Sunday, 25 March 2018

இராம நவமி சிறப்பு பதிவு-2018

|| ஸ்ரீ ராம ரக்க்ஷா ஸ்தோத்ரம் ||

(தமிழ் அர்த்தம் கீழே தனியாக உள்ளது. )

வினியோக:
ஓம் அஸ்ய ஸ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ர மந்த்ரஸ்ய புதகௌசிக ரிஷி:
ஸ்ரீ சீதாராம சந்த்ரோ தேவதா அனுஷ்டுப் சந்தக: சீதா சக்தி: ஸ்ரீமான் ஹனுமான் கீலகம்
ஸ்ரீராமசந்த்ர ப்ரீத்யர்தே ராமரக்ஷா ஸ்தோத்ர ஜபே வினியோக:

த்யானம்
த்யாயேதாஜானுபாஹும் த்ருதஷர தனுஷம் பத்த பத்மாஸனஸ்தம்
பீதம் வாஸோ வஸானம் நவகமலதள ஸ்பர்தி நேத்ரம் ப்ரஸன்னம்
வாமாங்காரூட ஸீதாமுக கமல மிலல்லோசனம் நீரதாபம்
நானாலம்கார தீப்தம் தததமுரு ஜடாமண்டலம் ராமசந்த்ரம்

ஸ்தோத்ரம்
சரிதம் ரகுனாதஸ்ய சதகோடி ப்ரவிஸ்தரம்
ஏகைகமக்ஷரம் பும்ஸாம் மஹாபாதக நாசனம்                1

த்யாத்வா நீலோத்பல ஷ்யாமம் ராமம் ராஜீவலோசனம்
ஜானகீ லக்ஷ்மணோபேதம் ஜடாமுகுட மண்டிதம்            2

ஸாஸிதூண தனுர்பாண பாணிம் நக்தம் சராந்தகம்
ஸ்வலீலயா ஜகத் த்ராது மாவிர்பூதமஜம் விபும்                3

ராமரக்ஷாம் படேத்ப்ராக்ஞ: பாபக்னீம் ஸர்வகாமதாம்
ஸிரோ மே ராகவ பாதுபாலம் தசரதாத்மஜ:                    4

கௌஸல்யேயோ த்ருஷௌ பாது விஸ்வாமித்ர ப்ரிய: ஸ்ருதீ
க்ராணம் பாது மக்த்ராதா முகம் ஸௌமித்ரிவத்ஸல:            5

ஜிஹ்வாம் வித்யாநிதி: பாது கண்டம் பரத வந்தித:
ஸ்கந்தௌ திவ்யாயுத: பாது புஜௌ பக்னேஷாகார்முக:            6

கரௌ ஸீதாபதி: பாது ஹ்ருதயம் ஜாமதக்ன்யஜித்
மத்யம் பாது கரத்வம்ஸீ நாபிம் ஜாம்பவதாக்ஷரய:                7

சுக்ரீவேஷ: கடீ பாது ஸக்தினீ ஹனுமத்-பிரபு:
ஊரூ ரகூத்தம: பாது ராக்க்ஷ: குல வினாசக்ருத்                8

ஜானுனீ சேதுக்ருத் பாது ஜண்கே தசமுகாந்தக:
பாதௌ விபீஷண ஸ்ரீத: பாது ராமோ அகிலம் வபு:            9

ஏதாம் ராமபலோபேதாம் ரக்ஷாம் ய: ஸூக்ருதீ படேத்
ஸ சிராயூ: ஸூகீ புத்ரீ விஜயீ வினயீ பவேத்                10

பாதாள பூதல வ்யோம சாரிணஷ் ச்சத்ம சாரிண:
ந த்ரஷ்டுமபி சக்தாஸ்தே ரக்ஷிதம் ராம நாமபி:                11

ராமேதி ராமபத்ரேதி ராமசந்த்ரேதி வா ஸ்மரன்
நரோ ந லிப்யதே பாபைர்புக்திம் முக்திம் ச விந்ததி            12

ஜகஜ்ஜை த்ரைக மந்த்ரேண ராமநாம்னாபி ரக்ஷிதம்
ய: கண்டே தாரயேத்தஸ்ய கரஸ்தா: ஸர்வ ஸித்தய:            13

