Saturday 16 April 2016

உலகிலேயே முதன்முதல் கடற்கரை மாநாடு நடந்தது ராமாயணத்தில்தான்!!


விபீஷணன் ராவணனிடத்தே தர்மத்தை உபதேசிக்கிறான்
ஆனால், விநாசகாலே விபரீத புத்தியல்லவா
விபீஷணனைக் கண்முன் நில்லாதே ஓடிவிடு என்கிறான்
ராவணன்.
சிறந்த தர்மாத்மாவான விபீஷணன் சேதுசமுத்திரக் கரையிலிருக்கும் ஸ்ரீராமனைச் சரண்புக வருகிறான்.
விபீஷணன் வந்திருப்பது ராமனுக்குச் சொல்லப்படுகிறது
அப்போது ஸ்ரீராமன் தன்னுடனிருக்கும இளையபெருமாள் லெஷ்மணன் ஜாம்பவான் ஸுக்ரீவன்
ஆஞ்சநேயன் முதலான அனைவருடனும் விபீஷணனை ஏற்பது பற்றி ஆலோசனை செய்கிறான்.
ராமன் தானே முடிவெடுத்து அதனை அறிவித்தால் யார் மறுக்கப் போகிறார்கள்.
ஆனால் ஸ்ரீராமனோ ராஜதர்மத்திலிருந்து பிறழாதவனல்லவா?
எல்லோரையும் கூட்டி கருத்தறிந்து முடிவெடுக்கிறான்.
எல்லோரும் விபீஷணன் ராவணனின் தம்பி என்பதாலும்
போர்மூளும் நேரத்தில் வந்திருப்பதாலும் ஏற்கத் தயக்கம் காட்டினர்.
கடைசியாக ஆஞ்சநேயன் கைகட்டி வாய் மறைத்து மிக பவ்யமாகத் தன் கருத்தை உரைக்கிறான்.
"அரக்கனென்றோ ,அண்ணனை விட்டு வந்தவனேன்றோ,
நல்லவன் போல நடிக்கிறானென்றோ கருதத் தேவையில்லை.
ஒருவனது உள்ளக்கிடக்கையை அவனது உடல்மொழியே காட்டிக் கொடுக்கும். இவன் உண்மையாகவே தர்மாத்மா
இவனது பெண் திரிசடை ஸீதாதேவிக்கு ஆதரவாக இருக்கிறாள்.விபீஷணனை நம்பலாம் ",என்றுரைத்தார்.
இதைக் கேட்டு ஆஞ்சநேயனை ஆரத் தழுவிய ராமன்
'நன்று சொன்னாய்'என்றுரைத்தான்.
பின்னர் "சரணம் என்று யார் வந்தாலும் ,ராவணனே வந்தாலும் அபயமளிப்பேன். இது என் வ்ரதம்"எனக் கூறி விபீஷணனனின் சரணாகதியை ஏற்று அவனைத் தழுவிக்கொண்டு நின்னொடு எழுவரானேன் என மகிழ்ந்தான்.
ஆக கடற்கரை மாநாடு இனிதே நடந்தது

