Thursday 22 July 2021

வற்றாத செல்வம் பெற வெள்ளிக்கிழமை கட்டாயம் லட்சுமியை வழிபடுங்கஇந்த லட்சுமி ஸ்தோத்திரத்தை படித்தால் வற்றாத செல்வ வளம் கிடைக்கும்


ஓம் அகில லட்சுமியை நம:
ஓம் அன்ன லட்சுமியை நம:
ஓம் அலங்கார லட்சுமியை நம:
ஓம் அஷ்ட லட்சுமியை நம:
ஓம் அமிர்த லட்சுமியை நம:
ஓம் அமர லட்சுமியை நம:
ஓம் அனந்த லட்சுமியை நம:
ஓம் ஆனந்த லட்சுமியை நம:
ஓம் அபூர்வ லட்சுமியை நம:
ஓம் ஆதி லட்சுமியை நம:
ஓம் ஆத்ம லட்சுமியை நம:
ஓம் இஷ்ட லட்சுமியை நம:
ஓம் இன்ப லட்சுமியை நம:
ஓம் இதய லட்சுமியை நம:
ஓம் ஈஸ்வர்ய லட்சுமியை நம:
ஓம் ஈகை லட்சுமியை நம:
ஓம் உண்மை லட்சுமியை நம:
ஓம் உதய லட்சுமியை நம:
ஓம் உத்தம லட்சுமியை நம:
ஓம் உபாசன லட்சுமியை நம:
ஓம் ஊர்ஜித லட்சுமியை நம:
ஓம் எட்டு லட்சுமியை நம:
ஓம் ஏக லட்சுமியை நம:
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியை நம:
ஓம் ஒற்றுமை லட்சுமியை நம:
ஓம் ஒளி பிரகாச லட்சுமியை நம:
ஓம் ஓங்கார லட்சுமியை நம:
ஓம் ஒளதார்ய லட்சுமியை நம:
ஓம் ஒளஷத லட்சுமியை நம:
ஓம் ஒளபாஷன லட்சுமியை நம:
ஓம் கருணை லட்சுமியை நம:
ஓம் கனக லட்சுமியை நம:
ஓம் கபில லட்சுமியை நம:
ஓம் கலச லட்சுமியை நம:
ஓம் கல்யாண லட்சுமியை நம:
ஓம் கந்த லட்சுமியை நம:
ஓம் கஸ்தூரி லட்சுமியை நம:
ஓம் சந்தான லட்சுமியை நம:
ஓம் சங்கு லட்சுமியை நம:
ஓம் சக்கர லட்சுமியை நம:
ஓம் சர்வ லட்சுமியை நம:
ஓம் சந்தோஷ லட்சுமியை நம:
ஓம் சரச லட்சுமியை நம:
ஓம் சகல லட்சுமியை நம:
ஓம் ஞான லட்சுமியை நம:
ஓம் தர்ம லட்சுமியை நம:
ஓம் தன லட்சுமியை நம:
ஓம் தவ லட்சுமியை நம:
ஓம் நவ லட்சுமியை நம:
ஓம் தான லட்சுமியை நம:
ஓம் வைர லட்சுமியை நம:
ஓம் நீல லட்சுமியை நம:
ஓம் முத்து லட்சுமியை நம:
ஓம் பவள லட்சுமியை நம:
ஓம் மாணிக்க லட்சுமியை நம:
ஓம் மரகத லட்சுமியை நம:
ஓம் கோமேதக லட்சுமியை நம:
ஓம் பதுமராக லட்சுமியை நம:
ஓம் வைடூரிய லட்சுமியை நம:
ஓம் பிரம்ம லட்சுமியை நம:
ஓம் விஷ்ணு லட்சுமியை நம:
ஓம் சிவ லட்சுமியை நம:
ஓம் க்ஷேம லட்சுமியை நம:
ஓம் ஜோதி லட்சுமியை நம:
ஓம் தீப லட்சுமியை நம:
ஓம் தீன லட்சுமியை நம:
ஓம் தீர்த்த லட்சுமியை நம:
ஓம் திவ்விய லட்சுமியை நம:
ஓம் தான்ய லட்சுமியை நம:
ஓம் வீர லட்சுமியை நம:
ஓம் வித்யா லட்சுமியை நம:
ஓம் விஜய லட்சுமியை நம:
ஒம் விபுல லட்சுமியை நம:
ஓம் விமல லட்சுமியை நம:
ஓம் ஜெய லட்சுமியை நம:
ஓம் கெஜ லட்சுமியை நம:
ஓம் வர லட்சுமியை நம:
ஓம் மகா லட்சுமியை நம:
ஓம் வேணு லட்சுமியை நம:
ஓம் பாக்கிய லட்சுமியை நம:
ஓம் பால லட்சுமியை நம:
ஓம் பக்த லட்சுமியை நம:
ஓம் பாமர லட்சுமியை நம:
ஓம் புவன லட்சுமியை நம:
ஓம் புனித லட்சுமியை நம:
ஓம் புண்ணிய லட்சுமியை நம:
ஓம் பூர்ண லட்சுமியை நம:
ஓம் பூமி லட்சுமியை நம:
ஓம் சோபித லட்சுமியை நம:
ஓம் ராம லட்சுமியை நம:
ஓம் சீதா லட்சுமியை நம:
ஓம் சித்த லட்சுமியை நம:
ஓம் சிங்கார லட்சுமியை நம:
ஓம் ஸ்வர்ண லட்சுமியை நம:
ஓம் நாக லட்சுமியை நம:
ஓம் யோக லட்சுமியை நம:
ஓம் போக லட்சுமியை நம:
ஓம் கோமள லட்சுமியை நம:
ஓம் மாதா லட்சுமியை நம:
ஓம் பிதா லட்சுமியை நம:
ஓம் குரு லட்சுமியை நம:
ஓம் தெய்வ லட்சுமியை நம:
ஓம் தாமரை லட்சுமியை நம:
ஓம் நித்திய லட்சுமியை நம:
ஓம் சாந்த லட்சுமியை நம:
ஓம் ரத்தின லட்சுமியை நம:
ஓம் பிரசன்ன லட்சுமியை நம:
ஓம் மங்கள லட்சுமியை நம:

"ஸ்ரீ மகா லட்சுமி தாயார் திருவடிகளே சரணம் "

Wednesday 21 July 2021

ஸ்ரீவைஷ்ணவர்களின் 13ம் நாள் இயல் கோஷ்டியில் ஏன் கரும்பு வில்லும் குடமும் உபயோகிக்கப்படுகிறது?

அடியேன் பல நாட்கள் பலரிடம் கேட்டு விடை கிடைக்காமல் தேடிக்கொண்டிருந்த ஒரு அற்புத விளக்கத்தை பெங்களுர் பிரபல உபாத்யாயர் மேல்கோட்டை ஸ்ரீநிவாஸன் ( இதை அவரிடம் கேட்டுச் சொன்னவர் மற்றுமொரு ஸ்ரீநிவாஸன் - அம்பாசமுத்ரம்/மேல்கோட்டை) சில தினங்களுக்கு முனி தெரிவித்தார்.

ஸ்ரீவைஷ்ணவர்களின் 13ம் நாள் இயல் கோஷ்டியில் ஏன் கரும்பு வில்லும் குடமும் உபயோகிக்கப்படுகிறது?

இதோ அதற்கான விடை. மேலும் சில விளக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.   

பெரியதிருவத்யயன மஹோத்ஸவம் - இயல் கோஷ்டி 13ஆம் நாள் கரும்புவில்லும் குடமும்

 ஒரு மனிதன் எடுக்கும் பிறவிகளிலேயே மிகச் சிறந்ததாய்க்கருதப்படுவது ஸ்ரீவைஷ்ணவ குலத்தில் பிறப்பது. உலகத்தில் பல்வேறுவகைச் சமயங்களிருக்கின்றன. அச்சமயங்களைப் பற்றி அச்சமய நூல்களிற்சொல்லப்படும் தெய்வங்களை வழிபடுகின்றவர்களும் பலரிருக்கின்றனர். இந்தச் சமயநெறிகளினின்றும் தப்பி ஸ்ரீவைஷ்ணவ சமயச் சார்பினனாகப் பிறப்பது அரிது. 

இவ்வரிய சமயச் சார்பினனாகப் பிறந்தானொருவன் ஸ்ரீமந்நாராயணனையே பரதெய்வமாக நினைத்து, அவ்விறைவன் விஷயத்திற் செய்யும் கைங்கர்யமே பரம புருடார்த்தமாகக் கொண்டொழுகுவான். இந்த வைஷ்ணவனுக்கு அகச்சுத்திப்புறச் சுத்தி என்ற இரண்டு சுத்தியுமிருத்தல் வேண்டும். அவற்றுள் அகச் சுத்தியாவது- மனத்திலுள்ள காம க்ரோதாதி களாகிய அழுக்கற்று எம்பெருமானிடத்தில் அன்புற்றி ருத்தலாம். 

புறச்சுத் தியாவது - சங்க சக்ராதி இலச்சினை களைப் பெறுதலாம். இவையும் பஞ்ச ஸம்ஸ்காரத்தில் அடங்கும். பஞ்சஸம்ஸ்காரங்களாவன 

“தாப: புண்ட்ரஸ் ததா நாம மந்த்ரோ யாகச்ச பஞ்சம:” என்கிறபடியே தாபம் புண்ட்ரம் நாமம் மந்த்ரம் யாகம் என்பன. 