வஜ்ரபஞ்ஜர நாமேதம் யோ ராமகவசம் ஸ்மரேத்
அவ்யாஹதாக்ஞ: ஸர்வத்ர லபதே ஜய மங்களம்                14

ஆதிஷ்டவான்யதா ஸ்வப்னே ராமரக்ஷாமிமாம் ஹர:
ததா லிகிதவான் ப்ராத: ப்ரபுத்தௌ புதகௌசிக:                15

ஆ ராம: கல்பவ்ருக்ஷாணாம் வி ராம: ஸகலாபதாம்
அபிராம ஸ்த்ரிலோகானாம் ராம: ஸ்ரீமான்ஸ ந: ப்ரபு:            16  

தருணௌ ரூபஸம்பன்னௌ ஸுகுமாரௌ மஹாபலௌ
புண்டரீக விஷாலாக்ஷௌ சீர க்ருஷ்ணா ஜினாம்பரௌ        17  

ஃப்லமூலாஸினௌ தாந்தௌ தாபஸௌ ப்ரஹ்மசாரிணௌ
புத்ரௌ தசரதஸ்யைதௌ ப்ராதரௌ ராமலக்ஷ்மணௌ        18

சரண்யௌ ஸர்வஸத்வானாம் ஸ்ரேஷ்டௌ ஸர்வ தனுஷ்மதாம்
ராக்க்ஷ: குல நிஹந்தாரௌ த்ராயேதாம் நோ ரகூத்தமௌ        19  

ஆத்தஸஜ்ஜதனுஷா விஷுஸ்ப்ருஷாவக்ஷயா சுகானிஷங்க ஸங்கினௌ
ரக்ஷணாய மம ராமலக்ஷ்மணாவக்ரத: பதி ஸதைவ கச்சதாம்        20

ஸன்னத்த: கவசீ கட்கீ சாபபாணதரோ யுவா
கச்சன் மனோரதான்னஷ்ச ராம்: பாது ஸலக்ஷ்மண்:            21

ராமோ தாசரதி ஷூரோ லக்ஷ்மணானுசரோ பலீ
காகுத்ஸ்ய: புருஷ: பூர்ண: கௌஸல்யேயோ ரகூத்தம்:            22

வேதாந்த வேத்யோ யக்ஞேஷ்: புராண புருஷோத்தம்:
ஜானகீ வல்லப: ஸ்ரீமானப்ரமேய பராக்ரம்:                    23

இத்யேதானி ஜபேந்நித்யம் மத்தக்த: ஸ்ரேத்தயான்வித:
அஸ்வமேதாதிகம் புண்யம் ஸம்ப்ராப்னோதி ந ஸம்சய:            24  

ராமம் தூர்வாதள ஷ்யாமம் பத்மாக்ஷம் பீதவாஸஸம்
ஸ்துவந்தி நாமபிர்-திவ்யைர்-நதே ஸம்ஸாரிணோ நரா:            25

ராமம் லக்ஷ்மண பூர்வஜம் ரகுவரம் ஸீதாபதிம் சுந்தரம்
காகுத்ஸ்தம் கருணார்ணவம் குணநிதிம் விப்ரப்ரியம் தார்மிகம்    26  

ராஜேந்த்ரம் ஸத்யஸந்தம் தசரததனயம் ச்யாமளம் சாந்தமூர்த்திம்
வந்தே லோகாபிராமம் ரகுகுலதிலகம் ராகவம் ராவணாரிம்        27

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம:                    28

ஸ்ரீராம் ராம் ரகுநந்தன ராம் ராம் ஸ்ரீராம் ராம் பரதாக்ரஜ ராம் ராம்
ஸ்ரீராம் ராம் ரணகர்கஷ் ராம் ராம் ஸ்ரீராம் ராம் சரணம் பவ ராம் ராம்    29

ஸ்ரீ ராமசந்த்ர சரணௌ மனஸா ஸ்மராமி
ஸ்ரீ ராமசந்த்ர சரணௌ வசஸா க்ருணாமி                  
ஸ்ரீ ராமசந்த்ர  சரணௌ ஸிரஸா நமாமி
ஸ்ரீ ராமசந்த்ர  சரணௌ சரணம் ப்ரபத்யே                    30

