Skip to main content

ஏன் ஹனுமந்த வாகனம்

அனுமன் வாகனம்


ஸ்வாமி கோயில்களில் கருட வாகனம் புறப்பாடு என்பது சரி காரணம் பகவான் கருடாரூடன் - எப்போதும் கருடவாகனத்தில் பயணிப்பவன் ஆனால் இந்த ஹனுமந்த வாகனம் ஏன் ஏற்படுத்தினார்கள்

ஹனுமன் கருடனை போல் நித்யசூரி இல்லை அவன் ஒரு சிரஞ்சீவி இன்னும் பூமியில் தானே வசிக்கிறான் அப்படியிருக்க ஏன் ஹனுமந்த வாகனம் என ஒரு அன்பர் வாட்ஸ்அப் கேள்வி அனுப்பியிருந்தார்

அவருக்கு அனுப்பிய பதில் உங்களுக்காகவும்

இராமாயணத்தில் ஶ்ரீஇராம இராவண யுத்ததத்தில் ஒரு நிகழ்வு

ஶ்ரீராமனுடன் போரிட வந்த இராவணனை ஶ்ரீராமானுஜனான லக்குமணன் முதலில் எதிர்த்து போரிடுகிறான்

இராவணன் எய்யும் ஒவ்வொரு அஸ்திரத்தையும் செயலிழகச்செய்து கொண்டே வருகிறான் 

ஒரு சில நிமுடத்துளியில் லக்குமணன் விட்ட அம்பு இராவணனின் பத்து கைகளிலில் இருந்த ஆயுதங்களையும் கீழே விழச்செய்ததுடன் மேலும் தீவீரமாக ராவணனுடன் போர் புரிய தொடங்குகிறான்

ஶ்ரீலக்குமணனின் போர் திறமையை கண்டு வியந்த ராவணன் இலக்குமணனை அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது என கண்டு கொண்டு பிரம்மா விசேடமாக தனக்கு தந்த வேலை இலக்குமணன் மேல் ஏவுகிறான் 

தன் மார்பை நோக்கி வரும் வேலின் மகிமையை உணர்ந்த லக்குமணன் அதனை எதிர்க்காமல் விட அந்த வேல் மார்பில் பட்டு இலக்குமணன் மூர்ச்சை ஆகிறான்

இராவணன் வேகமாக வந்து இலக்குமணனை இலங்கையின் உள்ளே தூக்கி செல்ல எத்தனிக்கிறான் அவனால் துளிகூட லக்ஷ்மணன் உடலை அசைக்க முடியவில்லை பத்து கைகளை கொண்டும் முயல்கிறான் முடியவில்லை

இதை தூரத்தில் இருந்த கவனித்த ஹனுமான் இலக்குமணன் உடல் அருகே வேகமாக வந்து

ஒரு குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் காக்கும் தாயைப் போல இலக்ஷ்மணனை கைகலால் தூக்கி கொண்டு இராவணன் கண்முன்னாடியே வேகவேகமாக ஶ்ரீஇராமன் இருக்குமிடம் சென்றடைந்தான் 

மூர்ச்சையாகிக் கிடந்த இலக்ஷ்மணனை அவனெதிரே கிடத்தினான்

செயலற்றவனாய் மூர்ச்சையாகி கிடந்த இலக்ஷ்மணனைப் பார்த்து தன்னிலை இழந்த இராமன் சற்றைக்கெல்லாம் தன்னைச் சுதாரித்துக்கொண்டு

மிகுந்த சினம் கொண்டு தம்பியை இந்நிலைக்கு ஆளாக்கிய இராவணனை போரில் சந்திக்கப் புறப்பட்டான்

அதே நேரம் இராவணனும் ஶ்ரீஇராமனுடன் போர் புரிய எண்ணி ஶ்ரீஇராமன்முன் தனது தேரை கொண்டுவந்து நிறுத்த

அதர்மத்தையே தொழிலாக கொண்ட இராவணன் தேரில் போரிட வருகின்றபோது

தர்மத்தின் தலைவனான ஶ்ரீராமன் அவனெதிரே வெறும்தரையில் நின்று கொண்டிருப்பதை கண்ட வாயுபுத்திரன்

மனம் நெகிழவ விழிகளில் அவனறியாமல் கண்ணீர் சுரக்க

ஶ்ரீராமன் அருகே சென்று இருகரம் கூப்பி நாத்தழுதழுக்க ஶ்ரீஇராமனை பார்த்து

ஐயனே அந்த அதர்ம சொரூபமான ராவணன் ஆயிரம் குதிரை பூட்டின தேரில் உங்கள் முன் போரிட வந்துள்ளான்

அவன் எதிரில் தர்மமே வடிவமான தாங்கள் வெறும்தரையில நின்று போரிட போவது எனக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது

தேவரீர் அடியேனை ஒரு அல்பமான வானரம் என எண்ணாமல் பெரிய மனது கொண்டு என்னோட தோள்மேல ஏறிகொண்டு அவனுடன் போரிட வேண்டும் என வேண்ட

