Monday, 11 February 2019

புருஷசூக்தம் தமிழ் பொருளுடன்



*ஓம் ஸஹஸ்ர சீர்ஷா புருஷ: ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத் ஸ பூமிம் விச்வதோ வ்ருத்வா அத்யதிஷ்ட்டத்தசாங்குலம்*

புருஷனானவர்  ஆயிரக்கணக்கான சிரசும் கண்களும் பாதங்களை உடையவர் .எவர் பூமியை வியாபித்து இருக்கிராரோ அவர்  நம்முள் 10 அங்குல அளவில் நிற்கிறார் .


*புருஷ ஏவேதக்ம் ஸர்வம். யத்பூதம் யச்ச பவ்யம் உதாம்ருதத்வஸ்யேசான: யதன்னேனாதி ரோஹதி*


முன்பு எது இருந்ததோ ,எது இனி வரப் போகிறதோ ,இப்பொழுது எது காணப்படுகிறதோ ,எல்லாம் இறைவனே . மரணமிலாப் பேரு நிலைக்குத் தலைவராக இருப்பவரும் அவரே.ஏனெனில் , அவர் இந்த ப்ரக்ருதி மண்டலமான ஜட உலகைக் கடந்தவர் .


*ஏதாவானஸ்ய மஹிமா அதோ ஜ்யாயாக்ம்ச்ச பூருஷ:பாதோ(அ)ஸ்ய விச்வா பூதானி த்ரிபாதஸ்யாம்ருதம் திவி*


இங்கு காணப்படுவதெல்லாம் இறைவனின் மகிமையே .ஆனால் ,அந்த இறைவன் ,இவற்றை விடச் சிறப்பு மிக்கவர் .தோன்றியவை எல்லாம் அவருடைய கால் பங்கு மட்டுமே .அவரது முக்கல் பங்கு விண்ணில் இருக்கிறது .

*த்ரிபாதூர்த்வ உதைத் புருஷ: பாதோ(அ)ஸ்யேஹா(அ)(அ)பவாத் புன: ததோ விஷ்வங் வ்யக்ராமத் ஸாசனானசனே அபி*

பரம்பொருளின் முக்கல் பங்கு விண்ணில் விளங்குகிறது ,எஞ்சிய கால் பண்குமீண்டும் இந்தப் பிரபஞ்சமாகத் தோன்றியது .பிறகு , அவர் உயிர்கள் மற்றும் ஜடப் பொருள்களில் எல்லாம் ஊடுருவிப் பார்த்தார்.

*தஸ்மாத்விராடஜாயத விராஜோ அதி பூருஷ: ஸ ஜாதோ அத்யரிச்யத பச்சாத்பூமிமதோ புர:*                                                 

அந்த ஆதி புருஷனிடமிருந்து பிரம்மாண்டம் தோன்றியது .
ப்ரம்மாண்டைத் தொடர்ந்து பிரம்ம உண்டாகி எங்கும் வியாபித்தார் .
பிறகு அவர் பூமியைப் படைத்தார் .அதன் பிறகு , உயிர்களுக்கு உடலைப் படைத்தார் .


*யத்புருஷேண ஹவிஷா தேவா யஜ்ஞமதன்வத வஸந்தோஅஸ்யாஸீதாஜ்யம் க்ரீஷ்ம இத்ம: சரத்தவி:*


முதற்பபடைப்பில் படைக்கப்பட்ட தாங்கள் வேள்வி செய்வதற்கான் பொருள்கள் இல்லை என்பதைக் கண்டனர். எனவே ,இறைவனை ஆகுதியாகக் கொண்டு மனத்தளவில் வேள்வி செய்தனர் .இயற்கையின் அம்சங்களான காலம் போன்றவற்றைப் பயன் படுத்தினர் .


