கிருஷ்ணர் மீது
பாமா, ருக்மணி இருவருக்கும் கொள்ளை ஆசை. ஆனால், பாமா அவரைத் தன்னுடன்
மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பாள். இதற்காக நாரதரின் உதவியை நாடினாள்.
கடவுளை யாரும் தனக்குச் சொந்தமென உரிமை கொண்டாட முடியாது. அவர் எல்லோருக்கும் பொதுவானவர். இது நாரதருக்குத் தெரியும். இருப்பினும், பாமாவிடம் நேரில் சொன்னால் புரிந்து கொள்ளமாட்டாள்.
ஏதாவது உபாயம் செய்து, அவளுக்குப் புரிய வைக்க வேண்டுமென முடிவு செய்தார்.
""பாமா! நீ கிருஷ்ணனை யாருக்காவது தானம் செய்து விட வேண்டும். பிறகு, ஒரு தராசுத்தட்டில் கிருஷ்ணனை இருக்கச் செய்து, மறுதட்டில் அவரது எடைக்கு எடை தங்கம் வைக்க வேண்டும். அதைத் தானம் பெற்றவரிடம் கொடுத்து மீட்டுக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் கிருஷ்ணன் எப்போதும் உன் சொந்தம் தான்,'' என்றார் அந்த கலகக்கார முனிவர் கூறினார்.பாமாவும் அதை நம்பி தங்கத்தைக் கொண்டு வந்து கொட்டினாள்.தராசு முள் அசையவே இல்லை. நேராக ருக்மணியின் அறைக்கு ஓடினாள். நிலைமையைச் சொன்னாள்.

ருக்மணி அங்கு வந்து "கிருஷ்ணா' என மனதார சொல்லிக்கொண்டு, ஒரே ஒரு துளசி இலையை எடுத்து வைத்தாள்.
ருக்மணியின் அன்பு, பக்தி, தூய மனம் ஆகியவற்றிற்கு கட்டுப்பட்டார் கிருஷ்ணர். எடை சமமாகி விட்டது.

இந்த கதை நமக்கு, பகவான் மீது அளவற்ற அன்பு கொண்டு பிராத்தனை செய்தால்
அவர் திருவருள் என்றும் உண்டு என்பதனும், தனக்கு பிரியமான துளசி சமர்ப்பணமே
அனைத்திருக்கும் மேலோங்கியது என்பதை உணர்த்துகிறது.
ஹரி ஓம்.
No comments:
Post a Comment