இவற்றை அறிவொழுக்கங்களிற் சிறந்த ஆசார்யன் மூலமாகப் பெற்றுக்கொள்ளக்கடவன். இது ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு மட்டுமே அமையப்பெற்றுள்ள முதல் தர்மமாகும். 

 பூர்வ ஜன்ம கர்மங்களின் அடிப்படையில் வெவ்வேறு குலங்களில் பிறந்தாலும், ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் ‘ப்ரபந்நர்கள்’ என்று கொண்டாடப்படுகிறார்கள். சாதாரண சாஸ்த்ரங்களில் அதாவது வேதத்தில் விதிக்கப்பட்ட கர்மாக்களைச் செய்பவர்கள் அதன்வழியாகவே பலன் அடையலாம் என்று நம்புபவர்கள். இவர்களுக்கு சாஸ்த்ரிகள் என்று பெயர். 

பெரிய திருமந்த்ரமாகிய திருவெட்டெழுத்தின் உண்மையான பொருளை அறிந்தவர்கள் ‘ஸாரஜ்ஞர்கள்’ என்று கொண்டாடப்படுகிறார்கள். இந்த ஸாரஜ்ஞர்களாகிய ப்ரபந்நர்கள் எம்பெருமான் திருவடிகளிலே ஆத்ம ஸமர்ப்பணம் செய்து, ஆத்மா இந்த உடலிலிருந்து விடுபட்டு மேலுலகம் செல்லும் காலத்தை எதிர்நோக்கி இருப்பர்கள். அவர்களுக்கு மரணபயம் கிடையாது. ஏனெனில் எம்பெருமான் ‘மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் ஆவான்’.
 
இந்தக் கருத்தையே அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தம்முடைய ஆசார்ய ஹ்ருதயத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “சாஸ்த்ரிகள் தெப்பக்கையரைப்போலே இரண்டையு மிடுக்கிப் பிறவிக்கடலை நீந்த, ஸாரஜ்ஞர் விட்டத் திலிருப் பாரைப்போலே இருகையும் விட்டுக் கரை குறுகும் காலமெண்ணுவர்கள்” - (ஆசார்ய ஹ்ருதயம் - நூற்பா 19).
 ஒருவனுடைய வாழ்நாளில் அவன் உடல், உள்ளம் ஆகியவை எம்பெருமானுக்கும், எம்பெருமான் அடியார்களுக்கும் தொண்டு செய்திருக்கக் கூடுமானால், அவனுடைய ஆத்மா அந்த உடலைவிட்டு பிரிந்து சென்றபிறகு, அந்த உயிர் பிரிந்த உடல், ஓர் புனிதப் பொருளாக கருதப்படுகிறது. அந்த உடலை சிதையிலே வைப்பதற்கு முன்பு ஸ்ரீவைஷ்ணவக் கோட்பாடு களின்படி, சில ஸம்ஸ்காரங்களை செய்வது ஒரு காலத்தில் அனைத்து வர்ணத்தைச் சார்ந்தவர்களின் முக்கியமான சடங்காக அமைந்திருந்தது.
 
அதனுடைய ஓர் எச்சம்தான் ஸ்ரீவைஷ்ணவர்களுடைய திருமாளிகைகளில் நடைபெற்றுவரும், ஸ்ரீசூர்ண பரிபாலனம் என்னும் நிகழ்ச்சி. அப்போது ஸ்ரீவைஷ்ணவர்கள் ஒன்றுகூடி, நம்மாழ்வாருடைய முதற்பிரபந்தமாகிய திருவிருத்தம் நூறு பாட்டுக்களை ஸேவித்தும்,

ஓர் மரஉரலில் ஸ்ரீசூர்ண கலவையை இடித்து, இறந்தவருடைய புனித உடலுக்கு ஸ்நாநம் செய்வித்த பிறகு, அவருடைய திருமேனியில் பன்னிரெண்டு திருமண் காப்புகளை சாற்றிய பின்னர் ஈமச்சடங்குகளைத் தொடர்ந்து செய்வர். இந்தச் சடங்கும் எம்பெருமானார் தர்சனத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே அமைந்துள்ள இரண்டாவது தர்மமாகும்.

 மூன்றாவது தர்மந்தான் ஸ்ரீவைஷ்ணவனுக்கு, (ஆணாயிருந்தாலும், பெண்ணாயிருந் தாலும்) அதாவது பஞ்சஸம்ஸ்காரம் ஆனவர்களுக்கு (எக்குலத்தவராயினும்) அவர்கள் பரமபதித்து ஓராண்டு நிறைபெறுவதற்குள் (வருஷ ஆப்திகத்திற்கு முன்) அவர்களுக்காகச் செய்யும் சடங்கு ‘கரும்புவில்லும் குடமும்’ என அழைக்கப்படும் திவ்வியப்பிரபந்த பாராயண, ததீய ஆராதன ( ததீ நெடில் , ததி குறில் என்பது தயிர்) வைபவம் (திருமால் அடியார்களுக்குச் செய்யும் விருந்தோம்பல்). 

 பரமபதித்த சேதனின் பொருட்டு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி மூன்று நாள்கள் அல்லது ஐந்து நாள்கள் நடைபெறும். திருவாய்மொழி மட்டுமோ அல்லது நாலாயிர திவ்யப்பிரபந்தம் சேவையினை நடத்தலாம். அதற்கு அங்கமாக ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம், ஸ்ரீராமாயணம், ஈடு, ரஹஸ்யக்ரந்தங்கள் முதலானவை அனுஸந்திக்கப்படுகின்றன.

 ‘கரும்பும் வில்லும் குடமும்’ என்கிற நிகழ்வு முழுக்க முழுக்க ததீயர்களை (திருமால் அடியார்களை) ஆராதிக்கும் வைபவமாகும். இதனையே நம்மாழ்வார் “உலகில் ஏந்து பெருஞ்செல்லவத்தராய்த் திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே” என்கிறார். இந்த பாகவத ஆராதனத்தின் மூலம் பரமபதித்த சேத னன் நற்கதியினை அடைவான் என்கிறது பகவச்சாஸ்திரம். இந்த பாகவத ஆராதனத்தைப் பற்றி, “தர்சன தர்மம்” (அதாவது எம்பெருமானார் தர்சனத்தைச் சார்ந்தவர்களுக்கே உரியது) என்று ‘ஸ்ம்ருதி ரத்னாகரம்’ எனும் நூலில் குறிப்பிடுகிறார் தோழப்பர்.

 இச்சடங்கினை பெரியதிருவத்யயன உத்ஸவம் என்றும் வழங்குவர். இச்சடங்கினைச் செய்யும் கர்த்தாக்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் பாராயணம் நடைபெறும் இருவேளைகளிலும் நீராடி அகத்தூய்மையோடும், புறத்தூய்மையோடும், அடியார்களான ஸ்ரீவைஷ்ண வர்களை வரவேற்று, திருவடிகளை அலம்பி, திருவொற்ற ஆடை ஸமர்ப்பித்து, ஆஸனம் ஸமர்ப்பித்து, அர்க்ய, பாத்யங்களால் உபசரித்து, பாராயணம் நடைபெறும் போது பால், இளநீர் முதலானவைகளை ஸமர்ப்பித்து, பாராயணம் முடிந்த பின்னர் போஜனம் செய்வித்து திருமால் அடியார்களை பூசித்தொழுவர்.
 
இந்த ஆராதனத்தின் சாற்றுமுறை தினத்தன்று காலை திருவிருத்தம் எனும் பிரபந்தம் சேவிக்கப் படுகிறது. எண்ணெய், சுண்ணம் (மஞ்சள்பொடி) அடியார்கள் அனைவருக்கும் பிரசாதமாக அளிக்கப்ப டுகிறது. 

இதன் தாத்பர்யம் என்னென்னில், முக்தனான இந்த சேதனன் பரமபதத்திலே பிறப்பதாக ஐதிஹ்யம். மேலும் சரமதிருமேனியில் ஸ்ரீசூர்ணபரிபாலனம் செய்வதென்பது ஆரம்ப நாளாகும். இந்த நாள் அவப்ருதம் (தீர்த்தவாரி) கண்டருளும் தினமாகும். 

ஆதலால் மஞ்சள் எடுத்துக்கொண்டு ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் தாஸவ்ருத்திகளுக்கான துறையிலே நீராடச்செல்வர். அவர்கள் நீராடிய பின்பு, அந்தத் துறையிலே இந்த பெரியதிருவத்யயனம் எனும் மஹோத்ஸவத்தை நடத்தும் கர்த்தாக்கள் புனிதநீராடி, ஸ்ரீவைஷ்ணவர்கள் தரித்த திருமண்காப்பு, ஸ்ரீசூர்ணம் ஆகியவற்றின் மீதத்தை இவர்கள் சாற்றிக் கொண்டு, திருமால் அடியார்களான ஸ்ரீவைஷ்ணவர்களின் ஸ்ரீபாத தீர்த்தத்தை குடத்திலே நிறைத்து, அக்குடத்தினை தலையிலே ஏந்தியபடி திருமாளிகைகள் தோறும் செல்வர். 

இயல் கோஷ்டியினர் கரும்பைப் பிடித்தபடி இராமானுச நூற்றந்தாதி சேவித்தவண்ணம், தீர்த்தக்குடத்திற்கு முன்பே செல்வர். வேத பாராயண கோஷ்டியார் கரும்பைப் பிடித்தபடி பின்னே செல்வர்.

ஸ்ரீவைஷ்ணவ திருமாளிகைகள் தோறும், உபய கோஷ்டியாருக்கம், தீர்த்தக்குடம் ஏந்தி வருகின்ற கர்த்தாவிற்கும், ஆஸனமிட்டு திருவடிகளை விளக்கி, அர்க்ய பாத்யங்களை ஸமர்பித்து, தூப தீபங்களாலே ஆராதித்து, புஷ்பம், தேங்காய், கனிகள், தாம்பூலாதி தக்ஷிணை, ஆரத்தி ஸஹிதமாக ஸ்ரீகோஷ்டியை அலங்கரித்து பூசிப்பர்கள்.  

 பாகவத ஆராதனம் நடைபெறும் அந்தத்திருமாளிகை வாசலிலே சென்றவுடன், கோஷ்டியினருக்கு அனைத்து உபசாரங்களையும் செய்து, ஆரத்தி முதலான மரியாதைகளைச் செய்வர். பின்னர் இராமானுச நூற்றந்தாதி சாற்றுமுறை நடந்து, உடையவர் ஸம்பாவனை எடுக்கப்படும். (ஸ்ரீபராசரபட்டர் கூரத்தாழ் வானுக்கு இயல் நடத்தி, உடையவர் ஸம்பாவனை பிரசாதிக்கும் போது, ஸாக்ஷாத் உடையவரே ஸ்வீகரித்ததாக பெரியார்கள் பணிப்பர்). பின்பு கரும்பில் வில்போல் வளைந்துள்ள மேற்பகுதியை முரித்து திருமாளிகையின் மேற்கூரையை நோக்கி எறிவர். 

(இதன் தாத்பர்யம் என்னவென்னில் கரும்பில் 14 கணுக்கள் அமைந்துள்ளன. முக்தனான சேதனன் ஈரேழு =14 லோகங்களைத் தாண்டுவதை இது குறிக்கிறது. அதற்கு மேல் தோகைபோல் வளைந்து காணப்படும் பகுதியை முறித்து மேல் நோக்கி எறிவதால், ப்ரஹ்ம கபாலம் பிளந்து கொண்டு வைகுண்டத்தை அடைகிறான் என்பதைக் குறிக்கும்). இவ்வாறு திருமால் அடியார்கள், யாருக்காக இந்த பெரியதிருவத்யயனம் நடத்தப்படுகிறதோ அந்த ஜீவன் முக்தியடைய வேண்டிக்கொள்கிறார்கள். ஓர் அடியவனின் வேண்டுதலால் பாகவதாபசாரம் முதலான பாபங்கள் அனைத்தும் நீங்கப்பெற்ற ஜீவன், (“அநாவ்ருத்திƒ†ப்3த3õத3நாவ்ருத்தி: †ப்3த3õத் - 4-4-22, முக்தன் ஸம்ஸாரத்திற்குத் திரும்பி வருவதில்லை;  

என்று வேதச்சொற்றொடர் அப்படிக் கூறுகையால்). பரமபதத்தை அடைகிறான்.

 பகவதபசாரத்திற்கு ப்ராயச்சித்தம் சுலபம். எம்பெருமான் என் அடியார் அது செய்யார் என்று தானே அந்த அபசாரத்தைப் போக்கி விடுகிறார் .

ஆசார்ய அபசாரமும், அந்த ஆசார்யனின் நற்குணங்களாலே தீர்ந்துவிடும். உயர் பிறப்பு, ஞானம், அனுஷ்டானம், நற்குணங்கள் பூரணமாயுள்ள ஆசார்யன், சீடனின் அபசாரங்களை பொறுத்து நற்கதியை அளித்திடுவார்.

 ஆனால் எக்குடியில் பிறந்திருந்தாலும், எத்தனை வித்யைகளை அறிந்ததிருந்தாலும், எத்தனை முறை எம்பெருமானை அச்சித்தாலும், பாகவதாபசாரம் செய்த ஒருவன் ஸந்நியாஸியாகவே இருந்தாலும் அவன் நற்கதியை அடையமாட்டான் என்று சாஸ்திரம் விதிக்கிறது. 

பரம வைதிகனாயிருந்தாலும் பாகவதாபசாரத்தால் முக்தியடைய தடை ஏற்படுமாகில், பெரியதிருவத்யயனம் (கரும்புவில்லும் குடமும்) உத்ஸவம் நடத்தி திருமால் அடியார்களை ஆராதிப்பதால் பாகவதாபசாரம் நீங்கி நற்கதியடைகிறான் என்பதனை ஸ்ரீபாஞ்சராத்திரம் கூறுகிறது. 
 

இந்த உத்ஸவத்தின், ஆழ்வார்கள் அருளிச்செய்த பிரபந்தங்களுள் திருவிருத்தம் எப்போது தொடங்கி சேவிக்கப்பெறுகிறது என்பது முன்பே கூறப்பட்டடுள்ளது. திருவிருத்தம் ஏன் சேவிக்கப் பெறுகிறது என்றால், “மாறி மாறி பல பிறப்பும் பிறந்து இறந்து ஸம்ஸாரம் என்னும் துன்பக்கடலில் தவிக்கும் ஜனங்களை, துக்கம் தொடராமல் மோக்ஷ ஸாம்ராஜயம் பெற வேண்டும் என்றால், திருவிருத்தத்தின் ஓரடியையாவது கற்றுக் கொள்ளுங்கள் என்பது திருவிருத்தத் தனியன் தரும் செய்தியாகும்.
 
மேலும் “மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே” என்று ஆழ்வார் அனுஸந்திப்பது, திருக்குருகூரிலே நிற்கின்ற வராசநாயனாரைப் பார்த்தே அவ்வாறு சொன்னார் என்று பொருள் கொள்ளலாம். ஏனெனில் திருக்குருகூரிலே வராகநாயனாரின் திருவருளுக்கு இலக்கானவர் நம்மாழ்வார். “மெய் நின்று கேட்டருளாய், மெய் விண்ணப்பத்தை” என்று அந்வயம் கொண்டால், உள்ளதை உள்ளபடி உரைக்கும் இந்த கூற்றை, திருமேனி வடிவோடே எங்கு அலைந்து திரியாது நின்றவண்ணம் கேட்டருளாய்” என்று ஆழ்வார் உரைப்பதாகக் கொள்ளலாம். 

(அதாவது ப்ரளய காலத்தில் மூழ்கிப்போன பூமியை மேற்கொணர்ந்தது போல், ஸம்ஸாரக்கடலில் அழுந்தும் என்னை ஈடேற்றுதற்கு தஞ்சமாக உன்னை பற்றியிருக்கிறேன் என்று ஞானப்பிரானைச் சரணடைகிறார் நம்மாழ்வார்). - “அஹம் ஸ்மராமி மத்3ப4க்தம் நயாமி பரமாம் க3திம்” - “என்னுடைய பக்தனை (அவன் சாகும் சமயத்தில்) நான் நினைக்கிறேன். மேலான கதிக்கு (அவனை நான்) அழைத்துச் செல்லுகிறேன்.) என்பது வராஹநாயனாரின் திருவாக்காகும். ஆதலால் மற்றைய இரண்டு சரம ச்லோகங்களிற் காட்டில், ‘வராஹ சரம ச்லோகமே’ முக்தியை சுலபமாக நல்குவதாகத் தேறுகிறது. 

 திருவிருத்தத்தின் முதலிலும் முடிவிலும் ஞானப்பிரானையே தஞ்சமாகப் பற்றியிருக்கிறார் நம்மாழ்வார். 

ஆதலால்தான் இந்த பிரபந்தத்தினை சேவித்து, வராக நாயனார் தஞ்சமாக அருளிய வார்த்தையை ஸ்மரித்து, “பரமபதித்த இந்த ஜீவனையும் திருவடிவாரங்களில் சேர்த்துக் கொள்வாய்” என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் திருவிருத்த சாற்றுமுறையிலே ப்ரார்த்தித்து, பெரியதிருவத்யயன உத்ஸவம் யாருக்காக நடத்தப் படுகிறதோ அந்த ஆத்மாவுக்கு நற்கதி அடைய வேண்டுகிறார்கள். எம்பெருமானும் அடியார்களின் வேண்டுகோளை செவிசாய்த்து நற்கதியளிக்கிறான். 

 இவ்வாறு அனைவரும் நற்கதி அடைய வேண்டும் என்கிற நோக்கில் பெரியதிருவத்யயன உத்ஸவத்தை இராமானுச தர்சனத்தைச் சார்ந்தவர்கள் தொன்றுதொட்டு நடத்தி வருகின்றனர்.

Thanks to
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ,ஸ்ரீரங்கம்.

Thursday 15 July 2021

🏵️ஆடி ஸ்பெஷல் !(17/7/21)🏵️



🏵️ஆடி மாத சிறப்புகள் தொடர்பான 40 குறிப்புகள் வருமாறு:-🏵️

1. 🏵️ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.

2. 🏵️இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம்.

3. 🏵️ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது.

4. 🏵️ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

5. 🏵️ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிகக் கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

6. 🏵️ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக உள்ளது.

7. 🏵️ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

8. 🏵️தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவுக்கு அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதத்துக்கு அம்மன் பக்தர்களிடம் தனி மரியாதை உண்டு.

9. 🏵️கேரளாவில் ஆடி மாதத்தை  இராமாயண மாத மாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.

