Sunday 29 January 2023

நிலை வாசல் முகூர்த்த அழைப்பிதழ்

எல்லாம் வல்ல திருமகள் கேள்வனின் திருவருளாலும் ஜீயர் சுவாமிகள் குருவருளும் உங்களைப்போன்ற மெய்யன்பர்கள் பேராதரவாலும் இளங்காடு கண்ணன் திருக்கோயில் மறுசீரமைப்பு திருப்பணி தொடங்கி மூலஸ்தானம் என்றும் நிலைத்திருக்க கருங்கற்கள் கொண்டு அமைத்திட்ட கருவறையின் நிலைவாசல் பிரதிஷ்டை 
*தைப்பூச நன்னாளில் (05.02.2023 - ஞாயிற்றுக்கிழமை) காலை 7.30 மணியளவில்*

 நடைபெற இருப்பதால் அன்பர்கள் அனைவரும் தவறாது பங்கேற்று கண்ணபிரானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tuesday 24 January 2023

Need donation for Temple Renovation Works

தஸமூர்த்திகள் *(பத்து தேவதைகள்)*

*தஸமூர்த்திகள்!*
(ஶ்ரீரங்கத்தில் மட்டும்)

நம்பெருமாள் பிரம்மோற்சவம் கண்டருளும் திருநாட்களில் *(தை, பங்குனி, சித்திரை),* வீதி உலா கண்டருளும் முன்பாக ஒவ்வொரு நாளும் *தஸமூர்த்திகள்* வீதி வந்து, எல்லோருக்கும் நம்பெருமாள் உற்சவத்தை தெரிவிப்பதுடன் - உற்சவத்திற்கு எந்த விக்னமும் ஏற்படாமல் இருக்க, வீதி ஒவ்வொரு மூலையிலும் பலியிடுவர்! இவர்கள் திரும்பி சந்நிதி வந்தவுடன் தான், நம்பெருமாள் திருவீதி புறப்பாடு கண்டருள்வார்!!


குமுதன்
மணவன்
ப்ரஷ்னிகர்ப்பன்
குமுதாக்ஷன்
புண்டரீகன்
வாமனன்
சங்குகர்ணன்
ஸர்பநேத்ரன்
ஸூமுகன்
ஸூப்ரதிஷ்டதன்
*தஸமூர்த்திகள் ஶ்ரீரங்கத்தின் பரிவார தேவதைகள் - க்ஷேத்ரபாலர்கள்!*
இந்த பதின்மரும் நான்கு திருக்கரங்களுடனும், மூன்று திருக்கண்களுடனும் சேவை சாதிப்பர்!

*தஸமூர்த்திகளது ஆணைக்குட்பட்டு செயல்படும்* 
*ஆவரண தேவதைகள் 65!*
*இவர்களே ஶ்ரீரங்கத்தை காத்தருளும் ஆவரண தேவதைகள்!!*
🙏🙏

Sunday 8 January 2023

திருவரங்கம் திருஅத்யன உற்சவம்

*இன்று அதைப் பற்றிய  கேள்விகள்*
1. எத்தனையோ பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்தாலும் ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா ஏன் சிறப்பு?

2. வைகுண்ட ஏகாதசி விழாவின் மிக முக்கிய சிறப்பு என்ன?

3. ஏகாதசி தோன்ற காரணம் என்ன?

4. வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பது ஏன்?

5. ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா எத்தனை நாட்கள் நடைபெறும்?

6. பகல் பத்தின் பத்தாம் நாளில் நம் பெருமாள் எந்த கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார்?

7. ஏகாதசி அன்று உற்சவருக்கு செய்யப்படும் அலங்காரத்தின் சிறப்பு என்ன?

8. இராப்பத்தின் சிறப்புகள் என்னென்ன?

9. திருக்கைத்தல சேவை ஸ்ரீரங்கத்தில் எந்த நாளில் அனுசரிக்கப்படும்?

10. வேடுபறி சேவை எதற்காக ?யாருக்காக? எந்த நாளில்? அனுசரிக்கப்படும் ஸ்ரீரங்கத்தில்?