வெள்ளைக்கார துரையை அதிர்ச்சியடைய வைத்த ஏரிகாத்த ராமர் கோவில்

ஸ்ரீ ராம ஜெயம்

செ ன்னை பேருந்துகளாலும், ரயில் போக்குவரத்தினாலும் வசதியாகச் செல்லுமாறு அமைந்த தலம். ஆதியில் வகுளாரண்யம் என்று பெயர் பெற்ற மகிழ மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாகத் திகழ்ந்தது. கிளியாறு என்ற ஆற்றின் கரையில் அமைந்துள்ள இது மதுராந்தகச் சோழரின் நினைவாக இப்பெயர் பெற்றதாகக் கூறுவர். மதுரமான (இனிமையான) பல புண்யதீர்த்தங்களையுடைய இடம் என்றும் பொருள் கொள்ளலாம். கல்வெட்டுக்களில் மதுராந்தக சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடப்பட்டுள்ள இவ்வூர் சோழ மன்னனால் வேதம் ஓதும் அந்தணர்களுக்கு மான்யமாக அளிக்கப்பட்டது.
விபண்டக மஹர்ஷி கிளியாற்றின் கரையில்
தவம் புரிந்தபோது ராமபிரான் வனவாசம் முடித்துத் திரும்பி அயோத்தி செல்லும் போது புஷ்பக விமானம் இத்தலத்தைக் கடக்க முடியாமல் நின்றது. ஸீதாபிராட்டியின் கையைப் பற்றி விமானத்திலிருந்து இறங்கி முனிவருக்கு ராமபிரான் காட்சி அளித்த இடமே இத்திருத்தலம். 5 நிலை கோபுரங்களுடன் கூடிய ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது இந்தத் தலம். ஆழ்வார்களில் பக்திசாரர் என்றழைக்கப்பட்ட திருமழிசை ஆழ்வார்முக்தி அடைந்த தலம் இதுவே. சுகர் என்ற மஹர்ஷியும் தவம் செய்த இடம் இதே மதுராந்தகம் தான்.
ஆசார்யர்களோடும் தொடர்பு பெற்று விளங்குகிறது இந்தத் தலம். வைணவ சித்தாந்தத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டிய ஸ்ரீ ராமானுஜருக்கு வைஷ்ணவ தீ¬க்ஷயாகிய ஸம்ஸ்காரங்கள் செய்யப்பட்டது இத்தலத்தில் உள்ள மகிழ மரத்தடியில் தான். மகிழ மரமே இந்தத் தல வ்ருக்ஷம். இதற்கு அதனால் த்வயம் விளைந்த பூமி என்ற பெயரும் உண்டு. 1967-ம்ஆண்டில் இக்கோவிலில் திருப்பணிகள் நடந்தபோது ஒரு சுரங்கத்தில் நவநீதக் கண்ணமூர்த்தியும், பஞ்சபாத்திரங்களும் சங்கு சக்ரங்களும் கிடைத்தன. இவை ராமானுஜரின் பஞ்சஸமஸ்காரத்திற்கு அவரது ஆசாரியர் பெரிய நம்பியால் உபயோகப்படுத்தப்பட்டவையாகும் என்பதால் இன்றும் அவை ராமானுஜரின் ஸந்நிதியில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த மதுராந்தகத்தில் உள்ள பெரிய ஏரியானது மழைக் காலங்களில் உடைத்துக்கொண்டு பெருத்த சேதத்தை விளைவித்துவந்தது. கிழக்கு இந்தியக் கம்பெனி கலெக்டராக இருந்த லயனல் பிளேஸ் பலமுறை கரையைச் சீர்படுத்தியும் பலனில்லை. எனவே 1825-ம் ஆண்டில் அவர் இம்முறை மழைகாலத்தில் ஏரி உடையாமல் இக்கோவிலில் உறையும் ராமர் காப்பாற்றினால் ஜனகவல்லித் தாயார் என்ற தாயாரின் ஸந்நிதையைக் கம்பெனி செலவிலேயே கட்டித் தருவதாக வாக்களித்தார்.
பெருமழை பெய்து ஏரி நிரம்பி வழிந்தபோது இரவில் ராமரும் லக்ஷ்மணரும் நடந்து சென்று அதனை உடையாமல் பாதுகாப்பதைக் கண்டு பரவசமடைந்த அந்த துரை ஜனகவல்லித் தாயார் ஸந்நிதியைக் கட்டிக் கொடுத்தார். இன்றும் தாயார் ஸந்நிதியில் கலெக்டரின் இந்தத் தர்மம் பற்றிய தகவல் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இதனால் இந்த தலத்து ராமபிரானை ஏரி காத்த ராமர் என்றே அழைக்க ஆரம்பித்தனர்.
கோவிலில் நின்றதிருக்கோலத்தில் மூலவராகக் கோதண்டராமர் கல்யாண கோலத்தில் ஸீதை, லக்ஷ்மணருடன் காட்சி தருகிறார். உற்சவ மூர்த்தியான கோதண்ட ராமர் சற்றுப் பெரிய வடிவினராக ஸீதை லக்ஷ்மணருடன் ஸேவை ஸாதிக்கிறார். மூலவர் விபாண்டக மஹர்ஷிக்கு ஸேவை தந்த கோலத்தில் பாணிக்கிரகண பாணியில் ஸீதையின் கையைப் பற்றிக் கொண்டுள்ளார். விபாண்டக மஹர்ஷியும் ஸந்நிதியில் எழுந்தருளியுள்ளார். சற்றே சிறய அளவில் உள்ள மற்றொரு உற்சவமூர்த்தியே கருணாகரப் பெருமாள். அவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி உள்ளார். இவரையே ராமபிரானாக விபாண்டக மஹர்ஷி ஆராதித்துத் தனக்குக் காட்சி அளிக்கும்படி வேண்டினாராம். கருணாகரப் பெருமாளின் நாச்சியாரே ஜனகவல்லித் தாயார். இவர் தனி ஸந்நிதியில் மூலவராகவும், உற்சவராகவும் உள்ளார். இவரது ஸந்நிதிதான் கலெக்டர் துரையால் கட்டிக் கொடுக்கப்பட்டது. எல்லா உற்சவங்களும் கருணாகரப் பெருமாளுக்கே. ஸ்ரீ ராமநவமி மஹோத்சவம் மட்டும் கோதண்ட ராமருக்கு. உற்சவ மூர்த்தி கண்ணன இவர் ஸந்நிதியில் உள்ளார்.
கோவிலின் கோபுரத்தில் வடகலைத் திருமண் அடையாளமும் ஸ்ரீராமா என்ற எழுத்துக்களும் பொலிவுடன் காட்சி அளிக்கின்றன. இங்கு அஹோபில மடத்தினரால் நடத்தப்படும் ஸம்ஸ்க்ருதக் கல்லூரியும், ஓரியண்டல் பள்ளியும் உள்ளன. ஆனிமாத ப்ரஹ்மோத்சவமும், பங்குனி மாதத் திருக்கல்யாண உத்சவமும், மார்கழி மாத அத்யயன உத்சவமும் இங்கு புகழ் பெற்றவை.
இது நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் சேராவிட்டாலும் மிகுந்த புகழ் பெற்றது.
ராம ராம ராம ராம ராம ராம ராம

