நம் சம்பிரதாயத்தின் ஆகச் சிறந்த ஆளுமை #ஸ்ரீராமாநுஜர்.அவர் ஏற்படுத்தின சமய சீர்திருத்தம் இன்றளவும் உலகிலேயே மிக பிரசித்திமான மேலாண்மை கோட்பாடுகளை கொண்டது என பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
ஓர் புதிய கோட்பாட்டினை உண்டாகி அதனை தம் காலத்தில் முன்னெடுத்து, செயல்படுத்தி, வெற்றி கண்டு இன்றளவும் உலகில் தொடரச்செய்வது அசாத்தியம் என சிலாகிக்கின்றனர். மதங்களை கடந்தும் கொண்டுகின்றனர்.
ஆனால்,
நம் சம்பிரதாயத்தில் பலருக்கு அப்படி என்ன செய்தார் என்பதே தெரியவில்லை. இது தான் உண்மை.
அது தெரியாமல் போனதால் அதன் உன்னதம் புரியவில்லை.
இத்தனைக்கும் பெரிய புத்தகம் எழுதிட வில்லை, காவியம் படைக்கவில்லை ஆனால்........
அவரே பெரும் காவியமாக வாழ்ந்து காட்டினார்.
பல மேலாண்மை யுக்தியை மதத்தில் புகுத்திய மஹாசார்யர் அவர்.அது தான் இன்றும் உலகத்தில் இயக்கத்தில் இருக்கும் ஓரே பெரிய கோவில் என்ற பெருமையை #ஸ்ரீ_ரங்கம்_ரங்கநாதர் கோவில் பெற்றுள்ளது. அது மாத்திரமல்ல அவர் அன்றைக்கு அந்தக்காலத்தில் என்ன ஏற்படுத்தி வைத்தாரோ அதுவே இன்றளவும் பழமை மாறாமல் அப்படியே தொடர்ந்து வருகிறது ஸ்ரீ ரங்கத்தில் மட்டும்.
நிர்வாகத்திறனுக்கு அவர் ஏற்படுத்தின பத்துக் கொத்து பரிவாரங்களும் அதற்கு உப துணையாக பத்துக்கொத்துமே சாட்சி.பெரிய கோவில் நிர்வாகம் மற்றைய எந்த கோவில் நிர்வாகம் போல் இல்லாமல் ஒரு தடங்கலும் வராமல் செம்மையாக நடைப்பெற்று வருகிறது இன்றளவும்.
வருடம் 365 நாளும் விழா நடக்கும் திவ்ய ஷேத்திரம் ஸ்ரீரங்கமாகத்தான் இருக்கும்.
அத்தனை உப கோவில்கள், உப சன்னதிகளை கொண்டது. ஆனாலும் ஒரு குழப்பமும் இல்லாமல் குறித்த நாழிகையில் இனிதே தொடங்கிடும். இதற்கென்றே தனி மணியக்கார சுவாமி உண்டு. அவ்வளவு துல்லியம்.
அதனால் தான்,
தென்னரங்க செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே என தனிவாழி திருநாமமே உண்டு.
அதுபோல்,
சம்பிரதாய சொத்தான நம்மை வழிநடத்த 74 சிம்மாசனாதிபதிகளை ஏற்படுத்தி தந்தார் என்பது சரித்திரம்.
#சீயம் என்பது நம்மாழ்வார் ஈரச்சொல்லால் எடுத்தாளப்பட்டது. சிங்கம் என்பது அதன் பொருள். தமிழில் சீயம் என்பதே ஜீயர் என்ற சமஸ்கிருத சொல்லானது. அவர் காலத்தில் 700 ஜீயர் ஸ்வாமிகள்,1600 யதிகள் பாரதம் முழுக்கவே இருந்தாக சொல்வர்,
ஆதலால் தான் அவரை #யதிராஜர் என்று கொண்டாடினர்.
அவர் அதில் 74 பேர்களை தேர்ந்தெடுத்து பட்டம் கொடுத்து, ஒவ்வொருக்கும் தனித்தனியான #திருவாராதனை_பெருமாள் கொடுத்து சமயப்பரிபாலனத்தை ஏற்படுத்தி வைத்தார்.
❣ஏன் 74????
👉வீராணம் ஏரி
எனச்சொல்லும் #வீரநாராயண ஏரியின் மதகுகளின் எண்ணிக்கையில் 74 உள்ளது.இந்த ஏரியின் ஓர் கரையில் காட்டுமான்னார் கோவில் உள்ளது.இங்கு அவதாரம் பண்ணினவர் தாம் #நாதமுனிகள். சம்பிரதாயத்தின் முதல் ஆச்சாரியர் . இன்று நமக்கு கிடைத்துள்ள #திராவிட_வேத சாகரமான நாலாயிர திவ்வியப் பிரபந்தம் எனப்படும் ஆழ்வார்களின் #அருளிச்செயல் கிடைத்தற்கு இவரே காரணம்.
அவர் ஞாபகார்த்தமாக, வீரநாராயண ஏரிக்கரையில் உள்ள மதகுகள் #74 எண்ணிக்கையில் சிம்மாசனாதிகளை ஏற்படுத்தி வைத்தார்.
நாதமுனிகள் பேரன் ஸ்ரீ ஆளவந்தார் குமாரர் சொட்டை நம்பி, அவர் குமாரர் என்னாச்சான்
#1. என்னாச்சான் குமாரர் பிள்ளை அப்பன்
#2. ஸ்ரீ பெரிய நம்பி குமாரர் ஸ்ரீ புண்டரீகர்
#3. திருக்கோட்டியூர் நம்பி தெற்காழ்வான்
#4. ஸ்ரீ திருமாலையாண்டான் குமாரர் சுந்தரத்தோளுடையான்.
