ஸ்ரீராமர் கதை - கன்னடத்தில்
(கீழே தமிழ் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது)
ஸ்ரீ ராம தேவர கதெ
(தமிழ் எழுத்துக்களில்)
பகுதி - 6
(நேற்றைய பகுதியின் தொடர்ச்சி)
★ஆக கேசவ பட்டனு காசிகே ஹோகி பர்த்தேனந்த ஹேளி, தன்ன மகன்ன கூகி, "அப்பா! நானு காசிகே ஹோகி பர்த்தேனே. நீனு எரடு வேளையு நின்ன தாயிகேஸ்ரீ ராம தேவர கதையன்ன ஹேளு! " எந்து ஹொரட்டு ஹோதனு.
★ஆ-மேலே நாராயண பட்டா ஸ்நான மாடி ஜபதபகளு ஆத மேலே தன்ன தாயன்ன கூகி, அம்மா! ஸ்ரீ ரா தேவர கதையன்ன ஹேளுதேனே கேளு பா! " எந்தனு. ஆக அவன தாயி, அப்பா! மக்களிகே அன்ன ஹாக பேகு, கருவுகளிகே ஹுல்லு ஹாக பேகு, கெலசகளு இரவாகே கதை ஏனு பேகாகிதே! கதை பேடா, ஒந்து பேடா, நீ ஊட்டக்கே பந்து கூடு " எந்தளு!
★ நாராயண பட்டனு தாயி மேலே சிட்டியிந்த (கோபதிந்த) ஜெகிலி மேலே கூது கொண்டு புஸ்தக பாட மாடுதா இத்தா.
★சாயங்கால வாகிது. சந்த்யாவந்தனகளு ஆதமேலே, மத்து தாயன்ன நோடி, அம்மா! ஸ்ரீராம தேவர கதையன்ன ஹேளுதேனே, ஈகாகிலு பந்து கேளு பா!" எந்தனு.
★ஆக ஆ தாயி, மக்களிகே அன்ன ஹாக பேகு, கருவுகளிகே ஹுல்லு ஹாக பேகு, கருவு பிட பேகு! இஷ்டு கெலசகளு இரோவேளே கதை பேடா, ஒந்து பேடா, நீனு ஊட்டா மாடி மலகு ஹோகு " எந்தளு.
★ நாராயண பட்டா தாயி மேலே சிட்டியிந்த ஊட்டவன்ன மாடி ஜெகிலி மேலே மலிகொண்டா!
★மறுதின பெளகாகிது. மனெயெல்லா காலியாகிது! மனேலி யாவ சம்பத்துகளு இல்லா. அவன தாயி மகன கூகி, "அப்பா! மனெயெல்லி இத்த சம்பத்துகளெல்லா காணலில்லா. நமகே மத்து படதன பந்து.நீனு நாலகு மனெகே ஹோகி பிக்ஷக்கே பேடி பா!" எந்தளு! .
★நாராயண பட்டா ஒடுகு தம்பிகே தொகண்டு பிக்ஷே பேடி பந்தா. தாயி அ-அக்கியன்ன வடது கஞ்சி காசி எல்லரிகே கொட்டு தானு குடதளு! ஹீகே கெலவு திவசவாயிது!.
★ஆக, காசிகே ஹோத கேசவ பட்டனு பந்து சேரிதா! நோடிதா, மனெயெல்லா படதனவாகிதே, ஏனோ ஈ-அவஸ்தே, இந்தா அவஸ்தே பந்து எஷ்டு திவசவாகிது , எந்து மகன்ன கூகி கேளிதா!
இதற்கான தமிழ்
விளக்கம்:-
அப்படியிருக்கும்போது ஒரு நாள் கேசவபட்டன் தான் காசிக்கு சென்றுவருவதாக அனைவரிடமும் கூறியபின் தன் மகனை அழைத்து "அப்பா! நான் காசிக்குச் சென்றுவருகிறேன்.நீ காலை மாலை ஆகிய இரண்டு வேளைகளிலும் உன்னுடைய தாயாருக்கு ஶ்ரீராமரின் கதையை மறவாமல் கூறு" எனக்கூறி விட்டு புறப்பட்டுச் சென்றான்.
அதன் பின்னர். கேசவபட்டன் மகன் நாராயணபட்டன் குளித்து முடித்து பூஜைகள் முதலானவற்றை செய்து தன் தாயாரை அழைத்து "அம்மா! ஶ்ரீராமஸ்வாமியின் கதையை கூறுகிறேன். கேட்க இங்கு வாருங்கள்" என்றழைத்தான். அதற்கு"மகனே! நமது வீட்டு குழந்தைகளுக்கு சாப்பாடு வைக்க வேண்டும். மாடு, கன்றுகளுக்கு புல் போட வேண்டும். இன்னும் நிறைய வேலை இருக்கும்போது கதை என்ன வேண்டியிருக்கிறது. கதையும் வேண்டாம்.ஒன்றும் வேண்டாம்.நீ வந்து சாப்பிட உட்கார்" என அவன் தாயார் பதிலுரைத்தார்.
நாராயணபட்டன் தாயாரின் மேல் வருத்தம் கொண்டு திண்ணை மேலமர்ந்து புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தான்.
மாலைநேரமாயிற்று. மறுபடி ஸ்நானஸந்தியாவந்தனங்கள் முடிந்தபின் தாயைப் பார்த்து"அம்மா! ஶ்ரீராமரின் கதையை கூறுகிறேன். இந்த சமயத்திலாவது இங்கு வந்து கதையை கேட்க வாருங்கள்" என்றான்.
அப்போது அவனின் தாய் "குழந்தைகளுக்கு சாப்பாடு போட வேண்டும். மற்றும் மாடுகளுக்கு புல் போட வேண்டும். கன்றுக்குட்டியை பால் குடிக்க விடவேண்டும். இவ்வளவு வேலைகள் இருக்கும்போது கதையும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். நீயும் சாப்பிட்டு விட்டு போய் தூங்கு" என்றாள்.
நாராயணபட்டன் தன் தாயின் மேல் கோபமுற்று சாப்பிட்டு விட்டு திண்ணைமேல் படுத்து உறங்கினான்.
மறுநாள் காலை விடிந்தது. வீட்டில் எந்தப் பொருட்களும் இல்லை. காணவில்லை. நாராயணபட்டனின் தாய் மகனை கூப்பிட்டு வீட்டில் இருந்த அனைத்து சம்பத்துகளும் காணோம். நாம் மீண்டும் ஏழைகள் ஆகி விட்டோம். ஆகவே நீ நான்கு வீடுகளுக்குச் சென்று பிட்சை வாங்கி வா என்றாள்.
நாராயணபட்டன் அங்கிருந்த ஒரு நசுங்கிய சொம்பை எடுத்துக் கொண்டு பிட்சை கேட்டு வந்தான். அவனது தாயார் அந்த அரிசியை உடைத்து குருணை ஆக்கி அதைக் கொண்டு கஞ்சி காய்ச்சி அனைவருக்கும் கொடுத்து தானும் சிறிது உண்டாள். இப்படியே சிலகாலம் கழிந்தது.
அப்போது காசிக்குச் சென்ற கேசவபட்டன் திரும்பி வந்தான். பார்த்தான். தன் வீடெல்லாம் ஏழ்மை சூழ்ந்து இருப்பதைக் கண்டான். ஏன் இந்த கஷ்டமான நிலமை. எவவளவு நாட்களாக இந்த கஷ்டத்தில் இருக்கிறீர்கள் என்று மகனை அழைத்துக் கேட்டான்.
நாளை..................
No comments:
Post a Comment