அயோத்தி மற்றும் கோசலை ஆகியவற்றை
ஆண்ட அரசர் தசரதரின் மகன் மற்றும் விஷ்ணு பகவானின் அவதாரமாக அவதரித்த தெய்வீகத் தன்மை கொண்ட இராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஸ்ரீ ராம நவமி ஒரு இந்துப் பண்டிகை ஆகும்.
ஆண்ட அரசர் தசரதரின் மகன் மற்றும் விஷ்ணு பகவானின் அவதாரமாக அவதரித்த தெய்வீகத் தன்மை கொண்ட இராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஸ்ரீ ராம நவமி ஒரு இந்துப் பண்டிகை ஆகும்.
இராமாயணத்தில், அயோத்தியின்
அப்போதைய அரசரான தசரதர், கோசலை, சுமித்ரா மற்றும் கைகேயி ஆகிய மூன்று
மனைவிகள் . அவர்களது பெரும் கவலை அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதாக
இருந்தது. மேலும் அதனால் அரியணையில் அமர்வதற்கு அவர்களுக்கு வாரிசு
இல்லாமல் இருந்தது.
இதுகுறித்து தசரத சக்கரவர்த்தி,தன்னுடைய
குலகுருவான "வசிஸ்ட மகரிஷியுடன்" வினவினார். வசிஷ்டமகரிஷி அவரிடம் புத்திர
காமேஸ்டி யாகம் செய்யச் சொன்னார். அதன் மூலம் விரும்பிய குழந்தையைப் பெற
முடியும். மேலும் அவர் அந்த யாகத்தைச் செய்வதற்காக மகரிஷி ருஷ்ய
ஷ்ருங்கரையும் அழைத்துக் கொள்ளச் சொன்னார். உடனடியாக அரசர் தசரதர் அவருக்கு
உடன்பட்டார்.
மேலும் மகரிஷி "ருஷ்ய ஷ்ருங்கரை"அழைப்பதற்காக அவரது
ஆசிரமம் சென்றார். மகரிஷி அந்த யாகத்தை தசரதருடன் இணைந்து அயோத்தியில்
செய்வதற்கு ஒத்துக் கொண்டார். அந்த யாகத்தின் விளைவாக யக்னேஸ்வரன் தோன்றி
பாயசம் நிறைந்த ஒரு கிண்ணத்தைக் கொடுத்து அதனை அவரது மனைவிகளுக்குக்
கொடுக்கும்படி தெரிவித்தார்.
தசரதர் அதில் பாதியளவு பாயசத்தை அவரது
மூத்த மனைவி கோசலைக்கும், மற்றொரு பாதியை அவரது இளம் மனைவி கைகேயிக்கும்
கொடுத்தார். அவர்கள் இருவரும் அவர்களது பங்கில் பாதியை சுமித்ராவுக்குக்
கொடுத்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு மூன்று இராணிகளும்
கர்ப்பமுற்றனர். சித்திரை மாதத்தின் ஒன்பதாம் நாளில் (நவமி),
உச்சிவேளையில் கோசலை ஸ்ரீ இராம பிரானைப் பெற்றார், கைகேயி பரதனைப் பெற்றார்
. சுமத்திரை லட்சுமணன் மற்றும் சத்ருகனன் என்ற இரட்டைக் குழந்தைகளைப்
பெற்றார்.
"தாயிற் சிறந்த கோயிலுமில்லை;
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை…"
- என்பவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர். ஏக பத்தினி விரதனாகவும், அவதாரப் புருஷனாகவும் இருந்து வாழந்து காட்டியர்.
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை…"
- என்பவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர். ஏக பத்தினி விரதனாகவும், அவதாரப் புருஷனாகவும் இருந்து வாழந்து காட்டியர்.
ஸ்ரீராமபிரான் அவதரித்த புண்ணிய நாளை ஸ்ரீராம நவமியாகக் கொண்டாடி
வருகிறோம். அதர்மத்தை அழித்து நல்லோரைக் காக்கவே அவதாரங்கள் நிகழ்கின்றன.
அந்த வகையில் மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக
வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீராமாவதாரம் ஆகும்.
சித்திரை மாதம், வளர்பிறை நவமியும், புனர் பூச நட்சத்திரமும்
சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமரின் அவதார தினம். ஸ்ரீராமர் பிறந்தபோது
புனர்பூச நட்சத்திரம் 4-ஆம் பாதத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில்
இருந்தனவாம்.