ஸ்ரீ ராமரும், ராம நாம மகிமையும்... ஸ்ரீ ராம நவமி வரலாறு ....


அயோத்தி மற்றும் கோசலை ஆகியவற்றை
ஆண்ட அரசர் தசரதரின் மகன் மற்றும் விஷ்ணு பகவானின் அவதாரமாக அவதரித்த தெய்வீகத் தன்மை கொண்ட இராமபிரானின் பிறந்த நாளைக் கொண்டாடும் ஸ்ரீ ராம நவமி ஒரு இந்துப் பண்டிகை ஆகும்.
இராமாயணத்தில், அயோத்தியின் அப்போதைய அரசரான தசரதர், கோசலை, சுமித்ரா மற்றும் கைகேயி ஆகிய மூன்று மனைவிகள் . அவர்களது பெரும் கவலை அவர்களுக்கு குழந்தை இல்லை என்பதாக இருந்தது. மேலும் அதனால் அரியணையில் அமர்வதற்கு அவர்களுக்கு வாரிசு இல்லாமல் இருந்தது.
இதுகுறித்து தசரத சக்கரவர்த்தி,தன்னுடைய குலகுருவான "வசிஸ்ட மகரிஷியுடன்" வினவினார். வசிஷ்டமகரிஷி அவரிடம் புத்திர காமேஸ்டி யாகம் செய்யச் சொன்னார். அதன் மூலம் விரும்பிய குழந்தையைப் பெற முடியும். மேலும் அவர் அந்த யாகத்தைச் செய்வதற்காக மகரிஷி ருஷ்ய ஷ்ருங்கரையும் அழைத்துக் கொள்ளச் சொன்னார். உடனடியாக அரசர் தசரதர் அவருக்கு உடன்பட்டார்.
மேலும் மகரிஷி "ருஷ்ய ஷ்ருங்கரை"அழைப்பதற்காக அவரது ஆசிரமம் சென்றார். மகரிஷி அந்த யாகத்தை தசரதருடன் இணைந்து அயோத்தியில் செய்வதற்கு ஒத்துக் கொண்டார். அந்த யாகத்தின் விளைவாக யக்னேஸ்வரன் தோன்றி பாயசம் நிறைந்த ஒரு கிண்ணத்தைக் கொடுத்து அதனை அவரது மனைவிகளுக்குக் கொடுக்கும்படி தெரிவித்தார்.
தசரதர் அதில் பாதியளவு பாயசத்தை அவரது மூத்த மனைவி கோசலைக்கும், மற்றொரு பாதியை அவரது இளம் மனைவி கைகேயிக்கும் கொடுத்தார். அவர்கள் இருவரும் அவர்களது பங்கில் பாதியை சுமித்ராவுக்குக் கொடுத்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு மூன்று இராணிகளும் கர்ப்பமுற்றனர். சித்திரை மாதத்தின் ஒன்பதாம் நாளில் (நவமி), உச்சிவேளையில் கோசலை ஸ்ரீ இராம பிரானைப் பெற்றார், கைகேயி பரதனைப் பெற்றார் . சுமத்திரை லட்சுமணன் மற்றும் சத்ருகனன் என்ற இரட்டைக் குழந்தைகளைப் பெற்றார்.
"தாயிற் சிறந்த கோயிலுமில்லை;
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை…"
- என்பவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராமர். ஏக பத்தினி விரதனாகவும், அவதாரப் புருஷனாகவும் இருந்து வாழந்து காட்டியர்.
ஸ்ரீராமபிரான் அவதரித்த புண்ணிய நாளை ஸ்ரீராம நவமியாகக் கொண்டாடி வருகிறோம். அதர்மத்தை அழித்து நல்லோரைக் காக்கவே அவதாரங்கள் நிகழ்கின்றன. அந்த வகையில் மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீராமாவதாரம் ஆகும்.
சித்திரை மாதம், வளர்பிறை நவமியும், புனர் பூச நட்சத்திரமும் சேர்ந்திருக்கும் நாளே ஸ்ரீராமரின் அவதார தினம். ஸ்ரீராமர் பிறந்தபோது புனர்பூச நட்சத்திரம் 4-ஆம் பாதத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்தனவாம்.
இராம பிரான், விஷ்ணு பகவானின் ஏழாவது அவதாரம் ஆவார். அவர் அதர்மம் தர்மத்தை மீறிச் செல்லும் போது பூமியில் வந்து அவதரிப்பார். அவர் அதர்மத்தின் வேர்களைத் தோல்வியுறச் செய்வதன் மூலமாக அவரது அனைத்து பக்தர்களையும் காப்பார். இராம பிரான், இராவணன் என்ற அரக்கனை அழிப்பதற்காக பூமியில் அவதரிக்கப் போகிறார் என்பதையும்,