10. 🏵️ஆடி அமாவாசை அன்று மறைந்த  
முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.
11.🏵️ ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாட நடைபெறும்.

12. 🏵️தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.

13. 🏵️ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக்  
தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும்.

14.🏵️ ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உப வாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

15. 🏵️ஆடி மாதம் கிராம தேவைதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

16. 🏵️ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

17. 🏵️ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

18. 🏵️கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதை அந்த பகுதி மக்கள் ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு என்று சொல்வார்கள்.

19. 🏵️ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

20. 🏵️ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.
21. 🏵️ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

22. 🏵️ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

23. 🏵️ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

24. 🏵️ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

25. 🏵️ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

26. 🏵️கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.

27. 🏵️ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

28.🏵️ தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி, ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

29. 🏵️ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.

30. 🏵️ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.
31. 🏵️ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

32. 🏵️ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

33. 🏵️அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதா சகஸ்ரநாமம் சொல்ல வேண்டும்.

34. 🏵️ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

35. 🏵️ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

36. 🏵️ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல் களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.

37. 🏵️ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

38. 🏵️ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

39. 🏵️ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

40.🏵️ பொதுவாகவே வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.
🏵️ஓம் சக்தி !🏵️ 🏵️பராசக்தி !🏵️

Wednesday 14 July 2021

ராம_நாம_மகிமை

Rama nama mahimai
1. நமக்கு நன்மை வரவேண்டுமானால் 'ராம நாமத்தை' இடைவிடாமல் கூறவேண்டும். நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் , வெளியேறுதலும் வேண்டும்.   

2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் , தண்டனையை ஏற்பதுவும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் 'ராம் ' என்றே நடக்கவேண்டும் .

3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜெபமே.' கிழக்கு நோக்கி செல்ல செல்ல மேற்கிலிருந்து விலகிடுவோம். அதுபோல ராம நாமாவில் கரைய கரைய துக்கத்திலிருந்து விலகிசெல்கிறோம்.

 4. ' ராம நாம' ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் 'ராம நாமமே ' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.

5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்லவேண்டியது 'ராம நாமம்.' எழுந்து கடமைகளை செய்யும்போதும் சொல்லவேண்டியதும் 'ராம நாமம்.' அந்த நாள் நமக்கு 'ராம நாம' நாளாக இருக்கவேண்டும்.

6. ' ராம நாம ' ஜெபத்தில் நாம் இருந்தால் , நமது கர்ம வினையின்படி ஏதேனும் துக்கமோ , அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு அது பாதிப்பு இன்றி மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும் வரும்,

7. எந்த இடத்திலும், எந்த நிலையிலும் 'ராம நாமா' சொல்லலாம். எங்கும் உணவு உண்ணுமுன் 'ராம நாமா' சொல்லிசாப்பிடலாம். இறைவனும் அவனது நாமாவும் ஒன்றே!  

8. 'ராம நாமா' எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால் 'ராம நாமா' சொல்ல மனம் மட்டும் போதும்.

இதைதான் "நா உண்டு, நாமா உண்டு" என்றனர் பெரியோர்கள் .

9. ஒரு வீட்டில் உள்ள பெண் 'ராம நாமா' சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். அந்த வீட்டினில் தெய்வீகம் நிறைந்துவிடும். அதுவே கோவிலாகும் .

10. எல்லாவித சாஸ்திர அறிவும் 'ராம நாமாவில் அடங்கும். எல்லாவித நோய்களுக்கும் 'ராம நாமா' சிறந்த மருந்து, துன்பங்களுக்கும் அதுவே முடிவு .

11. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அது 'ராம நாம ஜெபத்தால் பெற முடியும். 'ராம நாமாவினால் வினைகள் எரிந்து, எரிந்து நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கபடும்.

12. நமது பயணத்தில் பஸ்சிலோ, காரிலோ , ரயிலிலோ, பைக்கிலோ செல்லும்போதும் 'ராம நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும். 

காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது ( சப்தரிஷி பூஜையின் போது ) 
ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

 13. பெண்களின் மாதாந்திர நாட்களிலும் 'ராம நாமா' சொல்லுவதன் மூலம் அந்த பிரபஞ்ச சக்தியிடமே அடைக்கலமாகிறோம்.'ராம நாமா' சொல்ல எந்த ஒரு விதியும் இல்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.

பெண்கள் சமைக்கும்பொழுது ராம நாமம் சொல்லி சமைத்தால், அந்த உணவே ராம பிரசாதமாகி ......அதை உண்பவருக்கு தூய குணங்களையும் , நோயற்ற தன்மையையும் அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் பெறும். நோய்கள் இருப்பின் குணமாகும். 

14. வேதங்களின் படி ஒருவன் புண்ணிய நதிகளில் நீராடி பின்பு வேதம் கற்று, பூஜைகளை நியதிப்படி செய்தவனாய், யோகியாய் முந்தய ஜன்மங்களில் வாழ்ந்தவனாக இருந்தால், சுமார் 40,00,000 பிறவிகளை கடந்தவனாக இருந்தால் மட்டுமே அவனால் 'ராம நாமா' வை ஒரு முறை சொல்லமுடியும். 

15. 'ராம நாமாவை உரக்க சொல்லுங்கள். காற்றில்
  ராம நாம அதிர்வு பரவி, உங்களை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்குள்ளும் அந்த தூய அதிர்வு ஊடுருவி தூய்மை மற்றும் அமைதியை கேட்பவருக்கும் தரும்.

சுற்றியுள்ள மரம், செடி கொடிகள் , பறவைகள், விலங்குகள் எல்லாம் 'ராம நாமா' கேட்டு கேட்டு ..... அவைகளும் மிக உயர்ந்த பிறவிகளை பெறலாம். இதுவும் சேவையே! ..... யார் அறிவர்? நமது முந்தய பிறவிகளில் நாமும் 'ராம நாமா' கேட்டு கேட்டு இப்போதைய பிறவியினை பெற ஏதேனும் ஒரு பக்தரின் வீட்டருகில் மரமாய், ..செடியாய் ...பறவையாய் ....விலங்காய் இருந்தோமோ ! என்னவோ ........ அப்புண்ணிய பலனை ..... ராமனே அறிவான்.  

 'ராம நாமா' சொல்லும்பொழுது ஏற்படும் தூய அதிர்வானது காற்றில்
பதிந்துள்ள மனிதர்களின் தீய எண்ணங்களால் ஏற்பட்ட தீய அதிர்வுகளை ,தீய சக்திகளை....... .....நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.

 'ராம நாமா அதிர்வு நமது ரத்தத்தில் உள்ள DNA மற்றும் gene coding...இல் உள்ள குணங்களுக்கு காரணமான ........கோபம் , வெறுப்பு, பொய், பொறாமை , சூது, போன்ற தீய குணங்களின் தன்மைகளுக்கு காரணமான....gene coding யை அழித்து .........ராம நாம அதிர்வு ..........சாந்தம் , பொறுமை , பணிவு , உண்மை........ தூய்மைக்கு காரணமான ராமரின் குணங்களை ஏற்படுத்தும்.('யத் பாவோ தத் பவதி'--எதை நினைக்கிறாயோ அதுவே ஆகிறாய்!) 

 'ராம நாமா' சொல்ல சொல்ல .........பரப்ரம்மமே ஆகிவிடுகிறோம் .

அகில உலகையும் வியாபித்து காக்கும் விந்தை மிக்கதோர் நுண்ணிய சக்தியே " ராம் ".

அதுவே உருவம் கொண்டபோது , தசரத ராமனாக , சீதாராமானாக, ரகுராமனாக , கோதண்ட ராமனாக பெயருடன் ( நாம ரூபமாக ) வந்தது.

உண்மையில் சத்தியமாம் ஒரே உண்மை ராம் ஒருவனே. ராம் அனைத்திலும் உள்ளான், அனைத்தும் ராமில் உள்ளன. ராம் ஒருவனே உண்மையான , பேரன்பே வடிவான உணர்வுமய வஸ்து .........பிரம்மம் என்பதும் அவனே !

எண்ணம் , மனம் ,செயல் , உள்ளம் , உயிர் அனைத்தும் ராமில் ஒடுங்கவேண்டும். 

இடைவிடாது ராம நாமத்தை ஜெபித்து வந்தால் அழியா இன்பத்தை ராம் அருள்வான் என ஸ்வாமி பப்பா ராமதாஸ் தமது தந்தையிடம் உபதேசமும் பெற்று ராம நாமத்தில் கரைந்து ராம ரசமாய், அதன் மயமாய் தானே ஆனார்.

16. நமது ஒரே அடைக்கலம் 'ராம நாமா'. அதுவே நம்மை சம்சார சாகரத்தில் இருந்து 
 கரையேற்றும். பிறவித்தளையை அறுக்கும் .

17. மற்ற எல்லா தர்மங்களும் ஒன்று பாவத்தை நீக்கும் . மற்ற ஒன்று புண்ணியத்தை தரும். ஆனால் 'ராம நாமா' ஒன்றே பாவத்தை அறுத்து, புண்ணியமும் அர்ப்பணமாகி பாவ, புண்ணியமற்று ( நிச்சலதத்வம் .......ஜீவன்முக்தி ) முக்தி தரும்.

18. 'ராம நாமா' மட்டுமே நன்மையே கொண்டு வந்து தரும் . மருந்தின் தன்மை தெரியாமல் சாப்பிட்டாலும் அது நோயினை குணப்படுத்திவிடும். அது போல 'ராம நாமா' வும் சொல்ல சொல்ல பிறவி நோயை, துக்க நோயை , 
ஆசை என்ற சம்சார நோயை அழித்துவிடும்.

