவாமிக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுபத்தி,
வெண்ணெய், சிறுவிளக்குகள், துளசி தளங்கள், பூக்கள்,
பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம்
செய்து இறைவனுக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம்.
இது தவிர கோயிலுக்கு வரும்
பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
தலபெருமை:
ரங்கநாதர், பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில்
காட்சி தருகிறார். நாபியில் பிரம்மா இல்லை.
ஆனால், சூரிய
உதயத்திற்கு சற்று முன்பு ரங்கநாதரை, அவர்
பூஜிப்பதாக ஐதீகம். கோயிலுக்குள் பாவம் தீர்க்கும்
சந்திர தீர்த்தம் உள்ளது. வைகுண்ட
ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்களும் சுவாமி,
முத்தங்கி சேவை சாதிக்கிறார். இந்த வைபவம்
இங்கு பிரசித்தி பெற்றது.
திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல்
எறிந்தபோது, சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய
நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது.
டில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள்,
இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத
அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில்
நம்பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில்
லுங்கி அணிவித்து, ரொட்டி நைவேத்யம்
படைக்கப்படுகிறது.
தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில்
பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம்.
புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலின
ின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது.ச
ுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ
பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின்
விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார்
தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம்
ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.ராமாவதாரம்
முடிந்தபின்பு தோன்றிய பழமையான
கோயில்.பெருமாளின் 108 திருப்பதிகளில்
தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான்.
முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான
திருச்சிறுபுலியூருமே அவை.
மோட்ச ராமானுஜர் : இத்தலத்தில் தங்கி பலகாலம்
ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர்,
இங்கேயே மோட்சம்அடைந்தார். அவரது உடலை, சீடர்கள்
பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர்.
சிலகாலம் கழித்து அவர்
அதே கோலத்திலேயே பூமிக்கு மேலெழுந்தார். இவர்
இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார்.
இவருக்கு திருமஞ்சனம் கிடையாது.
சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ,
பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.
பெருமாளுக்கு 365 போர்வை : கார்த்திகை கைசிக
ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில்
நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக
போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது.
சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும்
வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால்,
அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம்
செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர்
மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின்
காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர்.
காவிரி நீர் அபிஷேகம்! :
ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று அகில்,
சந்தனக்கலவையை சாத்தி ரங்கநாதருக்கு ஜேஷ்
டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய
தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு (வைகுண்ட
ஏகாதசியன்று பவனி வருபவர்) அணியப்பட்டுள்ள
தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில்
காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப் படும். மற்ற
நாட்களில் காப்பு அணிந்த நிலையிலேயே அபிஷேகம்
நடக்கும். இந்த அபிஷேகத்தை காவிரியே செய்வதாக
ஐதீகம்.
ஆடிப்பெருக்கு திருவிழா : ஆனி கேட்டையில்
சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில்
இருந்து 48வது நாளில் "ஆடிப் பெருக்கு' உற்சவம்
கொண்டாடப்படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி 18ம்
தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த
விழா கொண்டாடப்படும். இவ்வாண்டு ஆடி 28ல்
ஆடிப்பெருக்கு விழா ஸ்ரீரங்கத்தில்
கொண்டாடப்படுகிறது.
அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார
். அங்கு காவிரித்தாய்க்கு அவர் சார்பில்
பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய
பொருட்கள் சீதனமாக தரப்படும். இந்த
பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து, ஆற்றிற்குள்
சென்று மிதக்க விடுவார்கள்.
கம்பருக்கு அருளிய நரசிம்மர் :
கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம்
செய்தபோது, அதில்
நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய
அறிஞர்கள், ராமாவதாரத்தில் நரசிம்மர்
பற்றி சொல்லக்கூடாது என்றனர். கம்பர்,
"அதை நரசிம்மரே சொல்லட்டும்!'
எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார்.
அப்போது நரசிம்மர், கர்ஜனையுடன்
தூணிலிருந்து வெளிப்பட்டு, "கம்பரின்
கூற்று உண்மை!' என ஆமோதித்து தலையாட்டினார்.ம
ேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர், தாயார்
சன்னதி அருகில் தனிசன்னதியில் இருக்கிறார்.
கையில் சங்கு மட்டும் இருக்கிறது, கரம் கிடையாது.
சன்னதி எதிரில், கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம்
உள்ளது.
மூன்று பிரம்மோற்ஸவம் : சித்திரை, தை,
பங்குனி ஆகிய மாதங்களில் இங்கு பிரம்மோற்ஸவம்
நடக்கிறது.சத்தியலோகத்தில்
ரங்கநாதருக்கு பிரம்மா நடத்திய
விழா பங்குனியில் கொண்டாடப்படுகிறது. இதை,
"ஆதி பிரம்மோற்ஸவம்' என்கின்றனர். இவ்விழாவின்
இடையே வரும் உத்திரம் நட்சத்திரத்தில் சுவாமி,
ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக
காட்சி தருகிறார். ரங்கநாதருக்கு, அயோத்தியில்
ராமர் கொண்டாடிய விழா, தை மாதம் நடக்கிறது.
பூமாதேவியின் பதி ராமர் நடத்திய விழா என்பதால்
இவ்விழா, "பூபதி திருநாள்' என்றே அழைக்கப்
படுகிறது. இதை ராமனே நடத்துவதாக ஐதீகம்.
அமுத கலச கருடாழ்வார் : கோயில் பிரகாரத்தில்
அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு
சன்னதி இருக்கிறது. அசுரர்களிடம்
இருந்து வேதங்களை மீட்ட பெருமாள், அதனை கருடாழ்
வாரிடம் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் இவர்
கையில், வேதங்களை வைத்திருக்கிறார்.
இவரது சிலை சாளக்ராமத்தால் ஆனது.
கருடாழ்வாருக்கு பருப்பு, வெல்லம்,
