Thursday, 2 April 2020

ஸ்ரீரங்கத்துக் கைங்கர்யபரர்களின் பட்டியல்( என்னே தமிழ்ச் சொற்களின் இனிமை!)



எழுபத்து நான்கு முதலிகளான ஆசார்யபுருஷர்கள் சத்ர சாமரங்கள் 

திருவாலவட்டங்கள் 

திருப்பதாகைகள் 

திருப்பாது கைகள் 

தொடக்கமானவற்றை தரித்துக் கொண்டு செல்ல;
மற்றுமுண்டான சாத்தின, சாத்தாத முதலிகள் அனைவரும் நூற்றந்தாதி அநுஸந்தானத்தோடே நடந்துவர (திருவரங்கம் திருவீதிகளிலே இயல் ஸேவிக்கும் கைங்கர்யம் சாற்றின முதலிகளான யஜ்ஞோபவீதம் தரித்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும், 

அவ்வாறு யஜ்ஞோபவீதம் தரித்துக்கொள்ளாத, ஆனால் அனைத்து பகவத் பாகவத கைங்கர்யத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட சாத்தாத முதலிகளும் செய்து வந்தனர் என்பது இதனால் அறியப்படுகிறது); 

வேறே சிலர் 

விஜயத்வஜங்களான ஹம்ஸத்வஜம், ஹநுமத்வஜம் முதலான த்வஜங்களைத் தரிப்பாராய்; காஷாய வேஷ அநுரூபமான ஸமயக்குடை பிடிப்பாராய்;

பூரண பொற்குடங்களைத் தரிப்பார், 
திருவொண்பந்தம் பிடிப்பார்,
 திருவீதி செப்பனிடுவார், 
திருநீர் பரிமாறுவார், 
பூமழையாக மலர் சொரிவார், 
வாழைக்குலைகளைத் திருவீதி யெங்கும் நாட்டுவார், தோரணம் நிரைப்பார், 
பூந்தோப்புக்கள் சமைப்பார்,
 பொரிகளைச் சிதறுவார்,
 எண்ணெய் இறைத்து ஆடுவார், 
பரிவரான திருமேனி காவலர் ஆயுதங்களை ஏந்திச் செல்வார்; 

இப்படிப் பல்விதமான பணிவிடைகளில் அந்வயிப்பாராய் ஸேவித்துக் கொண்டுபோக;

கோயிலிலுண்டான சங்க, காஹள, பேரீ, ம்ருதங்க, பணவம் தொடக்கமான வாத்யங்கள் கடல்போல் கோஷிக்க; இராமாநுசனைத் தொழும் பெரியோர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் அந்த வாத்ய கோஷத்தைக் கேட்டு எழுந்திரைத்தாடி நகரிவலம் செய்து பெரிய திருநாள் போன்று தம்மை ஸேவித்துக் கொண்டு வருகிற அளவில்,

எம்பெருமானாரும் சப்தங்களையும் கோஷங்களையும் காண்பது கேட்பதாய்க் கொண்டு பெருமகிழ்ச்சியுடன் எழுந்தருளியிருந்தார்.

No comments:

Post a Comment