11. எந்தெந்த சேவைகளோடு  ஏகாதசி பெருவிழா ஸ்ரீரங்கத்தில் நிறைவு பெறும்?🙏🌹
*விடைகள்* 👇👇

1. ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம் என சிறப்பிக்கப்படுவதால் 
மற்ற பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா கொண்டாடினாலும் ஸ்ரீரங்கத்தில் இப்பபெருவிழா மிகவும் சிறப்பு அதுமட்டுமின்றி 

*ஸ்ரீ ரங்கநாதர்* *பாத* *தர்ஷன்* *மோட்ச* *விமோசனம்*


2. பன்னிரு ஆழ்வார்களின் ஒருவர் 
ஸ்ரீ ராமானுஜரின் அத்யந்த சீடர்
 கூரத்தாழ்வாரின் மகனான 
பராசர பட்டர் அருளிய 
திரு நெடுந் தாண்டகத்துடன்
 தொடங்கும் இப்பெருவிழா
பராசர பட்டரின் வாழ்க்கை வரலாறு படித்தால் திருநெடுந் தாண்டகத்தின் சிறப்பு நமக்கு புரியும்.

3. பகவான் பிரம்மனை படைக்கையில் இரு அசுபர்கள் அவர் காது வழியாக தோன்றினர்
அவர்கள் பிரம்மனை அளிக்க முயன்றனர்
பகவான் அவர்களைத் தடுத்து வரம் கேட்கச் சொல்ல அசுரர்களோ கர்வமுடனும் அலட்சியத்துடனும் தாங்கள் வரம் தருவதாக கூறினர்
உடனே பகவானும் சாதுரியமாக "என்னால் நீங்கள் வதம் செய்யப்பட வேண்டும் .பிறகு ராட்சசர்களாக பிறக்க வேண்டும் ",எனக் கேட்டார்
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அசுரர்கள் ஒரு மாத காலம் சண்டையிட்டு பின்  நாங்கள் உங்கள் அருளினால் மோட்சம் அடைய வேண்டும் என வேண்டினர் 
பகவானும் ஒத்துக்கொண்டு ஒரு மாத காலம் போரிட்டு தனது சக்தியில் உதித்த ஏகாதசி மூலம் பகவான் அவர்களை வதைத்தார்
ஏகாதசி தோன்றிய தினம் கைசீக ஏகாதசி என அழைப்பர்
திருக்குறுங்குடியில் நடைபெறும் கைசீக ஏகாதசி மிகவும் சிறப்பு இங்கு நம் பாடுவான் பற்றிய புராண நாடகம் அரங்கேறும்
நம் பாடுவான் ஏகாதசி விரதம் இருந்து பைரவி ராகத்தில்  கீர்த்தனைகளை
பகவானுக்கு பாடி மகிழ்விப்பதால் கைசீக ஏகாதசி அன்று பைரவி ராகம் மிகவும் சிறப்பு பெற்றது.

4. மகாவிஷ்ணுவின் குணங்களை உ ணர்ந்த அசுரர்கள் பரம பதத்தில் நித்தியவாசம் வேண்டினர்
 ஒரு மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி அன்று வைகுண்டத்தில் உள்ள வடக்கு நுழை வாசலை திறந்து அசுரர்களை பரமபதத்தில் பகவான் சேர்த்ததால் அந்த நாளில் வைகுண்ட வாசனை அன்றைய தினம் பக்தர்கள் சேவிக்க மோட்சம் கிடைக்க வேண்டும் என
 அசுரர்கள் யாசித்ததால் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

5. ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து இராப்பத்து இயற்பா என 21 நாட்கள் அரையர் சேவை மற்றும் திருவாய்மொழி என ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் முன்பு நடைபெறும்
மூலவருக்கு முத்தங்கி சேவை சமர்ப்பிக்கப்படும்.

6. ஆழ்வார்களின் ஆசைப்படி பெரிய ஆழ்வார்க்கும் நம்மாழ்வார்க்கும் பகவான் பராங்குச நாயகி பரகல நாயகி
என அவதானித்து அவர்களின் அன்பை பெற நினைத்த போதிலும் அவர்கள் கருணை என்னவோ தாயாரிடம் மட்டுமே இருந்தது எப்படி என இறைவன் கேட்க உனது கண்கள் சூரியன் சந்திரர்கள் அதனால் ஒரு பக்கம் குளிர்ச்சி ஒரு பக்கம் வெப்பம் 
ஆனால் தாயாருக்கு கருணை மிகுந்த கண்கள் அதனால் இரு கண்களிலும் குளிர்ச்சி மிக கண்கள் என சொல்லியதால்
 இறைவன் மிகவும் பெருமை அடைந்தான்
 தன்னைவிட தன்நாயகி உயர்வு
 என்பதை காட்டிட
 இப்படி ஓர் நிகழ்வு
 இதன் மூலம் நாம் அறிகிறோம்
இதனை உணர்த்தும் விதமாக 
உற்சவர்
ஸ்ரீ மோகினி அவதாரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து பவனி வருவார்.