அசுரர்களின் கொடுமையிலிருந்து உலகைக் காப்பாற்றும் பொருட்டு மகாவிஷ்ணு ஸ்ரீராமராக அவதரிக்கப் போகிறார் என்பதை அறிந்த முனிவர்களும், தேவர்களும் ஸ்ரீராமனின் கர்ப்ப வாசத்தைக் கொண்டாடினர். அது கர்ப்போற்சவம் எனப்படுகிறது. ஸ்ரீராமர் பிறந்ததைக் கொண்டாடுவது ஜன்மோற்சவம் எனப்படுகிறது.
அது 'சுக்ல பட்ச' அல்லது வளர்பிறையில் சித்திரை மாதத்தில் ஒன்பதாம் நாள் வரும் நவமியில் வருகிறது. ஆகையால் சித்திரை மாத சுக்லபட்ச நவமி என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஒன்பதாம் நாளின்
இறுதியில் சித்திரை-நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
சில இடங்களில் நவராத்திரிகளின் அனைத்து ஒன்பது நாட்களும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆகையால் அந்த காலகட்டம் 'இராம நவராத்திரி' எனப்படுகிறது
ஸ்ரீ ராமர் இந்து இதிகாசமான இராமாயணத்தின் கதாநாயகன் ஆவார். இது தொடர் விவரக் குறிப்புகளான அகண்ட பாதம் மூலமாகக் குறிப்பிடப்படுகிறது.
அன்றைய தினத்தில் உத்திரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தி, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பத்ராச்சலம் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் ஆகிய இடங்களில் கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்த கோடிகளால் கூட்டம் நிரம்பும். மேலும் இராமர், அவரது மனைவி சீதா, தம்பி லட்சுமனன் மற்றும் பக்தர் ஹனுமான் ஆகியோரின் "ஷோப யாத்திரைகள்" எனவும் அறியப்படும். ரதயாத்திரைகள், தேர் ஊர்வலங்கள் பல்வேறு இடங்களில் நடைபெறும். அயோத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நதியாகக் கருதப்படும் "சரயு நதியில்" புனித நீராடுவார்கள்.
ஸ்ரீராம நவமி விழா பல இடங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்களை முன் பத்து எனவும்; பிறந்த தினத்திலிருந்து வரும் பத்து நாட்களைப் பின் பத்து எனவும் இருபது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர். பஜனைகள், இராமாயணச் சொற் பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.
ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், கானக வாழ்க்கை மேற்கொண்டிருந்த போதும்,
தாகத்திற்கு நீர் மோரும், பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவை இரண்டும் ஸ்ரீராமபிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
ஸ்ரீராம நவமி உற்சவத்தின்போது வட இந்தியாவில் அகண்ட ராமாயணம் என்னும் பெயரில் துளசி ராமாயணத்தைத் தொடர்ந்து ராகத்துடன் பாடுவர்.
ஸ்ரீராம நவமியன்று வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவார்கள். ஸ்ரீராமர் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிப்பார்கள்.
