********************************
🌷சகல காரியசித்தி, மனோ பலன், புத்தி பலம், உடல் பலம் கிடைக்கும். தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கலாம். 🌷
🌹 அனுமன் என்னை கிழக்கு திக்கில் காக்கட்டும்! தெற்கு திசையில் வாயு புத்திரன் ரட்சிக்கட்டும். மேற்கு திக்கில் ராட்சதர்களை நாசம் செய்யும் அனுமன் ரட்சிக்கட்டும். சமுத்திரத்தைத் தாண்டிய ஹனுமான் வடக்கு திக்கில் என்னைக் காத்திடட்டும்.
🌹கேசரியின் மைந்தன் என்னை ஆகாயத் தில் காக்கட்டும்! விஷ்னு பக்தியுள்ள அனு மன் என்னை கீழ்பாகத்தில் ரட்சிக்கட்டும். இலங்கையை எரித்தவர் சர்வ ஆபத்துகளி லிருந்தும் என்னை எப்போதும் காக்கட்டும்
🌹சுக்ரீவனின் மந்திரியானவர் என் தலை யை ரட்சிக்கட்டும்! வாயு புத்திரர் எனது நெற்றியினைக் காத்திடட்டும். மகாவீரர் எனது புருவங்களின் நடுப் பகுதியைக் காக்கட்டும்.
🌹 சாயாக்ரஹி என்னும் அரக்கியைக் கொன்ற அனுமன், எனது கண்களைக் காக்கட்டும். வானரங்களின் தலைவர் எனது கன்னங்களைக் காக்கட்டும். ஸ்ரீராம தூதன் எனது காதுகளின் கீழ்ப்பகுதியைக் காக்கட்டும்.
🌹 ஸ்ரீஅஞ்சனாகுமாரர் எனது மூக்கைக் காக்கட்டும்.வானராதிபர் எனது மூக்கைக் காக்கட்டும்.அசுரர்களின் பகைவர் எனது கழுத்தைக் ரட்சிக்கட்டும்.தேவர்களால் பூஜிக்கப்படுபவர் எனது தோள்களை ரட்சிக்க வேண்டும்.
🌹ஒலிபொருந்திய தேகத்தை யுடையவர் எனது தோள்களைக் காக்கட்டும். நகங்க ளை ஆயுதமாகக் கொண்டவர் எனது நகங்களை காக்கட்டும். வானரர்களுக்குத் தலைவர் எனது வயிறைக் காக்கட்டும்.
🌹ராமனின் கணையாழி மோதிரத்தை எடுத்துச் சென்றவர் எனது மர்பைக் காக்கட்டும். பெரும் கைகளையுடையவர் எனது இரு பக்கங்களையும் காக்கட்டும். சீதையின் துயரத்தை அடியோடு போக்கிய வர் எனது ஸ்தனங்களை எப்போழுதும் காக்கட்டும்.
🌹 இலங்கைக்கு பயத்தை அளித்தவர் எனது பின் பாகத்தைக் காக்கட்டும். ஸ்ரீரா மசந்திர தூதன் எனது தொப்புளைக் காக்க ட்டும். வாயுபுத்திரன் எனது இடுப்பைக் காக்கட்டும்.
🌹மேதாவியான, சகலவேத ஆகமம் யாவு ம் கற்ற சகல சாஸ்திர பண்டிதனான அனு மன் எனது மர்ம பிரதேசத்தை காக்கட்டும். சிவபக்தரான ஹனுமன் எனது தொடையி ன் சக்திகளை காக்கட்டும். எனது தொடை களையும் முழங்கால்களையும் லங்காபுரி யின் உப்பரிகைகளை உடைத்தவர் காக்கட்டும்.
🌹எனது ஆடுசதையினை வானர உத்தமர் காக்கட்டும். மிகுந்த பலசாலி எனது கனுக் கால்களைக் காக்கட்டும். சூரியனுக்கு ஒப் பானவரும், சஞ்சீவி பர்வதத்தைத் தூக்கி வந்தவருமான அனுமன் எனது கால்களை க் காக்கட்டும்.
🌹 அளவில்லாத பலம் மிக்கவர் எனது அங்கங்களையும், கால்விரல்களையும் எப்பொழுதும் காக்கவேண்டும். மகாசூரர் எனது எல்ல அங்கங்களையும் காக்கட்டும். மனதை அடக்கியவர் எனது ரோமங்களை க் காக்கட்டும்.