நன்றி : கிருஷ்ண ப்ரேமி அண்ணாவின் ' இறைவனின் நாம மகிமை '

19. நமது கைகளால் எது கொடுத்தாலும், அது நமது தலைவனாகிய ஸ்ரீ ராமனுக்கே ( எதிரில் உள்ள மனித வடிவில் உள்ள எஜமான் ஸ்ரீ ராமனுக்கே ) கொடுக்கிறோம். எது , எதனை எவரிடம் இருந்து பெற்றாலும் நமது அன்னையாகிய ஸ்ரீ ராமனே ( எதிரில் உள்ள மனித வடிவில் ) கருணையுடனும், அன்புடனும் நமது நன்மைக்காக தருகிறான். 

 இந்த உணர்வு பெருக, பெருக ஸ்ரீ ராமனே தந்து , வாங்குகிறான். ( எதிரில் உள்ள மனிதரை கவனிக்காமல் அவரின் ....அந்தராத்மவுடனே பேசுகிறோம்.......ராம்! அன்னையே இந்த உடலுள் இருந்து நீயே பேசி, இயங்கி, செயல்படுகிறாய் ......என வணங்க, நமஸ்கரிக்க ) .....கொடுப்பவன் ஸ்ரீ ராமன் ..........வாங்குபவன் ஸ்ரீ ராமன்.

20. 'ராம நாமா' சொல்ல , சொல்ல நிகழும் எல்லா செயல்களும் , நிகழ்ச்சிகளுக்கும் ' அந்த ஒன்றே !' காரணமாகிறது என்பதும் ...... எல்லாம் அந்த பிரம்மத்தின் விளையாட்டே !.......என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாய் உணரப்படும் .

21.'ராம நாமா' சொல்லச்சொல்ல ..........சொல்லுவதன் மூலம் ..... பார்ப்பது ராம் , பார்வை ராம், பார்க்கப்படுவது ராம், கேட்பது ராம், கேள்வி ராம், கேட்கபடுவது ராம், புலன்கள் ராம், உணர்வது ராம், உணரபடுவது ராம், உணர்வு ராம், இந்த பிரபஞ்சம் ராம், இந்த மனம் ராம் , புத்தி ராம், உடலும் ராம், ஆன்மா ராம், 24 தத்துவங்கள் ராம் , ..... .........நன்மை, தீமை , இன்பம் துன்பம் , எல்லாம் ராம் , எல்லாம் ராம் , எல்லாம் ராம்.

இத்தகைய .'ராம நாமா' வில் பைத்தியமாவதே ....அனைத்தும் .... ராமனாக .........ஆன்மாவாக ........
( ஏகாக்கிரக சித்தமாக ) அனைத்தும் ஒன்றாக அறிவதே உண்மையான அறிவு. அனைத்தும் ஒன்றாக ......ராமனாக ( ஆத்மா ராமனாக ) பார்ப்பதுவே ......... எல்லா எண்ணங்கள் ....... எல்லா செயல்கள் ........எல்லா உணர்ச்சிகளிலும் ...........இறை உணர்வை உணர்வதுவே ............ இந்த பிறவியின் பயனாகும்.

Monday 5 July 2021

மருதாணியின் மஹிமை

🔯🔯🔯🔯🔯🔯🔯
*மருதாணியும் அம்பிகையும்*

🌿🌿🌿🌿🌿🌿🌿

அம்பிகைக்கு உகந்த வாசனை பொருட்களில் ஒன்று மருதாணி ஆகும். வெறும் கைகளோடு பூஜை செய்வதை விட அம்பிகைக்கு உகந்த சிவப்பு வண்ணத்தோடும், நல்ல வாசனையோடும் நம் கைகளில் மருதாணி  வைத்து கொண்டு அம்பாளுக்கு தூப, தீப, ஆராதனைகள் செய்யும் போது தேவி இன்னும் மகிழ்கிறாள். மற்ற காலங்களில் வைத்து கொள்ளாவிட்டாலும் நவராத்ரி காலங்களில் ஆவது அவசியம் வைத்துக்கொண்டு பூஜிக்கலாம்.

சிறந்த அம்பாள் பக்தையாக விளங்கிய ஒரு பெண்மணிக்கு தனது கணவருக்கு வயிற்றில் ஏற்பட்ட பிரச்சனைக்கு மருத்துவமனை அணுக அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்றும் இருப்பினும் உயிர் பிழைப்பது கடினம் என்றும் தேதி வைத்துவிட்டனர். மிகவும் வருத்தப்பட அந்த பக்தை ஒரு ஸ்ரீவித்யா உபாசகரை நாடினார். அந்த பக்தையாக அம்பாளிடம் பிரார்த்தித்த உபாசகர் 5 வெள்ளிக்கிழமைகள் கோயிலுக்கு சென்று வரும் சுமங்கலி பெண்களுக்கு மருதாணி வைத்து வேண்டிகொள்ளுமாறு சொன்னார். 4 வெள்ளிக்கிழமைகள் செய்தானது. 5 ஆம் வாரம் ஆலயத்திற்கு சோதனையாக ஒருபெண்களும் வரவில்லை, பயந்த பக்தை அம்பாளை பிரார்த்தித்தாள். கருணை கொண்ட அம்பிகை சிறு பெண் (பாலா) ரூபத்தில் கோயிலுக்குள்  ஓடி வந்தாள். அக்கா எனக்கு மருதாணி வச்சிவிடறீங்களா? என கொஞ்சி மழலையாக கேட்டாள். சுமங்கலிக்கு தானே வைக்கவேண்டும், வந்ததோ சிறு பெண் என தயங்கிய பக்தை அம்பாள் மீது பாரத்தை போடு விட்டு, ஆடம் பிடித்த குழந்தைக்கு கைகளில் கொப்பி கொப்பியாக மருதாணி வைத்து விட்டு, நான் கொஞ்சம் மருதாணி தருகிறேன் நீ சென்று உன் அம்மாவுக்கும் வைத்து விடு என்று கேட்டுக்கொள்ள அப்படியே செய்யவதாக சொல்லிவிட்டு ஆலயம் விட்டு ஓடிவிட்டாள். வீட்டிற்கு வந்து அம்பாள் மீது பாரத்தை போடு விட்டு மறுநாள் அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டு, சோதனை செய்த போது மருத்துவர்கள் வியந்தனர், புற்றுநோயாக மாற இருந்த செல்கள் அனைத்தும் சாதாரண செல்களாக மாறிவிட்டதாகவும் அறுவை சிகிச்சை தேவையில்லை என்றும் கூறிவிட்டனர். வியந்த நன்றிப்பெருக்கோடு ஸ்ரீவித்யா உபாசகரிடம் சென்று சுவாமி நான் 5ஆம்வாரம்  பூர்த்தி செய்ய
முடியவில்லை சுமங்கலிக்கு வைக்கல. ஆனாலும் அம்பாள் திருவருள் மூலம் கணவர் நலம் பெற்றார் என்றார். அப்போது சிரித்த ஸ்ரீவித்யா உபாசகர், வந்தது சாஃஷாத் அம்பிகை தான் என்றும், அவளுக்கே மருதாணி வைக்கும் பெரும் பேறு உன் பக்தியால் கிடைத்தது என்று கூறினார். கண்ணீர் மல்க அம்பிகைக்கு நன்றி சொன்னார் அந்த பக்தை..

 நாமும் அம்பாளை பூஜிக்கும் தருணம் மருதாணி வைத்துக்கொள்ளலாம், நவராத்ரி காலங்களில் இல்லத்திற்கு வரும் பெண்களுக்கும் மருத்துவ குணம் நிறைந்த மருதாணி வைத்துவிடலாம். அம்பிகை அருள் பெறலாம்.. 

*மருதாணியின் மஹிமை*
 ஒருநாள் ஸ்ரீஇராமர், இராவணனை போர் செய்து கொன்றுவிட்டு சீதாதேவியை பத்திரமாக மீட்டார். அப்போது அன்னை சீதாதேவி ஸ்ரீஇராமரிடம், “இங்கு நான் இருந்த ஒவ்வொரு நாளிலும் என் கஷ்டங்களை காது கொடுத்து கேட்ட இந்த மருதாணி செடிக்கு ஏதாவது நாம் நன்மை செய்ய வேண்டும்.” என்று கூறி மருதாணி செடியிடம், “உனக்கு என்ன வரம் வேண்டும்.” என கேட்டாள்.

“எங்களுக்கு எதுவும் வேண்டாம். இன்று உன் முகத்தில் மகிழ்ச்சி தெரிகிறது. உன்னை போல அனைத்து பெண்களும் மகிழ்ச்சியாக இருந்தாலே எங்களுக்கும் மகிழ்ச்சிதான். அது போதும்.” என்றது மருதாணி செடி.
அதற்கு சீதை, “உன்னதமான உன் குணத்திற்கு நான் ஒரு வரம் தருகிறேன். உன்னை யார் பூஜிக்கிறார்களோ அல்லது யார் உன்னை கைகளில் வைத்துக்
கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கு சகல நன்மைகள் கிடைக்கும். அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.” என்ற வரத்தை தந்தார் சீதாபிராட்டி.

