Tuesday, 29 June 2021

புதன் பகவானுக்கு உகந்த 108 போற்றி

புதன் ஷேத்திரம் திருவெண்காடு இன்று 30/6/2021 புதன்கிழமை புதன் காயத்ரி மந்திரம் – Budhan Gayatri Mantra. குறைந்தது 36, 54 முறை சொல்லவும் தடைகள் யாவும் வெல்லவும் ஞானம் சித்திக்கவும் புதன் பகவான் அதிபதி மஹாவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வரவும். புதன் ஷேத்திரம் திருவெண்காடு, மதுரை மீனாக்ஷி கோவில், மற்றும் திருவாலங்காடு , சென்று வழிபட்டுவரவும். இதுசிறந்தபரிகாரம் ஆகும்.
திருவெண்காடு புதன் திருவடிகளே போற்றி
புதன் திசை மற்றும் புதன் புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம் சொல்லி வரும் போது புதன்
பகவானால் நன்மை உண்டாகும். ( குறைந்தது 36, 54 முறை சொல்லி வரவும்) புதன் பகவான் அதிபதி மஹாவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வரவும். புதன் ஷேத்திரம் திருவெண்காடு, மதுரை மீனாக்ஷி கோவில், மற்றும் திருவாலங்காடு , சென்று வழிபட்டுவரவும். இதுசிறந்தபரிகாரம் ஆகும்.
புதன் பகவான்
இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
பதந் தந்தாள்வாய் பண்ணொலியானே
உதவியே அருளும் உத்தமா போற்றி

புதன் காயத்ரி மந்திரம் – Budhan Gayatri Mantra
ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக அஸ்தாய தீமஹி
தன்னோ புத பிரசோதயாத்
Budha Gayatri (Gayatri for Mercury)
Om gajadhwajaaya vidmahae
sukha hastaaya dheemahi
tanno budha: prachodayaat
Om Somaputraaya vidmahe
mahaa pragnaaya dheemahi
tanno Budhan prachodayaat
ஓம் சோமபுத்ராய வித்மஹே
மஹாப்ரக்ஞாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
Om Chandrasutaaya vidmahe
Sowmyagrahaaya dheemahi
tanno Budhah prachodayaat
ஓம் சந்திரசுதாய வித்மஹே
சௌம்யக்ரஹாய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்
Om Atreyjaaya vidmahe
somaputraaya dheemahi
tanno Budhah prachodayaat
ஓம் ஆத்ரேயாய வித்மஹே
சோமபுத்ராய தீமஹி
தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

ஒன்பது கிரகங்களிலும் மிகவும் வித்தியாசமான கிரகமாக புதன் விளங்குகிறது. புதன் பகவானுக்கு உகந்த 108 போற்றியை பார்க்கலாம்.
புதன் 108 போற்றிகள்
ஓம் அழகனே போற்றி
ஓம் அருளாகரனே போற்றி
ஓம் அறிவிற்கு உவமையே போற்றி