🌹எந்த பக்தன் ஹனுமானின் இந்தக் கவச த்தைத் தரிப்பானோ, அவனே மனித ர்களுள் சிறந்தவன். போகங்களையும் மோட்சத்தையும் அடைவான். அவன் சிறந்த அறிவாளியாகத் திகழ்வான்.
🌹 மூன்று மாத காலம் தினம் மூன்று முறையோ அல்லது ஒரு முறையோ ஒரு பக்தன் படிப்பனேயாகில், அவன் எல்லா சத்ருக்களையும் ஒரு கணத்தில் ஜெயித்து லட்சுமிகரமாகிறான். சகல செல்வங்களு ம் அவனைத் தேடி வருகிறது.
🌹 நள்ளிரவில் நீரில் அசையாமல் நின்று ஏழு தடவை ஜபித்தால் நோய்கள். தீவினைக ள். பாவங்கள், தாபத்ரயங்கள் என யாவும் நீங்கும்.
🌹 ஞாயிற்றுக்கிழமையன்று அரசமரத்த டியில் நின்று, இத்துதியைச் சொல்பவன் சகல காரியங்களிலும் ஜெயிப்பான் எதிரிகளை தோற்கடிப்பான்.
🌹ஸ்ரீ ராமரட்சையுடன் கூடிய ரட்சயை இந்த அனுமன் கவசத்தைச் சொல்லி எவரொருவர் தரித்துக் கொள்வாரோ அவருக்கு வியாதிகள் யாவும் நீங்கும் எல்லா காரியசித்தியும் ஏற்படும்.
🌹 எல்லா துக்கமும் அழியும். எங்கும் எதிலும் வெற்றி! தூய்மையான மனதுடன் சுத்தமாக ஒரு நாள் பகல் தொடங்கி மறுநாள் பகல் வரை விடாமல் இந்தக் கவசத்தைப் படித்தால் சிறவாசம் நிச்சயம் நீங்கும். இதில் சந்தேகமேயில்லை. மகாபாதகங்கள், உப பாதகங்கள் யாவும் நீங்கும் என்பதில் ஐயமில்லை.
🌹எந்த அனுமன்மிகுந்த ஆற்றல் கொண் டு பெரும் கடலையே சின்ன குட்டையைத் தாண்டுவது போல் தாண்டி ஸ்ரீசீதாதேவி க்கு மிகுந்தசோகத்தால் ஏற்பட்ட தாபத்தை ப் போக்கினாரோ, ஸ்ரீவைகுண்ட நாதரான ஸ்ரீராமனிடத்தில் பக்தி கொண்டாரோ, அக்ஷயகுமாரனை வதம் செய்தாரோ,. யுத்தத்தில் ஜயிக்கப்பட்ட ராட்சசனான ராவணனுடைய அபரிமிதமான கர்வத்தை அடக்கினாரோ, அப்படிப்பட்ட வாயு குமார னும் வானரசிரேஷ்டருமான ஸ்ரீஹனுமா ன் எப்பொழுதும் நம்மை காக்கட்டும்.
🌹பாலசூரியன் மற்றும் தாமரை போல சிவந்த முகத்தைக் கொண்டவரும், ஜல பிரவாகத்தால் நிறைந்த அருட் கண்களை பெற்றவரும், சஞ்சீவி மலையைத்தாங்கி வந்து இலங்கை யுத்தத்தில் இறந்த வான ரர்களைக் காத்த வீரரும், ராமபக்தர்களுக் கு மென்மையானவரும், புகழ்மிக்கவரும், பாக்கியவதி அஞ்சனையின் புதல்வரு மான அனுமனை வணங்குகின்றேன்.
🌹அஞ்சனையின் மகனாக அவதரித்தவ ரும், தெய்வீக புருஷரும், மார்கழி மாத மூலநட்சத்திரத்தில் பிறந்தவரும், அனந்த ன் என்னும் ஆதிசேஷனால் போற்றி வணங்கப் படுபவரும், அற்புதங்கள் பல செய்தவருமான ஆஞ்சநேய மூர்த்தியை போற்றி வணங்குகின்றேன். மகிழ்வு உண்டாகட்டும்.
🌷🌷🙏ஜெய ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதாராம்...🙏🌷🌷Thanks to Mr.விஜயராகவன்....
No comments:
Post a Comment