Saturday, 28 April 2018

*இன்று ஸ்ரீ நரஸிம்மர் ஜெயந்தி..!!*


*1. நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது.!*

*2. நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும்.!*

*(பானகம் அவருக்கு மிகவும் இஷ்டம்..!!)*

*3. கணவன்-மனைவி அடிக்கடி சண்டை போடு கிறார்களா? நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி விடும்.!*

*4. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வெறும் படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம்.!*

*5. நரசிம்மர் அருள் பெற பெண்களும் விரதம் இருக்கலாம். ஆனால் பெண்கள் மிகவும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.!"*

*6. வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயு மூலை எனப்படும் வடமேற்கில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.!*

*7. நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று வீட்டில் உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு நரசிம்ம அவதார கதையை படித்து காண்பித்தால் பிரகலாதனுக்கு கிடைத்த பலன்கள் கிடைக்கும்.!*

*8. நரசிம்மரை நினைத்து விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக பால் மற்றும் பால் தொடர்பான உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.!*

*9. நரசிம்மரின் அருள் பெற விரும்புபவர்கள், ஸ்ரீமத் பாக வதத்தில் உள்ள பிரகலாத சரித்திரத்தின் (7-வது ஸ்கர்தம் 1 முதல் 10 அத்தியாயங்கள் வரை) பாராயணம் செய்ய வேண்டும். பிரகலாதரால் செய்யப்பட்ட ஸ்தோத்திரத்தில் 7-வது ஸ்கந்தம் 9-வது சர்க்கத்தையும் பாராயணம் செய்தல் வேண்டும்.!*

*10. நரசிம்மரை வழிபட்டு சென்றால் வழக்குகளில் வெற்றி கிடைக்கும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.!*

 *11. நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். மகா விஷ்ணு எடுத்த இந்த அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.!*

*12. நரசிம்மனிடம் பிரகலாதன் போல் நாம் பக்தி கொண் டிருக்க வேண்டும். அத்தகைய பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு, நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார். நரசிம்மரை தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.!*

*13. நரசிம்மரை ‘மருத்யுவேஸ்வாகா’ என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.!*

*14.  ‘அடித்தகை பிடித்த பெருமாள்’ என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது ‘பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறுவினாடியே உதவுபவன்’ என்று இதற்கு பொருள்.!*

*15. நரசிம்மர் வீற்றிருக்கும் ஆலயங்களில் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார். !*

*16.சித்திரை/வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும்.!*

*17. நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளார் என்பதை உணர்த்துவதாகும்.!*

*18. நரசிம்மர் வைணவ சமயத்தில் அதிகம் வழிபட கூடிய விஷ்ணுவின் அவதாரம் ஆகும்...!!*

Friday, 20 April 2018

உடையவர் 120

>> #மெய்யூர்_ஸ்ரீ_நரசிம்மாச்சார்யார் தொகுத்து வழங்கிய- #உடையவர் 120 <<

ஸ்ரீமதே ராமானுஜாய நம

ஒரு பூரண மனித ஆயுளைப் பூர்த்தி செய்த மகான் ஸ்ரீராமானுஜர். அவ்வாறு 120 ஆண்டுகள் வாழ்ந்து ஆன்மிக சமுதாயக் கடமையாற்றிய அப்பெருமகனாரின் வாழ்க்கையை 120 வாக்கியங்களில் தொகுத்தளித்திருக்கிறார் மெய்யூர் ஸ்ரீ நரசிம்மாச்சார்யார்.

உடையவர் என்று போற்றப்படும் ஸ்ரீராமானுஜரைப் பற்றிய ஒவ்வொரு வாக்கியமும் ‘உடையவாக’வே முடிவது சிறப்புக்குரியது.

1. ஸ்ரீ பெரும்பூதூரை பிறப்பிடமாக உடையவர்.

2. ஆஸுரிகேசவாசார்யர் மற்றும் காந்திமதிதேவியை பெற்றோர்களாக உடையவர்.

3. சித்திரையில் ஆதிரை நாளில் அவதரித்த பெருமையை உடையவர்.

4. திருமலை நம்பியை மாதுலராக உடையவர்.

5. மாதுலரால் சூட்டப்பட்ட லக்ஷ்மணன் என்ற பெயரை உடையவர்.

6. பிற்காலத்தில் சூட்டப்பட்ட இளையாழ்வான், ராமானுஜர் என்ற பெயர்களை உடையவர்.

7. பதினாறு வயதிற்குள் நன்கு கசடறக்கற்றுக் கொண்ட வேத, வேதாங்க, சாஸ்திர கல்வியை உடையவர்.

8. நல்லார் பரவும் ராமானுஜன், கற்றார் காமுறு சீலன் என்று போற்றப்பட்ட பெருமையை உடையவர்.

9. வேதாந்த சாஸ்திரத்தை போதித்த யாதவபிரகாசரை குருவாக உடையவர்.

10. அனந்தனாம் ஆதிசேஷனின் அவதாரமாகப் போற்றப்படும் பெருமையை உடையவர்.

11. தன் சிறிய தாயாரின் மகன் கோவிந்தனை சிஷ்யனாக ஏற்று, எம்பார் என்னும் ஆசார்யனாக்கிய பெருமையை உடையவர்.

12. அன்பினால் பகை வென்ற அருஞ்செயல் வீரத்தை உடையவர்.

13. வேதாந்தம் பயிலும்போதே குருவுடன் வாதம் செய்து ப்ரம்மத்தின் உண்மை நிலையை உணர்த்தும் உபநிஷத் வாக்கியங்களுக்கு சரியான முறையில் அர்த்தம் செய்த பெருமையை உடையவர்.

14. பூலகில் வைகுந்தம் காட்டிய வித்தகர் என்ற பெருமையை உடையவர்.

15. பூரண ஞானப் பொலிவை புறத்தே பொசிந்து காட்டும் வடிவழகை உடையவர்.

16. மண்ணுலகில் சாதனைகள் பல புரிந்த சரித்திரச் சான்றோன் என்ற புகழ் உடையவர்.

17. மேதா விலாஸத்தையும், தீக்ஷ்ணமான புத்தியையும் உடையவர்.

18. வாக்சாதூர்யம் உடையவர்.

19. வேதாந்த விஷய ஞானத்தில் தனக்குப் போட்டியாக அவதரித்தவன் என்றும், அத்வைத சித்தாந்தத்தை அசைக்கக்கூடியவன் என்றும், சாஸ்திர ஞானத்தில் தன்னையும் விஞ்சக்கூடியவன் என்றும், யாதவ பிரகாசரை அஞ்சச் செய்த பெருமை உடையவர்.

20. தன்னைக் கொல்லச் செய்த சூழ்ச்சியை அறிந்து நடுக்காட்டில் தப்பி வந்து தேவப் பெருமாளால் (காஞ்சி வரதர்) காஞ்சியில் சேர்க்கப்பட்ட அற்புதத்தை உடையவர்.