மாதா ராமோ மத்-பிதா ராமசந்த்ர:
ஸ்வாமீ ராமோ மத்-ஸகா ராமசந்த்ர:
ஸர்வஸ்வம் மே ராமசந்த்ரோ தயாளு:
நான்யம் ஜானே நைவ ஜானே ந ஜானே                    31

தக்ஷிணே லக்ஷ்மணோ யஸ்ய வாமே ச ஜனகாத்மஜா
புரதோ மாருதிர்-யஸ்ய தம் வந்தே ரகுநந்தனம்                32

லோகாபிராமம் ரணரங்கதீரம் ராஜீவனேத்ரம் ரகுவம்சநாதம்
காருண்யரூபம் கருணாகரம் தம் ஸ்ரீராமசந்த்ரம் சரணம் ப்ரபத்யே    33  

மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே    34

கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம்
ஆருஹ்ய கவிதாஷாகாம் வந்தே வால்மீகி கோகிலம்            35  

ஆபதாமபஹர்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்            36

பர்ஜனம் பவபீஜானாமர்ஜனம் ஸுகஸம்பதாம்
தர்ஜனம் யமதூதானாம் ராம ராமேதி கர்ஜனம்                37

ராமோ ராஜமணி: ஸதா விஜயதே ராமம் ரமேசம் பஜே
ராமேணாபிஹதா நிஷாசரசமூ ராமாய தஸ்மை நம:            38
ராமான்னாஸ்தி பராயணம் பரதரம் ராமஸ்ய தாஸோ (அ) ஸ்ம்யஹம்
ராமே சித்தலய: ஸதா பவது மே போ ராம மாமுத்தர

ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்த்ரனாம தத்துல்யம் ராம நாம வரானனே

|| இதி ஸ்ரீ புதகௌசிகமுனி விரசிதம் ஸ்ரீராம ரக்க்ஷா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

தமிழ் அர்த்தம் கீழே உள்ளது.

நவராத்திரி 9 நாட்களிலும் அதிகாலையில் குளித்து சுத்தமான உடை அணிந்து தியானம் செய்வதற்கு (stotra text says 'sit on the seat of kusa' - அதாவது குஸா என்னும் ஒரு வகை புல்லின் மேல் மான் தோலினால் செய்யப்பட்ட ஆசனத்தில் அமர்ந்து - இதன் மேல் விவரம் அறிய பகவத்கீதை as it is - என்ற லிங்க்-ஐ பார்க்கவும்.) ஏற்றவாறு அமர்ந்து கொண்டு, ஸ்ரீ ராமனை நினைவில் இருத்தி இந்த பெரும் பலனை அளிக்க வல்ல புனிதமான பாடலை (ஸ்தோத்ரா) குறைந்தது 11 தடவை தினமும் சொல்லவும். குறைந்தபட்சம் 7 தடவையாவது சொல்ல வேண்டும் என்பது நியதி.
நம்பிக்கை தான் வாழ்க்கை. வாழ்க்கையே நம்பிக்கை. ஆகையால் நீங்கள் ராமனிடம் கொண்ட நம்பிக்கை  உங்களை கைவிடாமல் காப்பாற்றும். ராம ரக்க்ஷா ஸ்தோத்ரம் நீளமானது ஆனால் தினப்படி அமைதியுடனும், ஆழ்ந்த நம்பிக்கையுடனும் பாராயணம் செய்து வந்தால், நினைவில் தங்கி விடும்.

வினியோக:
ராமரக்க்ஷா ஸ்தோத்ரத்துக்கு ரிஷி புத கௌசிகர். சீதா, ராமச்சந்திரமூர்த்தி தேவதைகள். மீட்டர் அனுஷ்டுப், சக்தி சீதா, முக்கியமானவர் ஸ்ரீ அனுமான். நோக்கம் - ஸ்ரீ ராம பிரானின் கருணைப் பெறுவது.

