நன்றி : திருமலை சீனிவாசன்.
மேற்கு மாம்பலம்.
*மார்கழி மஹான்கள்*
*24.12.2021*
*மஹான் பானு தாசர்*
*பக்தி பொதுவானது. என்றாலும் மாநிலத்துக்கு மாநிலம் வித்தியாசப்படும். பகவான் ஒன்று தான் வழிபடும் நடைமுறையில் தான் வேறுபாடு. பகவானை எப்படி வழிபட்டாலும் அவன், கஷ்ட காலத்தில் நேர்மையான பக்தனை ஒரு நாளும் கை விடாது காப்பான். ஆபத்து பாந்தவன் என்ற பட்டம் அவனுக்குத் தானே பொருந்தும். சாதுக்களை ஏதோ வகையில் காப்பது அவன் வழி. அது அவனது தனி வழி. வியாபாரத்தில் நேர்மையான வியாபாரியை என்றும் காப்பான். பகவான் நாமாவை தனது உயிர் மூச்சாய் நினைத்து உரைத்திடும் பக்தனுக்கு பாதுகாவலன் மட்டுமல்ல வாழ்வை முன்னேற்றமடைய செய்யும் பகலவன். அவன் குலம் விளங்கச் செய்யும் குண சீலன். பாண்டு ரெங்கன் மஹிமையை நம் போன்றோரால் உரைக்கத்தான் முடியுமோ!*
நமது தமிழ்நாட்டில் சிவன் பெருமாள் கோவில்களும் உள்ளன. சைவம் வைணவம் என்று பிரித்துள்ளனர். மஹாராஷ்டிரா மாநிலத்தில் கிட்டதட்ட எல்லோரும் வார்கரி சம்பிரதாயம் தான்.
அந்த மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு நல்ல குலத்தில் *பானு தாசர்*( நிஜம் பெயர் விவரம் கிடைக்கவில்லை) பிறந்தார். அவரது தந்தை வேதமும் மற்றும் பல சாஸ்திரங்களைக் கற்பிக்க நினைத்தார். ஆனால் அவருக்கு படிப்பு ஏறவில்லை. தந்தையின் கண்டிப்புக்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வந்தார்.வனம் செல்ல நினைத்த அவர் காட்டின் அருகே ஒரு பழைய சூரிய நாராயணன் கோவிலில் ஒளிந்த இருந்தார். மூன்று நாள் அன்ன ஆகாரமின்றி கிடந்தார். சூரிய நாராயணனே ஜோதி வடிவில் தரிசனம் தந்தார். பின் ஒரு பிராமண வடிவில் வந்து தினமும் பசும் பால் பிரசாதமாக தந்தார். ஒரு வாரம் இது நடந்தது. பின் அந்த பிராமணர் அவரை வீட்டுக்கு செல்ல சொன்னார். அந்த கட்டளை ஏற்று வீடு திரும்பி நடந்ததை கூறினார். அதிலிருந்து அவரை ( சூரியன் என்றால் பானு) பானு தாசர் என் அழைக்கப் பட்டார். பால் பிரசாதம் அருந்திய பிறகு அவர் உடலும் மனமும் மாறி இருந்தது. முகம் பிரகாசித்தது. அவரை பார்க்க மிகவும் இனிமையாக இருந்தது. பேச்சும் நடத்தையும் மாறியிருந்தது. பகவான் நாமாவில் மனம் லயித்திருந்தது. எப்போதும் விட்டல்! விட்டல்! பாண்டு ரெங்கா! விட்டல் விட்டல் பாண்டு ரெங்கா! என்றே சொல்லிக் கொண்டே இருந்தார். இதனிடையே அவரது பெற்றோர்கள்
துணிக் கடை வியாபாரத்தில் ஈடுபட செய்தனர். வியாபாரத்தில் சத்தியத்தை கடைப் பிடித்தார். மற்ற வியாபாரிகள் இவரை அசடு பித்தன் என்றார்கள்.
