பரமாத்மாவிற்கும், ஜீவாத்மாவிற்கும் உள்ள உறவுகளை-
பெரியாழ்வார், குலசேகராழ்வார் பெருமாளை குழந்தையாக பாவித்து வாத்ஸல்ய பாவத்தில் பாடினர்! தோழனாக பாவித்தான் அர்ஜுனன்!
பெருமாள் ஒருவரே *நாயகன்*, மற்ற ஜீவாத்மாக்கள் எல்லாம் *நாயகிகள்* என்ற தத்துவத்தில், தன்னை நாயகியாகப் பாவித்து பாடியவர்கள் *நம்மாழ்வாரும்,* *திருமங்கையாழ்வாரும்!*
இதில் *நம்மாழ்வார்* தன்னை திருமாலை எண்ணி எண்ணி உருகும் *பராங்குச நாயகியாய்*
யஜுர் வேதத்துக்கு இணையான திருவிருத்தத்திலும்,
ஸாம வேதத்திற்கு இணையான திருவாய்மொழியிலும் -
இந்த நாயகன்-நாயகி பாவத்திலான பாசுரங்களை பாடியுள்ளார்!
நம்மாழ்வார் *பராங்குசன்* தன்னிலை மாறி, பெண்ணிலை அடைந்து *பராங்குச நாயகியாக* மாறுகிறார்!
*பராங்குச நாயகியாகிய தலைமகள், திருவரங்கனைக் கண்டு மனமுருகி, கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கும் நிலையை, அவருடைய தாயார் அரங்கனிடம் உரைக்கிறார்*! ....
"கங்குலும் பகலும் கண்துயில் அறியாள்,
கண்ணநீர் கைகளால் இறைக்கும்,
சங்கு சக்கரங்கள் என்று கைகூப்பும்,
தாமரைக்கண் என்றே தளரும் எங்ஙனே
தரிக்கேன் உன்னைவிட்டு? என்றும்
இருநிலம் கைதுழா இருக்கும் செங்கயல் வாய்நீர்த் திருவரங்கத்தாய்!
இவள் திறத்து என் செய்கின்றாயோ?"
-திருவாய்மொழி. 4.4.22.
No comments:
Post a Comment