Saturday, 22 February 2014

தினமலர் - கோயில் வலைதளத்திற்க்காக தயாரிக்கப்பட்டது



திருக்கோயிலின் பெயர்          :     ஸ்ரீகண்ணன் திருக்கோயில்
மூலவர்                   :     ஸ்ரீ ஆ(யா)தவக்கண்ணன் – ஸ்ரீ லக்ஷ்மி
ஹயக்ரீவர்
உற்சவர்                   :     ஸ்ரீ வேணுகோபாலன் 
பிற மூர்த்தங்கள்           :     ஸ்ரீ ஸந்தான கோபால கிருஷ்ணன்
தாயார்                    :     மூலவர் கோமாதாவுடன் ஒன்றாக
இருப்பதால் தனியே தாயர் சன்னதி இங்கு இல்லை.
ஆகமம்                   :     பாஞ்சராத்ர ஆகமம்
திருவாரதனம்              :     தென்கலை
புராதன பெயர்             :     இராஜகேசரி புரம் (ஊரின் பெயர்) 
ஊர்                       :     இளங்காடு(வாலவனம்,இராஜகிரி) 
மாவட்டம்                 :     தஞ்சாவூர்
மாநிலம்                   :     தமிழ்நாடு 
திருவிழா                  :     ஸ்ரீஜெயந்தி மற்றும் ஸ்ரீ ஹயக்ரீவ
                                ஜெயந்தி
திறக்கும் நேரம்            :     காலை 7.00 – 11.00மணி
                                மாலை 6.00 – 8.00மணி
முகவரி                   :     தெற்குத்தெரு
                                இளங்காடு(அஞ்சல்)
                                திருக்காட்டுப்பள்ளி(வழி)
                                திருவையாறு(வட்டம்)
தஞ்சாவூர்(மாவட்டம்)
                                அ.கு எண்:613104
பேருந்து வழித்தடம்   :    
Ø  தஞ்சாவூர் பழைய பேரூந்து நிலையத்திலிருந்து 51 என்ற பேரூந்து மூலமாக நேரே கோயிலின் வாசலில் இறங்கி கொள்ளலாம்.
Ø  தஞ்சாவூரிலிருந்து கல்லணைக்கு அகரப்பேட்டை வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளிலும் இளங்காட்டு பாதை என்று இறங்கினால் 2கி.மீ தொலைவில் கோவிலை அடையலாம்.
Ø  திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 5கி.மீ தொலைவில் சிற்றுந்து மூலமாகவும் வந்து அடையலாம்.
Ø  திருச்சிராப்பள்ளியிலிருந்து கல்லணை வந்து,கல்லணையிலிருந்து அகரப்பேட்டை வழியாக தஞ்சாவூர் செல்லும் பேருந்தில் இளங்காட்டு பாதை என்று இறங்கினால் 2கி.மீ தொலைவில் கோயிலை அடையலாம்.

ப்ராத்தனை:
ü  விரும்பியதைத் தரும் காமதேனுவுடன் கண்ணபிரான் சேவை சாதிப்பதால் இங்கே தாங்கள் வேண்டுவன அனைத்தும் நிறைவேற சனிக்கிழமை தோறும் நெய் தீபமேற்றி திருத்துளாயால் அர்ச்சித்து வழிபட்டு வந்தால் விரும்பியவை கைகூடும்.
ü  புத்திர பாக்யம், திருமணம் கைகூட, மனை மற்றும் வீடு  ஆகியவைகள் உடனே கிட்ட இங்கு எழுந்தருளிருக்கும் ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணனை மூலவருக்கு நடைபெறும் உரோகிணி திருநட்சத்திர திருமஞ்சன காலங்களில்  வெண்ணையுடன் வழிபட்டு பயனை அடையலாம்.
ü  மார்கழி மாத புதன்கிழமையில் குசேலர் கண்ணபிரானுக்கு  அவல் படைத்து செல்வந்தரானது போல நீங்களும் இங்கு கண்ணபிரானுக்கு  அவல் படைத்து குபேரனாகளாம்.
ü  திருக்கோயில் துவங்கியதிலிருந்து அட்டமி திதி இக்கோயிலுடனே தொடர்ந்து வருகின்றது இங்கு அனைத்து விசேடங்களும் எதிர்பாராதவிதமாக அட்டமியிலே நடைபெறுகின்றன,ஆகவே அட்டமி திதியில் தவறாது அர்ச்சித்து வணங்கி அனைத்திலும் வெற்றி வாகை சூடலாம்.
ü  உரோகிணி நட்சத்திரகாரர்கள் உரோகிணி திருமஞ்சனங்களில் தவறாது கலந்து கொண்டு பகவானை சேவித்து தடைகள் நீங்கப் பெறலாம்.
ü  கல்வி, நாவன்மை மேம்படவும் செல்வம் தழைத்தோங்கவும் மற்றும் வழக்குகளில் வெற்றி பெற இங்குள்ள ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் வரப்பிரசாதியாவார்.இவருக்கு வியாழக்கிழமையில் நெய் தீபம், ஏலக்காய் மாலை சாற்றி அர்ச்சனை செய்து பயனடைந்தோர் பலர்.
ü  நாக தோஷம் நீங்க கருடாழ்வாருக்கு இராகு காலங்களில் தீபமேற்றி வழிபட்டு பயன் அடையலாம்.
ü  பட்சி,நாக தோஷம் நீங்க ஆடி மாத கருட,நாக பஞ்சமியில் நடைபெறும் திருமஞ்சனத்தில் பங்கு கொண்டு அருள் பெறலாம்.