7. ரத்தின அங்கி
அலங்காரத்தில் உற்சவர் ஆயிரம் கால் மண்டபத்தில் திருமணி மாட ஆஸ்தானத்தில் எழுந்தருள அவர் பாத தரிசனம் பாப விமோசனம்.

8. ரப்பத்தில் உற்சவருக்கு செய்யப்படும் சிறப்பு அலங்காரங்கள் சிறப்பு ரப்பத்தில் அணிவிக்கப்படும் ஆபரணங்கள் அதில் முக்கியமானது வைரமுடி சேவை விமான பதக்கம்  போன்றவை
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆபரண விசேஷங்கள் சிரசு முதல் பாதம் வரை கண்டு தரிசிக்க கண் கோடி வேண்டும்.

9. மார்கழி மாதம் நடைபெறும் ராப்பத்தில் ஏழாம் நாள் திருக்கைத் தல சேவை 
அன்று மட்டுமே உற்சவரை அடியார்கள் கைகளில் ஏந்தி திருமணிமாட ஆஸ்தானத்தில் சேர்ப்பர்.

10. 12 ஆழ்வார்களில் ஒருவர்
 திருமங்கை ஆழ்வார்
அவரை சிறப்பிக்கும் பொருட்டு இந்த நாளில் வேடுபறி சேவை வெகு சிறப்பாக  நடைபெறும்.

11. பத்தாம் நாள் நம்மாழ்வார் தீர்த்தவாரி
பின்பு நம்மாழ்வார் மோட்சம் சேவையோடு நிறைவு பெறும்
ஒரு பக்தன் வேடத்தில் நம்மாழ்வார் வெள்ளை உடை உடுத்தி பன்னிரு நாமம் துளசி மாலையும் தரித்து காட்சியளிப்பார் அவரை நம் பெருமாள் திருவடியில் நெற்றி படும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பிப்பர் வேதங்கள் வேத கோஷங்கள் முழங்க துளசியால் அர்ச்சிப்பர் பின்பு துளசியை விலக்கி மோட்சம் பெற்றதாக கூறி நம்மாழ்வாருக்கு நம் பெருமானின் கஸ்தூரி திலகம்
துளசி மாலை அணிவிக்கப்பட்டு நம்மாழ்வார் மோட்சம் நிறைவு பெறும்
 பிறகு இயற்பா பிரபந்தம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் முன்னிலையில் நடந்தேறும் அதன் பின்பு திருவாராதனம்
மற்றும் சாற்று மறையோடு விழா நிறைவு பெறும்

இந்த நாட்களில் அரையர் சேவை வீணை மீட்டி மூலஸ்தானம் சென்றடைதல் என உற்சவரின் கோலாகலங்கள் மிகவும் சிறப்பு🌹
சேவிப்போம் ஸ்ரீரங்கநாதரை🙏

சேமிப்போம்
அவரின் அருள் பார்வையை🙏🌹🙇‍♂️

Saturday 7 January 2023

அதான் சொர்க்க வாசலை தாண்டியாச்சுல்ல.. சரி.. அப்போ வா போலாம்....



     கடந்த வாரம் வைகுண்ட ஏகாதசி அன்று அரங்கனைச்  சேவித்து, பரமபத வாசலையும் கடந்து ... மணல்வெளியில் காற்றாட சிறிது நேரம் அமர்ந்திருந்தேன்.


*"அதான் சொர்க்க வாசலை தாண்டியாச்சுல்ல.. சரி.. அப்போ வா போலாம்.."* 
என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுப் பார்த்தேன்.
அவன்தான்... அந்தக்  குட்டிக் கண்ணன் கள்ளச் சிரிப்போடு நின்று கொண்டிருந்தான்.

*'எங்க கூப்பிடற கண்ணா?'*

   *"சொர்க்கத்துக்கு... அங்க போகணும்னுதானே இவ்ளோ நேரம் வரிசையில நின்னு கும்பல்ல முட்டி மோதி வந்த... அங்கதான் கூட்டிப்போறேன் வா..!"*

*'விளையாடாத கண்ணா.. எனக்குக் குடும்பம் இருக்கு... பிள்ளைங்க  இருக்காங்க..  திடீர்னு இப்படி என்னைக் கூப்பிட்டா... நான் இல்லாம அவங்க என்ன பண்ணுவாங்க?'*

*"இந்த உலகத்தையே பார்த்துக்கிறவன் நான்.. உன் குடும்பத்தைப் பார்த்துக்க மாட்டனா?"*