 ஓம் அனைவருக்கும் காவலே போற்றி
ஓம் அறிவுருவே போற்றி
ஓம் அழகுருவே போற்றி
ஓம் அம்பு பீடனே போற்றி
ஓம் அலிக்கிரகமே போற்றி
ஓம் அலங்காரனே போற்றி
ஓம் ஆனந்தனே போற்றி
ஓம் ஆயில்ய நாதனே போற்றி
ஓம் ஆலவாயில் அருள்பவனே போற்றி
ஓம் இரு வாகனனே போற்றி
ஓம் இளை நாதனே போற்றி
ஓம் இம்மை நலமளிப்பவனே போற்றி
ஓம் இளன் சாபந்தீர்த்தவனே போற்றி
ஓம் உயர்ந்தவனே போற்றி
ஓம் உகந்தவனே போற்றி
ஓம் உவர்ப்புச் சுவையனே போற்றி
ஓம் உடலிற் தோலானவனே போற்றி
ஓம் கலைவாணனே போற்றி
ஓம் கல்வியருள்பவனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கன்னிராசி அதிபதியே போற்றி
ஓம் கவியரசே போற்றி
ஓம் கவிஞனாக்குபவனே போற்றி
ஓம் கிரஹபதியே போற்றி
ஓம் கிரகபீடாஹரனே போற்றி
ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
ஓம் கீர்த்தி வாய்த்தவனே போற்றி
ஓம் குஜன் பகைவனே போற்றி
ஓம் குதிரை வாகனனே போற்றி
ஓம் கேடயதாரியே போற்றி
ஓம் கேட்டை நாதனே போற்றி
ஓம் சசி சுதனே போற்றி
ஓம் சந்திர குலனே போற்றி
ஓம் சத்வ குணனே போற்றி
ஓம் சாந்த மூர்த்தியே போற்றி
ஓம் சிவனடியானே போற்றி
ஓம் சிவனால் கிரகமானவனே போற்றி
ஓம் சிங்க வாகனனே போற்றி
ஓம் சிங்கக் கொடியோனே போற்றி
ஓம் சுந்தரனே போற்றி
ஓம் சுப கிரகமே போற்றி
ஓம் சுகமளிக்க வல்லவனே போற்றி
ஓம் சொக்கருள் இணைந்தவனே போற்றி
ஓம் ஞானியே போற்றி
ஓம் ஞான நாயகனே போற்றி
ஓம் தவசீலனே போற்றி
ஓம் தவயோகியே போற்றி
ஓம் தயாகரனே போற்றி
ஓம் தனிக்கோயிலானே போற்றி
ஓம் தாரை மகனே போற்றி
ஓம் தரித்ர நாசகனே போற்றி
ஓம் திருவுருவனே போற்றி
ஓம் திருவெண்காட்டில் அருள்பவனேபோற்றி
ஓம் துதிக்கப்படுபவனேபோற்றி
ஓம் திருக்காளீஸ்வரத்தருள்பவனேபோற்றி
ஓம் தேவனேபோற்றி
ஓம் தேரேறி வருபவனேபோற்றி
ஓம் நட்சத்ரேசனேபோற்றி
ஓம் நல்லுரு அருள்பவனேபோற்றி
ஓம் நாற்கரனேபோற்றி
ஓம் நாயுருவி சமித்தனேபோற்றி
ஓம் நான்காமவனேபோற்றி
ஓம் நாரணன் ப்ரத்யதிதேவதையனேபோற்றி
ஓம் பயிர்க் காவலனேபோற்றி
ஓம் பசும்பயறு விரும்பியேபோற்றி
ஓம் பச்சை வண்ண கிரகமேபோற்றி
ஓம் பதினேழாண்டாள்பவனேபோற்றி
ஓம் பித்தளை உலோகனேபோற்றி
ஓம் பின் னகர்வுடையோனேபோற்றி
ஓம் பிரமனருள் பெற்றவனேபோற்றி
ஓம் புராணத் தேவனேபோற்றி
ஓம் புலவர் பிரானேபோற்றி
ஓம் புலமையளிப்பவனேபோற்றி
ஓம் பூங்கழலடியனேபோற்றி
ஓம் புண்ணியனேபோற்றி
ஓம் புரூரவன் தந்தையேபோற்றி
ஓம் புகழ் சேர்ப்பவனேபோற்றி
ஓம் பொன்னணியனேபோற்றி
ஓம் பொற்கொடியோனேபோற்றி
ஓம் பொன்மேனியனேபோற்றி
ஓம் பொன்னாடையனேபோற்றி
ஓம் போகமளிப்பவனேபோற்றி
ஓம் மணிமுடியனேபோற்றி
ஓம் மரகதப் பிரியனேபோற்றி
ஓம் மனோகரனேபோற்றி
ஓம் மஞ்சள் சந்தனப்பிரியனேபோற்றி
ஓம் மதுரையில் பூசித்தவனேபோற்றி
ஓம் ரவி மித்ரனேபோற்றி
ஓம் ரவிக்கருகிருப்பவனேபோற்றி
ஓம் ரேவதிக் கதிபதியேபோற்றி
ஓம் ரிக் ஐந்தின் அதிகாரியேபோற்றி
ஓம் வள்ளலேபோற்றி
ஓம் வல்லபிரானேபோற்றி
ஓம் வாட்கரனேபோற்றி
ஓம் வடகீழ் திசையனேபோற்றி
ஓம் வாக்கானவனேபோற்றி
ஓம் வாழ்வளிப்பவனேபோற்றி
ஓம் வித்தகனேபோற்றி
ஓம் விஷ்ணுரூபனேபோற்றி
ஓம் விஷ்ணு அதிதேவதையனேபோற்றி
ஓம் விதி மாற்றுபவனேபோற்றி
ஓம் வெண்காந்தமலர்ப் பிரியனேபோற்றி
ஓம் ‘ஜம்’ பீஜ மந்திரனேபோற்றி
ஓம் புத பகவானே போற்றிபோற்றி

 புதன் பகவான் திருவடிகளே போற்றி

திருவெண்காடு புதன் திருவடிகளே போற்றி

No comments:

Post a Comment