ஸ்ரீராம நவமியன்று ராமநாமம் சொல்வதும், ராமநாமம் எழுதுவதும் நற்பலனைத் தரும். பகவான் நாமம் இதயத்தைத் தூய்மைப்படுத்தி உலக ஆசைகள் என்னும் தீயை அணைக்கிறது. இறை ஞானத்தைத் தூண்டுகிறது. அறியாமை, காமம், தீய இயல்புகளைச் சுட்டுப் பொசுக்குகிறது. உணர்ந்தோ உணராமலோ உச்சரித்தாலே பகவான் அருள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் சிவ பெருமானே ராமன் புகழ் பாடும் ஒரு பலஸ்ருதி ஸ்லோகம் வருகிறது. இந்த ஸ்லோகத்தைப் படித்தால் சஹஸ்ரநாமத்தை முழுக்கப் படித்த பலன் உண்டு.
ஈஸ்வரோ உவாச
“ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோ ரமே
சஹஸ்ர நாம தத்துல்யம்
ராம நாம வரானனே”
என்பதே அந்த ஸ்லோகம்.
""பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணையானது ராம நாமம். நல்லது அனைத்தின் இருப்பிடமும் - இக்கலியுகத்தின் தோஷங்களைப் போக்குவதும் - தூய்மையைக் காட்டிலும் தூய்மையானதும் - மோட்ச மார்க்கத்தில் சாதகர்களின் வழித்துணையாகவும் - சான்றோர்களின் உயிர் நாடியாகவும் விளங்குவது “ராம” என்னும் தெய்வீக நாமம் ஆகும். இவ்வாறு முனிவர்கள் சொல்லுகிறார்கள்'' என சிவ பெருமான் பார்வதி தேவியிடம் ராம நாமத்தின் மகிமையை எடுத்துரைப்பதாகப் புராண வரலாறு கூறுகிறது.
மஹா விஷ்ணுவே ஸ்ரீஇராமன் அவதாரமானாலும், தான் மானுட அவதாரம் எடுத்ததால்,மனுஷனாகவே நடந்து, ஒரு மனிதன் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதற்கு உதாரண புருஷராக இருந்து, மகா நியாயவாதியாக, சத்தியம், தர்மம் கடைப்பிடிப்பவராக கடைசிவரைக்கும் வாழ்ந்து காட்டினார்.
தியாகராஜ சுவாமிகள் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவர். தெலுங்கில் பல கீர்த்தனங்கள் எழுதி இசை உலகுக்குப் பெருமை சேர்த்தவர். இராமனுடைய கதைச் சம்பவங்களை வைத்தே பல பாடல்கள் புனைந்துள்ளார். இராமனையும், ராம நாமத்தையும் சிறப்பித்துப் பல பாடல்கள் தானே ரசித்து, பாடி, தோத்தரித்திருக்கிறார்.
அவர் தன்னுடைய கீர்த்தனையில் ‘ராம என்பது மகாமந்திரம். அந்த மந்திரம், சைவாகமத்திற்கும், வைஷ்ணவாகமத்திற்கும் உரியது. இரண்டும் கலந்த சேர்க்கைதான் ராம மந்திரம்’ என்று விளக்கியிருக்கிறார். அவர் ராம நாமத்தை தொண்ணூற்று ஆறு கோடி வரை ஜபம் செய்தவராம். இராமபிரானையே தரிசனம் செய்த மகாபுண்ணியவான்.
‘இராமன்’ என்பது தெய்விகமான பெயர். அது ஆன்மிகமானதும், பரிசுத்தமானதும், உயர்வானதுமான பெயராகும். வசிஷ்டமகரிஷி எப்போதும் ராம நாமத்தை உச்சரிப்பதால் தான் இராமருக்கே அப்பெயரைச் சூட்டினாராம். அதே போல் இராம நாமமும் தெய்விகமும் ஆன்மிகமும் புனிதமும் உடைய பரிசுத்த தாரக மந்திரம்.
அதனால்தான் வாழ்க்கை நடைமுறையில் ‘ராம’ நாமத்தை தினம் எழுதுவதும் ஆஞ்சனேயர் பாதங்களில் சமர்ப்பிப்பதும், மாலையாகப் போடுவதும், கோடி நாமாக்கள் எழுதுவதும் இன்று நடைமுறையாக இருப்பதிலிருந்தே ராமநாம மந்திர மகிமை புரியும்.
ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம்

