thanks to :
Sathasivam Bhaheethetran
நாளை தொடங்கும் "துன்முகி" வருஷம்.
எந்த மாதத்திலும் இல்லாத சிறப்பு சித்திரைக்கு மட்டும் உண்டு.
சித்திரையில் மட்டும் அப்படி என்ன விஷேசம்? சித்திரை முதல் நாளுக்கு உள்ள
முக்கியமானதும் முதன்மையானதும் சிறப்பு சித்திரை வருடப் பிறப்பு.
தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி,ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது.
தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன.
ஏன் என்றால், இம் மாதங்கள்,பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற,சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன.
ஏன் என்றால், இம் மாதங்கள்,பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற,சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன.
இராசிச் சக்கரத்தில் மேஷ ராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை
விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும்.
சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.
சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.
சித்திரை முதல் மாதம் என்பதால்,இதுவே புதிய
ஆண்டின் தொடக்கமும் ஆகும்.இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
ஆண்டின் தொடக்கமும் ஆகும்.இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக
சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது.சித்திரை மாதம் பிறந்ததுமே
இளவேனில்காலம்’ என்னும் வசந்த காலம் தொடங்குகிறது.
வசந்த காலத்தில்
மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம்
வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை
இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக
இச்செயற்பாடு கருதப்படுகிறது.
தமிழ்ப் புத்தாண்டு என்று நாம்
சொல்லும் வருஷப் பிறப்பு, உலகத்துக்கே பிறந்த நாள் ஆகும். உலகம் என்றால்
மக்கள் சமூகம் மற்றும் பிற உயிரினங்களும் சேர்ந்த ஒரு தொகுப்பாகும். இவை
அனைத்தும் தோன்றிய நாள் உலகத்துக்குப் பிறந்த நாள் ஆகிறது. அந்தப் பிறந்த
நாள் முதற்கொண்டு சதுர்யுகங்கள் கணக்கிடப்பட ஆரம்பித்தன.
அன்றைக்கு
சூரியன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும், (ராகு, கேது நீங்கலாக) மேஷ
ராசியில் பூஜ்யம் பகையில் இருந்தன. அந்த இடத்தில் ஆரம்பித்து விண் வெளி
மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர சூரியன் எடுத்துக் கொள்ளும் காலம் ஒரு வருடம்
என்பதாகும். விண்வெளி மண்டலம் வட்ட வடிவமாக இருக்கவே, அதில் 360 பாகைகள்
உள்ளன. அவற்றை 12 ஆகப் பிரித்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதமாகக்
கணக்கிடப்படுகிறது. அதாவது 30 பாகை கொண்டது ஒரு மாதமாகும். 12 மாதங்கள்
கொண்டது ஒரு வருடமாகும். இந்தப் பயணம் ஆரம்பித்த நாளை வருஷப் பிறப்பு என்று
வழி வழியாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர்.
சித்திரையில் வரும் மேஷ
ராசி தொடங்கி கால புருஷன் இயங்குகிறான். மக்கள் வாழ்க்கை, பிறப்பு, இறப்பு
என எல்லாவற்றையும் இயக்குகிறவன் இந்தக் கால புருஷன் ஆவான். மக்களை ஆள்வதால்
வருடத்துக்கு “ஆண்டு” என்று பெயர். 12 மாதங்களும் அந்த கால புருஷனின் உடல்
உறுப்புகளாகச் சித்தரிக்கப்படுகின்றன.
மனிதனைப் பீடிக்கும் நோய்
நொடி போன்றவை எல்லாம் அந்தந்த மாதத்தில்,அந்தந்த உறுப்புகளில் ஏற்படுகிறது.
வெயில் அதிகமான சித்திரையில், அவனது தலை இருக்கிறது. வெயில் காரணமாக வரும்
தலை வலி, மயக்கம் போன்றவை பீடிக்கும் மாதம் அது. தை மாதம் என்பது கால
புருஷனது கால் முட்டியாகும். தை மாதக் குளிரில் மூட்டு நோய், முட்டி வலி
போன்றவை அதிகரிக்கும். மேலும், தலையிலிருந்துதான் வருடம் ஆரம்பிக்க
வேண்டும். தை மாதத்தில் வருடப் பிறப்பென்றால், முட்டியிலிருந்து
ஆரம்பிக்கும். அது சரியல்ல.
கிரக அவஸ்தைகள் என்று ஜோதிடத்தில்
உண்டு. ஒரு ராசியில் இருக்கும் 30 பாகைகளை 5 பாகங்களாகப் பகுப்பார்கள். ஒரு
ராசியின் 0 பாகம் ஆரம்பித்து பாலன், குமாரன், இளைஞன், முதியவன், மரணம்
என்று ராசியைச் சமமாகப் பகுப்பார்கள். ஒரு கிரகம் அவற்றுள் எங்கு
இருக்கிறதோ அதைப் பொறுத்து அந்தக் கிரகம் பலனைக் கொடுக்கும். முதியவன்,
மரணம் போன்ற பாகைகளில் அது நல்ல பலனைக் கொடுக்காது.
இந்த முறை ஆண்
ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் முதலிய
ராசிகளுக்குப் பொருந்தும். மீதி ராசிகளான பெண் ராசிகளில் தலைகீழாகப்
பலன்கள் தரும்.. அதாவது மரணம் தொடங்கி, பாலன் வரை பலன்கள் தரும். சித்திரை
மாதம் ஆண் ராசியில் வருகிறது. அதன் 0 பாகையில் சூரியன் நுழையும் போது பாலன்
என்றாகி மேலும் மேலும் வளர்ச்சியைக் கொடுக்கும். ஆனால் தை மாதம் பெண்
ராசியான மகர ராசியாகும். அங்கு சூரியன் நுழையும் போது மரணகண்டத்தில்
ஆரம்பிக்கும். .
· தை மாதம் துவங்கும் மகர ராசியில், சூரியன்
நுழையும்போது இருக்கும் கரணம், ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது.
“கரணாத் காரிய சித்தி” என்பார்கள். அப்பொழுது இருக்கும் கரணத்தின்
அடிப்படையில், எடுத்த காரியம் நடக்குமா என்று
மட்டுமே கணிக்க முடியும்.
மட்டுமே கணிக்க முடியும்.
ஆனால் சித்திரை மாதம் மேஷ ராசியில் சூரியன் நுழையும் நேரம் ‘ஜக லக்னம்’
எனப்படுகிறது. உலகத்தின் லக்னம் என்பது பொருள். உலக நடப்புகளை அதைக்
கொண்டுதான் சொல்ல முடியும். சாதாரண மக்களுக்குப் பிறந்த லக்னமும், சந்திர
லக்னமும் முக்கியம். அது போல உலகத்துக்குச் சூரிய லக்னம் முக்கியம். அதைக்
கொண்டு ஒரு நாட்டுக்குப் பலன் சொல்ல முடியும்.
‘நவ நாயகர்கள்’ என்று
ஒரு ‘மந்திரி சபையே’ சித்திரை வருஷப் பிறப்பின் அடிப்படையில்
கணிக்கப்படுகிறது. அதனால் பஞ்சாங்கம் படிப்பது வருஷப்பிறப்பின் முக்கிய
அம்சமாகும். சித்திரை வருஷப் பிறப்பில் பஞ்சாங்கம் படிக்காமல், தை மாதப்
பிறப்பின் போது எப்படிப் பஞ்சாங்கம் படிக்க முடியும்?
சித்திரை வருஷப் பிறப்பைப் பொறுத்தே, நாடு, மக்கள்,
பிற உயிரினங்கள், விலை வாசி, விவசாயம், செல்வப் பெருக்கு என்று எல்லாவற்றையும் கணிக்க முடியும். முற்காலத்தில் ராஜாக்கள் சித்திரை வருஷப் பிறப்பின் போது பயபக்தியுடன் கடவுளை வழிபட்டு, பஞ்சாங்கப் பலனைக் கேட்டார்கள். அந்தப் பலன்களின் அடிப்படையில், நாடு நலம் பெற,என்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்.
பிற உயிரினங்கள், விலை வாசி, விவசாயம், செல்வப் பெருக்கு என்று எல்லாவற்றையும் கணிக்க முடியும். முற்காலத்தில் ராஜாக்கள் சித்திரை வருஷப் பிறப்பின் போது பயபக்தியுடன் கடவுளை வழிபட்டு, பஞ்சாங்கப் பலனைக் கேட்டார்கள். அந்தப் பலன்களின் அடிப்படையில், நாடு நலம் பெற,என்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்.
இந்தியாவில் பஞ்சாப் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் "விஷூ" போன்ற பண்டிகையை
அதே நாளில் கொண்டாடுகின்றனர். அஸ்ஸாமில் பிஹூ என்றும், பஞ்சாபில் "பைசாகி"
(ஆதியில் வைஷாகி) என்றும் தமிழ்நாட்டில் தமிழ்ப் புத்தாண்டு அல்லது விஷூ
புண்யகாலம் என்று அழைக்கப்படுகிறது. கர்நாடகத்தில் துளுவர்களும் "பிசு"
என்ற பண்டிகையை இதே நாளில் கொண்டாடுகின்றனர்.
