விபீஷணன் ராவணனிடத்தே தர்மத்தை உபதேசிக்கிறான்
ஆனால், விநாசகாலே விபரீத புத்தியல்லவா
விபீஷணனைக் கண்முன் நில்லாதே ஓடிவிடு என்கிறான்
ராவணன்.
சிறந்த தர்மாத்மாவான விபீஷணன் சேதுசமுத்திரக் கரையிலிருக்கும் ஸ்ரீராமனைச் சரண்புக வருகிறான்.
விபீஷணன் வந்திருப்பது ராமனுக்குச் சொல்லப்படுகிறது
அப்போது ஸ்ரீராமன் தன்னுடனிருக்கும இளையபெருமாள் லெஷ்மணன் ஜாம்பவான் ஸுக்ரீவன்
ஆஞ்சநேயன் முதலான அனைவருடனும் விபீஷணனை ஏற்பது பற்றி ஆலோசனை செய்கிறான்.
ராமன் தானே முடிவெடுத்து அதனை அறிவித்தால் யார் மறுக்கப் போகிறார்கள்.
ஆனால் ஸ்ரீராமனோ ராஜதர்மத்திலிருந்து பிறழாதவனல்லவா?
எல்லோரையும் கூட்டி கருத்தறிந்து முடிவெடுக்கிறான்.
எல்லோரும் விபீஷணன் ராவணனின் தம்பி என்பதாலும்
போர்மூளும் நேரத்தில் வந்திருப்பதாலும் ஏற்கத் தயக்கம் காட்டினர்.
கடைசியாக ஆஞ்சநேயன் கைகட்டி வாய் மறைத்து மிக பவ்யமாகத் தன் கருத்தை உரைக்கிறான்.
"அரக்கனென்றோ ,அண்ணனை விட்டு வந்தவனேன்றோ,
நல்லவன் போல நடிக்கிறானென்றோ கருதத் தேவையில்லை.
ஒருவனது உள்ளக்கிடக்கையை அவனது உடல்மொழியே காட்டிக் கொடுக்கும். இவன் உண்மையாகவே தர்மாத்மா
இவனது பெண் திரிசடை ஸீதாதேவிக்கு ஆதரவாக இருக்கிறாள்.விபீஷணனை நம்பலாம் ",என்றுரைத்தார்.
இதைக் கேட்டு ஆஞ்சநேயனை ஆரத் தழுவிய ராமன்
'நன்று சொன்னாய்'என்றுரைத்தான்.
பின்னர் "சரணம் என்று யார் வந்தாலும் ,ராவணனே வந்தாலும் அபயமளிப்பேன். இது என் வ்ரதம்"எனக் கூறி விபீஷணனனின் சரணாகதியை ஏற்று அவனைத் தழுவிக்கொண்டு நின்னொடு எழுவரானேன் என மகிழ்ந்தான்.
ஆக கடற்கரை மாநாடு இனிதே நடந்தது
No comments:
Post a Comment