த்யானம்:
அடர்ந்து படர்ந்து விரிந்த கூந்தலுடன், மஞ்சள் ஆடை உடுத்தி, வில்லும் அம்பும் தாங்கி, பத்த பத்மாசனம் என்னும் யோக இருக்கையில், அன்று மலர்ந்த புதிய தாமரை இதழ்களின் அழகை மிஞ்சும் ஆனந்த கருணை பொழியும் கண்களுடன் ஆஜானுபாஹூவாய் அமர்ந்திருக்கும் ஸ்ரீ ராமனை தியானிக்கிறேன். அவரின் இடது பக்கத்தில் மேகவண்ண மேனியுடன், பல்வேறு விதமான தெய்வீக அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டு, தாமரை மலர் போன்ற முகத்தை உடைய ஸ்ரீ சீதா தேவியையும் ஸ்ரீராமனுடன் சேர்த்து தியானிக்கிறேன்.

ஸ்தோத்ரம்

ஸ்ரீராமபிரானின் சரித்திரத்தின் அழகை, அதன் அற்புதத்தை விவரிக்க நூறுகோடி வார்த்தைகளாலும் இயலாது.
ஒவ்வோர் எழுத்தும், வார்த்தையும் மனிதப்பிறப்பின் பாவங்களை அழிக்க வல்லது.
(இந்த தமிழ் அர்த்தம் எனது தனிப்பட்ட கருத்து. "சரிதம் ரகுநாதஸ்ய சதகோடி ப்ரவிஸ்தரம், ஏகைக மக்ஷரம் பும்ஸாம் மஹாபாதக நாசனம்" என்று சொல்லப்பட்டுள்ளதை சிறப்பிலயல்பில் குறித்துள்ளேன். இதையே நூறுகோடி வார்த்தைகளால் ஆனது என்றும் அர்த்தம் கொள்ளலாம்)

நீலோத்பல (நீலோத்பலம், என்பது நீல நிற அல்லிப்பூ) நிறத்தவனும், தாமரை இதழ் போன்ற கண்களையுடையவனும், அடர்ந்துபடர்ந்து விரிந்த கூந்தலின் மேல் அழகான கீரிடம் அணிந்தவனும், கைகளில் கத்தி, வில், அம்புகளை
ஏந்தியவனும், அசுர சக்திகளை அழித்து இந்த உலகத்தை காப்பாற்றுவதற்காகவே பிறப்பு எடுத்திருப்பவனும் ஆகிய ராம பிரானை தியானிக்கிறேன். அக்கருணாமூர்த்தியை ஜானகி தேவியுடனும், லக்ஷ்மணனுடனும் தியானித்து இந்த ராம ரக்க்ஷ ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்தால் அனைத்து மனோபீஷ்டங்களும் பூர்த்தி ஆகும். அனைத்து பாபங்களும் போகும். ராகவன் எனது தலையையும், தசரத மைந்தன் எனது நெற்றியையும் காக்கட்டும்.

கௌசல்யையின்,புதல்வன் கண்களைக் காக்கட்டும். விஸ்வாமித்ரரின் பிரியமான மாணவன் காதுகளை காக்கட்டும். யக்ஞங்களை காப்பாற்றும் ராமச்சந்திரன் மூக்கினை காக்கட்டும். சுமித்திரையின் புதல்வரை நேசிக்கும் ராமபிரான் எனது முகத்தை காக்கட்டும்.

அறிவின் புதையல் எனது நாக்கினையும், பரதனால் வணங்கப்படும் ராமபிரான் எனது தொண்டையினையும், தெய்வீக ஆயுதங்களை தாங்கியவர் எனது தோள்களையும், மஹாதேவரின் வில்லை உடைத்தவர் எனது
கரங்களையும் காக்கட்டும்.

சீதாதேவியின் பதி எனது கைகளையும், பரசுராமரை வெற்றி கொண்டவர் எனது இருதயத்தையும், கரா என்னும் அசுரனை அழித்தவர் எனது மத்திய பாகத்தையும், ஜாம்பவானுக்கு புகலிடம் கொடுத்தவரான ராமபிரான் எனது தொப்புள் கொடியையும் காக்கட்டும்.

சுக்ரீவனுடைய தலைவன் எனது இடுப்பையும், ஹனுமானின் ஹ்ருதயத்தில் வசிப்பவர் எனது சக்தினியையும் அதாவது வலது முழங்கால்களுக்கு மேல் உள்ள பகுதியையும், ரகுவம்சத்தின் சிறந்த அரசரும், அசுர குடும்பங்களை அழித்தவருமான ராமபிரான் எனது இடது முழங்கால்களுக்கு மேல் உள்ள பகுதியையும் காக்கட்டும்.