தகுந்த வயதில் கல்யாணம் நடந்தது. குடும்பம் ஏற்பட்டு குழந்தை பிறந்து விட்டன. கண்ணியமாக வணிபம் செய்து வந்தார். கஷ்டம் வந்தது. ஆனாலும் நேர்மையாய் வியாபாரம். இதனால் நல்ல பெயர் கிடைத்தது.ஊரில் இவரின் நேர்மையை கண்டு வியந்து இவரிடமே துணி வாங்கினார்கள். நல்ல வியாபாரம் பெருகியது. வியாரத்தில் வெற்றிக் கண்டதால் மகிழ்ச்சி நிலவியது. அதே நேரத்தில் பகவான் பாண்டு ரெங்கனை மறக்காது ஜபம் செய்து கொண்டுதான் இருந்தார். *பக்தியுடனும் நேர்மையுடனும் வியாபாரம் செய்தால் பகவான் தானே காப்பான் அல்லவா!* குடும்பத்தில் சந்தோஷம் நிலவியது. இதே சமயம் மற்ற வியாபாரிகள் இவரின் வளர்ச்சிக் கண்டு பொறுக்க வில்லை.
ஒரு முறை வாரசந்தைக்கு அவரவர் குதிரைகளில் துணிகளை எடுத்து ஒன்றாக சென்றார்கள். பானு தாசரும் தனது குதிரையில் சென்றார். போகும் வழியில் இரவு வந்ததால் சத்திரத்தில் தங்கினார்கள். அருகே பாண்டு ரெங்க பஜனை சப்தம் வந்தவுடன் பானு தாசர் பஜனையில் கலந்து கொள்ள சக வியாபாரிகளிடம் தனது துணிகளை ஒப்படைத்து விட்டு பஜனைக்கு சென்று விட்டார். சகவியாபாரிகள் இது தான் சமயம் என்று பானு தாசரின் துணிகளை ஒரு பாழும் கிணற்றுக்குள் போட்டு விட்டு திரும்பி வந்து சத்திரத்தில் வந்து படுத்துக் கொண்டார்கள். *சாதுக்கு தீமை* *செய்தால்*
*பாண்டு ரெங்கன்* *பார்த்துக் கொண்டிருப்பானா? சாதுக்களை காப்பதில் அவனக்கு என்றுமே தனி பிரியம்.*
சத்திரத்தில் திடீரென திருடர்கள் வந்தார்கள். படுத்திருந்த சகவணிபர்களுக்கு அடி உதை கொடுத்து அவர்களது துணிமணிகளை எடுத்து சென்றார்கள். இதனிடையே பானுதாசர் பாண்டு ரெங்கன் பஜனை செய்து கொண்டிருந்தார். அவருக்கு ஒன்றும் தெரியவில்லை.
இங்கு வணிகர்கள் தங்கள் தவறை உணர்ந்தார்கள். சாது பானு தாசருக்கு நாம் தீங்கு செய்ததால் தான் நமக்கு தீங்கு நேரிட்டது என்று உணர்ந்து கொண்டார்கள். பாண்டு ரெங்கன் பஜனை செய்து விட்டு திரும்பிய பானு தாசரிடம் தாங்கள் செய்த தவறைத் கூறி அதனால் ஏற்பட்ட துன்பத்தை எடுத்துரைத்தார்கள். இவரிடம் கிணற்றிலிருந்து துணி மூட்டைகளை எடுத்து கொடுத்து விட்டு அவரது குதிரையை வெளியேறுவேன் பாதுகாத்துக் கொண்டிருக்கிறான் என்று சொன்னார்கள். அவர்களது அனைத்தும் களவு போய் விட்டது எனக் கூறினார்கள்.
வெளியே வந்து பார்த்தார். குதிரை மட்டும் இருந்தது. இது வரை குதிரையை பாதுகாத்தது பாண்டு ரெங்கனா? அப்படியே அதிசயப்பட்டு போய் விட்டார்.