21. கரிகிரிமேல் காவலனாய் (காஞ்சி வரதர்) நிற்கும் கண்ணனுக்கு தீர்த்த கைங்கர்யம் செய்த பாக்கியத்தை உடையவர்.

22. ஆளவந்தாரின் திவ்ய கடாக்ஷத்திற்கு பாத்ரரான பெருமையை உடையவர்.

23. திருக்கச்சி நம்பி மூலம் தேவப்பெருமாளால் அருளப் பெற்ற வசிஷ்டாத்வைத சித்தாந்த ஸ்தாபனத்திற்குத் தேவையான ஆறு வார்த்தைகளைக் கேட்ட பாக்கியத்தை உடையவர்.

24. ஆளவந்தாரின் அனுக்ரஹ விசேஷத்தால் ஐந்து ஆசார்யர்களைப் பெற்ற பாக்கியம் உடையவர்.

25. தேவாதி ராஜன் காஞ்சி வரதர் திருஉள்ளப்படி பெரிய நம்பியை ஆச்ரயித்து பஞ்ச ஸம்ஸ்காரங்கள் செய்யப் பெற்று மந்த்ரோபதேசம் பெற்ற பாக்கியம் உடையவர்.

26. திருமலை நம்பியிடம் ஸ்ரீமத் ராமாயணத்தின் விசேஷார்த்தங்களை ஸ்வீகரித்த பெருமையை உடையவர்.

27. திருக்கோட்டியூர் நம்பியிடம் திருமந்த்ரார்த்த விசேஷங்களைப் பெற்று ஸர்வஜனங்களுக்கும் பிரகாசப்படுத்திய பரந்த உள்ளம் உடையவர்.

28. க்ருஹஸ்தாச்ரமத்தில் வெறுப்புற்று ஸந்யாஸாச்ரமத்தை ஸ்வீகரித்த பக்குவம் உடையவர்.

29. சைவனாக மாறிய தன் தம்பி கோவிந்தனை திருமலை நம்பிகள் மூலம் திருத்தி வைஷ்ணவனாக்கி தன் சிஷ்யனாகக் கொண்ட வாத்ஸல்யம் உடையவர்.

30. ஆளவந்தாரின் மனோரதத்தைப் பூர்த்தி செய்ய ஸ்ரீ பாஷ்யத்தை இயற்றிய பெருமையை உடையவர்.

31. இதர மதஸ்தர்களை வாதில் வென்று விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தை ஸ்தாபனம் செய்த பெருமையை உடையவர்.

32. சகல சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான சிஷ்யர்களைக் கொண்ட பெருமையை உடையவர்.

33. 74 ஸிம்ஹாஸனாதிபதிகளை ஏற்படுத்திய பெருமையை உடையவர்.

34. அத்வைதியான தன் குரு யாதவ பிரகாசரை தனக்கு சிஷ்யனாக ஏற்ற பெருந்தன்மையை உடையவர்.

35. மூன்று உலகங்களின் புண்ய பலனாகிற முக்கோலை உடையவர்.

36. ‘‘வாரீர் எம் உடையவரே’’ என்று திருவரங்கனால் அருளப் பாடிட்டு அழைக்கப்ெபற்ற பாக்கியம் உடையவர்.

37. ‘‘உபய விபூதி ஐச்வர்யமும் நீர் இட்ட வழக்காய் இருக்கும்’’ என்று அரங்க நகரப்பனால் அருளப் பெற்ற பாக்கியம் உடையவர்.

38. தன் உடன் பிறந்தாளின் பிள்ளை தாசரதி என்ற முதலியாண்டானை மட்டும் துறக்காமல் தம் த்ரிதண்டமாகவே கருதி தம்முடன் வைத்துக் கொண்ட கருணையை உடையவர்.

39. வயதிலும் ஞானத்திலும் சீலத்திலும் தன்னை விஞ்சி நின்ற கூரத்தாழ்வானை தன்னுடைய பவித்ரமாகக் கருதி பிரதான சிஷ்யராகக் கொண்ட பெருமையை உடையவர்.

40. காஷாயம் உடுத்தி முக்கோல் பிடித்து துறவுக்கோலம் பூண்ட நிலையில் முன்னிலும் அழகாக விளங்கக் கண்ட திருக்கச்சி நம்பியால் ‘‘யதிராஜர்’’என்றழைக்கப்பட்ட பெருமையை உடையவர்.

41. ஸ்ரீ வைஷ்ணவ சாம்ராஜ்யப் பணியை இனிது நடத்திய பெருமையை உடையவர்.

42. திருவரங்கம் பெரிய கோயிலைப் பழுது பார்த்து செப்பனிட்டு நந்தவனம், மண்டபங்கள், மருத்துவச்சாலை, நூல் நிலையங்கள் அமைத்து ஆழ்வார்கள் அனுபவித்த ரஸம் குன்றாமல் ஆராமம் சூழ்ந்த ஆரங்கத்தைக் காத்த பெருமை உடையவர்.

43. திருவரங்க நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்த சோழச் சிற்றரசன் அகளங்கனைத் தேர்ந்தெடுத்த அறிவுக்கூர்மை உடையவர்.

44. உறங்காவில்லிதாஸனை திருவரங்கனின் கண்ணழகில் ஈடுபடுத்தி பகவத் பாகவத கைங்கர்யத்தில் ஈடுபடும்படி செய்த பெருமை உடையவர்.

45. சீரிய பண்புகளையும், தெய்வீக அருளையும் உடையவர்.

46. திருவரங்கத்தில் பொருட் செல்வத்தோடு, அறிவுச் செல்வமும் அருட்செல்வமும் பெருகச் செய்த பெருமையை உடையவர்.

47. திருக்கோட்டியூர் நம்பியால், தன் பரந்த உள்ளத்தையும் பிறர் வாழ்வில் விருப்பினையும் உகந்தருளியதால் ‘எம்பெருமானார்’ என்ற பெயர் சூட்டப்பட்ட பெருமை உடையவர்.

48. பரம வைதீக சித்தாந்தம் என்று இருந்ததை ‘எம்பெருமானார் தரிசனம்’ என்று அழைப்பதே அரங்கன் திருஉள்ளம் என்று திருக்கோஷ்டியூர் நம்பியால் போற்றப்பட்ட பெருமையை உடையவர்.

49. திருக்கோட்டியூர் நம்பி தானே உகந்து சரம ச்லோகத்தின் ரஹஸ்யார்த்தத்தை அருளின பாக்யத்தை உடையவர்.

50. திருமாலையாண்டானிடம் ஆளவந்தார் கருத்துப்படி திருவாய்மொழி உரை கேட்கும் பாக்கியம் உடையவர்.

51. மாயாவாதியான யக்ஞமூர்த்தியை வாதப் போரில் வென்ற வீரத்தை உடையவர்.

52. தன்னைச் சரணடைந்த யக்ஞமூர்த்தியை வைஷ்ணவனாக்கி ‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ என்ற திருநாமம் சூட்டி சிஷ்யனாக ஏற்ற மகிமையை உடையவர்.