*ஸப்தஸ்யாஸன் பரிதய: த்ரி: ஸப்த ஸமித: க்ருதா:*
*தேவா யத்யஜ்ஞம் தன்வானா: அபத்னன் புருஷம் பசும்*       


இந்த வேள்விக்கு பஞ்ச பூதங்கள் ,இரவு ,பகல் ஆகியவை பரிதிகள் ஆயின .
இருபத்தொரு தத்துவங்கள் விறகுகள் ஆயின . தேவர்கள் யாகத்தை ஆரம்பித்து பிரம்மாவை ஹோமப் பசுவாய்க் கட்டினார்கள்

*தம் யஜ்ஞம் பர்ஹிஷி ப்ரௌக்ஷன் புருஷம்* *ஜாதமக்ரத: தேன தேவா அயஜந்த ஸாத்யா ரிஷயச்சயே* 

முதலில் உண்டான அந்த யக்ஞ புருஷனான பிரம்மாவின் மீது தண்ணீர் தெளித்தார்கள் .அதன் பிறகு சாத்ய உபாயர்களும் தேவர்களும் ரிஷிகளும் இன்னும் யார் யார் உண்டோ அவர்களும் யாகத்தைச் செய்தார்கள்.

*தஸ்மாத் யஜ்ஞாத் ஸர்வஹுத: ஸம்ப்ருதம் ப்ருஷதாஜ்யம்ஸபசூக்ம்ஸ்தாக்ம்ச் சக்ரே வாயவ்யான் ஆரண்யான் க்ராம்யாச்ச யே* 


பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யாகத்தில் இருந்து தயிர் கலந்த நெய் உண்டாயிற்று .பறவைகளையும் மான் புலி போன்ற காடு விலங்குகளையும் ,பசு போன்ற வீடு மிருகங்களையும் பிரம்ம படைத்தார்



*தஸ்மாத் யஜ்ஞாத் ஸர்வஹுத: ரிச: ஸாமானி ஜஜ்ஞிரே சந்தாக்ம் ஸி ஜஜ்ஞிரே தஸ்மாத் யஜுஸ்தஸ்மாதஜாயத*

பிரபஞ்ச வேள்வியாகிய அந்த யகத்தில் இருந்து ரிக் ,சாம வேத மந்திரங்களும் ,காயத்ரீ சந்தங்களும் உண்டாயின .அதிலிருந்தே யஜுர் வேதம் உண்டாயிற்று .

*தஸ்மாத்ச்வா அஜாயந்த யே கே சோபயாதத: காவோ ஹ ஜஜ்ஞிரே தஸ்மாத் த்ஸ்மாஜ்ஜாதா     அஜாவய*


அதிலிருந்தே குதிரைகள் தோன்றின .இருவரிசைப் பற்கள் உடைய மிருகங்களும் ,பசுகாளும்வேள்ளடுகளும் ,செம்மறியாடுகளும் தோன்றின .


*யத் புருஷம் வ்யதது: கதிதா வ்யகல்பயன் முகம் கிமஸ்ய கௌ பாஹூ காவூரு பாதாவுச்யேதே* 

பிரம்மத்தை எந்தெந்த வடிவம் ஆக்கினார்கள்?
அவர் முகம் எதுவாயிற்று ?
கைகால்களாக எது சொல்லப்படுகிறது ?
தொடைகளாக ,பாதங்களாக எது கூறப்படுகிறது ?


*ப்ராஹ்மணோ(அ)ஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜன்ய: க்ருத: ஊரூ ததஸ்ய யத்வைச்ய: பத்ப்யாக்ம் சூத்ரோ அஜாயத* 


அவரது முகத்தை அதை சார்ந்த தொழிலாகவும் வைத்து பிராம்மணன் வர்ணம் ஆயிற்று .
தோள் பலம் கைகள் முன் வைத்து தொழிலை சார்ந்து சத்ரியன் வர்ணம்  ஆயிற்று .
தொடைகள் இடுப்பு அதை சார்ந்து தொழிலாகவும் வைசியன் வர்ணம்ஆயிற்று .
அவரது பாதங்களில் அதை சார்ந்த தொழிலாகவும்  சூத்திர வர்ணம் ஆயிற்று


*சந்த்ரமா மனஸோ ஜாத: சக்ஷோ: ஸூர்யோ அஜாயத முகாதிந்த்ரச் சாக்னிச்ச ப்ராணாத்வாயுரஜாயத* 

மனதிலிருந்து சந்திரன் தோன்றினான் .கண்ணில் இருந்து சூரியனும் ,முகத்தில் இருந்து இந்திரனும் அக்னியும் தோன்றினர் .பிராணன் வாயுவைத் தோற்றுவித்தது .


*நாப்யா ஆஸீதந்தரிக்ஷம் சீர்ஷ்ணோ த்யௌ: ஸமவர்த்ததபத்ப்யாம் பூமி திச: ச்ரோத்ராத் ததா லோகாக்ம் அகல்பயன்*


தொப்புளில் இருந்து வானவெளி தோன்றிற்று .தலையில் இருந்து சொர்க்கம் தோன்றியது .பாதங்களில் இருந்து பூமியும் ,காதில் இருந்து திசைகளும் தோன்றின .அவ்வாறே எல்லா உலகங்களும் உருவாக்கப் பட்டன .



*வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்யவர்ணம் வர்ணம் தமஸஸ்து பாரே ஸர்வாணி  ரூபாணி  விசித்ய  தீர: நாமானிக்ருத்வா(அ)பிவதன் யதாஸ்தே*     


எல்லா உருவங்களையும் தோற்றுவித்து ,பெயர்கையும் அமைத்து ,எந்த இறைவன் செயல் பட்டுக் கொண்டிருக்கிறாரோ ,

மகிமை பொருந்தியவரும் ,சூரியனைப் போல் ஒளிர்பவரும் ,இருளுக்கு அப்பாற்பட்டவரும் ஆன அந்த இறைவனை நான்
அறிவேன் .



*தாதா புரஸ்தாத்யமுதாஜஹார சக்ர: ப்ரவித்வான் ப்ரதிசச்சதஸ்ர: தமேவம் வித்வானம்ருத இஹ பவதி நான்ய: பந்தா அயனாய வித்யதே*

எந்த இறைவனை பிரம்மா ஆதியில் என்று கண்டு கூறினாரோ ,இந்திரன் நான்கு நான்கு திசைகளிலும் நன்றாகக் கண்டானோ ,

அவரை நான் இவ்வாறு அறிவபன்,

இங்கேயே, அதாவது இந்தப் பிறவியிலே முக்தனாகிறான் .

மோட்சத்திற்கு பரம்பொருளை ஆராதிப்பதை வேறு வழி இல்லை .

*யஜ்ஞேன யஜ்ஞமயஜந்த தேவா: தானி தர்மாணி ப்ரதமான்யாஸன் தே ஹ நாகம் மஹிமா: ஸசந்தே யத்ர பூர்வே ஸாத்யா: ஸந்தி தேவா:*

தேவர்கள் இந்த வேள்வியினால் இறைவனை வழி பட்டார்கள் .
அவை முதன்மையான தர்மகள் ஆயின .
எங்கே ஆரம்பத்தில் வேள்வியால் இறைவனை வழி பட்ட சாத்ய உபாயர்ளும் தேவர்களும் இருக்கிறார்களோ தர்மங்களைக் கடைப்
பிடிக்கின்ற மகான்கள் அந்த மேலான உலகை அடைவார்கள் .

*அத்ப்ய: ஸம்பூத: ப்ருதிவ்யை ரஸாச்ச விச்வ கர்மண: ஸமவர்த்ததாதி தஸ்ய த்வஷ்ட்டா விததத்ரூபமேதி தத் புருஷஸ்ய விச்வமாஜானமக்ரே*

தண்ணீரிலிருந்தும் சாரமான அம்சத்தில் இருந்தும் பிரபஞ்சம் உண்டாயிற்று .

