Skip to main content

தர்ப்பண மந்த்ரங்களின் சுருக்கமான அர்த்தம் இதோ

 :--
1.ஆவாஹனம்
> -(எழூந்தருளச் செய்தல்)
> .பித்ருக்களே!  மிகவும் நல்லவர்களாக  நீங்கள் ,எங்களுக்கு  சந்ததியையும்  ,செல்வத்தையும் , நீண்ட ஆயுளையும்  ஆசீர்வதித்துக்கொண்டு ,கம்பீரமாகச் சிறந்த ஆகாச மார்க்கத்தில்  இங்கு எழுந்தருளுங்கள் .இந்த கூர்ச்சத்தில் இரண்டு வம்ச பித்ருக்களையும் ஆவாஹனம் செய்கின்றேன்
>2. .ஆசனம்
> ,-( இருக்கை.)
ஹே தர்பமே !நீ , ஒரு போது என்னால் சேகரிக்கப் பட்டாய்.உன்னைப் பித்ருக்க்ளுக்காகப்
பரப்புகிறேன்.நீ  அவர்களுக்குப் பஞ்சு போல் மிக மிருதுவான ஆசனமாக இரு.அருள் சுரக்கும் எங்கள் பித்ரு ,பிதாமஹ ப்ரபிதாமஹர்கள் தங்களுடைய பரிவாரங்களுடன் இங்கு எழுந்தருளட்டும்.  இரண்டு வம்ச பித்ருக்களுக்கும்  இது ஆசனம் .அவர்களை எல்லா வித
உபசாரங்களுடன் பூஜிக்கின்றேன்.
3..தர்ப்பணம்
> .சோம யாகம் செய்த சிறந்த
> பித்ருக்களைப் போலவே ,
> நடுத்தரத்தினரும்
> கடைப்பட்டவரும் கூட
> உயர்ந்த கதியை
> அடையட்டும் .நம்மிடம்
> கோபமற்றவர்களாய்
> அவர்கள் நாம் செய்யும்
> நற் கர்மாவை உணர்ந்து
> ,நமது பிராணனை
> ரக்ஷித்து ,நாம்
> அழைக்கும்போது வந்து ,
> நம்மைக்
> காத்தருளவேண்டும்.இன்ன
> கோத்திரனரும் இன்ன
> பெயருள்ளவரும் , வஸு
> ரூபியான எங்கள்
> தந்தையை நமஸ்கரித்து
> அவருக்குத் தர்ப்பணம்
> செய்கின்றேன் .அங்கீரஸர்
> ,அதர்வணர் ,பிருஹுக்கள்
> என்று பெயருள்ள நமது
> பித்ருக்கள் புதிது
> புதிதான வகையில் அருள்
> புரிபவர்கள் .சோம
> யாகம் செய்தவர்கள்
> .பூஜித்தர்க்குரிய
> அவர்கள் எந்த சிறந்த
> வழியில் சென்றார்களோ ,
> அதையே நாமும் பின்
> பற்றி ,மங்களகரமான நல்ல
> மனது உடையவர்கள் ஆவோம்
> .இன்ன
> கோத்திரத்தினரும்
> …தர்ப்பணம்
> செய்கின்றேன்.அக்னிச்வாத்தர்கள்
> என்பவர்களும் ,சோம
> யாகம் செய்தவர்களுமான
> நமது பித்ருக்கள் தேவ
> மார்க்கமாக இங்கு
> எழுந்தருளட்டும் .இங்கு
> நாம் செய்யும்
> ஆராதனையில்
> சந்தோஷமடையட்டும் .நம்மைக்
> காப்பாற்றட்டும் .
>4. ஜலங்களே
> ,எல்லாவற்றிலும் உள்ள
> சாரத்தை நீங்கள்
> உங்களிடம்
> கொண்டிருகிறீர்கள்
> .ஆகையால்
> அம்ருதமாகவும்
> ,நெய்யாகவும் ,
> பாலாகவும் ,மதுவாகவும்
> பானகமாகவும்
> பரிணமித்து (எது
> வேண்டுமோ ,அதுவாய்
> நின்று நீங்கள் )
> எங்கள் பித்ருக்களை
> திருப்தி
> செய்வீர்களாக .இன்ன
> கோத்திர ‘.. எனது பிதா மஹரை
நமஸ்கரித்து ..தர்ப்பணம்> செய்கிறேன்.
