Tuesday, 10 June 2014

ஆழ்வார்களின் தலைவன் நம்மாழ்வார் அவதார நாள்

            நம் இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் நம்மாழ்வார் அவதார திருநட்சத்திரத்தினை முன்னிட்டு திருவாய்மொழி சாற்றுமுறை இன்று மாலை 7.00மணியளவில் நம் இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் நடைபெறும்,இதே திருநாளில் தான் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ கோவிந்த எதிராஜ ஜீயர் ஸ்வாமிகள் நம் கண்ணன் திருக்கோயிலுக்கு எழுந்தருளினார்,நாங்கள் யாவரும் எதிர்பாரா வண்ணம் எழுந்தருளி நம் கண்ணபிரானையும் ஸ்ரீலக்ஷ்மிஹயக்ரீவரையும் சேவித்து திருவிளக்கு கைங்கர்யத்தினை ஏற்றுக்குகொண்டார்.இன்று வரை இக்கைங்கர்யம் இவருடையது. ஆக இப்பொன்நாளில் நீங்களும் வந்து திருவாய்மொழி கோஷ்டியில் கலந்து கொண்டு நம் கோபாலன் அருளையும் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ கோவிந்த எதிராஜ ஜீயர் அருளையும் பெற வேண்டுமாய் ப்ராத்திக்கின்றோம்.

 

ஸ்ரீ நம்மாழ்வார்
 
நம்மாழ்வார் இருந்த புளியமரம்


மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே !
வேதத்தை செந்தமழிலால் விரித்துரைத்தான் வாழியே !
ஆதிகுருவாய் அம்புவியில் அவதரித்தான் வாழியே !
அனவரதம் சேனையர்கோன் அடிதொழுவான் வாழியே!
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே !
நன் மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே !
மாதவன் பொற் பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே !
மகிழ் மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே !

ஆன திருவிருத்தம் நூறும் அருளினான் வாழியே !
ஆசிரியம் ஏழு பாட்டளித்த பிரான் வாழியே !
ஈனமற அந்தாதி எண்பத்தேழு ஈந்தான் வாழியே !
இலகு திருவாய்மொழி ஆயிரத்து ஒரு நூற்று இரண்டு
உரைத்தான் வாழியே !
வானணியும் மாமாடக் குருகை மன்னன் வாழியே !
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே !
சேனையர்கோன் அவதாரம் செய்த வள்ளல் வாழியே !
திருக்குருகைச் சடகோபன் திருவடிகள் வாழியே !

 

 

No comments:

Post a Comment