Monday 29 February 2016

ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரம் -79


ராம பாத ஸஹ தர்ம சாரிணீம் பாதுகே நிகில பாதகச்சிதம்
த்வாம் அசேஷ ஜகதாம் ஈச்வரீம் பாவயாமி பரதாதி தேவதாம்
பொருள் – பாதுகையே! நீ பரதன் ஆராதனை செய்வதற்கு ஏற்ற இராமனின் பாதுகையாக உள்ளாய். உன்னை இராமன் எப்போதும் தனது திருவடிகளில் வைத்துள்ளான். அனைத்து பாவங்களையும் நீ (இராமனின் தொடர்பு உள்ளதால்) போக்குகிறாய். இப்படியாக நீ இந்த உலகத்தின் எஜமானியான மஹாலக்ஷ்மி போன்று உள்ளாய்.

விளக்கம் – எம்பெருமான் எடுக்கும் திருஅவதாரங்களிலே அவனுடன் பெரியபிராட்டியும் அவதரிப்பது வழக்கம் ஆகும். அவ்விதமாக அவள் தோன்றும்போது, இந்த உலகில் உள்ளவர்களின் பாவங்களை விலக்குவதும் வழக்கம் ஆகும். இதனையே பாதுகையும் செய்வதால், பாதுகைக்கு பெரியபிராட்டியாரை உவமையாகக் கூறுகிறார்.
இங்கு ஒரு கேள்வி எழலாம் – பாதுகையை மஹாலக்ஷ்மியுடன் உவமித்துக் கூறியது சரியா? இது சரியே, பாதுகையின் செயலானது பெரியபிராட்டியின் செயலைக் காட்டிலும் உயர்ந்தே இருந்தது. எப்படி என்றால் – அவனை விட்டுப் பிரியாதவர்கள் பெரியபிராட்டியும் பாதுகையும் ஆவர். ஆனால், நாட்டு மக்களின் நலன் கருதியும், பரதன் மீது கொண்ட வாத்ஸல்யம் காரணமாக, இராமனைப் பிரிந்து பாதுகையன்றோ பரதனுடன் வந்தாள்?

No comments:

Post a Comment