Thanks to Maalu Srirangam
பாஞ்ச ராத்ரம் என்றால் ஐந்து இரவுகள் என்று பொருள்.
“பாஞ்ச” என்றால் சூரியன் என்ற ஒரு பொருளுண்டு.“ராத்ரி” என்றால் “இருள்” இந்த இருள் அறியாமையைக் குறிக்கும்.இந்த சூரியன் அறியாமையாகிய இருளை விரட்டவந்தபடியால் “பாஞ்சராத்ரம்”.
ஸத்ர யாகம் ஒன்றில் ஐந்து இரவுகளில் எம்பெருமானை வழிபடும் விதம் உபதேசிக்கப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டதாக சதபத ப்ராஹ்மனம் என்னும் நூலில் சொல்ல ப் பட்டுள்ளது .
(1) இராத்திரியின் குணங்களான மஹாபூதம், தன்மாத்திரை, அஹங்காரம், புத்தி, அவ்யக்தம் என்ற ஐந்தின் காரணமாக இப்பெயர் ஏற்பட்டதாக பரம ஸம்ஹிதையில் கூறப்பட்டுள்ளது.
(2) சாங்கியம், பௌத்தம், ஆர்ஹதம், காபாலம், பாசுபதம் ஆகிய பஞ்ச சாஸ்திரங்களும் இருளடைந்து போகும்படி செய்ததால் பாஞ்சராத்ரம் என்று பெயர் வந்ததாக பாத்ம தந்திரம் என்னும் நு}ல் கூறுகிறது.
(3)ஔபகாயநர், சாண்டில்யர், பாரத்வாஜர், கௌசிகர், மௌஜ்யாயநர்ஆகிய இந்த ஐந்து ரிஷிகளுக்கும் ஐந்து ராத்ரிகளில் பகவான் தனித்தனியே தன்னை ஆராதிக்கும் முறையை கற்பித்தான். ஐந்து ராத்ரிகளில் இது உபதேசிக்கப்பட்டமையால் இது பாஞ்சராத்ரம் என்றழைக்கப்படுகின்றது.
(4)விஹகேந்திர ஸம்ஹிதையில் , அனந்தன், கருடன், விஷ்வக்ஸேனர், பிரம்மா, சிவன் ஆகிய ஐவருக்கும் முறையே ஐந்து ராத்ரிகளில் உபதேசித்தார், என்கிறது.
(5) ப்ரஹ்மம், முக்தி, போகம், யோகம், ப்ரபஞ்சம் என்ற ஐந்தை அடையும் வழிகளைக் கூறுவதால் இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.
(6) பரம்பொருளின் ஐந்து நிலைகளான பர, வ்யூக, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை எனும் நிலைகளைப் பற்றிக் கூறுவதால் இப்பெயர் ஏற்பட்டது என்றும் கூறுவர்.
அதிலும் வ்யூஹத்தின் நிலையை விளக்குவன பாஞ்சராத்ர ஆகமங்கள் என அழகியமணவாளப்பெருமாள் நாயனார் அருளிச்செய்துள்ளார்.

No comments:
Post a Comment