*"கவலைப் படாதீர்கள் ! பாண்டு ரெங்கன் உங்களை காப்பான். உங்களுக்கு கஷ்டம் வராது என்று சொல்லி விட்டு தனது துணிகளை அவர்களிடம் பிரித்து கொடுத்து விட்டு அவர் அன்று முதல் பகவன் நாமாவே பெரிதென நினைத்து, வியாபாரத்தை துறந்தார்.* *"இனி நமக்கு பாண்டு* *ரெங்கனே துணை!" என்று நினைத்தார்.*
இதனிடையே சிலகாலம் கழித்து அவர் காசிக்கு பயணம் பட்டார். *பயணம் முடிந்து திரும்பி வரும் போது *பண்டரீபுரத்தில் உள்ள பாண்டு ரெங்க விக்ரஹத்தை பக்தியின் காரணமாக *விஜய நகர அரசன் இராமராயர் ஆசைப் பட்டு தனது ஊரான* *ஹம்பியில் பிரதிஷ்டை செய்தான் என்று கேள்விப் பட்டார்* பண்டரீபுரம் ஊர் பாண்டு ரெங்கன் இல்லாது விறிச்சோடிக் களை இழந்து கிடந்தது. பானு தாசர் இதனை அறிந்தார். இதுவும் பாண்டு ரெங்கனின் லீலை தான். முதலில் ஹம்பியில் இருக்கும் பாண்டு ரெங்கனிடம் முறையிடலாம். பின் அரசனைப் சந்திக்கலாம். பாண்டு ரெங்கனையும் அரசனையும் காண உடனே ஹம்பிக்கு சென்றார்.
ஹம்பியில் பாண்டு ரெங்கன் கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு போடப் பட்டது. அரசன் உறங்கும் போது அவனது கனவில் பாண்டு ரெங்கன் தோன்றி,*" நீ தவறு செய்யாத வரையில் தான் நான் ஹம்பியில் இருப்பேன்! நீ தவறு செய்தால் நான் மீண்டும் பண்டரீபுரம் சென்று விடுவேன்! "* என்றார்.
இதனிடையே பானு தாசர், பாண்டு ரெங்கனிடம் வேண்டிக் கொண்டார். பாண்டு ரெங்கன் அவருக்கு தன்னுடைய நவரத்தின மாலையை அணிவித்தான். இதை பாண்டு ரெங்கன் பிரசாதமாக அணிந்து அடுத்த நாள் காலை துங்கபத்ராவில் குளித்து கொண்டிருந்தார். கோவிலில் ஆபரணத்தை காணாது தவித்தனர் கோவில் நிர்வாகிகள். திருடிய வனைப் பிடிக்க அரசர் கட்டளையிட்டார். திருடனை உடனே பிடிக்க வீரர்களுக்கு உத்திரவு பிறப்பிக்கப் பட்டது. வீரர்கள் துங்கபத்ரா நதிக்கரை வழி வரும்போது பானு தாசர் ரத்தின மாலை அணிந்திருப்பதைக் கண்டு, அவரைப் பிடித்து அரசன் முன் நிறுத்தினார்கள். *இதுவும் பாண்டு ரெங்கனின் லீலை எனக் கருதி பானு தாசர் பேசாமல் இருந்து விட்டார்.*
அரசன், பானுதாசரின் கழுத்தில் ரத்தின மாலையைப் கண்டதும் விசாரணை செய்யாமலே, கழுவிலேற்ற உத்திரவிட்டான். காவலாளிகள் அவரை கழுவிலேற்ற அழைத்துச் சென்றனர்.
*பானு தாசர் பாண்டு ரெங்கனிடம் வேண்டினார்." இதுவும் உன் செயல் தான்! "* என்று நினைத்துக் கொண்டார்.
அவர் அங்கு கழுவிலேற்ற அழைத்துச் சென்றதும் அந்த பட்ட மரம் துளிர்த்தது. இதைக் கண்டு காவாலாளிகள் ஆச்சரியப்பட்டனர். நேரே அரசனிடம் சென்று நடந்த விஷயத்தைச் சொன்னார்கள். அரசன் தவறை உணர்ந்தான். பக்தர் என்பதை உணர்ந்தான். அவரது பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான்.
இதனிடையே பாண்டு ரெங்கன் அசரீரியாய்," *அரசனே நீ தவறு செய்து விட்டாய்!நான் பண்டரீபுரம் செல்கிறேன் பானுதாசரிடம் என்னை ஒப்படைத்து விடு!* என்றது.
சாது பானு தாசர் சந்தோஷமானார். பாண்டு ரெங்கனை ஊர்வலமாக எடுத்துச் சென்று பண்டரீபுரத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்தார்.
பண்டரீபுரம் பாண்டு ரெங்கன் வரவில் களைக் கட்டியது. மக்கள் பெரிதும் மகிழ்ந்தார்கள்.
*பக்தி என்றும்*
*வெல்லும்!*
*பகவான் பக்தனை காப்பான்!*
*.......*
No comments:
Post a Comment