*'எனக்குன்னு நிறைய கடமைகள் இருக்கு.. நீதானே சொல்லிருக்க.. கடமையை ஒழுங்கா செய்னு.. அப்புறம் இப்படி சொன்னா எப்படி?!'*

*"அப்போ கடமையை செய்யாம, எதுக்கு சொர்க்கத்துக்குப் போகணும்னு இங்க வந்து என்னைக் கேட்ட?? சாகவேணாம்.. ஆனா சொர்க்கம் மட்டும் வேணும்னா அது எப்படி? நீ பக்தியோட கேட்ட.. அதான் நானும் வந்தேன்.. இப்போ சாக்கு சொல்லாதே......வா போலாம்"*

*'பக்தியோட கேட்டது இன்னைக்கு போறதுக்கில்ல.. பின்னாடி வயசானப் புறம் கண்டிப்பா ஒருநாள் சாகத்தான் போறோம்.. அதுக்காக!'*

*"ஓ! எப்போ என்கிட்ட வரணும்கறதையும் நீதான் முடிவு பண்ணுவ... என்கிட்ட வர்றதுக்கு advance booking.........   அதை வருஷா வருஷம் renewal வேற பண்ற.. ஆனா, இப்போ நானே வந்து கூப்பிட்டாலும் வரமாட்ட.. அப்படித்தானே..!!"* என்றான் கிண்டலாக!

*'அப்படிதான்!  அதைத்தானே எல்லாரும் செய்றாங்க.. என்னை மட்டும் கிண்டல் பண்றியே!'*

*"உன்னை மட்டுமில்ல... எல்லாரையும் சேர்த்துதான் சொல்றேன்...... சரி, சில கேள்விகள் கேட்கறேன் ...........பதில் சொல்லு.."*

*'என்ன? கேளு!'*

 *"சொர்க்கத்துக்குப் போகணுமா?  பரமனின் பதத்தை அடையணுமா?  எது வேணும்?"*

*'குழப்பாதே கண்ணா!'*

*"நான் குழப்பலை... நீங்கதான் குழம்பிப்போய் இருக்கீங்க.."*

*'அப்போ ரெண்டும் வேறயா?!'*

*"அது உன் எண்ணத்தைப் பொருத்தது!"*

*'அப்படின்னா??'*

*"பரமனின் பதத்தை அடைவதே சொர்க்கம்னு நினைக்கறது வேற....                            பண்ணின பாவத்துக்கெல்லாம் எமகிங்கரர்கள் எண்ணை சட்டில  போட்டு வேக வைச்சுடுவாங்களோன்ற பயத்தில, 'அய்யோ பகவானே மன்னிச்சு இந்திரன் இருக்க சொர்க்கபுரில சேர்த்துடு'ன்னு நினைக்கிறது வேற.."*

*'அப்போ சொர்க்கம் நரகமெல்லாம் நிஜமாவே இருக்கா??'*

*"அது உங்களுக்குத் தான் தெரியும்... நீங்கதானே கலர்கலரா செட் போட்டு புகை பறக்கவிட்டு நாலு பொண்ணுங்களை நாட்டியமாட விட்டு காட்டறீங்க.."*

*'அப்போ அதெல்லாம் எங்க கற்பனை...... நிஜமா ஒண்ணும் இல்லைனு சொல்றியா?'*

*"நான் என்ன சொல்லணுமோ, அதையெல்லாம் கீதைல ஏற்கனவே சொல்லிட்டேன். நீங்க அதைப் படிக்காம, உங்க இஷ்டத்துக்கு எதையோ கற்பனை பண்ணிட்டு அந்த கற்பனை உலகத்தை நிஜம்னு நம்பி வாழறீங்க..."*

*"உங்களுக்கு எது வசதியோ அதை மட்டும் எடுத்துக்கிட்டு மற்றதை விட்டுடறீங்க ..."*

*"ஆனா கஷ்டம் வந்தா மட்டும்,  'கண்ணா, பெருமாளே.. உனக்கு கண்ணில்லையா, காதில்லையா'ன்னு என்னை திட்டறீங்க!!!"*

*'அப்போ இந்த விழா, பரமபத வாசல் தாண்டுறது இதெல்லாம் தேவையில்லை.. சொர்க்கம், நரகம் இதெல்லாம் பொய்னு சொல்றியா??'*

*"இல்லை.. இதெல்லாம் தேவைதான்!! ஆனா, நீங்க எதையும் உண்மையான அர்த்தம் புரிஞ்சு பண்லைன்னு  சொல்றேன்.."*

*"இந்த உலகத்தில இருக்கிற நீங்க, பார்க்கிறது கேட்கிறது எல்லாமே நான்தான்... கடைசியில நீங்க வந்து சேரப்போறதும் என்கிட்டதான்..."*