அதனால்தான் இன்றுவரை வடஇந்தியர்கள் திருமணத்திற்கு முந்தைய நாளில் மெஹந்தி விழா நடத்துகிறார்கள். இதன் காரணம், ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசி மணமகளுக்கும், திருமணத்தில் கலந்துக்கொள்ளும் உறவினர் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அத்துடன் மருதாணிக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மருதாணியை ஒருவர் கையில் வைக்கும் போது, மருதாணி வைக்கபட்ட கை சிவந்தால், எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும்.
அதனால்தான் இன்றும் சில கிராமபுரத்தில் உள்ள பெண்கள், தன் கையில் மருதாணி வைக்கும் படி தன் கணவரிடம் சொல்வாள்.மருதாணி வைத்த பிறகு அந்த பெண்ணின் கை நன்றாக சிவந்தால், தன் கணவர் தன் மேல் நல்ல பாசமாக இருக்கிறார் என்பதை புரிந்துக்கொள்வாளாம்.

வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்.


Sunday 4 July 2021

வாழ்வில் வளம் சேர்க்கும் விஷ்ணுபதி புண்ய காலம்

Thanks to : Miraclewoods

கடுமையான கஷ்டமா? கொடுமையான வாழ்க்கையா? பெரும் நஷ்டம் கடனா? வழிபடுங்கள் விஷ்ணு பதி புண்ய காலத்தில்
பெருமாள் கோவிலுக்கு சென்று கொடி மர நமஸ்காரம் செய்து 27 பூக்களை கையில் வைத்துக்கொண்டு 27 முறை பிரகார வலம் வாருங்கள்.
ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடிமரத்திற்கு முன் வையுங்கள்.
27 சுற்று முடித்த பின்பு மீண்டும் கொடிமர நமஸ்காரம் செய்யுங்கள்.
பின்பு தாயாரையும் பெருமாளையும் வழிபட்டு தங்களின் பிராத்தனைகளை மனமுருகி சொல்லுங்கள்.
தங்களின் நியாமான கோரிக்கை எதுவானாலும் அடுத்த மூன்று விஷ்ணுபதி காலம் முடிவடைவதற்குள் நிறைவேறியே தீரும்.நிறைவேறியே தீரும்
———————————
தமிழ் மாத கணக்கின்படி வைகாசி , ஆவணி, கார்த்திகை , மாசி மாதங்களில் முதல் தேதி விஷ்ணுபதி புண்ய காலம் வருகிறது. பன்னிரண்டு தமிழ் மாதங்களில் சித்திரை, ஆடி, ஐப்பசி, தை ஆகியவை பிரம்மாவுக்கு உரியவை. மாசி, வைகாசி, ஆவணி, கார்த்திகை ஆகியவை மகாவிஷ்ணுவுக்கு உரியவை. பங்குனி, ஆனி, புரட்டாசி, மார்கழி ஆகியவை சிவனுக்குரியவை . சிவனுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் ஷடசீதி புண்ணிய காலம். ஷடாங்கன் என்றால் சிவபெருமானைக் குறிக்கும். விஷ்ணுவுக்குரிய மாதங்கள் பிறக்கும் நேரம் விஷ்ணுபதி புண்ய காலம். பிரம்மாவுக்குரிய சித்திரை, ஐப்பசி, ஆடி, தை மாதம் பிறக்கும் காலங்கள் விஷு புண்ய காலம் எனப்படும்.
பொதுவாக திதிகளில் சிறந்ததான ஏகாதசி திதியைமகாவிஷ்ணுவிற்கு மிகவும்உகந்ததாக சாஸ்திரம் கூறுகிறது.ஏகாதசி அன்று ஒருவன் புரியும் பூஜைகளும் ,அனுஷ்டிக்கும் விரதமுறையும் அனைத்திலும் சிறந்த பலன்தருவதாகவும் கூறுவர்.
ஏகாதசியை விடவும் மிகவும் சிறந்த பலனைத் தர வல்லதுவிஷ்ணுபதி புண்யகாலம் ஆகும். மகாவிஷ்ணுவின் அருளும்கருணையும் மிகவும்அதிகமாகவும், பூரணமாகவும் துலங்கும்அரிதான நாளாக இந்த நாள் அமைந்து உள்ளது.
ஒவ்வொரு வருடமும் நான்கு விஷ்ணுபதி புண்ய காலங்கள்வருவது உண்டு. தமிழ் மாத கணக்கின்படி வைகாசி ,ஆவணி,கார்த்திகை,மாசி ,மாதங்களில் இந்த விஷ்ணுபதி புண்ய காலம்வருகிறது.
அன்றைய தினத்தில் காலை 6-45 மணியில் இருந்து மதியம் 12-21 மணிக்குள். இந்த புண்ய காலநேரம் வருகிறது.
இந்த புண்ய காலத்தில் நாம் மகாவிஷ்ணுவையும்,மஹாலக்ஷ்மியையும்மனதார வழிபாட்டு நமது எல்லாதேவைகளையும் , வேண்டுதல்களையும் கூறி பிரார்த்தனைபுரியலாம். ஸ்ரீ விஷ்ணு மற்றும் ஸ்ரீ தேவியினுடையதுதிகளை கூறிநமது சக்திக்கு இயன்ற பூஜைகளை குறைவற செய்யலாம்.முறைப்படி பூஜை செய்யத் தெரிந்தவர்கள் அவ்விதம் செய்யலாம் .அருகில்உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு அந்த குறிப்பிட்ட நேரத்தில்சென்று வழிபடலாம். துளசி பூஜை , கோ பூஜை மற்றும் ஸ்ரீதேவிக்குப்ப்ரீத்தியைத் தரக்கூடியகாரியங்களை எல்லாம் சக்திக்குத்தகுந்தவாறு செய்யலாம்.
அதே போன்று அன்றைய தினத்திலே, விரத நாட்களில் செய்யக்கூடாத செயல்களைத் தவிர்ப்பது நன்று.
ஒருவர் ஒரு முறை இந்த விஷ்ணுபதி புண்ய கால விரதத்தைஅனுஷ்டிப்பது , பல ஏகாதசி விரதங்களை அனுஷ்டிப்பதற்கு சமம்என சாஸ்திரங்கள்கூறுகின்றன.
எனவே அரிதான இந்த வாய்ப்பினைத் தவற விடாமல் இந்தவிரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் உலகாதாயமானதேவைகளையும் மகிழ்ச்சியானமற்றும் செல்வ செழிப்பு மிக்கவளமான வாழ்வினையும் பெற முடியும் என சாஸ்திரங்கள்கூறுகின்றன.மேலும் நமது அக வளர்ச்சி, ஆனந்தம் .ஆன்மிகமுன்னேற்றம் , மன அமைதி மற்றும் மோக்ஷத்தையும் தர வல்லதுஇந்த புண்ய காலம் ஆகும்.
எல்லோரும் இந்த புண்ய காலத்தை முழுமையாகக் கடைப் பிடித்துஸ்ரீ லக்ஷ்மி நாராயணனின் பூரண அருளைப் பெறுவோமாக!

Thursday 1 July 2021

ஸ்ரீ கிருஷ்ண கவசம் - கவிஞர் கண்ணதாசன்


*கண்ணதாசனின் "ஸ்ரீ கிருஷ்ண கவசம்' என்ற சிறிய புத்தகத்தில் உள்ளபடி:*
துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, நீண்ட ஆயுளை இறைவனிடம் வேண்ட, ஆன்மாவைச் சுற்றி ஒரு வேலி அமைத்துக்கொள்ள இந்த கவசத்தைத் தினமும் பாராயணம் செய்ய வேண்டும் என்று இப்புத்தகத்தின் முன்னுரையில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்

அகரம் முதலே அழியாப் பொருளே
ஆயர் குலமே நேயர் கரமே
இகமும் பரமும் இணையும் இடமே
ஈதல் பரமாம் இதயத் தவமே
உலகக் குடையே உயிரின் கலையே
ஊதும் குழலுள் வேதப் பொருளே
எரியும் கனலில் தெரியும் புனலே
ஏழை மனதில் வாழும் அருளே !
ஐயம் தீர்க்கும் அறிவுக் கதிரே
ஐவர் துணையே அன்புச் சிலையே
ஒளியே விழியே உயிரே வழியே
ஓடும் நதியில் பாடும் அலையே
அவ்வவ் உலகை ஆக்கும் நிலையே
அடியேன் சரணம் சரணம் சரணம் !
அறமே அறமே அறமே அறமே
திறமே திறமே திறமே திறமே

தவமே தவமே தவமே தவமே
வரமே வரமே வரமே வரமே
வேதம் விளையும் வித்தே விளையவே
நாதம் பொழியும் நலமே நிலமே
ஓதும் பொழுதே உடனே வருவாய்
உள்ளம் கேட்கும் வெள்ளம் தருவாய்
அறியாக் கவலை அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம்! கவசம்!