இராம பிரான், விஷ்ணு பகவானின் ஏழாவது அவதாரம் ஆவார்.
அவர் அதர்மம் தர்மத்தை மீறிச் செல்லும் போது பூமியில் வந்து அவதரிப்பார்.
அவர் அதர்மத்தின் வேர்களைத் தோல்வியுறச் செய்வதன் மூலமாக அவரது அனைத்து
பக்தர்களையும் காப்பார். இராம பிரான், இராவணன் என்ற அரக்கனை அழிப்பதற்காக
பூமியில் அவதரிக்கப் போகிறார் என்பதையும்,
அசுரர்களின்
கொடுமையிலிருந்து உலகைக் காப்பாற்றும் பொருட்டு மகாவிஷ்ணு ஸ்ரீராமராக
அவதரிக்கப் போகிறார் என்பதை அறிந்த முனிவர்களும், தேவர்களும் ஸ்ரீராமனின்
கர்ப்ப வாசத்தைக் கொண்டாடினர். அது கர்ப்போற்சவம் எனப்படுகிறது. ஸ்ரீராமர்
பிறந்ததைக் கொண்டாடுவது ஜன்மோற்சவம் எனப்படுகிறது.
அது 'சுக்ல
பட்ச' அல்லது வளர்பிறையில் சித்திரை மாதத்தில் ஒன்பதாம் நாள் வரும்
நவமியில் வருகிறது. ஆகையால் சித்திரை மாத சுக்லபட்ச நவமி என்று
அழைக்கப்படுகிறது. மேலும் ஒன்பதாம் நாளின்
இறுதியில் சித்திரை-நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
இறுதியில் சித்திரை-நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
சில இடங்களில் நவராத்திரிகளின் அனைத்து ஒன்பது நாட்களும் பண்டிகை
கொண்டாடப்படுகிறது. ஆகையால் அந்த காலகட்டம் 'இராம நவராத்திரி' எனப்படுகிறது
ஸ்ரீ ராமர் இந்து இதிகாசமான இராமாயணத்தின் கதாநாயகன் ஆவார். இது
தொடர் விவரக் குறிப்புகளான அகண்ட பாதம் மூலமாகக் குறிப்பிடப்படுகிறது.
அன்றைய தினத்தில் உத்திரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி, ஆந்திரப்
பிரதேசத்தில் உள்ள பத்ராச்சலம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம்
ஆகிய இடங்களில் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்த
கோடிகளால் கூட்டம் நிரம்பும். மேலும் இராமர், அவரது மனைவி சீதா, தம்பி
லட்சுமனன் மற்றும் பக்தர் ஹனுமான் ஆகியோரின் "ஷோப யாத்திரைகள்" எனவும்
அறியப்படும். ரதயாத்திரைகள், தேர் ஊர்வலங்கள் பல்வேறு இடங்களில் நடைபெறும்.
அயோத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நதியாகக் கருதப்படும் "சரயு
நதியில்" புனித நீராடுவார்கள்.
ஸ்ரீராம நவமி விழா பல இடங்களில்
பத்து நாட்களுக்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் ராமர்
பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்களை முன் பத்து எனவும்; பிறந்த
தினத்திலிருந்து வரும் பத்து நாட்களைப் பின் பத்து எனவும் இருபது நாட்கள்
சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு
விரதம் மேற்கொள்வர். பஜனைகள், இராமாயணச் சொற் பொழிவுகள் நடைபெறும்.
பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.
ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், கானக வாழ்க்கை மேற்கொண்டிருந்த போதும்,
தாகத்திற்கு நீர் மோரும், பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவை இரண்டும் ஸ்ரீராமபிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
தாகத்திற்கு நீர் மோரும், பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவை இரண்டும் ஸ்ரீராமபிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஸ்ரீராம நவமி உற்சவத்தின்போது வட இந்தியாவில் அகண்ட ராமாயணம் என்னும் பெயரில் துளசி ராமாயணத்தைத் தொடர்ந்து ராகத்துடன் பாடுவர்.
ஸ்ரீராம நவமியன்று வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேக விழா
சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப்
பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து
வழிபடுவார்கள். ஸ்ரீராமர் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயணப்
புத்தகத்தையும் வைத்துப் பூஜிப்பார்கள்.