பிரபஞ்சத்தை உருவாக்கிய இறைவனிடம் இருந்து சிறந்தவரான பிரம்ம தோன்றினார் . இறைவன் அந்த பிரம்மாவின் (பதினான்கு உலகும் நிறைந்த)உருவை உண்டாக்கி அதில் வியாபித்து இருக்கிறார் . பிரம்மாவின் இந்தப் பிரபஞ்ச வடிவம் படைப்பின் தொடக்கத்தில் உண்டாயிற்று .



*வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம் ஆதித்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத் த்மேவம் வித்வானம்ருத இஹ பவதி நான்ய: பந்தா வித்யதே(அ)யனாய*

மகிமை பொருந்தியவரும் ,சூரியனைப் போல் ஒளிர்பவரும் ,இருளுக்கு அப்பால் இருப்பவரும் ஆகிய அந்த இறைவனை நான் அறிவேன் .

அவரை இவ்வாறு அறிபவன்  இந்தப் பிறவியில் முக்தனாகிறான் .

முக்திக்கு வேறு வழி இல்லை .


*ப்ரஜாபதிச்சரதி கர்பே அந்த: அஜாயமானோ பஹுதா விஜாயதே தஸ்ய தீரா: பரிஜானந்தி யோனிம் மரீசீனாம் பதமிச்சந்தி வேதஸ:*

இறைவன் பிரபஞ்சத்தில் செயல் படுகிறார் .பிறக்காதவர் ஆயினும் ,அவர் பல்வேறு வடிவங்களில் தோன்றுகிறார்.அவரது உண்மையான வடிவத்தை மகான்கள் நாக்கு அறிகிறார்கள் .பிரம்மா   மரீசி போன்ற மகான்கள்கூட பரம்பொருளை வேண்டி  பதவியை விரும்புகிறார்கள்



*யோ தேவேப்ய ஆதபதி யோ தேவானாம் புரோஹித: பூர்வோயோ தேவேப்யோ ஜாத: நமோ ருசாய ப்ராஹ்மயே*

யார் தேவர்களிடம் தேஜஸ் ஆக விளங்குகிராரோ ,எவர்களின் குருவாக இருக்கிறாரோ ,தேவர்களக்கு முன்பே

தோன்றியவரோ , அந்த ஒளி மயமான பரம்போருக்கு நமஸ்காரம் .

*ருசம் ப்ராஹ்மம் ஜனயந்த: தேவா அக்ரே ததப்ருவன் யஸ்த்வைவம் ப்ராஹ்மணோ வித்யாத் தஸ்ய தேவா அஸன் வசே*

       
பரம்பொருளைப் பற்றிய உண்மையை அளிக்கும்போது தேவர்கள் ஆதியில்  பற்றி பின் வருமாறு கூறினார்கள் .

“யாராக இருந்தாலும் , பரம்பொருளை நாடுபவன் , இவ்வாறு அறிவான் ஆனால் , அவனுக்கு தேவர்கள் வசமாக இருப்பார்கள்

*ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ன்யௌ அஹோராத்ரே பார்ச்வே நக்ஷத்ராணி ரூபம் அச்வினௌ வ்யாத்தம்*


நாணத்தின் தலைவி ஆகிய ஹ்ரீ பூமி தேவியும் ,செல்வத்திற்குத் தலைவி ஆகிய மஹாலக்ஷ்மி பெரியபிராட்டி தேவியும் ப்ரம்மத்தின் மனைவியர் .

பகலும் இரவும் உமது பக்கங்கள் ,நட்சத்திரங்கள் உமது திரு உருவம் .

அஸ்வினி தேவர்கள் உமது மலர்ந்த திரு வாய் .

*இஷ்ட்டம் மனிஷாண அமும் மனிஷாண ஸர்வம் மனிஷாண*

பரம் பொருளே !

நாங்கள் விரும்புவதைக் கொடுத்து அருள்வாய் .

இவ்வுலக இன்பத்தைக் கொடுத்து அருள்வாய் ,

இஹலோகத்திலும் , பரமபதத்திலும் அனைத்தையும் தந்தருள்வாய் .

No comments:

Post a Comment