53. சரஸ்வதி தேவியால் ‘ஸ்ரீ பாஷ்யகார்’ என்ற பெயர் சூட்டப்பட்டு ஹயக்ரீவ விக்ரஹத்தையும் பெற்ற பாக்கியம் உடையவர்.

54. திருவாய்மொழிக்கு அபூர்வ அர்த்தங்கள் ஸாதிக்கும் மேதா விலாஸம் உடையவர்.

55. ஆளவந்தாரிடம் ஏகலைவ பக்தி பூண்டு அவரின் அருளைப் பெற்ற பாக்கியம் உடையவர்.

56. திருமாலையாண்டானால் ‘சடகோபன் பொன்னடி’ என்ற திருநாமம் சூட்டப்பட்ட பாக்கியத்தை உடையவர்.

57. திருவரங்கப் பெருமாள் அரையரால் ‘‘ஆசார்யனே உபாயம் உபேயம் நடமாடும் பரமபுருஷன் என்று விச்வஸித்து இரும்’’ என்ற பஞ்சம சரமபர்வ அர்த்த
விசேஷத்தை அருளப் பெற்ற பாக்கியம் உடையவர் (கர்ம, ஞான, பக்தி, ப்ரபத்தி, 4 பர்வாக்கள்).

58. திருப்பாவையில் ஆழ்ந்த அனுபவம் காரணமாக திருப்பாவை ஜீயர் என்ற திருநாமம் பெற்ற பெருமையை உடையவர்.

59. ‘பெரும்பூதூர் மாமுனி’ என்ற திருநாமம் உடையவர்.

60. ஆசார்யனையும் (ராமானுஜர்), அவரது பாதுகைகளையுமே தெய்வமாகக் கொண்ட வடுக நம்பியை சிஷ்யராக உடையவர்.

61. ஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், வேதார்த்த ஸங்க்ரஹம், கீதாபாஷ்யம், சரணாகதிகத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம், நித்யம் என்ற நவரத்னம் ஆகிய 9 க்ரந்தங்களை இயற்றிய மேதாவிலாஸம் உடையவர்.

62. தனது சிஷ்யர்களுக்கு ஆறுவிதமான கைங்கர்யங்களை வாழ்நாளில் செய்யும்படி அருளிச்செய்த கருணையை உடையவர்.

63. குறையல் பிரானடியாரிடம் விள்ளாத அன்பு உடையவர்.

64. பொய்கைப் பிரான் (பொய்கையாழ்வார்) மறையின் குருத்தின் பொருளையும், செந்தமிழையும் கூட்டி ஒன்றத்திரித்து அன்றெரித்த திருவிளக்கை தன்
உள்ளத்தே உடையவர்.

65. இருள்கெட ஞானமென்னும் நிறை விளக்கேற்றிய பூதத்திருவடித் (பூதத்தாழ்வார்) தூள்களை நெஞ்சத்தில் உடையவர்.

66. மன்னிய பேரிருள் மாண்டபின் ‘‘திருக்கண்டேன்’’ என்றுரைத்த தமிழ்த்தலைவன் பேயனின் (பேயாழ்வார்) பொன்னடி போற்றும் திரு உடையவர்.

67. சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழால் அளித்த புகழ்ப்பாண் பெருமான் (திருப்பாணாழ்வார்) சரணபதுமதத்தை சென்னிமேல் உடையவர்.

68. இடங்கொண்ட கீர்த்திமழிசைக்கிறைவன் (திருமழிசையாழ்வார்) இணையடிப் போதடங்கும் இதயத்தை உடையவர்.

69. பசுந்துளவத் தொழில் மாலையும் செந்தமிழில் பெய்யும் மறைத் தமிழ் மாலையும் சீரங்கத்தையன் கழற்கணியும் பரன் தாளன்றி ஆதரியா மெய்யை
உடையவர்.

70. கொல்லிக் காவலன் (குலசேகராழ்வார்) சொல் பதிக்கும் கலைக்கவிபாடும் பெரியவர் பாதம் துதிக்கும் பண்பை உடையவர்.

71. சோராத காதல் பெருஞ்சுழிப்பால் தொல்லை மாலையொன்றும் பாராதவனைப் பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன் (பெரியாழ்வார்) தாள் பேராத உள்ளம் உடையவர்.

72. அரங்கர்மெளலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் (ஆண்டாள்) தொல்லருளால் வாழும் வாழ்வை உடையவர்.

73. கலைபரவும் தண்டமிழ் செய்த நீலன்
(திருமங்கையாழ்வார்) தனக்குலகில் இனியான் என்ற பேர் உடையவர்.

74. மறைகளை ஆயிரம் இன்தமிழால் செய்த சடகோபனை (நம்மாழ்வார்) சிந்தையுள்ளே பெய்த பெரியோன் என்ற மகிமையை உடையவர்.

75. தானுகந்த திருமேனி (ஸ்ரீபெரும்பூதூர்), தமருகந்த திருமேனி (மேல்கோட்டை), தானேயான திருமேனி (ஸ்ரீரங்கம்) என்று மூன்றுவித அர்ச்சாவதார
திருமேனியை உடையவர்.

76. நாதமுனியை நெஞ்சால் வாரிப் பருகும் பக்தியை உடையவர்.

77. வாணன் பிழைபொறுத்த தீர்த்தனையேத்தும் சீலத்தை உடையவர்.

78. ‘‘வைப்பாய வான் பொருள்’’ என்று நல்லன்பர் மனத்தகத்தே வைக்கும் மொய்ப்புகழ் உடையவர்.

79. காரேய் கருணையும், திக்குற்ற கீர்த்தியும் உடையவர்.

80. கொழுந்து விட்டோங்கிய வள்ளல் தனமும் வெள்ளைச்சுடர் விடும் பெருமேன்மையும் உடையவர்.

81. திருவரங்கத் தமுதனாரின் (நம்மாழ்வார்) வாய் கொஞ்சிப் பரவும் புகழ் உடையவர்.

82. தென்குருகைப்பிரான் பாட்டென்னும் வேதப்பசுந்தமிழ் தன்னை தன்பத்தியென்னும் வீட்டின் கண் வைத்த பெருமையை உடையவர்.

83. தென்னத்தியூரர் (காஞ்சி வரதர்) கழலிணைக் கீழ்பூண்ட அன்பை உடையவர்.

84. ‘‘கமலத்தலர் மகள் கேள்வன் கையாழியும் சங்கும், நாந்தகமும், படர்தண்டும் ஒண்சார்ங்கவில்லும் இந்தப் பூதலம் காப்பதற்கென்று ராமானுச முனியாயின’’ என்று போற்றுப்படும் பெருமையை உடையவர்.

85. பொன்னரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னில் மயலேபெருகும் திருமனம் உடையவர்.

86. ஆரணச் சொல் கடல் கொண்ட ஒண்பொருள் கொண்டவர் பின்படரும் குணம் உடையவர்.