#5. ஸ்ரீ பெரிய திருமலை நம்பி குமாரர் ராமானுஜன் பிள்ளை திருமலை நம்பி.
#6. ஸ்ரீ கூரத்தாழ்வான் குமாரர் பட்டரும், சீராமப் பிள்ளையும்.
#7. ஸ்ரீ முதலியாண்டான், அவர் குமாரர் கந்தாடையாண்டான்.
#8. நடுவிலாழ்வான்
#9. கோமடத்து ஆழ்வான்
#10. திருக்கோவிலூர் ஆழ்வான்
#11. திருமோகூர் ஆழ்வான்
#12. பிள்ளை பிள்ளை ஆழ்வான்
#13. நடாதூர் ஆழ்வான்
#14. எங்கள் ஆழ்வான்
#15. அநந்தாழ்வான்
#16. மிளகாழ்வான்
#17. நெய்யுண்டாழ்வான்
#18. சேட்லூர் சிறியாழ்வான்
#19. வேதாந்தி ஆழ்வான்.
#20. கோவிலாழ்வாழ்வான்
#21. உக்கலாழ்வான்
#22. அரணபுரத்து ஆழ்வான்
#23. எம்பார்
#24. கிடாம்பி ஆச்சான்
#25. கணியனூர் சிறியாச்சான்
#26. ஈச்சப்பாடி ஆச்சான்
#27. கொங்கிலாச்சான்
#28. ஈச்சப்பாடி ஜீயர்
#29. திருமலை நல்லான்
#30. சட்டம்பள்ளி ஜீயர்
#31. திருவெள்ளறை ஜீயர்
#32. ஆட்கொண்ட வில்லி ஜீயர்
#33. திருநகரிப் பிள்ளான்
#34. காராஞ்சி சோமயாஜீயார்
#35.அலங்கான வேங்கடவன்
#36. நம்பிக்கருள் தேவர்
#37. சிறுப்பள்ளி தேவராஜ பட்டர்
#38. திருக்குருகைப் பிரான் பிள்ளாய்
#39. பிள்ளையுறந்தை உடையார்.
#40. பெரிய கோயில் வள்ளலார்.
#41. ஆசூரிப்பெருமாள்
#42. முனிப் பெருமாள்
#43. அம்மங்கிப் பெருமாள்.
#44. திருக்கண்ணபுரத்தரையர்
#45. மாருதிப்பெரியாண்டான்
#46. மாறொன்றில்லா மாருதிச் சிறியாண்டான்
#47. சோமாஜாயாண்டான்.
#48. ஜீயராண்டான்.
#49. ஈச்வராண்டான்
#50. ஈயுண்ணிப் பிள்ளையாண்டான்
#51. பெரியாண்டான்
#52. சிறியாண்டான்
#53. குறிஞ்சிபுரச் சிறியாண்டான்
#54. அம்மங்கியாண்டான்
#55. ஆளவந்தார் ஆண்டான்
#56. அருளாப்பெருமாள் எம்பெருமானார்
#57. தொண்டனூர் நம்பி
#58. மருதூர் நம்பி
#59. மழுவூர் நம்பி
#60. திருக்குறுங்குடி நம்பி
#61. குரவை நம்பி
#62. முடும்பை நம்பி
#63. வடுக நம்பி
#64. வங்கிபுரத்து நம்பி
#65. ஸ்ரீ பராங்குச நம்பி
#66. அம்மங்கி அம்மாள்
#67. பருத்திக்கொல்லை அம்மாள்
#68. உக்கலம்மாள்
#69. சொட்டையம்மாள்
#70. முடும்பையம்மாள்
#71. கொமாண்டூர் பிள்ளை
#72. குமாண்டூர் இளையவில்லி
#73. கிடாம்பிப் பெருமாள்.
#74. ஆர்க்காட்டுப் பிள்ளான்.
ஆக இவர்களே ஸ்ரீராமாநுஜரின்
#74_ஸிம்ஹாஸநாதிபதிகள்.( மேலே உள்ளது வரிசை பிரகாரம் அன்று., எண்ணிக்கை மாத்திரமே...)
👉முதலியாண்டானை தாஸரதி என்றே கொண்டாடுவர் . ஸ்ரீ ராமாநுஜர் இவருக்கு மாமா ஆகவேனும். கூரத்தாழ்வானையும், முதலியாண்டானையும் எனது தண்டம், பவித்திரம் என்றே சொன்னார் ஸ்ரீராமாநுஜர் திருக்கோஷ்டியூர் நம்பியிடத்தில் என்பது பிரசித்தம்.
முதலியாண்டானுக்கு குமாரரோடு சேர்த்து 6 குமார்த்திகள். அதில் ஒருவர் தாம் #குமாண்டூர்_இளையவில்லி.(72 வதாக உள்ள..)
இத்பதவினை எழுதிடும் நாம் குமாண்டூர் இளையவில்லி குடும்பத்தின், 231 வது தலைமுறையை சேர்ந்தவன்.
ஸ்ரீ ராமாநுஜர் ஏற்படுத்தி வைத்திட்ட 74 சிம்மாசனாதிகளின் வம்சத்தவரான பலரும் இன்று உலகில் பல இடங்களில் வசிக்கின்றனர். இன்று வரை இவர்கள் 5000 பேர்வரையிலான எண்ணிக்கையில் உலகம் முழுவதும் உள்ளனர். ஆனாலும் சிம்மாசனபட்டத்தினை அவரவர் வழிவந்த பலரும் பலக்காரணங்களால் ஏற்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹா....💞💕...
No comments:
Post a Comment