5.ஸ்வதா> என்னும் சொல்லால்
> திருப்தி அடையும்
> பித்ருக்களுக்கு
> ஸ்வதா எனக்கூறி
> நமஸ்கரிக்கின்றேன்
> .ஸ்வதா என்னும் சொல்லால்
> திருப்தி அடையும்
> பிதா மஹர்களுக்கும்
> ,ப்ரபிதா மஹர்களுக்கும் ஸ்வதா
> எனக்கூறி
> நமஸ்கரிக்கின்றேன்
>6. .இன்ன ……எந்த பித்ருக்கள்
> எந்த உலகில்
> இருக்கின்றார்களோ ,
> எவர்கள் இங்கு இல்லையோ
> , எவர்களை நாங்கள்
> அறிவோமோ ,எவர்களை
> அறியமாட்டோமோ
> , அவர்களை எல்லாம்
> அக்னி பகவானே, நீர்
> அனைத்தையும் அறிவீர்
> ஜாதவேதஸ் ஆதலால்
> அறிவீர்
> .அவர்களுக்குரியதை
> அவர்களிடம் சேர்த்து
> அருள்வீர் .
> அதனால் அவர்கள்
> சந்தோஷமடையட்டும் .
> இன்ன ……
> ப்ரபிதா மஹர்..
> 7.காற்று இனிமையாக
> வீசட்டும் .நதிகள்
> இனிமையைப் பெருக்கிக்
> கொண்டு ஓடட்டும் .செடி
> கொடிகள் இனிமை
> அளிப்பவையாக
> இருக்கட்டும் .இன்ன
>8. …….ப்ரபிதா மஹரை
> நமஸ்கரிக்கின்றேன்.இரவும்
> காலையும் இனிமையாக
> இருக்கட்டும் .பூமியின்
> புழுதியும் இன்பந்
> தருவதாய்
> இருக்கட்டும்..நமது
> தந்தை போனற ஆகாயம்
> இன்பமளிக்கட்டும் .இன்ன……வன
> விருக்ஷங்கள் இன்பம்
> நிறைந்தவகளாக
> இருக்கட்டும் .சூரியன்
> இன்பந் தரட்டும்..பசுக்கள்
> அமிர்தமான பாலைத்
> தரட்டும்.
9.இன்ன …தாயார்.இன்ன
> கோத்திரத்தினரும்
> இன்ன… பெயருள்ளவரும்
> வசு ரூபிணியும் ஆகிய
> எனது தாயை
> நமஸ்கரித்துஅவருக்குத்
> தர்ப்பணம்
> செய்கின்றேன்.( மூன்று
> முறை )
> இன்ன
> கோத்திரத்தினரும்
> இன்ன…
> பெயருள்ளவரும்,ருத்ர
> ரூபிணியும் ஆகிய எனது
> மாதா மஹியைநமஸ்கரித்து
> அவருக்குத் தர்ப்பணம்
> செய்கின்றேன் . (மூன்று முறை)
> .இன்ன கோத்திரத்தினரும்
> இன்ன… பெயருள்ளவரும்,ஆதித்ய
> ரூபிணியும் ஆகிய எனது
> ப்ரபிதா மஹியை
> நமஸ்கரித்து
> அவருக்குத் தர்ப்பணம்
> செய்கின்றேன் .(மூன்று
> முறை)தாய்> வழித் தாத்தா,
கொள்ளுத் தாத்தா பாட்டி
> கொள்ளுப்பாட்டி வகை
> .இன்ன
> கோத்திரத்தினரும்
> இன்ன… பெயருள்ளவரும்
> வசு ரூபியும் ஆகிய
> எங்கள் மாதா மஹருக்கு
> தர்ப்பணம்செய்கின்றேன்..
( மூன்று தடவை )
ருத்ர ரூபியாகிய எங்கள்
> தாயின் பிதா மஹருக்குத்
> தர்ப்பணம் .( மூன்று
தடவை )
ஆதித்ய ரூபியாகிய எங்கள்
> தாயின் ப்ரபிதா மஹருக்குத் தர்ப்பணம்
> ..( மூன்று தடவை )வசு
> ரூபியாகிய எங்கள் மாதா
> மஹிக்கு தர்ப்பணம்
(> மூன்று தடவை ).