87. ‘படிகொண்ட கீர்த்தி இராமாயணம்’ என்னும் பக்தி வெள்ளம் குடிகொண்ட கோயில் என்று போற்றப்படும் பெருமையை உடையவர்.

88. கண்ணனுக்கே ஆமதுகாமம் அறம்பொருள் வீடிதற்கென்றுரைத்த சீலத்தை உடையவர்.

89. சொல் ஆர்தமிழொரு மூன்றும், சுருதிகள் நான்கும், எல்லையில்லா அறநெறியாவும் தெரிந்த பெருமையை உடையவர்.

90. கருதரிய பற்பல உயிர்களும் பல்லுலகில் யாவும் பரனதென்னும் நற்பொருள் தன்னை இந்நானிலத்தே நாட்டிய மகிமையை உடையவர்.

91. அரங்கன் மலரடிக்காள் உற்றவரே தனக்குற்றவராகக் கொள்ளும் உத்தம குணம் உடையவர்.

92. மாயன் அன்றைவர் தெய்வத் தேரினிற் செப்பிய கீதையின் செம்மைப் பொருள் தெரிய பாரினிற் சொன்ன பெருமையை உடையவர்.

93. என்பெருவினையைக் கிட்டி கிழங் கொடு வெட்டிக் களைந்த அருள் என்னும் வாளை உடையவர்.

94. வைகுந்தம், வேங்கடம், மாலிருஞ்சோலை என்னும் இருப்பிடம் கொண்ட மாயன் அவை தன்னொடும் வந்திருக்கும் மனம் உடையவர்.

95. நம் இதயத்தை இருப்பிடமாக உடையவர்.

96. எப்பொழுதும் அச்சுதனின் தாமரை இணையடியை நினைத்து மோஹித்திருப்பதைத் தவிர மற்ற விஷயங்களை அற்பமாக மதிக்கும் சீலம் உடையவர்.

97. ஞான, வைராக்ய, பக்தியாகிய, முக்கோல் உடையவர்.

98. ஸ்ரீமந் நாராயணனுடைய குணங்களாகிய முத்துக் குவியல்களை வெளியிடும் முத்துச்சிப்பிகள் போன்ற க்ரந்தங்களை இயற்றிய பெருமையை உடையவர்.

99. வாதப்போர் புரிவதிலுள்ள உத்ஸாஹமென்னும் பிசாசினால் பீடிக்கப்பட்ட யுக்திவாதம் செய்பவர்களின் புகழாகிய கடலின் பெருக்கை உறிஞ்சுவதில் அகஸ்தியர் போன்ற அறிவுச் செல்வமும் வாக்சாதுர்யமும் கொண்ட அநேக சிஷ்யர்களை உடையவர்.

100. வேதார்த்தங்களை ஆராய்வதில் ஈடுபட்டிருப்பவர்களால் பகவத் குணங்களை விளக்கும் ராமானுஜரின் ஸ்ரீஸுக்திகளாகிய கோல் கொண்டு திசையெங்கும் பரவ முழக்கப்பட்ட புகழாகிய பறையை உடையவர்.

101. சிற்றறிவினரான நம்முடைய உள்ளத்தில் வைப்பதற்காக வேதார்த்தங்களில் மறைந்துள்ள ரஹஸ்யார்த்தத்தை மேலே எடுத்து வரும் தம் திருக்கையில் பொருந்திய ஞான முத்திரையை உடையவர்.

102. மேல் கோட்டை நாரணனை டில்லி பாதுஷாவிடமிருந்து மீட்டு தன் செல்வப்
பிள்ளையாகப் பெற்ற பாக்கியம் உடையவர்.
103. அஹங்காரமாகிய இருளை ஒழிப்பதாய், பிரகாசிப்பதாய் உள்ள திருக்கண்ணோக்கு உடையவர்.

104. நம் மனக்குகையில் வசிக்கும் சீரிய சிங்கப்பிரானின் திவ்ய கடாக்ஷத்தை உடையவர்.

105. சஞ்சலமான மனநிலையைப் போக்கும் மருந்தாயுள்ள திருவடிகளை உடையவர்.

106. அகலகில்லேன் இறையு மென்றுரை அலர்மேல் மங்கை யுறை மார்பனை திருவேங்கடவனைத் தன்னகத்தே உடையவர்.

107. மலர்மகள் மடியமரும் மாலோலனை அஹோபிலம் தன் மனக்குகையுள்
உடையவர்.

108. அலர்மகள் அன்பன் அரங்கத்தரவணையானின் பாத கமலங்களில் தன்னைக் காக்கும் பரத்தையும் அதன் பலனையும் ஸமர்ப்பித்து நிர்பரமான, நிர்பயமான வாழ்வை வாழ்ந்த மகிமையை உடையவர்.

109. திருமலையில் சீடர் அனந்தாழ்வான் மூலம் நந்தவனம் ஏற்படுத்தி இன்றளவும் நடக்கும் புஷ்பகைங்கர்யத்தை துவக்கி வைத்த
பெருமையை உடையவர்.

110. திருமலையில் எழுந்தருளியிருப்பவன் ஸ்ரீமந் நாராயணனே என்று நிரூபித்து வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் இருந்த சச்சரவைத் தீர்த்து வைத்த
பெருமையை உடையவர்.

111. வைணவ சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாகத் திகழ்ந்து 120 வருடம் வாழ்ந்த பெருவாழ்வை உடையவர்.

112. மாமலராள் புணர்ந்த பொன்மார்பன் பொருந்தும் பதிதொறும் புக்குநிற்கும் குணந்திகழ் கொண்டல் என்ற மகிமையை உடையவர்.

113. கடிபொழில் தென்னரங்கன் தொண்டர் குலாவும் ராமானுஜன் என்ற பெருமையை உடையவர்.

114. மிக்க நான்மறையின் சுடரொளியால் கலியிருளைப் போக்கிய ராமானுஜன் என்ற பெருமையை உடையவர்.

115. அடியைத் தொடரும் ஐவர்கட்காய் அன்று பாரதப்போர் முடிய பரிநெடுந்தேர் விடுங்கோனை முழுதுணர்ந்த அடியார்க்கமுதம் என்ற பெருமையை உடையவர்.

116. ‘‘பிடியைத் தொடரும் களிறென்ன யான் உன்பிறங்கியசீர் அடியைத் தொடரும்படி நல்க வேண்டும்’’ என்று திருவரங்கத்தமுதனார் பரவிய சீர்மை உடையவர்.

117. ‘‘பண்தருமாறன் பசுந்தமிழ் ஆனந்தம் பாய்மதமாய் விண்டிட எங்கள் ராமானுச முனி வேழம் குவலயத்தே வந்தது’’ என்று போற்றப்படும் பெருமையை உடையவர்.

118. ஆசார்ய பரம்பரையான ரத்தினமாலையில் சூரியனிலும் அதிகமாக பிரகாசிக்கும் நடுநாயக மணியாக விளங்கும் மகிமை உடையவர்.

