Wednesday, 27 July 2022

திருஇந்தளூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே ! என் தந்தையே !

|| श्री: ||
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
திருஇந்தளூர் என்னும்  திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற எம்பெருமானே ! என் தந்தையே ! உம்முடைய அடியோங்கள் என்றும் உம்மைத் தொழுது பணிந்து இருக்க, உனக்குச் செய்ய வேண்டிய பணிகளை செய்து கொண்டிருக்கும் நும்மடியோங்கள்  இம்மைப் பிறவிக்கு உம்மைப் பற்றிய உணர்வுகளைப் பெறுதல் என்னும் இன்பத்தினைப் பெற்றோம், நீர் எம்மிடத்து வந்து ஐயோ என்று இரக்கம் கொண்டு விரைந்து வந்து, நாங்கள் உமக்குக் கைங்கரியம் செய்வதற்கு அருள் புரிந்து, வேறு பயன் கருதாத அடிவங்களுக்குத் தேவரீர் ஒரு முறையேனும் சேவை காட்டியருளினால்,
 எமது கண் முன்னே வந்து உலவினால், அதாவது உம்முடைய அருட்காட்சி கிடைக்குமானால் நாங்கள் உய்வு பெறுவோம்.

திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment