Tuesday, 4 December 2018

வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி பின் நடக்கும் நிகழ்வில்ஒரு சில திவ்யதேசங்களில் பெருமாளுக்கு ஏன் ரத்னாங்கி சாற்றுகிறார்கள்? மற்ற ஏகாதசியை போலல்லாமல் மார்கழி மாத ஏகாதசியில் மட்டும் ஏன் பரமபத வாசல் நிகழ்வு ???

வைகுண்ட ஏகாதசி என்பது மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியாகும்.. இந்நாளில் பகவான் ஒரு ஆத்மா பரபதநாதனான தன்னை எப்படிவந்து அடையும் என நடித்து காண்பிக்கிறான்

இந்த வருடம் அதன் நிறைவு நாளான (18/12/2018) நம்மாழவாருக்கு மோட்சத்தையைம் சமர்ப்பிக்கிறான்

முன்பத்து பின்பத்து என இவ்விழா 21 நாட்கள் நடைபெறும்

வைகுண்ட ஏகாதசிக்கு முன் பகவான் ஆழ்வாருக்கு பரம்பதம் தர சங்கல்பம் கொண்டு அவருக்காக பரம்பத வாசலை திறக்கச் செய்து தானே ( எப்படி நம் வீட்டுக்கு வரும் விருந்தினரை வாசலில் வந்து வரவேற்போமோ அப்படி) பரம்பத வாசலுக்கு வந்து வரவேற்க்க சித்தமாகிறான்

அரங்கம் என்றாலே நாடகம் நாட்டியம் நடக்கும் இடம் தானே அதனால் தான் இந்த விழாவை பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்தில் தானே நடித்து நடத்தி காட்டுகிறார்

இந்த ரத்னாங்கி சேவை என்பது இங்கு தான் ஆரம்பிக்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதசி அன்று அரங்கனுக்கு சாற்ற பெறும் ரத்னாங்கி 1700 ஆம் வருடம் வழங்க பெற்ற அறிய ஆபரணம் 1900 ங்களில் மறுபடியும் பாகவத புருஷர்களால் செப்பனிடப்பட்டது ஏன் இந்த அங்கி என தகுந்த இடத்தில் சொல்லுகிறேன்.

பகல் பத்து முடித்து பரம்பதம் திறக்கப் பட்டதும்

திருவரங்கத்தில் இந்த இரா பத்து நடைபெறும் அந்த பத்து நாட்களும் அரங்கன் ஒரு நாடகத்தினை தினம் நடிக்கின்றான்.

அரங்கன் திருஅத்யாயன புறப்பாடு முதல் நாள் முதல் அந்த நாடகத்தை காண்போம்

அரங்கன் மூலஸ்தானத்திலுந்து கிளம்பும் பொழுது சாதாரன போர்வை அணிந்து (வைகுண்ட ஏகாதசி நீங்கலாக ) தன் இரு அபயகரங்கள் மட்டுமே தெரியும் வண்ணம் எழுந்தருளுவார்

பின்னர் மேல் படியில் மரியாதையாகி உத்தமநம்பி அவர்களுக்கு பரிவட்டம் வழங்கப் பெற்று அவர் மூலம் இந்த நாடகத்தை நடத்திவைக்க பணிப்பார் இக்கோவிலின் ஸ்தானிகர்

அதன் பின் அரங்கன் புறப்பட்டு சேனை முதல்வருக்கு மரியாதைகள் வழங்கிய பின்பு நாழி கேட்டான் வாயிலை அடைவார் ,

அது என்ன நாழிகேட்டான் ? 

அதாவது அந்த கதவுகளின் அருகில் வந்தவுடன் சரியான நேரம் தானா என்று கேட்கப்படும்

நாழி:- முன்னோர் காலங்களில் நாழி என்னாச்சு? னு நம்மிடையே கேட்கும் வழக்கமும் இருந்தது அதாவது நேரத்தை நாழி என்று குறிப்பிடுவோம் ( இன்றும் சில இல்லங்களில் இப்பேச்சு உள்ளது)

நாழிக்கு 24 நிமிடம் என்பது ஒரு நாழி. அங்கு நாழிகேட்கப்படுவதின் ரகஸ்யம்

அரங்கன் மூலஸ்தான புறப்படாகிய பொழுதுசாற்றியிருக்கும் அந்த போர்வை தான் நாம் அதாவது ஜீவாத்மா அவன் அந்த ஆத்மாவை போல் இரு கரங்கள் தெரிய புறப்படுகிறான்

அந்த ஜீவாத்மா தான் மேலேகிளம்ப வேண்டிய நேரத்தினை அறிந்து புறப்படுகின்றது என்பதை தெரிவிக்கவே நாழி கேட்கப்படுகிறது

 ஒரு ஆத்மாவின் ஜீவதசைக்கு ( மரணத்திற்க்கு) பின்பு இரண்டு வகையான பாதைகளிலில் பயணிக்கும் ஒன்று முக்திக்கு செல்ல கூடிய பாதை இன்னொன்று எம தர்மலோகமாம் எம பட்டினம் செல்லும் பாதை.