119. கவிதார்க்கிக சிங்கமாகிய வேதாந்த தேசிகனால் யதிராஜ ஸப்ததி என்ற உயர்ந்த அத்யற்புதமான ஸ்தோத்ரத்தினால் புகழப்பட்ட மகிமை உடையவர்.

120. சகல வித்யாநதிகளும் உற்பத்தியாகும் மலையாய் இருக்கும் மகிமை உடையவர்.
 #ஸ்ரீமதே_ராமானுஜாய_நம

Tuesday, 17 April 2018

அட்சய திருதியை பற்றி 60 தகவல்கள்



 
அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.

அட்சய திருதியை பற்றி 60 தகவல்கள்

1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது.

2. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.

3. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

4. அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.

5. அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.

6. அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.

7. அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.

8. சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.

9. பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.

10. அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.

11. ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும்.

12. அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.

13. வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள்.

14. அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.

15. ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும்.

16. வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள்.

17. ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது.

18. பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.

19. அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள்.

20. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.

21. அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

22. அட்சய திருதியை நாளில் தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.

23. அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு `பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.

24. ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.

25. அரிதான வேலையை சந்திப்பதை `அலப்ய யோகம்‘ என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.

26. அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு `அட்சதை’ என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்ஞறும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு `அட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.

27. அட்சய திருதியை தினத்தை சமணர்கள் “அட்சய தீஜ்’’ என்றழைக்கிறார்கள்.

28. ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.

29. அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைபிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.

30. மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.

31. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.

32. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது.

33. மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.

34. கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

35. தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

36. அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

37. வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.

38. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.

39. ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.

40. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.

41. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.

42. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை’’ நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.

43. அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.

44. அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.

45. அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.

46. அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.

47. அட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதி-பரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.

48. அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.

49. கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள்.

50. அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

51. அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.

52. அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை `தர்மகடம்‘ எனப்போற்றுவர்.

53. அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.

54. அட்சய திருதியை நாளில் `வசந்த் மாதவாய நம’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முக்கியமான ஒன்று... தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில் இறங்குவது சாஸ் திரத்துக்கு உடன் பாடில்லை.

55. அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.

56. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.

57. புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும்.

58. ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.

59. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.

60. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.

"ஸ்ரீமகாலட்சுமி தாயார் திருவடிகளே சரணம் "

அட்சய திருதியை 2018

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். வருகின்ற 18.4.2018 புதன் கிழமை அட்சய திருதியை ஆகும். அன்று நாம் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். தங்கம் வெள்ளி என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் இன்றைய உடனடி தேவை என்பது தண்ணீர். போன முறை நாம் இதேபோல் செய்ததன் விளைவு மிகச்சிறப்பாக மழை பெய்து இன்று வரை தண்ணீரை அனுபவித்து வருகிறோம். எனவே அட்சய திரிதியை அன்று ஒரு குடம் அல்லது ஒரு செம்பு நிறைய தண்ணீரை இறைவன் முன்பு வைத்து நமக்கு குறைவில்லாத தண்ணீர் செல்வத்தை வழங்குமாறு பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது சரியான முறை என்று நினைத்தால் தெரிந்தவர்களிடம் கூறி அவர்களையும் ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்ய சொல்லவும்.


நீரின்றி அமையாது உலகு.

Thursday, 5 April 2018

கைகேயியின் தியாகம்


தன் மகன் பரதன் உள்பட அனைவராலும் வெறுத்தொதுக்கப்பட்டு, தவறாக புரிந்து கொள்ளப்பட்டு பதினான்கு வருடங்கள் மனத்துயரை அனுபவித்தவள் கைகேயி. இறுதியில் அனுமன் வாயிலாக அவளின் தியாக உள்ளம் வெளிப்படுகிறது.

இராவண வதம் முடிந்து சீதை, லக்ஷ்மணர், வானர, ராக்ஷசப் படைகளுடனும் அவர்களின் குடும்பத்தினருடனும் ஸ்ரீஇராமர் புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பும் வழியில் பரத்வாஜ மஹாமுனியின் அழைப்பை ஏற்று அவருக்கு ஏற்கெனவே வாக்களித்தபடி இரவு அங்கு தங்கினார். விடிந்தால் பதினான்கு வருடங்கள் முடிந்த நிலையில் பரதனும், சத்ருக்னனும் அக்னிப்பிரவேசம் செய்யக்கூடும் என்பதால் அவர்களைத் தடுத்து நிறுத்தி, தான் வந்துகொண்டிருக்கும் செய்தியைக் கூற அனுமன் ஸ்ரீஇராமரால் அனுப்பப்பட்டார்.

அவரும் நந்திகிராமத்துக்கு வந்து அவர்கள் நெருப்பில் வீழ்வதிலிருந்து காத்தபிறகு, பரதனிடம், “அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்.” என்றார். பரதனும், “ஸ்ரீஇராமனைப் பெற்ற பாக்கியசாலி அன்னை கௌசல்யை இதோ.” எனக் காட்டினான். அவளை வணங்கியபின் மறுபடி “அம்மா எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்.” என்றார். “ஸ்ரீஇராமனைக் கணமும் பிரியாது சேவை செய்த பாக்கியசாலி லக்ஷ்மணனையும், என் தம்பி சத்ருக்னனையும் பெற்ற அன்னை சுமித்ரை, இதோ இவர்.” எனக் காட்டினான் பரதன். அவளையும் வணங்கிய பின்னரும், வெளிப்படையாக, “உன்னைப் பெற்ற தியாகி, அன்னை கைகேயி எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்.” என்றார் அனுமன்.

துணுக்குற்ற பரதன், “அவள் மஹாபாவியாயிற்றே. அவளுக்கு மகனாகப் பிறக்கும் அளவுக்கு பாபம் செய்து விட்டேனே! என நான் வருந்தாத நாளில்லை. அவளுக்கு நீங்கள் ஏன் நமஸ்காரம் செய்ய வேண்டும்?” எனக் கேட்டான். அப்போது அனுமன் பின்வருமாறு பிறர் அறியாத கைகேயியின் பெருமைகளைக் கூறினார்.

“பரதா! நீயோ இந்த உலகமோ அவளை அறிந்து கொண்ட லக்ஷணம் இவ்வளவுதான். உன் தாயார் எவ்வளவு தன்னலமற்ற தியாகி தெரியுமா?

தசரதரின் தாயார் இந்துமதி மிகுந்த இளகிய மனம் படைத்தவள். செடி, கொடிகளிலும் உயிரோட்டத்தை உணர்ச்சிகளைக் கண்டவள். அவளுடன் ஒரு நாள் சிறுவன் தசரதன் உத்யானவனத்தில் திந்தபோது, தளதளவெனப் பொன்னிறத்தில் மினுமினுத்த தளிர் ஒன்றைக் கொடியிலிருந்து ஒடித்து விட்டான். ஒடித்த இடத்திலிருந்து பால் வடிவதைக் கண்டு பதறிய இந்துமதி, “தன் குழந்தையான தளிரைப் பிரிந்து இந்தக் கொடி எப்படி கண்ணீர் வடிக்கிறதோ, அப்படியே உன் மகனைப் பிரிந்து நீ கண்ணீர் வடித்து மடியக் கடவாய்.” எனச் சாபமிட்டாள்.