*"இடையில நீ வாழற இந்த வாழ்க்கையில உன்னுடைய கர்மாவுக்கேற்ற பலனை அனுபவிச்சு, பின் என்கிட்ட வந்து சேரப்போற.. "*

*"அப்படி என்கிட்ட உன்னை சேர்க்கக்கூடிய பாதையில் நடக்கும்போது நீ பார்ப்பவைதான், அனுபவிப்பவைதான்.. சொர்க்கமும் நரகமும்..."*

*"நீ எதை அனுபவிக்கணும், பார்க்கணும்னு நீதான் தீர்மானம் செய்ற.. உன் கர்மாக்கள் மூலமாக.."*
 
*"நீ இறந்தபிறகு எங்கு போகணும்னு யோசிக்கறதை விட்டுட்டு, வாழும்போது எப்படி இருக்கணும்னு யோசி.."*

*"சொர்க்கமும் நரகமும் நீ வாழற வாழ்க்கைலதான் இருக்கு.. எங்கோ ஆகாயத்துல இல்லை.."*

*"வாழும்போதே சொர்க்கத்தை அடையும் வழியைதான் நான் கீதையில சொல்லிருக்கேன்..."*

*"அதைப் புரிந்து படி.. உன் எல்லா கேள்விகளுக்கும் அதில் விடையுண்டு.."*

*"அதை ஞாபகப் படுத்ததான் இந்த விழாக்கள்..."*

*"கீதையின்படி, தர்மத்தைப் போற்றி, கர்மத்தை நிறைவேற்றி வாழ்ந்தால்... சொர்க்கம் போன்ற வாழ்வை வாழ்ந்து இறுதியில் என் பதத்தை அடைவாய்..."*

*"உனக்கு நல்வழிகாட்ட பல அவதார ரூபங்களிலும் தோன்றினேன்..."*

*"உனக்கு வழி காண்பித்து பரமபத வாசலை முதலில் கடந்து உன்னை வழிநடத்துகிறேன்.. இதுதான் தத்துவம்!!!"*

*"ஆனால் இது புரியாமல் வருடா வருடம் ஒரு சடங்காக மட்டுமே நீங்கள் இதை செய்கிறீர்கள்.."*

*"பரமபத வாசலைக் கடக்கும்போது இந்த உண்மையை உணர்ந்து.. தன் தவறுகளை சரி செய்ய முடிவெடுத்து.. நான் காண்பித்த வழி பின்பற்ற முடிவெடுத்தவர் எத்தனை பேர்??"*

    *"பெரும்பாலானவர்களைப் பொருத்த வரை, வாசலைக் கடந்தால் பண்ணின தப்பையெல்லாம் மன்னிச்சு சாமி சொர்க்கத்தில சேர்த்திடுவார்.."*

*"சிலருக்கு இது மற்றுமொரு சடங்கு.."*

மற்றும் சிலர், 

*'எல்லாரும் போறாங்க நானும் போறேன்!'*

இன்னும் சிலர், 

*'ஏகாதசி திருவிழா சமயத்தில தேவஸ்தான கடையில போடற தோசை சூப்பரா இருக்கும்.. அதோட புளியோதரை, கேசரி சாப்பிட்டுட்டு.. அப்படியே சொர்க்க வாசலையும் மிதிச்சு வைப்போம் ... போனா சொர்க்கம். இல்லாட்டி தோசையாவது கிடைச்சதே...!!!'*

அவ்வளவுதான்!!

*"உண்மையான அர்த்தம் புரிந்து செய்பவர் வெகு சிலரே..."*

*"இன்று உனக்குச் சொன்னேன்!                  நீ சிலருக்கு சொல்..."*

*"நீங்கள் என் குழந்தைகள்..."* 

*"நீங்கள் சரியான வழி நடந்து என்னை வந்தடையும் வரை நான் வழி காட்டிக்கொண்டு தான் இருப்பேன்.."*.

*"உங்கள் கை பிடித்து அழைத்துச் செல்ல காத்திருக்கிறேன்..."*

*"நல்லபடியாக வந்து சேருங்கள்...!!"*

*"சொல்லிவிட்டுப் போய்விட்டான்.."*

ஆயிரங்கால் மண்டபத்தைக் கடந்து வெள்ளைக்கோபுர வாசலை நோக்கி நடந்தேன். 

  *"நம்பெருமாள் அபயகரத்தோடு புன்னகையுடன் பக்தர்களுக்குச் சேவை சாதித்துக்கொண்டிருந்தார்!"*