பாலங்களைக் கட்டுபவர் எனது முழங்கால்களையும், ராவணனை அழித்தவர் எனது தொடைகளையும், வீபிஷணனுக்கு அரசுரிமையையும்  பொக்கிஷத்தையும் அளித்தவர் எனது பாதங்களையும், மற்றும் எனது உடம்பையும் காக்கட்டும்.

நல்ல குணநலங்களை கொண்டவர் யாவரும் இராமபிரானின் சக்தி அடங்கிய இந்த ராமரக்க்ஷா ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்வர்.அவ்வாறு பாராயணம் செய்பவர் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியுடனும், வெற்றி மற்றும்  வினயத்துடன் கூடிய புத்ர பாக்யத்துடன் வாழ்வர்.

ராம நாம பாராயணம் செய்பவரை மூன்று உலகத்திலும் உள்ள சக்திகளாலும், மறைமுகமாக‌(கண்களுக்குப் புலப்படாமல்) வாழும் சக்திகளாலும் ஏறெடுத்துக்கூட பார்க்க முடியாது. அத்தகைய புண்ணிய சக்தி வாய்ந்த மந்திரம் ராம மந்திரம்.

ராமேதி, ராம பத்ராய,ராம சந்திராய என்று ராம‌நாம பாராயணம் செய்பவர்களைப் பாவம் தீண்டாது. அவர்கள் வாழ்க்கை சந்தோஷமாக நடக்கும். அவர்கள் மோக்ஷத்தை அடைவர்.

இதை மனப்பாடமாக நினைவில் இருத்தி வைப்பவர்கள் இவ்வுலகில் அனைத்து வெற்றிகளையும் அடைவார்கள். ராம நாமம் அவர்களை எல்லாவிதமான துன்பங்களிலிருந்தும், இடர்களிலிருந்தும் காப்பாற்றும். அனைத்து வித சாதனைகளும் அவர்கள் வசம் வந்து சேரும்.

இந்திரனின் வஜ்ராயுதத்திற்கு ஒப்பான இந்த வஜ்ரபஞ்சர ராம கவசத்தை பாராயணம் செய்பவரின் வார்த்தைகள் கட்டளை போல் எந்தவிதமான எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேற்றப்படும். வெற்றியும் புண்ணியமும் வந்தடையும்.

பவித்ரமான ராமரக்க்ஷா கவசமானது சிவபெருமானால் புதகௌசிக முனிவரின் கனவில் உரைக்கப்பட்டது. த‌ன் கனவில் சிவபெருமான் உரைத்தபடி எழுதிய பவித்ரமான ஸ்தோத்ரம் இது.

கேட்டதெல்லாம் தரும் கற்பக விருட்சத்தைப் போன்றவரும், உலகத்தின் துன்பங்கள் யாவற்றையும் களைபவரும், மூவுலகிலும் ஈடில்லா அழகை உடையவரும் ஆகிய ராமபிரானே என் தலைவன்.

வாலிப பருவத்தினரும், அழகான தோற்றமுடையவர்களும், மென்மையான ஆனால் மிகவும் வலிமை வாய்ந்த, பெரிய தாமரையைப் போன்ற கண்களை உடைய, மரவுரி மற்றும் மான் தோலினால் செய்யப்பட்ட ஆடை அணிந்த, காய் மற்றும் கனி வகைகளை புசிக்கும், சுயகட்டுபாடுடைய, தபஸ்வி, பிரம்மச்சரியம் பேணுபவர்களும், அனைத்து உயிர்களுக்கும் புகலிடம் அளிப்பவர்களும், சிறந்த வில் வீரர்களும், அசுர குலத்தை அழிக்க வந்த ரகுவம்ச தசரதனின் புத்ரர்களுமான ராமன் மற்றும் லக்ஷ்மணன் ஆகிய இரு சகோதரர்களும் என்னை காக்கட்டும்.
 
எவர்களது வில்லானது எப்பவும் தன்னுடைய இலக்கை நோக்கியே இருக்கின்றதோ,யார் எப்பொழுதும் தங்கள் கைகளில் அம்பை வைத்திருக்கின்றார்களோ, எவருடைய அம்பறா தூளி எடுக்க எடுக்க குறைவில்லாமல் இருக்கிறதோ அவர்களே ராமனும் லட்சுமணனும் ஆவர். அவர்கள் இருவரும் என்னுடைய பாதையில் எனக்கு முன்னால் சென்று காத்து அருளட்டும்.