ருத்ர> ரூபியாகிய எங்கள்
தாயின் பிதா மஹிக்குத்
> தர்ப்பணம் .( மூன்று
> தடவை ).
ருத்ர ரூபியாகிய எங்கள்
> தாயின் ப்ரபிதாமஹிக்குத் தர்ப்பணம்
.( மூன்று தடவை ).
10.அன்னரஸமாகவும்
> அம்ருதமாகவும்
> ,நெய்யாகவும்,பாலாகவும்,
> தேனாகவும் பானகம்
> ஆகவும் பரிணமித்து ,
> எது வேண்டுமோ அதுவாய்
> நின்று நீங்கள் எனது
> பித்ருக்களைத்
> திருப்தி
> செய்வீர்களாக !
11.பித்ருக்களே,திருப்தி அடையுங்கள்
.திருப்தி அடையுங்கள்.
திருப்தி அடையுங்கள்.
.(பூணூல் வலம்)
12..தேவதைகளுக்கும் பித்ருக்களுக்கும்
> அவ்வாறே மகா யோகிகளுக்கும்
> நமஸ்காரம்
.ஸ்வதா என்னும் பெயர் கொண்டு
> விளங்கும் பர தேவதைக்கு எப்போதும்
> மீண்டும் மீண்டும் நமஸ்காரம் .
( மூன்று முறை )
13.அபிவாதனம்
> , நமஸ்காரம் (.பூணல் இடம்)
.பித்ருக்களே !மிகவும்
> நல்லவர்களான நீங்கள்
> எங்களுக்கு சந்ததியையும்,செல்வத்தையும்
> நீண்ட ஆயுளையும் ஆசீர்வதித்து
> அளித்துக்கொண்டு> கம்பீரமாக சிறந்த ஆகாய
> மார்க்க்கத்தில் எழுந்து அருளுங்கள்
> .இந்த கூர்ச்சத்தில் இருந்து இரண்டு வர்க்க
> பித்ருக்களையும் அவரவர்களுடைய
> இருப்பிடங்களுக்கு எழுந்து அருளப்
> பிரார்த்திக்கிறேன்
>14. (.பவித்ரத்தை வலது காதில் வைத்துக்கொண்டு
> ,உபவீதியாக)
,ஆசமனம் செய்து , பவித்ரத்தைப் போட்டுக் கொண்டு
> பூணூலை இடமாக்கவும் .
> எவர்களுக்கு தாயோ
> தந்தையோ ஸ்நேகிதரோ
> தாயாதிகளோ பந்துக்களோ
> இல்லையோ
> அவர்களெல்லாம் நான்
> தர்ப்பை நுனியால்
> விடும் தீர்த்தத்தால்
> திருப்தி அடையட்டும்
> .கூர்ச்சத்தைப்> பிரித்து நுனி வழியாக
> தர்ப்பணம் செய்யவும்
>( .பவித்ரம் பிரிக்கவும் ).
> 15.பூணூல் வலம் ஆசமனம்.
> பின்பு பிரம்ம யஜ்ஞம் செய்க.

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்

இன்று(11/11/2018),ஐப்பசி மூலம்-ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/அழகிய மணவாளர்/ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/வரவர முனி/இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்---ஸ்வாமிகளின் 649ஆவது,திருநட்சித்திரம். ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்; ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும்அறிந்ததே.ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி/கைங்கர்ய ங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் பல தெய்வீகத் தன்மைகள்/ஒற்றுமைகள்புலப்படுகின்றன அந்த நோக்கத்தில் அடியேனின்,ஒரு குறு முயற்சி. 1.ராமானுஜருக்கு அவருடைய தாய்மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,பெரிய திருமலைநம்பிகள்'இளையாழ்வார்' என்று பெயரிட்டார். மாமுனிகளுக்கு அவருடைய தாய்வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள் 'அழகியமணவாளன்'என்று பெயரிட்டார். 2.இளையாழ்வார்,தம்வைணவ வாழ்க்கைநெறிக்கும்,கைங்கர் யங்களுக்கும் இல்லறம் தடை யாக இ...