அயோத்தி மன்னர் தசரதர், புத்திரகாமேஷ்டி யாகத்தில் கிடைத்த பாயசத்தை தன் துணைவியரான கோசலை, கைகேயி, சுமித்திரைக்கு வழங்கினார்.
மூவரும் கருவுற்றனர். நான்கு குழந்தைகள் பிறந்தனர். (சுமித்திரைக்கு இரட்டைக் குழந்தை) குலகுரு வசிஷ்டர், குழந்தைகளுக்கு ஜாதகம் கணித்து பெயரிட்டார். அவர்கள் பிறந்த நேரத்தின் அடிப்படையில்,
எப்போதும் ஆனந்தமாக இருப்பவன் என்னும் பொருளில் கோசலையின் பிள்ளைக்கு "ராமன்' என்று பெயர் வைத்தார்
.
எதையும் தாங்குபவன் என்னும் பொருளில் "பரதன்' என கைகேயியின் குழந்தைக்கு பெயரிட்டார்.
வலிமையும், அழகும் மிக்கவன் என்னும் பொருளில் "லட்சுமணன்' என்றும்,
"எதிரிகளுக்கு சிம்மசொப்பனம்' என்னும் பொருளில் "சத்ருகனன்' என்றும்
சுமித்திரையின் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டினார்.
ஸ்ரீமான் வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் அருளியது .
No comments:
Post a Comment