எப்பொழுதும் தயார் நிலையில் இருப்பவரும், கவசங்களை அணிந்தவரும், கையில் கத்தி வைத்திருப்பவரும், வில்லையும் அம்பையும் கையில் ஏந்தி இருப்பவரும், சிறு வயதினரும் ஆன ராமன் தன்னுடைய தம்பி லக்ஷ்மணனுடன் எனக்கு முன்னால் சென்று, என்னுடைய கனவுகளையும் ஆசைகளையும் காப்பாற்றி (நிறைவேற்றி)அருளட்டும்.

ராமா, தசரதி, சுரா, லக்ஷ்மணனுசார, பாலி, காகுஸ்த, புருஷா, பூர்ணா, கௌசல்யேயா, ரகுத்தமா, வேதாந்தவேத்யா, யக்ஞேசா, புராணபுருஷோத்தமா, ஜானகி வல்லபா, ஸ்ரீமன், அப்ரமேயபராக்ரமா ஆகிய நாமக்களை தினமும் நம்பிக்கையுடன் ஜபம் செய்து வந்தால் கிடைக்கும் புண்ணியமானது அஸ்வமேத யாகம் செய்த புண்ணியத்தை விட பன்மடங்கு பெரியது. இதில் சிறிதளவும் சந்தேகம் வேண்டாம்.

அருகம்புல்லினை ஒத்த நிற கொண்ட, தாமரை கண்களை உடைய, மஞ்சள் வர்ண உடைகளை அணிந்த ராமபிரானை மேலே உள்ள நாமங்களால் எவர் துதி செய்கின்றோ, அவர் இவ்வுலக பந்தங்களிலிருந்து விடுதலை அடைவர்.

நான் இராமச்சந்திரமூர்த்திக்கு சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். அவர் லக்ஷ்மணனின் மூத்த சகோதரர், ரகுவம்சத்தில் சிறந்தவர், அன்னை சீதாதேவியின் கணவர், மிகவும் அழகானவர், காகுஸ்த வம்சத்தில் பிறந்தவர், கருணையுள்ளவர், நல்லொழுக்கத்தின் புதையல், பிரம்மத்தை மதித்து வணங்குபவர், ஆழ்ந்த தெய்வபக்தி உடையவர், அரசர்களுக்கெல்லாம் அரசர், சத்தியத்தின் வழி நடப்பவர், தசரதரின் புதல்வர், கருமை நிறத்தவர், அமைதியான மனத்தை உடையவர், மூவுலகத்திலும் ஈடில்லாத ஒப்பற்ற அழகுடையவர், ரகுவம்சத்தில் இவருக்கு சமமான வேறொருவரும் இல்லாதவர், ரகுவம்சத்தில் பிறந்ததால் ராகவன் என்று அழைக்கப்படுபவர், ராவணனின் எதிரி.. இத்தனை சிறப்புடைய ராமபிரானை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.

ராமா, ராமபத்ராய, ராம சந்திராய, இப் பிரபஞ்சத்தின் உருவாக்கியை, ரகுநாதனை, சீதையின் கணவனான சீதாராமச்சந்திரனை, என் தலைவனை நான் போற்றி வணங்குகிறேன்.

ஓ ! ரகுநந்தனா, ஸ்ரீ ராமா ! ஓ ! ராமா, பரதனின் மூத்த சகோதரா, நிலையான போர்வீரர் ஆன ராமச்சந்திரா, எனக்கு அடைக்கலம் அளிப்பாயாக.

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் பாதக்கமலங்களை இருதயத்தில் வைத்து பூஜித்தும், அவருடைய பாத தூளிகளின் மகிமையை என் வார்த்தைகளால் பரப்பியும், அவருடைய பாதங்களில் என் சிரத்தை வைத்து போற்றி வணங்கியும் நான் ராமனின் பாதத்தில் அடைக்கலம் வேண்டுகிறேன்.