பொய்யா மொழியே பொங்கும் நிலவே
பூமிக் குடையின் காவற் பொருளே
பார்த்தன் பணியும் பாதம் காக்க
பாஞ்சஜன்யம் பக்தனை காக்க
மூடர்கள் தமையும் மோகனன் காக்க
முள்ளில் மலராய் முளைத்தோன் காக்க
வாடும் உயிரை மன்னவன் காக்க
தேடும் விழியைத் திருமால் காக்க

கேலிப் பொருளை கிருஷ்ணன் காக்க
கண்ணீர் நதியைக் கண்ணன் காக்க
துன்பம் என்றொரு சுமையைத் தீர்க்க
தூயோன் வருக ! துணையே தருக !
மாதர் கற்பும் மடவார் நோன்பும்
மாயோன் காக்க மலைபோல் வருக !
தகிடத் தகிடத் தகிடத் தகவென
தறிபடு துன்பம் தறிகெட ஓட

திகிடத் திகிடத் திகிடத் திகிடத்
திசைவரு கவலை பசை இலதாக !
துருவத் துருவத் துருவத் துருவிடத் 
தொலையாப் பொருளே அலையாய் வருக !
நிஷ்கா மத்தில் நிறைவோன் வருக
கர்ம சந்யாசக்களமே வருக !
ஞானம் யோகம் நல்குவன் வருக !
நல்லோர் வாழ்வில் நலமே நிறைக !

அடியேன் துயரம் அதிகம் அதிகம்
அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம் !
பொங்கும் வேலும் புண்ணாக் காது
பொருந்தும் துயரம் பொடிபடு மாறு
தாங்கும் தலைவன் தாமரைக் கண்ணன்
தாளில் விழுந்தேன் சரணம் சரணம் !
மதுசூதனனே மனிதன் சரணம் !
இருடீ கேச இயலான் சரணம் !

கீதா சாரிய கிருஷ்ணா சரணம் !
வேதா சாரிய வேந்தே சரணம் !
தேவகி மைந்தா சிறியேன் சரணம் !
யசோதா குமரா அடியேன் சரணம் !
உன்னை விட்டொரு உறவுகளில்லை
என்னை விட்டொரு இனியவனில்லை
நம்மை விட்டொரு நண்பர்களில்லை
நன்மையில் உன்போல் நாயகனில்லை

எங்கெங்கே நான் இருந்திடும் போதும் ,
அங்கங்கே நீ அருள் செய வருக !
கோசலை ஈன்ற குமரா வருக !
கோதையின் மாலை கொண்டவன் வருக !
ரகுவம்சத்தின் நாயகன் வருக !
யதுவம்சத்தின் யாதவன் வருக !
மதுவை வென்ற மாதவன் வருக !
மலைக்குடி கொண்ட மாலவன் வருக !

திருப்பதி யாளும் திருமால் வருக !
திருவரங்கத்துப் பெருமாள் வருக !
இராவணன் கொடுமை தீர்த்தாய் ; எமக்கும் இன்னருள் புரிக !
கம்சன் கொடுமை களைந்தோய் வருக !
காலனை வெல்லக் கைவலி தருக !
நெற்றியில் திருமண், நெஞ்சில் வைரம்,
காதில் குண்டலம், கையில் வில்லொடு

தண்டைக் காலில் சலங்கை குலுங்க
அண்டையில் வந்து அருளே புரிக !
கௌரவர் தம்மை களத்தில் வென்றாய்
கெளரவம் காக்க கண்ணா வருக !
பார்த்தன் மகிழப் பாடம் சொன்னாய்
படித்தவன் மகிழப் பரமே வருக !
மூன்று குணங்கள் முறையாய்க் கூறிய
சான்றோன் பாதம் தாவி யனைத்தேன்

சிக்கென உன்னைச் சேர்த்துப் பிடித்தேன்
பக்கென உந்தன் பாதம் பற்றினேன்
கொக்கென நின்று குறிவைத் திருந்தேன்
அக்கணம் வந்தாய் அடியில் விழுந்தேன் ;
இக்கணம் என்னை ஏங்க விடாமல்
தக்கவனே நீ தயவுடன் அருள்க !
கல்லாய்ப் போனவள் காலடி பட்டு
பெண்ணாய் ஆனது பிழையேயன்று !

உன்னால் தானே உலகம் இயக்கம் !
கண்ணனிலாமல் கடல்வான் ஏது ?
கண்ணனி லாமல் கடவுளுமில்லை 
கண்ணனிலாமல் கவிதையுமில்லை
கண்ணனிலாமல் காலமுமில்லை 
கண்ணனிலாவிடில் காற்றே இல்லை !
எத்தனை பிறவி எத்தனை பிறவி
அத்தனை பிறவியும் அடியேன் கொண்டால்

சத்திய நாதன் தாள்களை மறவேன்
தத்துவக் கண்ணன் தனிமுகம் மறவேன்
உன்னை நம்பி உனையே சேர்ந்தால்
பிறவிகளில்லை ; நீ பேசிய பேச்சு
உலகில் போதும் ஒருமுறை மூச்சு !
உன்னிடம் சேர்த்து உன்வடி வாக்கு !
இங்கே நாங்கள் இருக்கும் வரையில்
சங்கு முழங்கு தர்மம் நிலைக்க !

பிள்ளைகள் வாழ்க்கை பிழையா காமல்
மனையவள் வாழ்க்கை மாண்பு கெடாமல்
இல்லை என்றொரு நாளில் லாமல்
இன்னும் என்னும் ஆசை வராமல்
தொல்லை என்பது துளியுமில்லாமல்
தோற்றும் நோய்கள் பற்றி விடாமல்
முதுமைத் துயரம் மூண்டு விடாமல்
படுக்கையில் விழுந்து பரிதவிக்காமல்

சிந்தனை கெட்டுத் திறமையும் கெட்டு
நிந்தனை பெற்று நீங்கி விடாமல்
என்றும் பதினாறிளமை வழங்கு !
இப்பணி தொடர அற்புதம் காட்டு !
தளரா மேனியில் சக்தியைக் கூட்டு
தாய்போலிருந்து சாதம் ஊட்டு !
வாழ்ந்தால் இப்படி வாழ்வது நன்றென
ஊரார்க் கென்னை உதாரணம் காட்டு !

உலகில் ஒருவன் உத்தமன் இவனென
உயிர்கள் பேசிடும் ஒருநிலை கூட்டு !
சிறியவர் பெரியவர் வறியவர் செல்வர்
சரிசரி சரியெனத் தலையை யசைக்க
பொலி பொலி பொலியெனப் புகழும்விளங்க
மளமள மளவென மனையிருள் நீங்க
கலகல கலவென காசுகள் சேர
தளதள தளவென தர்மம் தழைக்க

வரவர வரவர வாய்ப்புகள் வாய்க்க
ரகுபதி பசுபதி நன்மைகள் அருள்க
ஐயா சரணம் சரணம் சரணம் !
அடியேன் வாழ்வில் நீயே கவசம் !
கவசம் கவசம் கவசம் கவசம் !
வந்தது வாழ்வில் மன்னவன் கவசம் !
கவசம் கவசம் கவசம் கவசம் ! 
வாழ்க்கை என்னும் கோபுரக் கலசம் !

அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம் 
அவனே துணையென அறிவோம் ! அறிவோம்!
அரிஓம் அரிஓம் அரிஓம் அரிஓம் 
அவனிடம் எதையும் தருவோம் தருவோம்
ஜெயஜெய ராமா ஜெயஜெய கிருஷ்ணா ...
ஜெயஜெய ஜெயஜெய 
ஜெயஜெய ஜெயஜெய
ஜெயஜெய ஜெயஜெய 
ஜெயஜெய ஜெயஜெய...

தென்குடி திட்டை ராஜகுருபகவான் வழிபாடு

தென்குடி திட்டை ராஜகுருபகவான் வழிபாடு இன்று 1/7/2021வியாழன் திருவடிகளை வணங்கி நல்ல உடல் நலம் , ஆரோக்கியம் , சகல க்ஷேமங்கள் ,தர  பிரார்த்திப்போம் .பின் சிவபெருமான் திருவடிகளில் சரணடையவும் வழி விடுமாறு நல்ல பார்வையே எப்போதும் பார்க்குமாறு வேண்டுவோம் !ஸ்ரீ நவகிரக வியாழ குரு பகவான் துணை
ஸ்ரீ நவகிரக வியாழ குரு பகவான் போற்றி

