Monday 25 November 2019

கோயிலிற்கு செல்பவர்கள் வழிபட வழி காட்டும் நாலாயிர திவ்ய பிரபந்தம் கோவிலுக்கு போகும் போது:




நீராடும் போது:
திருமழிசையாழ்வார் :  திருவரங்கம் : 805
இலைத்தலைச்ச ரந்துரந்தி லங்கைகட்ட ழித்தவன்
மலைத்தலைப்பி றந்திழிந்து வந்துநுந்து சந்தனம்
குலைத்தலைத்தி றுத்தெறிந்த குங்குமக்கு ழம்பினோடு
அலைத்தொழுகு காவிரிய ரங்கமேய வண்ணலே.

வரிசையில் நிற்கும் போது:
திருமழிசையாழ்வார் :   2388
இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்
நின்றாக நின்னருளென் பாலதே, - நன்றாக
நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே
நீயென்னை யன்றி யிலை

பிரகாரம் வலம் வரும் போது:
நம்மாழ்வார் : திருவாறன்விளை: 3661
ஆகுங்கொல் ஐயமொன் றின்றி அகலிடம் முற்றவும், ஈரடியே
ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன் அமர்ந்துறையும்,
மாகம் திகழ்கொடி மாடங்கள் நீடும் மதிள்திரு வாறன்விளை,
மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழுங் கூடுங்கொலோ.

துன்பம் தீர வேண்டும் போது:
திருமங்கையாழ்வார் : திருவெள்ளக்குளம் : 1308
கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்,
நண்ணார்முனை வென்றிகொள் வார்மன்னு நாங்கூர்,
திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக் குளத்துள்
அண்ணா,அடியே னிடரைக் களையாயே.

குலசேகர ஆழ்வார்  : திருவித்துவக்கோடு : 691
வாளால றுத்துச்சு டினும்ம ருத்துவன்பால்
மாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்
மீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ
ஆளாவு னதருளே பார்ப்பன டியேனே

நேர்ந்து கொள்ளும் போது:
ஆண்டாள் : திருமாலிருஞ்சோலை (கள்ளழகர் கோவில்): 592
நாறு நறும் பொழில்*  மாலிருஞ்சோலை நம்பிக்கு*  நான்-
நூறு தடாவில் வெண்ணெய்*  வாய்நேர்ந்து பராவி வைத்தேன்*
நூறு தடா நிறைந்த*  அக்கார அடிசில் சொன்னேன்*
ஏறு திருவுடையான்*  இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ

பரிவட்டம் / மாலை பணிந்து ஏற்கும் போது:
பெரியாழ்வார் : திருப்பல்லாண்டு : 9
உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம்
விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில்
படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.

பிரசாதத்தை பணிந்து ஏற்கும் போது:
நம்மாழ்வார் : திருக்கோளூர் : 3517
உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்
கண்ணன், எம்பெருமான் னென்றென் றேகண்கள் நீர்மல்கி,
மண்ணினுள் அவன்சீர் வளம்மிக் கவனூர் வினவி,
திண்ண மென்னிள மான்புகு மூர்திருக் கோளூரே.

கோவிலுக்கு போக முடியாத போது:
நம்மாழ்வார் : திருவண்பரிசாரம்: : 3699
வருவார் செல்வார் வண்பரி சாரத் திருந்த,என்
திருவாழ் மார்வற் கென்திறம் சொல்லார் செய்வதென்,
உருவார் சக்கரம் சங்கு சுமந்திங் கும்மோடு,
ஒருபா டுழல்வானோரடி யானு முளனென்றே.

நம்மாழ்வார் : திருவேங்கடம் : 3556
அடியேன் மேவி யம ர்கின்ற அமுதே. இமையோர் அதிபதியே,
கொடியா அடுபுள் ளுடையானே. கோலக் கனிவாய்ப் பெருமானே,
செடியார் வினைகள் தீர்மருந்தே. திருவேங் கடத்தெம் பெருமானே,
நொடியார் பொழுதும் உன்பாதம் காண நோலா தாற்றேனே.


Contact our Trustee's Mr.M.Chinna Durai 9942604383 Mr.J.Gopikrishnan 9500264545 Mr.S.P.Purusothaman 8056901601

1 comment: