மெய்யன்பர்களுக்கு வணக்கம்
ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ கோவிந்த எதிராஜ ஜீயராலும், இராஜமன்னார்குடி ஸ்ரீமத் செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயராலும் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், கங்கையை விட புனிதமான காவேரியின் தெற்கேயும் வெண்ணாற்றுக்கு வடக்கேயும், திருவரங்கம் திருக்கண்டியூர் திவ்யதேசங்களுக்கு மத்தியிலும், கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் திருவன்பில் திவ்யதேசம்,காவேரியின் வடகரையில் திருப்பேர்நகர் திவ்யதேசம்,காவேரி மற்றும் வெண்ணாற்றுக்கு இடையே அமைந்ததும், ஸ்ரீ கண்ணபிரானோடு ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவரும் ஒரே இடத்தில் சேவை சாதிக்கும் இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் எதிர்வரும் ஆவணித்திங்கள் 19ஆம் நாள் (05.09.2015) சனிக்கிழமை அன்று ஸ்ரீ கண்ணன் திருவதார வைபவ விழா மன்னார்குடி ஸ்ரீமத் செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் ஸ்வாமிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற உள்ளது நடைபெற உள்ளது.ஸ்ரீ கண்ணன் திருவதார விழா . அனைவரும் தவறாது கலந்து கொண்டு ஸ்ரீ கண்ணபிரானின் திருவருக்கும், ஜீயரின் குருவருளுக்கும் பாத்திரராகும் படி அடியோங்கள் ப்ராத்திக்கின்றோம்.
மேலும் இவ்வைபவ கைங்கர்யங்களில் நீங்களும் பங்குபெற வேணுமாய் ப்ராத்திக்கின்றோம். ஆர்வம் உள்ள அடியோர்கள் அடியோங்களை அழைக்கவும்.
No comments:
Post a Comment