பின்னர் இளைஞனாக தசரதன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் ரிஷிகுமாரனான சிரவணன் குடுவையில் தன் தாய் தந்தையின் தாகம் தீர்க்கத் தண்ணீர் மொள்ள, அதை யானை தண்ணீர் குடிப்பதாகக் கருதி சப்தவேதி என்னும் அஸ்திரத்தினால் அவனைக் கொன்றதனால், “உயிர் நீங்கும் முன் புத்திர சோகத்தினால் உயிர் நீங்கக்கடவாய்” என்று அவனது கண்ணிழந்த தாய் தந்தையால் தசரதர் சபிக்கப்பட்டார். தசரதர் பெற்ற இவ்விரண்டு சாபங்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தாள் கைகேயி.

தசரதர் இராமருக்கு எவ்வளவு சீக்கிரம் பட்டம் கட்ட முடியுமோ அவ்வளவு விரைவில் முடிசூட்ட நிச்சயித்து, தன் அரசவை ஜோதிடர்களை வற்புறுத்தி, குறித்த முகூர்த்தத்தின் பின்விளைவுகளை, பல கலைகளும் சாஸ்திரங்களும் அறிந்த தன் தந்தையிடமிருந்து தான் முழுமையாகக் கற்றிருந்த ஜோதிடத்தின் மூலம் கோசல ராஜ்ஜியத்தின் ஜாதகத்தினை ஆராய்ந்து நன்கு அறிந்திருந்தாள் கைகேயி.

அந்த முகூர்த்தப்படி இராம பட்டாபிஷேகம் நிகழ்ந்திருந்தால், ராஜ்யபாரத்தில் இராமன் அன்று அமர்ந்திருந்தால் அதுவே அவனது ஆயுளை முடிந்திருக்கும். புத்ரசோகம் தசரதனையும் முடித்திருக்கும். புத்ரசோகம் எப்படியும் நிகழ வேண்டும் என்னும்போது, அது இராமனை விட்டுத் தற்காலிகப் பிரிவா? நிரந்தரப் பிரிவா? என்பதுதான் பிரச்னை. தனக்கு வைதவ்யம் வந்துவிடும் என்று தெரிந்திருந்தும் ஸ்ரீஇராமனின் உயிரைக் காப்பாற்ற நிச்சயித்தாள் உன் அன்னை.

அந்தக் கணத்தில் அரணாக இருப்பவன் உயிர் நீப்பது இராஜ்யத்தின் ஜாதக அமைப்பின்படி நிச்சயம் என்ற நிலையில் ஏற்கெனவே ஆண்டு அனுபவித்து முதியவனாகிவிட்ட தசரதன் உயிர் நீப்பதே மேல் என அவள் எண்ணினாள். அப்போது கூட அவள் கேட்க விரும்பியது பதினான்கு நாள்கள் வனவாசம். வாய்தவறி அது பதினான்கு வருடங்கள் என வந்துவிட்டது. ஒரு கணம்கூட இராமனைப் பிரிவதைச் சகிக்காத தசரதருக்கு இதுவே உயிரைக் கொல்லும் விஷமாகிவிட்டது.

எந்தப் பெண் தன் சௌமங்கல்யத்தைக் கூடப் பணயம் வைத்து மாற்றான் மகனைக் காப்பாள்? இராமனிடம் கைகேயி கொண்ட பிரியம் அத்தகையது. நீ ராஜ்யத்தை ஏற்க மாட்டாய் என அவளுக்குத் தெரியும். ஆகவேதான் அத்தகைய வரத்தைக் கேட்டாள். ஒருகால் நீ ஏற்றால் ஸ்ரீஇராமனின் உயிர் காக்க உன்னையும் இழக்க அவள் தயாராக இருந்தாள். அவள் மஹா தியாகி. அவளால்தான் எங்கோ வனத்தில் கிடந்த எங்களுக்கெல்லாம் ஸ்ரீஇராமனின் தரிசனம் கிட்டியது. கர-தூஷணர் முதலாக இராவணன் வரை பல ராக்ஷஸர்களின் வதமும் நிகழ்ந்தது. அந்த புனிதவதியைத்தான் நாம் அனைவரும் வணங்கவேண்டும்” என்றார் அனுமன். பரதன் முதலானவர்களுக்கு அப்போதுதான் கைகேயின் உண்மை உருவம் புரிந்தது.

"மதுராந்தகம் ஸ்ரீ ஏரிகாத்தராமர் திருவடிகளே சரணம்"

Tuesday, 3 April 2018

கும்பகோணத்தை_பற்றி யாரும்_கேள்விப்படாத_60 இரகசியங்கள்!





கும்பகோணத்தில் மகாமகம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. அதுமட்டுமில்லாமல் பல ரகசிய சிறப்புகளையும் தன்னுள் கொண்டுள்ளது கும்பகோணம். அதைப் பற்றியே நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.

கும்பகோணத்திற்கு குடந்தை என்ற பெயரும் உள்ளது. குடந்தை என்பது குடமூக்கு ஆகும். பின்நாளில் குடமூக்கு என்பது மறுவி குடந்தை என்று பெயர் பெற்றது.

2. குடந்தை என்ற சொல்லுக்கு வளைவு என்ற பொருள் உள்ளது. முக்கிய நதிகளில் ஒன்றான காவிரி கும்பகோணம் வந்து வளைந்து செல்வதாலும் குடமூக்கு என்ற பெயரும் உருவானதாக சொல்லப்படுகிறது.

3. முக்கிய நதிகளான காவிரி கங்கை யமுனை சரஸ்வதி நதிகள் எல்லாம் கும்பகோணத்தில் உள்ளது என்று திருநாவுக்கரசர் பாடி பெருமை சோர்த்துள்ளார்.

4. சோழ மன்னர்கள் கும்பகோணத்தையே பாதுகாப்பான நகரம் என்று தங்கள் கருவூலத்தை இங்கு அமைத்தனர்.

5. சூத முனிவர் என்ற முனிவர் சிவரகசியம் என்ற நூலை உலகில் உள்ள மற்ற முனிவர்களுக்கும் எடுத்துரைத்தார். அந்த சிவரகசியம் என்ற நூலில் கும்பகோணம் பற்றி தெரிவிக்கப்பட்டியிருக்கும்.

6. உலக உயிர்கள் கெட்ட வினையிலிருந்து நீங்கிட மோட்சம் பெற கும்பகோணம் தலத்திற்கு சக்தி உள்ளது. இதனை சிவபெருமானே அருளியுள்ளார்.

