Friday, 9 March 2018

திருக்கண்ணங்குடி

ஸ்ரீமதே ராமாநுஜாய நம

"திருக்கண்ணங்குடி "


"பன்னிய பாரம் பார்ம கட் கொழியப்
பாரத மாபெரும் போரில்,

மன்னர்கள் மடிய மணி நெடுந் திண்டேர்
மைத்துனர்க் குய்த்தமா மாயன்,

துன்னுமா தவியும் சுர புனைப் பொழிலும்
சூழ்ந்தெழு செண்பக மலர்வாய்,

தென்னவென் றளிகள் முரன்றிசை பாடும்
திருக்கண்ணங் குடியுள்நின் றானே"


திருமங்கையாழ்வார்
பெரிய திருமொழி - பாசுரம் 1756.


பூமிப்பிராட்டியாரின் பாரம் நீங்கும்படியாக மிகப் பெரியதாக நடைபெற்ற மகாபாரதப் போரின் போது, துரியோதனன் முதலிய மன்னர்களெல்லாம் மடியும் பொருட்டு, மைத்துனராகிய அருச்சுனனின் மணிகள் பூட்டிய உறுதிமிக்க தேரைச் செலுத்தியருளிய மாயனாகியஎம்பெருமான் ஸ்ரீ கண்ணபிரான் மாதவி, சுரபுன்னை மரங்கள் நிறைந்த சோலைகளுடன் சூழ்ந்திருக்கின்ற செண்பக மலர்களில் அமர்ந்திருக்கின்ற வண்டுகள்" தென்ன.. தென " என்று இசையினை இசைத்துக் கொண்டிருக்கின்ற "திருக்கண்ணங்குடி " என்னும் திருத்தலத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளப் பெற்று அருள்பாலிக்கின்றார்.

No comments:

Post a Comment