ஸ்ரீராம நவமியன்று ராமநாமம்
சொல்வதும், ராமநாமம் எழுதுவதும் நற்பலனைத் தரும். பகவான் நாமம் இதயத்தைத்
தூய்மைப்படுத்தி உலக ஆசைகள் என்னும் தீயை அணைக்கிறது. இறை ஞானத்தைத்
தூண்டுகிறது. அறியாமை, காமம், தீய இயல்புகளைச் சுட்டுப் பொசுக்குகிறது.
உணர்ந்தோ உணராமலோ உச்சரித்தாலே பகவான் அருள் கிட்டும் என்பது பக்தர்களின்
நம்பிக்கை.
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவ பெருமானே ராமன் புகழ் பாடும்
ஒரு பலஸ்ருதி ஸ்லோகம் வருகிறது. இந்த ஸ்லோகத்தைப் படித்தால் சஹஸ்ரநாமத்தை
முழுக்கப் படித்த பலன் உண்டு.
ஈஸ்வரோ உவாச
“ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே”
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே”
என்பதே அந்த ஸ்லோகம்.
""பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணையானது ராம நாமம். நல்லது அனைத்தின்
இருப்பிடமும் - இக்கலியுகத்தின் தோஷங்களைப் போக்குவதும் - தூய்மையைக்
காட்டிலும் தூய்மையானதும் - மோட்ச மார்க்கத்தில் சாதகர்களின்
வழித்துணையாகவும் - சான்றோர்களின் உயிர் நாடியாகவும் விளங்குவது “ராம”
என்னும் தெய்வீக நாமம் ஆகும். இவ்வாறு முனிவர்கள் சொல்லுகிறார்கள்'' என சிவ
பெருமான் பார்வதி தேவியிடம் ராம நாமத்தின் மகிமையை எடுத்துரைப்பதாகப்
புராண வரலாறு கூறுகிறது.
மஹா விஷ்ணுவே ஸ்ரீஇராமன் அவதாரமானாலும்,
தான் மானுட அவதாரம் எடுத்ததால்,மனுஷனாகவே நடந்து, ஒரு மனிதன் எவ்வாறு நடக்க
வேண்டும் என்பதற்கு உதாரண புருஷராக இருந்து, மகா நியாயவாதியாக, சத்தியம்,
தர்மம் கடைப்பிடிப்பவராக கடைசிவரைக்கும் வாழ்ந்து காட்டினார்.
தியாகராஜ சுவாமிகள் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவர். தெலுங்கில் பல
கீர்த்தனங்கள் எழுதி இசை உலகுக்குப் பெருமை சேர்த்தவர். இராமனுடைய கதைச்
சம்பவங்களை வைத்தே பல பாடல்கள் புனைந்துள்ளார். இராமனையும், ராம
நாமத்தையும் சிறப்பித்துப் பல பாடல்கள் தானே ரசித்து, பாடி,
தோத்தரித்திருக்கிறார்.
அவர் தன்னுடைய கீர்த்தனையில் ‘ராம என்பது
மகாமந்திரம். அந்த மந்திரம், சைவாகமத்திற்கும், வைஷ்ணவாகமத்திற்கும்
உரியது. இரண்டும் கலந்த சேர்க்கைதான் ராம மந்திரம்’ என்று
விளக்கியிருக்கிறார். அவர் ராம நாமத்தை தொண்ணூற்று ஆறு கோடி வரை ஜபம்
செய்தவராம். இராமபிரானையே தரிசனம் செய்த மகாபுண்ணியவான்.
‘இராமன்’
என்பது தெய்விகமான பெயர். அது ஆன்மிகமானதும், பரிசுத்தமானதும்,
உயர்வானதுமான பெயராகும். வசிஷ்டமகரிஷி எப்போதும் ராம நாமத்தை உச்சரிப்பதால்
தான் இராமருக்கே அப்பெயரைச் சூட்டினாராம். அதே போல் இராம நாமமும்
தெய்விகமும் ஆன்மிகமும் புனிதமும் உடைய பரிசுத்த தாரக மந்திரம்.
அதனால்தான் வாழ்க்கை நடைமுறையில் ‘ராம’ நாமத்தை தினம் எழுதுவதும் ஆஞ்சனேயர்
பாதங்களில் சமர்ப்பிப்பதும், மாலையாகப் போடுவதும், கோடி நாமாக்கள்
எழுதுவதும் இன்று நடைமுறையாக இருப்பதிலிருந்தே ராமநாம மந்திர மகிமை
புரியும்.
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்
No comments:
Post a Comment