7. கும்பகோணத்தில் உள்ள மாந்தாதா என்ற அரசன் கும்பலிங்கத்தை வைத்து பூசை செய்ததான் பலன் அவர் உலகின் பல்வேறு இடங்களையும் ஆட்சி செய்து சக்ராதிபதியாக விளங்கினார் என்று வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

8. மாளவ நாட்டு வேந்தன் சத்திய கீர்த்தி பிராமணர் ஒருவரை கொன்ற பாவத்திற்காக இங்குள்ள காசிப தீர்த்தத்தில் நீராடி அந்த பாவத்தை போக்கினார்.

9. சந்திரன் கும்பகோணம் சோமலிங்கத்துக்கு அர்ச்சனை செய்து நோயில் இருந்து விடுப்பட்டார்.

10. குபேரன் கும்பகோண தலத்தை வணங்கிய பிறகு குபேரபுரிக்கு தலைவன் ஆனான்.

11. திருமால் இத்தலத்தில் பூசை செய்து வைகுண்ட பேரு அடைந்தார்.

12. தட்சன் யாகத்திற்கு சென்ற தேவர்கள் துன்பத்தினை சந்திக்க நேர்ந்தது. உடனே அவர்கள் கும்பகோணத்தில் உள்ள இறைவனை வழிப்பட்டதும் துன்பம் விலகிப்போனது.

13. சூரியனின் ஒளியை அழிக்கும் படி மயனை அவன் மனைவி தூண்டினால். சூரியனும் மயனால் ஒளியை இழந்தான். பிறகு சூரியன் கும்பகோணத்தில் வந்து பெருமாளை வணங்கியாதால் மீண்டும் ஒளி பெற்றான்.

14. வானவர்களும் பெறாத மகத்துவத்தைக் கும்பகோணத்தில் வழிபாடு செய்வர்கள் பெறலாம் என்ற ஐதீகம் உள்ளது.

15. பவிஷ்யோத்ர என்ற வடமொழியில் உள்ள புராணத்தில் கும்பகோணத்தின் மகாமக மகிமை பற்றி சொல்லப்பட்டுள்ளது.

16. யாழ்ப்பாணத்தை சேர்ந்த முருகேசன் பிள்ளை குடந்தை சிலேடை வெண்பா பாடியுள்ளர்.

17. காசியைப் போலவே கும்பகோணத்திலும் எட்டுத்திசைகளில் எட்டு பைரவர்கள் காக்கின்றனர். இங்கு தான் ஞானம்பிகையுடனான பைரவேசர் கோவில் உள்ளது.

‘18. சேதுவில் காசியில் செய்பெரும் பாவம் கோதிலாக் கும்பகோணத்தில் தீரும்’ என்ற கும்பேசர் குறவஞ்சியில் காசியிலும் நீங்காத பாவம் கும்பகோணத்தில் தீரும் என்றுள்ளார்.

19. கும்பகோணத்தில் பெருமையாக மகாமகம் குளம் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் லட்சகணக்கில் மக்கள் நீராடுகின்றனர்.

20. சூரியனுக்கு நேர் எதிராக குருவும் சந்திரனும் இருக்கும் கிரக நிலையில் இந்த மூன்று கிரகங்களும் ஒன்று சேரும் இடமாக மகாமக குளம் உள்ளது. அதனால் புத்திர பாக்கியம் செல்லம் என அனைத்தும் தரும் இடமாக உள்ளது.

21. மகாமகம் குளத்தில் நீராடிய அரசர்கள் பொன், பூமி, கன்னிகை, வஸ்திரம், பசு, குதிரை, காளைமாடு, அன்னம், தென்னை, குப்ததானம், சந்தனம், முத்து, நவரத்தினம், தேன், உப்பு, பழங்கள் எனப்படும் 16 தானங்களைச் செய்தார்கள். இந்தத் தானங்கள் எப்படிச் செய்வது என்ற விவரம் குளக்கரையைக்கு அருகே உள்ள தான மண்டபங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

22. ராஜகேசரி என்ற என்ற சோழ அரசனுடைய கல்வெட்டில் மாகமகம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் ராஜராஜ சோழனுக்கும் முற்பட்ட அரசன்.

23. மாகமக வருடம் தொடங்கியதிலிருந்து அதாவது சிம்மகுரு காலத்தில் உள்ள நாட்களிலும் புனித நீராடலாம் அதிலும் குறிப்பாக மாசி மாதத்தில் நீராடுவது மிகவும் விசேஷம்.

24. மாசி மாத மகம் நட்சத்திர நாள், சித்திரைப் பிறப்பு, கார்த்திகைச் சோமவார நாட்கள், அமாவாசை, பவுர்ணமி, சூரிய சந்திரகிரகண நாட்கள், உத்தராயனம், தட்சிணாயனம், விஷுபுண்ய காலம், கிருஷ்ணபட்ச அஷ்டமி, சிவராத்திரி, சுக்ரவாரம், கபில சஷ்டி ஆகிய நாட்களிலும் நீராடுவது மிகவும் நன்மை தரும்.

25. கும்பகோணத்தில் நுழையும் முன் பஞ்சக்குரோசத் தலம் மற்றும் அஷ்டாதசத் தலத்தையும் தரிசப்பது கூடுதல் நம்மை வந்து சேரும்.

26. மாசிமக நீராடலைப் பிதுர் மகா ஸ்நானம் என்று மாகபுரண அம்மானை நூல் கூறுகிறது. இதற்கேற்ப மாசி மகத்தன்று இறந்தவர்களுக்கு பித்ருகடன் தீர்க்க எள்ளும் நீரும் கொடுக்கும் சடங்கு நடைபெறுகிறது.

27. மாசி மகத்தன்று விரதமிருந்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் ஆண்சந்ததி உண்டாகும் என்ற நம்பிக்கையுள்ளது.

28. மாசி மாதம் முழுவதுமே புண்ணிய நீராட ஏற்ற நாளக உள்ளது.

29. பிரம்மா தான் மகாமக விழாவை முதன் முதலில் துவங்கி வைத்தார்.

30. மாகமகக் கிணறு என்னும் சிம்மக் கிணறு திருக்கோஷ்யூரில் உள்ளது. இதுவும் சிறப்பு மிக்கதாகும். மாசிமகத்தன்று தெப்பத்திருவிழாவில் வேண்டுதல் நிறைவேறியவர்கள் தெப்பக்குளத்தில் தீபமேற்றி வழிப்படுது சிறப்பாகும்.

31. கும்பகோணம் மகாமகக் குளம் கிழக்கு மேற்காக நீள் சதுரமாகவும், வடகரையும் தென்கரையும் சிறிது உள்வளைந்தும், கிழக்கில் குறுகியும், மேற்கில் அகன்றும் அள்ளது. இதை மேலிருந்து பார்த்தால் குடம்போல காட்சியளிக்கும்.

32. இக்குளத்தில் நீராடினால் அமுத குளத்திலே நீரடிய நம்மை கிடைக்கும்.

33. பவுர்ணமி அன்று நீராடுவது மிகவும் சிறப்பு. அது ஏழேழு பிறவிக்கும் நன்மை தரும்.