சித்திரை அவதரித்தோர்
மஹா விஷ்ணுவின் தசாவதாரங்களில், இரண்டு அவதரங்களுக்கு இடம்கொடுக்கும்
பெருமை, சித்திரைக்கு உள்ளது. சித்திரைமாதம் சுக்ல நவமி, "ஸ்ரீ ராம நவமி"
ஸ்ரீராமபிரானின்ஜன்ம தினம் என்பது தெரியும். மற்றொரு அவதாரம்? முதல்
அவதாரமான மத்ஸ்ய அவதாரம்! சித்திரை மாதம் சுக்ல பஞ்சமியில், மீன் வடிவில்
அவதாரம் எடுத்து, பிரளயத்திலிருந்து உலகை மீட்டு, உயிர்கள் மீண்டும் தோன்ற
வழி செய்தார் பகவான்.
சித்திரையின் சீர்மிகு விழாக்கள்
திருக்கோயில்களின் விழாக்கள், மிகவும் கோலாகலமாக நடைபெறும் மாதமும்
சித்திரையாகும். மதுரை மாநகரில் அருள்மிகு மீனாட்சியம்மன் ஆலயத்தில்
நடைபெறும் சித்திரைத் திருவிழாவும், அதன் உள்நிகழ்வுகளான அம்பாள்
பட்டாபிஷேகம், மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் போன்றவையும் உலகப்
பிரசித்தம். அழகர் மலை கள்ளழகருக்குச் சித்திரையில் பிரம்மோற்சவம். அழகர்
உலா புறப்பட்டு, வைகை ஆற்றில் இறங்கி, அகிலத்தோர் எல்லோருக்கும்
அருள்பாலிப்பார்.
ஆழித்தேருக்குப் பெயர்போன திருவாரூர் தேர்த் திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம்
(சில பல காரணங்களால் இப்போது இது மாறக்கூடும்). சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தேரோட்டமும் இம்மாதத்தில்தான். பற்பல திருத்தலங்களில் தேரோட்டம் சித்திரையில் நடைபெறும்.
(சில பல காரணங்களால் இப்போது இது மாறக்கூடும்). சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தேரோட்டமும் இம்மாதத்தில்தான். பற்பல திருத்தலங்களில் தேரோட்டம் சித்திரையில் நடைபெறும்.
வைணவத் திருக்கோயில்கள்
பலவற்றிலும், சித்திரை மாதம், விமரிசையான கொண்டாட்ட காலம்.
ஸ்ரீவில்லிபுத்தூரில், பத்து நாள் விழா கண்டு, சித்திரா பவுர்ணமி நாளில்
(அ)ரங்கமன்னாரோடு ஆண்டாள் நாச்சியார் தேரில் பவனி வருவாள்.
சித்திராப்பௌர்ணமி அன்று ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள்
(அரங்கனும்) காவிரியில் இறங்கி,கஜேந்திரமோக்ஷம் என்னும் சிறப்பான வைபவம் நடைபெறும்.
(அரங்கனும்) காவிரியில் இறங்கி,கஜேந்திரமோக்ஷம் என்னும் சிறப்பான வைபவம் நடைபெறும்.
சித்திரா பவுர்ணமி நாளில், சிவபெருமானை வழிபடுவதும் வெகு சிறப்பு.
மருக்கொழுந்து அபிஷேகம் செய்து, வெள்ளை வஸ்திரம் சாற்றி, சுத்தான்னம் (வெண்
சாதம்) படைத்து வழிபட்டால், சகல ஐச்வரியங்களும் கிட்டும். திருநெல்வேலிப்
பகுதிக்கே உரித்தான சித்ரா நதியில் நீராடி (அதுதான், நம்ம குற்றாலம்
அருவியின் தோற்றுவாய் ஆறு) விரதமிருந்து திருக்குற்றால நாதரை வழிபடுவதும்
விசேஷமானது.
சித்திரை மாதம் மிருக சீர்ஷ நட்சத்திரத்தில் தான்
எம்பெருமானின் "பலராம" அவதாரம் நிகழ்ந்தது.சித்திரை மாதம் வளர்பிறை
"திருதீயை" திதியே "அக்ஷய திருதீயை"
என்று கொண்டாடப்படுகிறது.
என்று கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில் அரங்கனும் இந்த சித்திரை மாதத்தில் "பிரம்மோற்சவம்"
கண்டருளி, சித்திரை மாதம் ரேவதி நக்ஷத்திரத்தில் அரங்கத்தில்
ஸ்ரீரங்கநாதன் "கோவிந்தா கோவிந்தா" என்னும் கோஷம் விண்ணை முட்ட
"திருத்தேரில்" வலம் வருவார்.
ஆழ்வார்களில் மதுரகவியாழ்வார் அவதரித்தது இதே சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்திரமே ஆகும்.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment