Saturday, 8 June 2019

24 திருநாமங்கள்

ஆடியாடி அகம் கரைந்து, இசை பாடிப்பாடி கண்ணீர் மல்கி,
எங்கும் நாடிநாடி நரசிங்கா வென்று வாடி வாடும் இவ் வாணுதலே ... !!!

ஸ்ரீநிவாசன் - பத்மாவதி கல்யாணத்திலே ஸ்ரீநிவாசனிடத்தில் கேட்கிறார்கள். உணவை எப்படி நிவேதனம் செய்து விட்டுப் பரிமாறுவது என்று ? " அஹோபில க்ஷேத்திரத்திலே உள்ள நரசிம்மனுக்கு நிவேதனம் செய்து உணவு விநியோகிக்கட்டும் " என்று சொல்கிறார் ஸ்ரீநிவாசன்.

அதனால் தான் ஸ்ரீநிவாஸர், நரசிம்மரை கைகூப்பி வணங்குவதை இன்னமும் அஹோபில க்ஷேத்திரத்திலே பார்க்கலாம். ஸ்ரீராமனாலும், ஸ்ரீ நிவாச பெருமாளினாலும் வணங்கப்பட்டவர் என்பதாலே " நரசிம்ஹனைப் " பெரிய பெரிய பெருமாள் " என்று அழைக்கப்படலாயிற்று. வேகத்தைப் போல், கருணையும் தயையும் அதிகம் இந்த நரசிம்ம அவதாரத்திலே.

" அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர் சிங்க உருவாய்
உளந்தொட்டு இரணியன் ஒண்மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி..."

என்று பெரியாழ்வார் பாடுகிறார். அளந்திட்ட தூண் ! தங்கச் செங்கல் கொண்டு ரத்தினங்கள் இழுத்த ஸ்தம்பமாம் அது ! குழந்தை பிரகலாதனை இழுத்து வந்து, பிரத்யேகமாய் அதைக் காட்டி கேட்டானாம் ஹிரண்யன் . தானே அருகில் இருந்து கட்டுவித்த தூணில் நாராயணன் இருக்க முடியாது என்கிற தீர்மானம் அவனுக்கு !

" ஏன் இருக்க முடியாது? " என்று கேட்டது குழந்தை பிரஹலாதன். உடனே அந்த இடத்திலிருந்து ஆவிர்பவித்தான் பரமாத்மா. " சிம்ஹ மர்ய - நரம் கலந்த சிம்ஹமாய்த் தோன்றினான் ஸ்ரீஹரி.

ஸ்ரீ நரசிம்ஹாய நம :
ஸ்ரீ வேங்கடேசாய நம :

யார் ஒருவர் தினமும் நாராயணின் 24 திருநாமங்களை ஜபிக்கிறார்ளோ, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மனநிம்மதியுடன் கூடிய ராஜயோகம் கைகூடுவதோடு , பிறவி முடிந்த பின்னும், மேலுலக இன்பங்களை அனுபவித்து, இறுதியில் நாராயணணின் திருவடிகளை அடையலாம்.

அந்த எளிமையானத் திருநாமங்களைக் காலையில் நீராடியவுடனும் , மாலையில் விளக்கேற்றியவுடனும் சொல்லலாம். தினமும் ஜபிக்கும்போது, துளசியும் ' சுத்தமான நீரும் நைவேத்தியமாக வைத்து , வழிபட்டால் போதும்.

24 திருநாமங்கள்

ஓம் கேசவாய நமஹ :
ஓம் சங்கர்ஷனாய நமஹ :
ஓம் நாராயணாய. நமஹ :
ஓம் வாசுதேவாய. நமஹ :
ஓம் மாதவாய. நமஹ
ஓம் ப்ரத்யும்னாய. நமஹ :
ஓம் கோவிந்தாய. நமஹ :
ஓம் அனிருத்தாய. நமஹ :
ஓம் விஷ்ணவே நமஹ
ஓம் புருஷோத்தமாய. நமஹ:
ஓம் மதுசூதனாய. நமஹ :
ஓம் அதோக்ஷஜாய. நமஹ :
ஓம் த்ரிவிக்ரமாய. நமஹ :
ஓம் லக்ஷ்மி நரசிம்ஹாய. நமஹ :
ஓம் வாமனாய. நமஹ :
ஓம் அச்சுதாய. நமஹ :
ஓம் ஸ்ரீதராய. நமஹ :
ஓம் ஜனார்தனாய நமஹ :
ஓம் ஹ்ரிஷீகேசாய. நமஹ :
ஓம் உபேந்த்ராய. நமஹ :
ஓம் பத்மநாபாய. நமஹ :
ஓம் ஹரயே நமஹ :
ஓம் தாமோதராய. நமஹ :
ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ:

"ஸ்ரீ நரசிங்கா பெருமாள் திருவடிகளே சரணம்"

No comments:

Post a Comment