ராமனே என் தாய், தந்தை, தலைவன் மற்றும் நண்பனும் ஆவார். கருணையே வடிவமான ராமச்சந்திரன் எனக்கு எல்லாமும் ஆவார். எனக்கு அவரைத்தவிர வேறு யாரையும் தெரியாது.

நான் எனது சிரம் தாழ்த்தி ரகுநாதனை வணங்குகிறேன். அந்த ரகுநாதனுக்கு வலப்புறத்தில் லக்ஷ்மணனும், இடப்புறத்தில் சீதா தேவியும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் ஹனுமான் அமர்ந்திருக்கிறார்.

எல்லா உலகத்திலும் ஈடில்லாத அழகை உடையவர், உறுதியான போர்வீரர், தாமரை கண்ணாளன், ரகுவம்சத்தின் தலைவன், இரக்கமே வடிவாகவும், புதையலாகவும் கொண்ட ஸ்ரீ ராமச்சந்திரனிடத்தில் அடைக்கலம் வேண்டி வணங்குகிறேன்.

மனோ வேகத்தையும், காற்றை விட வலிமையான சக்தியையும் (வாயுபுத்ரன்) கொண்டவரும், பஞ்சேந்திரியங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரும், சான்றோர்களில் சிறந்தவரும், ஸ்ரீ ராமனின் முதன்மை தூதுவனும் ஆகிய பாவன நந்தன ஹனுமானிடம் அடைக்கலம் வேண்டி வணங்குகிறேன்.

ராமா, ராமா என்று ராம நாமத்தைக் கவிதையாக பாடும் வால்மீகி முனிவராகிய குயிலை வணங்குகிறேன்.

நான் திரும்ப திரும்ப பலமுறை ஸ்ரீ ராமனை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். ஸ்ரீ ராமன் நமது அனைத்து துயரங்களையும், கஷ்டங்களையும் களைந்து அனைத்து வகை செல்வங்களையும் வழங்குவார். ஸ்ரீ ராமன் நமது மனதை கொள்ளை கொள்ளக்கூடிய கவர்ச்சி பெற்றவர்.

ராம ராம என்னும் ராம நாம சப்தம் இடிமுழக்கத்தைப் போன்றது. அது அனைத்து உலகத்திலும் உள்ள விதைகளை உயிர்ப்பிக்கக்கூடிய சக்தி வாய்ந்தது. அனைத்து வித சந்தோஷத்தையும், செழுமையையும் வழங்கக்கூடியது. யம தூதர்களை நடுநடுங்கச் செய்யும் சக்தி உடையது.

அரசர்களில் சிறந்தவரான ராமனுக்கு எல்லா வெற்றிகளும் உரித்தாகுக. திருமகளின் மணாளனை நான் மிகவும் நேசிக்கிறேன். அசுரர்களின் அனைத்து படைகளையும் அழித்தவரான ஸ்ரீ ராமச்சந்திரரை நான் வணங்குகிறேன். ராமனை விட மேலான புகலிடம் வேறொன்றுமில்லை. அந்த ராமனுக்கு நான் சேவகன், எனது சிந்தை, எப்பொழுதும் ராம பக்தியில் ஆழ்ந்து இருக்கட்டும். ஓ ! ராமச்சந்திரா ! எனக்கு உன்னை விட்டால் வேறு ஒருவருமில்லை. என்னை தங்களின் தயை மற்றும் கருணையின் கிருபா கடாக்ஷத்திற்கு பாத்திரமாக்கி மோக்ஷத்தை அளிப்பாயாக.

ஸ்ரீ மஹாதேவர் பார்வதியிடம் சொல்லுகிறார் - " மிகவும் அழகான முகத்தை உடையவளே ! ராம் என்னும் ஒரு நாமம் விஷ்ணுவின் ஆயிரம் நாமத்திற்கு சமம்  நான் எப்பொழுதும் இந்த அபூர்வமான கவர்ச்சிகரமான நாமத்தில் ராமா, ராமா, ராமா என்று ஆழ்ந்து இருக்கிறேன்.

|| ஸ்ரீ புதகௌசிக முனிவரால் இயற்றப்பட்ட ஸ்ரீ ராம ரக்க்ஷா ஸ்தோத்ரம் முற்றிற்று ||

நன்றி: திரு. மன்னார்குடி சீதாராமன் சீரினிவாசன்.

No comments:

Post a Comment