அனுமனின் அன்பு வார்த்தைகளைக் கேட்டு ஆனந்தித்த இராமனின் விழியோரம் நீர்துளிர்க்க

ஹே வாயுபுத்ரா எனக்கு இதவிடச் சிறந்த உபகாரம் இந்நேரத்தில் வேறென்ன இருக்கமுடியும்

அதுவும் இல்லாமல் உன்னை போன்ற அன்பான சீடன் என்னுடன் இருக்கும் போது எனக்கு ஏதுகுறை என சொல்லிக்கொண்டே அனுமனின் தோள்களில் ஏறி அமர்ந்தான் தசரத நந்தன்

அவ்வளவுதான் ஹனுமன் இக்காலத்தில் தான்னால் மனைவியின் மூலம் பெறப்பட்ட சேயை தலைமேல் பெருமையுடன் தாங்கி செல்லும் தகப்பன்மார்கள் போல் ஆனந்தத்தில் ஜொலி ஜொலித்தான் 

ஶ்ரீராமனோ மேன்மை மிகுந்த மேருமலை மேல் கம்பீரமாய் அமர்ந்திருக்கும் ஒரு ஆண்சிங்கம் போல் ஹனுமன் தோளில் காட்சி கொடுக்க

இந்தக் காட்சியை கண்ட விண்ணுலக தேவர்கள் தங்களது நல்லாசியை இருவருக்கும் பூமாரி பொழிந்து வாரி வழங்க

காலம் காலமாய் நடந்தால் குடையாக நின்றால் மரவடியாக சயனித்தால் படுக்கையாக திருமாலை தாங்குகின்ற பெருமையை கொண்டிருந்த ஆதிசேனும் 

திருமாலுக்கு ஊர்தியாய் வாயுவேக மனோவேகமாய் எப்போதும் சுமந்து செல்லும் பெரிய திருவடியான கருடனும் பொறாமைகொண்டு நாணி தலைகுனிந்தனர்

ஹனுமனின் மீதமர்ந்த ஶ்ரீஇராமனோ ஹே வானரவீரா

வெகுகாலமாக நான் தேடிய எனக்கேற்ற வாகனம் ஆசனம் இன்றே கிட்டியது என்னும் விதமாக அனுமனின் தோள்களில் வெகு பாந்தமாய் ஆரோகணித்திருந்தான்

அதே கோலத்துடன் இராவணனுடன் அதிதீவீரமாக போர் புரிந்து அவனது அரக்கர் படைகளையும் அழகிய தேரையும் பலவித அஸ்திரங்களையும் அவனின் வில்லையும் செயலிழக்கச்செய்து நிராயுத பாணியாக நிறுத்தி 

ஹே ராவணா நிராயுதபாணியான உன்னை இன்று கொல்ல மனம் ஒப்பவில்லை நீ இன்றுபோய் நாளை வேறு மீதமுள்ள படைகளுடன் வா என கூறி அனுப்பியது வரலாறு

அந்த போர்கள ஶ்ரீராமனின் வாகனமான ஹனுமந்த வாகனத்தை நினைவு கூறவே இன்றும் பூர்வர்களால் ஏற்படுத்தபட்டு இன்றும் வைணவ திவ்ய அபிமான கோயில்களில் ஹனுமந்த வாகனம் மேல் பகவான் புறப்பாடு கண்டருளபடுகிறது

எப்போதெல்லாம் ஹனுமந்த வாகனத்தில் பகவானை காண்கிறோமோ அப்போது எல்லாம் இந்த நிகழ்வு நினைவுக்கு வரவேண்டும்

ஶ்ரீராமதூதனான ஹனுமனை போல் பகவத் கைங்கர்யம் செய்ய மனம் துடிக்க வேண்டும் 

ஹனுமன் வானரமோ மானுடமோ அல்ல அவன் அளப்பறிய இயலாத சக்தி கொண்ட ஶ்ரீராம தூதன் 

எனவே ஹனுமந்தனை போல் ஶ்ரீராமனை தூக்கி கொண்டு போக இயலாவிடினும் அந்த வாகனத்தை எழுந்தருள பண்ணும் ஒரு ஶ்ரீபாதம் தாங்கியாகவாவது இருப்போம்

அனைத்து பகவத் ஶ்ரீபாதம் தாங்கும் அன்பர்களுக்கும் இக்கேள்வி பதில் சமர்ப்பணம்

ஜெய் ஶ்ரீராம்

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்

இன்று(11/11/2018),ஐப்பசி மூலம்-ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/அழகிய மணவாளர்/ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/வரவர முனி/இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்---ஸ்வாமிகளின் 649ஆவது,திருநட்சித்திரம். ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்; ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும்அறிந்ததே.ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி/கைங்கர்ய ங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் பல தெய்வீகத் தன்மைகள்/ஒற்றுமைகள்புலப்படுகின்றன அந்த நோக்கத்தில் அடியேனின்,ஒரு குறு முயற்சி. 1.ராமானுஜருக்கு அவருடைய தாய்மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,பெரிய திருமலைநம்பிகள்'இளையாழ்வார்' என்று பெயரிட்டார். மாமுனிகளுக்கு அவருடைய தாய்வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள் 'அழகியமணவாளன்'என்று பெயரிட்டார். 2.இளையாழ்வார்,தம்வைணவ வாழ்க்கைநெறிக்கும்,கைங்கர் யங்களுக்கும் இல்லறம் தடை யாக இ...