இறையன்பு நிறை நெஞ்சீர் வணக்கம் !
காக்கும்
கடவுளான கண்ணபிரான் கல்விக்கடவுளான ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவருடன் இளங்காட்டில் கோயில்
கொண்டிருப்பது யாவரும் நன்கு அறிந்ததே. தன்னை நாடி வரும் அன்பர்களின் குறைகளைப்
போக்கும் பெருமானாக இக்கண்ணபிரான் விளங்குகிறார். இக்கோயிலின் வழிபாடுகள்
அனைத்தும் அன்பர்களின் உபயங்கள் மூலமே நடைபெற்று வருகின்றன். இக்கோயிலிற்கு என்று
எவ்விதமான நிரந்தர வருமானமும் இல்லை.எனவே
ஸ்ரீ கண்ணபிரான் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவரின் பூசை நாள்தோறும்
தடையில்லாமல் நடைபெற நீங்கள் ஒரே ஒருமுறை ரூ.1000 /- மட்டும், செலுத்தினால் அதை
வங்கியில் செலுத்தி அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையின் மூலம் தாங்கள்
விரும்பும் நாளில்(பிறந்தநாள்/திருமணநாள்)கண்ணபிரான் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி
ஹயக்ரீவருக்கும் அர்ச்சனை செய்து அன்றைய நாள் பூசை முழுவதும் தாங்கள் வழங்கிய
தொகையின் மூலம் ,வங்கியில் கிடைக்கும் வட்டித்தொகையில் செய்யப்படும்.ஆண்டுதோறும்
தொடர்ந்து,நீங்கள் குறிப்பிட்ட நாளில் அர்ச்சனை மற்றும் பூசைகள் செய்து
திருவருட்பிரசாதம் தங்களுக்கு எங்கிருந்தாலும் அஞ்சல் மூலம் அனுப்பப்படும். எனவே
ஒரு பிடி அவல் கொடுத்த குசேலனை குபேரனாக்கிய கண்ணபிரானுக்கு ஒருநாள் முழுவதும்
ஆகும் நைவேத்யத்தினை வழங்கி நீங்களும் குபேரனாகவும், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கும்
வழங்கி அள்ள அள்ள குறையாக கல்வி செல்வத்தையும் பெறலாம்.உடனே இணைக ! திருவருள்
பெறுக!!
மேலும் தகவல் பெற
9500264545,
8056901601,
9942604383,
9345242611 &
9942718582
Nice
ReplyDelete