கண்ணனுக்கும் நம் இராமானுசனுக்கும் உள்ள ஒற்றுமைகள்.
1. பிறப்பு - இருவரும் பரம பாதம் விட்டு நமக்காக அவதரித்தவர்கள்.
2. இருவரும் வடக்கே அவதாரம் - கண்ணன் பாராத தேசத்தின் வடக்கே, இராமானுசன் தமிழகத்தின் வடக்கே.
3. இருவரும் எதிரியின் ஆபத்தினால் ஒளிந்து வாழ்ந்தவர்கள் - கண்ணனுக்கு பிருந்தாவன கோகுலவாசம். இராமானுசனுக்கு திருநாராயணபுர வாசம்.
4. இருவரும் உபதேஷ்டாக்கள் - கண்ணன் - கீதோபதேசம், இராமானுசன் - ஸ்ரீபாஷ்யம் கீதா பாஷ்யம் முதலான உபதேசங்கள்.
5. இருவரும் தங்கள் அவதார ரஹஸ்யத்தை வெளியிட்டவர்கள் - கண்ணன் கீதையில் 4வது அத்யாயம் மூலம் வெளியிட்டான். இராமானுசர் தொண்டனூர் சரித்திரம் மூலம் வெளியிட்டார்.
6. இருவரும் பிறந்த இடம் வேறு வளர்ந்த இடம் வேறு வாழ்ந்த இடம் வேறு - கண்ணன் மதுரையில் பிறந்து, கோகுலத்தில் வளர்ந்து த்வாரகையில் வாழ்ந்தான். இராமானுசர் ஸ்ரீபெரும்பூதூரில் பிறந்து, காஞ்சியில் வளர்ந்து, திருவரங்கத்தில் வாழ்ந்தார்.
7. இருவரும் எதிரிகளை வென்றவர்கள் - கண்ணன் தன் அடியவர்களின் எதிரிகளை வென்றான். இராமானுசர் பாஹ்ய குத்ருஷ்டிகளை எதிர்த்தார்.
8. இருவரும் கோவிந்தர்கள் - கண்ணன்: பசுவை ரக்ஷித்ததனால் கோவிந்தன். ஜ்ஞானேன ஹீன: பசுபி: சாமான: என்கிற ப்ரமாணதால் ஜ்ஞானம் இல்லாத பசுக்களான நம்மை ரக்ஷித்ததால் அவர் கோவிந்தன்.
9. இருவருக்கும் பட்டாபிஷேகம் - கோவிந்த பட்டாபிஷேகம் கண்ணனுக்கு, உபய விபூதி ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகம் இராமானுசனுக்கு.
10. இருவரும் சரணாகதியின் மேன்மையை உணர்த்தியவர்கள் - கண்ணன் த்ரௌபதி சரணாகதி மூலமாகவும் ப்ரபத்தியுபதேசம் மூலமாகவும் சரணாகதியின் மேன்மையை உணர்த்தினான், கத்யத்ராயம் மூலமாக இராமானுசர் சரணாகதியை அனுஷ்டித்து உணர்த்தினார்.
11. இருவரும் ஜெகதாசார்யர்கள்.
12. இருவரும் மனிதன் செய்ய முடியாத செயல்களைச் செய்தவர்கள். கண்ணனின் அதிமானுஷ்ய சேஷ்டிதங்கள் ப்ரசித்தம். இராமானுசர் காஷ்மீரம் சென்றது, தொண்டனூரில் பாஹ்யர்களை வென்று தன் நிலையை வெளியிட்டது முதலானவையும், அதுமட்டுமின்றி அந்த மாதவன் செய்ய முடியாததையும் செய்தவர் இராமானுசர். கீழ்கண்ட பாசுரமே இதற்கு ப்ரமாணம்
"மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து * எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா * உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே *
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு * நாரணற்காயினரே"
No comments:
Post a Comment