1, சராசரியாக 80/ சதவிகித சிவாச்சாரியார்கள் காலை உணவை உண்ணுவதில்லை.
2, வருடத்தில் தொடர்ச்சியாக ஒருமாதம் (மார்கழி) முழுவதுமாக அதிகாலை 3மணிக்கு கண் விழிக்கின்றனர்.
3, விடுமுறை கிடையாது மாற்று சிவாச்சாரியார் இருந்தால் மட்டுமே விடுமுறை சாத்தியம்.
4, பெரும்பாலான ஆலயங்களில் குறைந்தபட்சம் 3நபர் செய்ய வேண்டிய வேலைப்பழுவை ஒரே சிவாச்சாரியார் செய்கிறார் காரணம் 1நபருக்கும் குறைந்த வருமானம்தான் வரும் மற்ற இருவருக்கு அவரால் தர இயலாது நிர்வாகமும் எங்களுக்கு வேலை நடந்தாபோதும் என்று இருந்துவிடும் ஆனால் விழா நாட்களில் ஆலய நிர்வாகத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் அந்த வருமானம் ஆலய அர்ச்சகருக்கு என்று ஒரு சதவிகிதம் கூட செலவு செய்வதில்லை உண்டியல் வருமானமும் நிர்வாகத்திற்கு கூடுதல் வரவாக கிடைக்கும் ஆனால் அர்ச்சகர் #தட்டுவருமானம்# மட்டுமே இங்கு பக்தர்கள் மனதில் மிகைப்படுத்தப்பட்டுள்ளது.
5, அதிகமாக தண்ணீரில் நிற்பதால் கால்வலி,
6, காலை உணவு உண்ணாததால் சுகர்
7, கற்பூர புகை ஊதுபத்தி புகை இவைகளால் மூச்சுத்திணறல்
8, தரமற்ற பூஜைப்பொருட்கள் கலப்படத்தால் சருமம் பாதிப்பு
9,தீபாவளி,பொங்கல் இதுபோன்ற எந்த விசேஷமாக இருந்தாலும் பக்தர்களுக்காக அதை கொண்டாட முடியாத சமூகம்.
இதுபோன்ற பல சிரமங்களை கடந்து எந்தவித அரசு ஆதரவோ,மத்தியில் ஆதரவோ,சாதி ஆதரவோ இல்லாமலும் ஆலய சொத்துக்கள் எவ்வளவோ இருந்தும் அதில் இருந்து ஒருபிடி மண்ணிற்கு கூட ஆசைப்படாமலும் தோன்றிய காலம் தொட்டு இன்றுவரை #என்கடன்உன்பனிசெய்துகிடப்பதே# என்ற வாசகத்திற்கு இணங்கி
இன்றுவரை அரசியலிலோ,சினிமாவிலோ,தொழில் துறைகளிலோ,மற்ற மத்திய மாநில அரசு துறைகளிலோ கால் பதிக்காமல் வாழ்ந்து வரும் பழங்குடி இனமே சிவாச்சாரியார் சமூகம்
விளிம்பு நிலை சமூகமாய் நம் சமூகம்
🙏#கற்றுணை பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நாற்றுனையாவது நமச்சிவாயவே#🙏
உலகில் எந்த ஒரு இனத்திற்கும் குருவோ,தலைவரோ அல்லது தோற்றுவித்தவரோ இருப்பார் ஆனால் சிவாச்சாரியார்களுக்கு ஈசனே குரு ஈசனே அனைத்தும் இதை மமதையில் சொல்லவில்லை பெருமையில் சொல்கிறேன்.
எங்களுக்கு எந்தவித சலுகையோ இட ஒதுக்கீடோ கேட்கவில்லை.
எங்களை அப்படியே விட்டுவிடுங்கள் வாழ்ந்து விட்டுப்போகிறோம்.
இந்த பதிவை பார்த்த
ஒரு பக்தர் மனதில் உள்ள சிவாச்சாரியார் பற்றிய தவறான என்னம் மாறினாலும் அது இந்த பதிவின் வெற்றியே.!!!
No comments:
Post a Comment