முக்திக்கு செல்லும் பாதையினை அர்ச்சிராதி மார்க்கம் என்று கூறுவார் இனொன்றை துமாதி மார்க்கம் என்பார்கள்

இப்பொழுது நம் அரங்கன் நமக்கு அர்ச்சிராதி மார்கத்தினை தான் காட்ட போகின்றான்

நாழி கேட்டனை அடைந்த பிறகு அரங்கன் துறை பிரகாரம் என்னும் பிரகாரம் கடப்பான் அந்த பிரகாரம் மட்டும் சற்றே மாறுபட்டது

இங்கு நடுவினில் முழுதும் தொடர்ச்சியான மண்டபம் இருமருங்கும் வெற்றிடம் ஏன் இப்படி என்றால் அந்த மண்டபத்திற்கு வெளிச்சம் ஏற்றிட என்பார்கள்

ஆம் அர்சிராதி மார்கத்தினை அடையும் ஜீவன் முதலில் விதியுத் அதாவது மின்னல் உலகம் பின்பு சூர்ய லோகம் சந்திரா லோகம் என ஒளிபொருந்திய லோகங்களை கடந்தே செல்லும் அதற்க்கு தான் இந்த மண்டபம்

       பின்பு விராஜா மண்டபம் அடைவார் அரங்கன், அங்கு வேத பாராயண கோஷ்டி முதலியன நடை பெறும் ஏன் அங்கு இப்படி ஒர் ஏற்பாடு?

இந்த ஜீவன் விரஜை என்னும் பேரெழில் ஆற்றை அடையும் அதுவே வைகுண்டத்தின் கரை அந்த ஆற்றை அடைந்த பிறகு அங்கு வேத கோஷங்கள் முழக்க தேவ மங்கையர்கள் நம்மை நீராடிடுவார்கள் நமக்கு மரியாதையை செய்வார்கள்

இது வரை அந்த ஜீவனுக்கு சூக்ஷும சரீரமா இருக்கும் .

     கடைசியாக விரஜையில் அந்த ஜீவன் முழுகி எழுந்த உடன் அந்த ஜீவன் நான்கு காரமும் கஸ்தூரி திருமண் காப்போடு துலங்கும்

அந்த மேனியினை வார்த்தையால் வர்ணிக்க ஒண்ணாது

அதுபோலவே ஒளிபொருந்திய மேனியை அடைந்ததை குறிக்கவே இரத்தினஅங்கி (வைகுண்ட ஏகாதசி நீங்கலாக மற்றைய நாட்களில்) வைகுண்ட வாசல் அருகில் வந்த உடன் அரங்கனின் போர்வை கலையப்பெற்று கஸ்தூரி திருமண் காப்பு சாற்ற பெற்று நான்கு காரத்துடன் அவர் உயர்த்தி காண்பிக்க படுவார் 

இங்குதான் இரத்தினாங்கி சாத்தப்படுகிறது அதாவது அந்த பேரெழில் ஒளி பொருந்திய வார்த்தைகளால் வர்ணிக்கபட முடியாத மேனியினை காட்ட அரங்கனுக்கு ரத்னஅங்கி சாற்ற பெறுகின்றது 

இன்னும் சொல்லப்போனால் நம்மால் விவரிக்க ஒண்ணா காந்தியினை கூறவே உலகில் கிடைக்கும் இயற்கையான ஒளி பொருந்திய கற்களால் ஆனா அங்கிசாத்தப்படுகிறது இதையே இன்று வேறுபல திவ்யதேசங்களிலும் செய்கிறார்கள்

பின் அந்தமிழ் பேரின்ப நாடாம் வைகுந்தமடைவார

      அப்படிபட்ட பேரோளியான ஆத்மா வைகுண்டத்தில் பகவானுடன் (திருவரங்கத்தில் பகவான் 1000 கால்களையுடைய மண்டபத்தின் நடுவே அதாவது திருமாமணிமண்டபத்தில் ஆனந்தமாக எழுந்தருளிஇருப்பார்) என்றும் ஆனந்த பரவசத்தில் திளைப்பதை தாம் நாம் அரங்கன் பரமபத வாசல் கடந்து நடத்தி காட்டுகிறார்

ஆயிரம் கால் மண்டபமான இந்த லீலா விபூதி அதாவது இந்த அவன் தற்காலிகமாக ஏற்பட்டுத்திருக்கும் இந்த வைகுண்டத்தைஅடைகிறார்

இப்படியாக ஒரு ஜீவனின் வழியை தானே நடித்து அதன் தன்மையினை அணிந்து காட்டுகின்றார்.

இன்று நம்மாழ்வாருக்கு மோட்சமருளும் நாள் அவர் காட்டிய வழியில் நாம் சென்றால் அவரால் நமக்கும் மோட்சம் கிட்டும்.

ஆழ்வார் ஆசாரியர் வழி நடந்து நாமும் மோட்சத்தை அடைவோம்!!

No comments:

Post a Comment