34. மகாமகக்குளத்தில் அமாவாசை, பவுர்ணமி மாதப்பிறப்பு, வெள்ளிக்கிழமை, கார்த்திகை நடசத்திரம், சிவராத்திரி, மாசிமகம் மற்றும் மாகமகம் ஆகிய தினத்தில் நீராடுவது மிகவும் சிறப்பு.

35. மகாமகம் அன்று கும்பகோணத்தில் உள்ள ஐந்து வைணவ தலங்களில் இருந்து பெருமாள் காவிரி நதிக்கரையில் தீர்த்தவாரி செய்வார்கள்.

36. மகாமகம் விழாவில் பங்கேற்க கும்பகோணம் செல்பவர்கள் கும்பேஸ்வரர், காசிவிசுவநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், ஆதிகம்பட்ட விசுவநாதர், கோடீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர்,
அமிர்த கலசநாதர் ஆகிய 12 சைவ தலங்களுக்கும் சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசாமி, அனுமார், சாரநாராயணை பெருமாள், திவராக பெருமாள், ராஜ கோபாலசாமி ஆகிய 7 வைணவத் தலங்களுக்கும் ஆக மொத்தம் 19 ஆலயங்களுக்கு சென்று வழிபட்டுவது மேலும் நம்மை தரும்.

37. உப்பிலியப்பன் கோவில், பட்டீஸ்வரம், தாராசுரம், திருக்கருகாவூர், சுவாமி மலை, 108 சிவாலயம், இன்னம்பூர், திருவலஞ்சுழி ஆகிய ஊர்களில் உள்ள ஆலயங்களுக்கும் சென்று தரிசிப்பது வாழ்வில் மேலும் செல்வம் வந்து சேரும்.

38. குரு சூரியனை சுற்றி வர 11.868ஆண்டுகள் ஆகின்றன அதால் சில தடவை 11 ஆண்டுகளிலேயே மாகமகம் வந்துவிடும் எனவே இதனை இளமாமாங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

39. கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் ஆலயத்தில் அமுத குடத்தை சிவபெருமான் வேடனாக வந்து அம்பு எய்தது சிலையாக உள்ளது.

40. மகாமகத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அருள் தரும் வகையில் கும்பேஸ்வரர் ஆலயத்தில் மங்களாம்பிகை தனது வலது கரத்தை கொண்டு காட்சியளிக்கிறாள்.

41. மகாமக குளத்தில் நீராடினால் காசியில் 100 ஆண்டுகள் வாழ்ந்த புண்ணியமும் உலகை வலம் வந்த பலனும் கிடைக்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

42. குடந்தை நாகேஸ்வரர் ஆலயத்துக்கு தரிசனம் செய்ய செல்லும் போது மறக்காமல் 4 யானைகள் பூட்டப்பட்ட தேர் வடிவில் இருக்கும் நடராஜர் சன்னதியை காண தவறாதீர்கள்.

43. நம்மை கவருந்து இழுக்கும் கங்கை கொண்ட விநாயகர் சிலை நாகேஸ்வரர் ஆலய கருவறை மின் மண்டபத்தில் உள்ளது.

44. நாகேஸ்வரர் ஆலய பிரகாரத்தில் பகவத் சித்தரின் ஜீவசமாதி உள்ளது.

45. எல்லா தலங்களையும் நகரங்களையும் பிரம்மன் படைத்தான் ஆனால் கும்பகோணத்தையோ சிவ பெருமனே உருவாக்கியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

46. மகாகத்தில் நீராடும் நவநதிகள் எவை என்பது புராணங்களில் பல தகவல்கள் உள்ளன.

47. மகாமகத் திருநாள் சிம்மகுருவாக இருக்கும் நிலையில்தான் கொண்டாடப்பட வேண்டும் என்பதே முக்கியமான விதியாகும்.

48. மகாமக குளத்தில் உரிய விதிமுறையின்படி புனித நீராடாவிட்டால் எதிர்வினைகள் வந்து சேரும் என்று புராணங்களில் எச்சரிக்கப்பட்டுள்ளது. முறைப்படி செய்யாத மகாமக ஸ்தானம் அவர்கள் செய்த புண்ணியத்தையும் தொலைத்துவிடும் திருக்குடந்தை புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

49. மகாமக வருடத்தில் மங்கள காரியங்கள் செய்யக் கூடாது என்று ஒரு நம்பிக்கை உள்ளது. ஆனால் மகாமக தீர்த்த யாத்திரைக்கு இடையூறு இல்லாத வகையில் திருமணம் உள்ளிட்ட மங்கல காரியங்களை செய்யலாம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

50. கும்பகோண பெரிய கடைவீதியில் தசாவதார கோவில் இருக்கிறது.

51. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவாரான திருமழிசை ஆழ்வார் சித்தியான இடம் திருமழிசை பிரான் ஆலயமாக குண்பகோணத்தில் உள்ளது.

52. குடந்தை கும்பேஸ்வரர் இருக்கும் திசையை நோக்கியும் வழிபட்டாலும் அவரது அருள் கிடைக்கும்.

53. மகாமக விழாவில் பல ஆயிரக்கணக்கில் போலிஸ் குவிக்கப்பட்டு பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர்.

54. அவரவர் பாவங்களை போக்கும் முதன்மையான தீர்த்தமாக மகாமக குளம் உள்து. அதோடு பிறந்த நட்சத்திரத்தின் பலனும் கிடைக்கும் இடமாக உள்ளது.

55. கும்பகோணம் என்ற சொல் வடமொழிச் சொல் குடம் என்றால் கும்பம் மூக்கு என்றால் கோணம் அது தான் கும்பகோணமாக மறுவியுள்ளது.

56. கும்பகோணத்திற்கு பாஸ்கரசேத்திரம், கல்யாணபுரம் தேவலோகப்பட்டிணம் சிவவிஷ்ணுபுரம் மந்திராதி தேவஸ்தானம் சாங்கராஜன்பட்டினம் சேந்திரசாரம் ஒளிர்மிகு பட்டணம் உள்ளிட்ட பல பெயர்கள் இருந்தன. இவைகள் தற்போது எதுவம் பயன்பாட்டில் இல்லை.

57. சிவன் விஷ்ணு பிரம்மா மும்மூர்த்திகளுக்கும் கும்பகோணத்தில் தான் கோவில்கள் உள்ளன.

58. திருக்குடந்தை புராணம், மங்களாம்பிகைப் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களில் கும்பேசுவரரையும், மங்களாம்பிகையையும் போற்றி பாடியுள்ளார்.

59. மரசிற்ப கலைகளுக்கு பெயர் பெற்றது கும்பகோணம் தான். சிற்பகலையிலும் சிறந்து விளங்கியதாற்கான ஆதாரங்கள் இங்கு உள்ளது.

60. கும்பகோணத்தில் வைணவ மத்வ சைவ மடங்கள் நிறைய உள்ளன. இவற்றில் அஹோபிலமடம், வியாசராய மடம், ராகவேந்திர மடம், திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள் ஆதீன மடங்கள் முக்கியமாவை.