ஓம் அன்ன வாகனனே போற்றி

ஓம் அங்கிரஸ புத்ரனே போற்றி

ஓம் அபய கரத்தனே போற்றி

ஓம் அரசு சமித்தனே போற்றி

ஓம் அயன் அதிதேவதையனே போற்றி

ஓம் அலைவாயில் அருள்பவனே போற்றி

ஓம் அறிவனே போற்றி

ஓம் அறிவுக்கதிபதியே போற்றி

ஓம் அறக் காவலே போற்றி

ஓம் அரவகுலம் காத்தவனே போற்றி

ஓம் ஆண் கிரகமே போற்றி

ஓம் ஆணவமழிப்பவனே போற்றி

ஓம் இந்திரன் ப்ரத்யதிதேவதையனே போற்றி

ஓம் இருவாகனனே போற்றி

ஓம் ஈசனருள் பெற்றவனே போற்றி

ஓம் ஈரெண்ணாண்டாள்பவனே போற்றி

ஓம் உதித்தியன் சோதரனே போற்றி

ஓம் உபகிரகமுடையவனே போற்றி

ஓம் எண்பரித் தேரனே போற்றி

ஓம் எளியோர்க் காவலே போற்றி

ஓம் ஐந்தாமவனே போற்றி

ஓம் ஏடேந்தியவனே போற்றி

ஓம் கருணை உருவே போற்றி

ஓம் கற்பகத் தருவே போற்றி

ஓம் கடலை விரும்பியே போற்றி

ஓம் கமண்டலதாரியே போற்றி

ஓம் களங்கமிலானே போற்றி

ஓம் கசன் தந்தையே போற்றி

ஓம் கந்தனருள் பெற்றவனே போற்றி

ஓம் கடகராசி அதிபதியே போற்றி

ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி

ஓம் காக்கும் தேவனே போற்றி

ஓம் கிரகாதீசனே போற்றி

ஓம் கீர்த்தியருள்வோனே போற்றி

ஓம் குருவே போற்றி

ஓம் குருபரனே போற்றி

ஓம் குணசீலனே போற்றி

ஓம் குரு பகவானே போற்றி

ஓம் சதுர பீடனே போற்றி

ஓம் சஞ்சீவினி அறிந்தவனே போற்றி

ஓம் சான்றோனே போற்றி

ஓம் சாந்த மூர்த்தியே போற்றி

ஓம் சிறுமையழிப்பவனே போற்றி

ஓம் சின்முத்திரை ஹஸ்தனே போற்றி

ஓம் கராச்சாரியனே போற்றி

ஓம் சுப கிரகமே போற்றி

ஓம் செல்வமளிப்பவனே போற்றி

ஓம் செந்தூரில் உய்ந்தவனே போற்றி

ஓம் தங்கத் தேரனே போற்றி

ஓம் தனுர்ராசி அதிபதியே போற்றி

ஓம் தாரை மணாளனே போற்றி

ஓம் த்ரிலோகேசனே போற்றி

ஓம் திட்டைத் தேவனே போற்றி

ஓம் தீதழிப்பவனே போற்றி

ஓம் தூயவனே போற்றி

ஓம் துயர் துடைப்பவனே போற்றி

ஓம் தெளிவிப்பவனே போற்றி

ஓம் தேவ குருவே போற்றி

ஓம் தேவரமைச்சனே போற்றி

ஓம் தேவர்குலக் காவலனே போற்றி

ஓம் நற்குணனே போற்றி

ஓம் நல்லாசானே போற்றி

ஓம் நற்குரலோனே போற்றி

ஓம் நல்வாக்கருள்பவனே போற்றி

ஓம் நலமேயருள்பவனே போற்றி

ஓம் நாற்சக்கரத் தேரனே போற்றி

ஓம் நாற்கோணப் பீடனே போற்றி

ஓம் நாற்கரனே போற்றி

ஓம் நீதிகாரகனே போற்றி

ஓம் நீதிநூல் தந்தவனே போற்றி

ஓம் நேசனே போற்றி

ஓம் நெடியோனே போற்றி

ஓம் பரத்வாஜன் தந்தையே போற்றி

ஓம் பாடியில் அருள்பவனே போற்றி

ஓம் பிரஹஸ்பதியே போற்றி

ஓம் பிரமன் பெயரனே போற்றி

ஓம் பீதாம்பரனே போற்றி

ஓம் புத்ர காரகனே போற்றி

ஓம் புனர்வசு நாதனே போற்றி

ஓம் புஷ்பராகம் விரும்பியே போற்றி

ஓம் பூரட்டாதிபதியே போற்றி

ஓம் பொற்குடையனே போற்றி

ஓம் பொன்னாடையனே போற்றி

ஓம் பொன்மலர்ப் பிரியனே போற்றி

ஓம் பொன்னிற த்வஜனே போற்றி

ஓம் மணம் அருள்பவனே போற்றி

ஓம் மகவளிப்பவனே போற்றி

ஓம் மஞ்சள் வண்ணனே போற்றி

ஓம் மமதை மணாளனே போற்றி

ஓம் முல்லைப் பிரியனே போற்றி

ஓம் மீனராசி அதிபதியே போற்றி

ஓம் யானை வாகனனே போற்றி

ஓம் யோகசித்தி சோதரனே போற்றி

ஓம் ரவிக்கு உற்றவனே போற்றி

ஓம் ருத்ராட்சதாரியே போற்றி

ஓம் வடதிசையனே போற்றி

ஓம் வடநோக்கனே போற்றி

ஓம் வள்ளலே போற்றி

ஓம் வல்லவனே போற்றி

ஓம் வச்சிராயுதனே போற்றி

ஓம் வாகீசனே போற்றி

ஓம் விசாக நாதனே போற்றி

ஓம் வேதியனே போற்றி

ஓம் வேகச் சுழலோனே போற்றி

ஓம் வேண்டுவன ஈவோனே போற்றி

ஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றி

ஓம் வியாழனே போற்றி

சமீப காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள். அதே நேரத்தில் நவகிரகங்களில் ஒருவரான குரு பகவானை வழிபடுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு. குரு பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்வது சரிதானா? இவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள். அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர். நவகிரகங்களில் ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு. திசையின் அடிப்படையிலேயே இருவரும் வேறுபடுகின்றனர்.

அதே போல வியாழனுக்கு உரிய நிறம் மஞ்சள். இவருக்கு உரிய தானியம் கொண்டைக்கடலை. தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற ஆடையை உடுத்தியிருப்பவர். (‘ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம்…’ என்று உரைக்கிறது வேதம். ஸ்வேதம் என்றால் வெள்ளை நிறம் என்று பொருள்.) உண்மை நிலை இவ்வாறு இருக்க வியாழனுக்கு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள், ஞான குருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலைகளும் சாற்றுகிறார்கள். இது, தியானத்தில் ஆழ்ந்திருக்கும்

தட்சிணாமூர்த்திக்கு தொல்லை கொடுப்பது போல் அமைகிறது. ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை. வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தெளிவாகச் சொல்வதானால், வியாழக்கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குருவாக ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தட்சிணாமூர்த்தி. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார். இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று போற்றப்படுகிறார். அதே நேரத்தில் தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர் வியாழன் என்று அழைக்கப்படும் ப்ருஹஸ்பதி. ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர்.

ஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. வியாழ பகவானுக்கு உரிய அதிதேவதை மருத்வந்தன் என்றும், ப்ரத்யதி தேவதை பிரம்மா என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம். எந்த விதத்திலும் தட்சிணாமூர்த்தியோடு வியாழ (குரு) பகவானை சம்பந்தப்படுத்தி வேதத்திலோ, புராணங்களிலோ சொல்லப்படவில்லை. இந்த நிலையில் வியாழனுக்கு உரிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்தக்குழப்பத்திற்கு என்ன காரணம்? ஞானகுருவாம் தட்சிணா மூர்த்தியை வழிபடும் வகையில் பள்ளிக் குழந்தைகளும் இந்த ஸ்லோகத்தினை எளிதாகச் சொல்கிறார்கள்:

“ குருப்ரஹ்மா: குருர்விஷ்ணு: குரு தேவோ மஹேஸ்வர:

குரு சாக்ஷாத் பரப்ரஹ்ம தஸ்மைஸ்ரீ

குருவே நம: ’’

இந்த ஸ்லோகத்தில் இடம்பெறும் ‘குரு’ என்ற வார்த்தையை வைத்து குரு பகவானும் இவரும் ஒன்று என நினைத்திருக்கலாம். குரு பகவானுக்கு உரிய பரிகாரத் தலமாக ஆலங்குடி தட்சிணாமூர்த்தி ஸ்வாமி பிரபலம் அடைந்திருப்பதும் கூட காரணமாக இருக்கலாம். இறைவன் இட்ட பணியைச் செய்பவர்களே நவகிரகங்கள். ஒன்பது கோள்களுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு. இவர்களில் சுபகிரகமாகவும், வேண்டுகின்ற நன்மையைச் செய்பவராகவும் விளங்குபவர் வியாழ (குரு) பகவான். குரு பார்க்க கோடி நன் மை என்பது பழமொழி. ஜென்ம ராசியை குரு பார்த்தால் நினைத்த காரியம் கைகூடும்.

இந்த உலகத்தில் நாம் ஆனந்தமாய் வாழ்ந்திடத் தேவையான அனைத்து சுகங்களையும் அருள்பவர் குரு பகவான். குரு பலம் இருந்தால் திருமணம் நடைபெறும். குருவின் அனுக்ரகம் இருந்தால் பிள்ளைப்பேறு கிட்டும். திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம் கிட்டவும், உயர் கல்வியில் இடம் பிடிக்கவும் குருவின் அருள் வேண்டி பரிகாரம் செய்ய விழைகின்றனர். அவ்வாறு பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் இனி வரும் வியாழக்கிழமைகளிலும் நவகிரகங்களில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும் வியாழ பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றியும், கொண்டைக் கடலை மாலை அணிவித்தும் வழிபடலாம்.

கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்யம் செய்து வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். வியாழன்தோறும் விரதம் இருந்து வடக்கு முகமாய் நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம்.அதே நேரத்தில் ஞானமார்க்கத்தை நாடும் அன்பர்கள் தட்சிணாமூர்த்தியை வழிபடலாம்.

வியாழக்கிழமைதான் என்றில்லை, எந்த நாளிலும் அவரை வழிபடலாம். மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும் எந்த நேரத்தி லும் தட்சிணாமூர்த்தியின் சந்நதியில் அவருக்கு முன்பாக அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுங்கள். குழப்பங்கள் அகன்று மனம் தெளிவடையும். எனவே ஞான குரு வேறு, நவகிரக குரு வேறு என்ற உண்மையைப் புரிந்துகொள்வோம். அந்தந்த தேவதைகளுக்கு உரிய பரிகாரத்தைச் சரியாக செய்து முழுமையான பலனை அடைவோம்

ஸ்ரீ குரு பகவான் துணை