கொழுக்கட்டை படைத்து, மல்லிகைப்பூ மாலை, மஞ்சள்
வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். கருட
பஞ்சமியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும்.
தானியலட்சுமி, அன்னப்பெருமாள் கோயில்
பிரகாரத்தில் தானிய
லட்சுமிக்கு சன்னதி இருக்கிறது.
இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர், இடதுபுறம்
நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு.
சுக்கிர கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள்
இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் அணிவித்து,
வெண்மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள்.
பிரம்மோற்ஸவத்தின்போது பெருமாள்,
இவளது சன்னதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும்
வைபவம் காண்கிறார். அன்னத்திற்கு அதிபதியான
அன்னப்பெருமாள் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில்
இருக்கிறார். கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன
உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள
உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்படும் நம்பிக்கை.
பெருமாளே அன்னப் பெருமாளாக
அருள்பாலிப்பது சிறப்பு.
கருடாழ்வாருக்கு 30 மீட்டர் வேஷ்டி! : ரங்கநாதர்
சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில்
விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம்
அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத்
தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு, 30
மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம்
கிடையாது. வியாழக்கிழமைகளில்
கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது.
இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும்
துவார பாலகர்களாக இருப்பதும்,
மார்கழி திருவாதிரையில்
இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும்
சிறப்பு.
நோய் நீங்க விளக்கெண்ணெய் தீபம்: மருத்துவக்கடவுளான
தன்வந்திரிக்கு இங்கு சன்னதி இருக்கிறது. மார்பில்
மகாலட்சுமி, கைகளில் சங்கு, கரம், அமிர்த கலசம்
மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார் இவர்.
தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள்,
இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி, தயிர் சாதம்
படைத்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில்
ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது. தினமும்
சுவாமிக்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக்
கலவையையும் படைக்கின்றனர்.
சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்த
கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம்.
பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில்,
சுவாமிக்கு சூர்ணத்தால் (மருந்துக்கலவை) அபிஷேகம்
செய்யப்படுகிறது.
ஒரே சன்னதியில் மூன்று தாயார் : ஸ்ரீதேவி,
பூதேவி இருவரும் பெருமாளுடன்
இருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்குள்ள
ரங்கநாயகி தாயார் சன்னதியில் தாயார்
உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி,
பூமாதேவி என வரிசையாகக் காட்சி தருகின்றனர்.
இத்தகைய அமைப்பில்
தாயார்களை தரிசிப்பது அபூர்வம். தாயார் பூஜையில்
தீபாராதனை செய்யும்போது மத்தளம், எக்காளம் என்னும்
வாத்தியங்கள் இயகப்படுகின்றன.
தல வரலாறு:
இத்தல ரங்கநாதர் திருப்பாற்கடலின
ின்று தோன்றியவர். இவரை பிரம்மா நெடுங்காலமாக
பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய
பூஜை செய்ய சூரியனை நியமித்தார். சூரிய
குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில்
இந்த ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார். ராவணன்
சீதையை கடத்தி சென்ற போது,
அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான்.
ராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த
விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த
ரங்கநாதரை அளித்தார் ராமர். விபீஷணன்
அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில்
காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்
டு திரும்ப
எடுக்கும்போது தரையை விட்டு வரவில்லை.
அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன்
தர்மவர்மன் ஆறுதல் கூறினான். ரங்கநாதரும்
காவிரிக்கரையிலேயேதங்கியிருக்க வேண்டும்
என்பதே தமது விருப்பம் என்றார். விபீஷணனைத்
தேற்றும் பொருட்டு அவர், தாம் விபீஷணன் இருக்கும்
தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக
உறுதியளித்தார். பின்னர் தர்மசோழனும் இவ்விடத்தில்
கோயில் கட்டிவழிபட்டான். அக்கோயில் காலப்போக்கில்
வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ
மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற
அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: நூற்றுக்கணக்கான ஏக்கர்
பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும்
திருக்குளங்களும் தனி சந்நிதிகளும் 21
கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய
கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க
அளவில் உள்ளது. இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின்
மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்க
து. இந்தியாவில் உள்ள சில பிரம்மாண்டமான
கோயில்களில் இதுவும் ஒன்று
விஞ்ஞானம் அடிப்படையில்: இத்தலத்து ராஜகோபுரம்
இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம்
என்பது குறிப்பிடத்தக்கது.....

Comments

Popular posts from this blog

Applications Open for Nithyapadi Thiruvarathanam Sponsors 🙏

🔹 Just one month of seva – once a year Daily two-time Aradhanam will be performed in all 6 sanctums of Sri Kannapiran Temple. 🔆 *Regular Weekly Services*   _Fridays – Thayar Tirumanjanam (Abhishekam)_   _Saturdays – Anjaneyar Tirumanjanam & Evening Thiruppavai Goshti_  🌟 *Monthly Star Abhishekams*   _Rohini – Rajagopala Swami_   _Uthiram – Mahalakshmi_   _Thiruvonam – Lakshmi Hayagreevar_   _Moolam – Anjaneyar_   _Sankatahara Chaturthi – Vijaya Ganapathi Tirumanjanam_  🙏 *Special Blessings for Sponsors*  ✔ *_Archana & Sankalpam in your name during every Tirumanjanam_* ✔ *Temple Prasadam will be sent during the annual Uriyadi festival & Homams*  👉 One month of offering… brings divine grace throughout the year! 📿 *Those who uphold Kannapiran*… *Kannapiran will uphold their family for a lifetime*. 📌 *For more details, contact*: 📞 9500264545 / 9942604383 / 8056901601 📌 ...

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...