Wednesday, 18 May 2016

கண்ணனின் திருவிளையாடல்கள்

கண்ணன் மீதும் கீதையின்மீதும் அளவிலா அன்பும் மரியாதையும் பக்தியும் கொண்ட தேவேந்திர பண்டிட் என்பவர் மிகவும் வறுமையில் வாடினார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து தனது மனம் வெறுத்த நிலையில் ஒருநாள் தான் படித்துக் கொண்டிருந்த கீதையை எழுத்தாணியால் குத்திக் கிழித்தார்.
வெறுப்போடு வீட்டைவிட்டு அகன்ற சிறிது நேரம் கழித்து அவரது வீட்டின் முன் அரிசி, காய்கறி முதலான சாமான்களோடு வண்டி ஒன்று வந்து நின்றது. அந்த வண்டியில் வந்த சிறுவன் தேவேந்திரரின் மனைவியை அழைத்து, ‘இவை அனைத்தும் உங்களுக்கே!’ என்றான். பெற்றுக்கொண்ட அம்மையார் அச்சிறுவனிடம் அம்மையார் பெரிதும் அன்பு காட்டினார்.

‘நீங்கள் என்மீது அன்பு காட்டுகிறீர்கள். ஆனால் உங்கள் கணவர் என் நாக்கை குத்திக் கிழித்து விட்டார்!’ என்று சிறுவன் தனது நாக்கினைக் காட்ட அங்கே நாக்கு புண்பட்டு ரத்தம் சிவப்பாக வழிந்து கொண்டிருந்தது. சிறுவனின் நாக்கில் தேனையும் நெய்யையும் தடவிக் குணப்படுத்த முயன்றார் அந்த அம்மையார். சிறிது நேரத்தில் சிறுவன் அங்கிருந்து சென்று விட்டான்.

வீடு திரும்பிய தேவேந்திரரிடம் நடந்தவற்றைக் கூறினார் அந்த அம்மையார். நடந்தவை அனைத்தும் கண்ணனின் திருவிளையாடலே என்பதை உணர்ந்தார் தேவேந்திரர். கீதையை குத்திக் கிழித்த தம் செயலுக்கு மிகவும் வருந்தினார் அவர். அன்றுமுதல் கண்ணன்மேல் தீவிரமாகக் காதல் கொண்டார்.

"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்"

No comments:

Post a Comment