Sunday, 1 March 2015

மெய்யன்பர்கள் அனைவருக்கும் அடியோங்களின் அநேக கோடி நமஸ்காரங்கள்,


                       திருவரங்கம் திருக்கண்டியூர் என்ற திவ்யதேசங்களுக்கு மத்தியிலும்,திருவன்பில்,திருப்பேர்நகர் போன்ற திவ்யதேசங்களின் நேர்வரிசையிலும், ஸ்ரீபெருப்புதூர் ஸ்ரீஸ்ரீ கோவிந்த எதிராஜ ஜீயராலும், திருதுரைப்பாக்கம் ஸ்ரீ ஸ்ரீ சம்பத்குமார் இராமானுஜ ஜீயராலும் மங்களாசாசனம் செய்யப்பட்டதும் உலகிலேயே கல்வி கடவுளான ஸ்ரீ பரிமுகப்பெருமாள் திருமகளுடன் சமேதராக ஸ்ரீ கண்ணபெருமானுடன் ஒன்றாக சேவைசாதிக்கும் காவிரி, வெண்ணாறு ஆகிய இரு புண்ணிய நதிகளுக்கிடையே உள்ள ஸ்தலமான இளங்காடு ஸ்ரீ கண்ணன் ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர் திருக்கோயிலில் கடந்த பிப்ரவரி 22.02.2015 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவ மஹா ஹோமம் திருமகள் உடனுறை பரிமுகப்பெருமானின் திருவருளோடும் திருதுரைப்பாக்கம் ஸ்ரீ ஸ்ரீ சம்பத்குமார் இராமானுஜ ஜீயர் ஸ்வாமிகளின் ஆசியுடனும் இனிதே நடைபெற்றது,அவ்வைபத்தினை ஒட்டி மாலை திருதுரைப்பாக்கம் ஸ்ரீ ஸ்ரீ சம்பத்குமார் இராமானுஜ ஜீயர் ஸ்வாமிகளின் உபன்யாசம் நடைபெற்றது.இவ்வைபவங்கள் ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் 28.02.2015 அன்று மாலை 8.00மணியளவில் ஒலிபரப்பானது.அவ்காணொலியும் மற்றும் ஹோமத்தின் போது எடுத்த பதிவுகளும் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.

***** இவ்வைபவத்திற்கு நேரிலும் அலைபேசிமூலமாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் பேராதரவு வழங்கிய அனைவரும் எங்களின் மனமார்ந்த நன்றிகள் பல....

No comments:

Post a Comment