சிறப்புகள்:
v  காமதேனு ஸ்ரீ கண்ணபிரானின் திருவடி தனது நாக்கால் வருடி ஸ்ரீவைஷ்ணவ முக்கியமான ஸரணாகதி தத்துவத்தினை இங்கே நமக்கு காட்டிகொடுக்கிறார் இந்த கண்ணபிரான் ஆகையால் பஞ்ஜ ஸமஸ்காரம் செய்துகொள்வது விசேஷம்.
v  ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீகோவிந்த் எதிராஜ ஜீயர் ஸ்வாமிகள் வந்து வணங்கிய பெருமாள்.அன்றுமுதல் மூலஸ்தான திருவிளக்கீடு கைங்கர்யம் இன்றளவும் இவருடையது.
v  வாரந்தோறும் சனிக்கிழமையில் மாலை வேதமனைத்திற்க்கும் வித்தாகும் திருப்பாவை கோஷ்டி சேவை நடைபெறும்.
v  ஆழ்வார்கள் அவதார திருநட்சத்திரங்களில் அவர்கள் அருளிச்செய்தவை பாராயணம் செய்யப்படும்.
v  ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளை போலவே ரேவதி தான் இக்கோயிழாழ்வான் திருநட்சத்திரமாகும்.
v  ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் இங்கு பிரதிஷ்டை செய்தவுடனே இங்கு உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.மேலும் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றது.
v  மாசி மாதந்தோறும் ஸ்ரீஹயக்ரீவ ஹோமம் நடைபெறும்.
v  தை முதல் நாளும், ஸ்ரீஜெயந்தி அன்று நடைபெறும் வையாழி சேவை நடைபெறும்.
v  உற்சவர்  எப்போது திருவீதி கண்டருளி மூலஸ்தானம் சேரும் முன்பு பன்னிருஆழ்வார்கள் பாசுரங்கள் ஆழ்வாருக்கு ஒன்று வீதம் கேட்டுக்கொண்டே பெருமாள் மூலஸ்தானம் சேருவார்.
v  நாக , பட்சி தோஷமுள்ளவர்கள் கருட,நாக பஞ்சமி திருமஞ்சனத்தில் பங்கு கொண்டு திருமணம் கைகூடியவர்கள் பலர்.
திருவிழாக்கள்:
*      தை முதல்நாள் தான் ஸ்ரீ கண்ணன் திருக்கோயில் துவங்க ஆரம்பித்து முதல் புறப்பாடு ஆகையால் தைமுதல் நாள் மாலை உற்ச்சவர் கோயிலின் தெற்க்கு வீதியில் வையாழி கண்டருளி,பாசுரங்கள் கேட்டருளி,கருட மஹா மண்டபத்தில் ஊஞ்சல் சேவை கண்டருளுவார்.
*      சித்திரை முழுநிலவன்று மாலை ஸ்ரீ சத்யநாரயண பூசை நடைபெறும்.
*      ஸ்ரீஜெயந்தி உத்சவம் மூன்று நாள்கள் நடைபெறும்.
o   முதல்நாள் மாலை உபன்யாசங்கள், இசைச்சொற்ப்பொழிவு,திவ்யபிரபந்த கோஷ்டி நடைபெறும்.
o   ஸ்ரீஜெயந்தியன்று காலை கோபூசையும்,மஹா திருமஞ்சனமும் திருவரங்கம் திருவத்யன கோஷ்டியினரின் பெரியாழ்வார் திருமொழி கோஷ்டி சேவையுடன் நடைபெறும்.
o   ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ணன் மஹாமண்டபத்தில் தொட்டியில் எழுந்தருளுவார்.
o   மாலை உத்சவர் திருவீதி புறப்பாடு கண்டருளுவார்.
o   வையாழி சேவை,வானவேடிக்கை நடைபெறும்.
o   உற்சவர் ஆழ்வார் அருளிச்செயலுக்கு அருளால்
o   உறியடித்தல்,சாற்றுமுறை
o   மறுநாள் விடையாற்றி
*      ஆவணி திருவோணம் ஸ்ரீஹயக்ரீவர் ஜெயந்தி சிறப்பாக நடைபெறும்.
*      புரட்டாசி சனிக்கிழமை தோறும் திருமஞ்சனம் நடைபெறும்.
*      நாச்சியார் திருக்கோலம் வைகுந்த ஏகாதசி முதல்நாள் நடைபெறும்.
*      பரமபத வாசல் திறப்பும் நடைபெறவும்.

ஆலய தகவல் பெற
அர்ச்சகர்:
ரெகுநாத பட்டாச்சார்
9791999936
ஆலய அறங்காவலர்கள்
ஜெ.கோபிகிருஷ்ணன்
9500264545
ம.சின்னதுரை
9942604383
ப.புருசோத்தமன்
8056901601

No comments:

Post a Comment