ராமாயணம் முழுவதையும் படிக்க முடியாதவர்கள்

ராமாயணம் முழுவதையும் படிக்க முடியாதவர்கள் கீழ்க்கண்ட ஒன்பது வரிகளை மட்டும் பக்தியுடன் பாராயணம் செய்தால் ராமாயணத்தைப் படித்த முழு பலனும் கிடைக்கும். மேலும், சகல நல்ல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வ மங்கல கார்யானு கூலம்
சததம் ஸ்ரீராமசந்த்ரம் பாலயமாம்

இந்த ஒன்பது வரிகளை தினமும் பாராயணம் செய்தால் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும் என்பது நம்பிக்கை.
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

Wednesday 13 April 2016

ஶ்ரீஹயக்ரீவரின் அனுக்ரகத்தை அள்ளித்தரப் போகும் - துர்முகி



14/4/2016 வியாழக்கிழமை பிறக்கிறது. "துர்முகி" என்ற பெயர் தாங்கி வருகிறதே, அது எப்படியிருக்குமோ என்று கலங்க வேண்டியதில்லை. "துர்முகி" என்றிருக்கிறதே என்ற அச்சமும் பலருக்கு! ஒவ்வோரு தமிழ்ப்புத்தாண்டின் பெயரிலும் ஒவ்வொரு சூட்சமம் அடங்கியுள்ளது. 

துர்முகி புத்தாண்டின் பெயரில் தான் அப்படி என்ன சூட்சமம் உள்ளது என்பதை கூறுகிறேன். "துர்முக" என்றால் குதிரை என்று அர்த்தம். துர்முகி தமிழ்ப்புத்தாண்டு முழுவதும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ளது. சுக்கிரனுக்கு அடுத்ததாக ஆதிக்கமும், அதிகாரமும் பெறுவது, கல்விக்கு அதிபதியான புதன் பகவான். புதனின் அதிதேவதை ஶ்ரீஹயக்ரீவர். ஞானம், கல்வி, அறிவாற்றல், நினைவாற்றல், ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றை அளிப்பவர் இவர்தான். 

இந்த துர்முகி ஆண்டு முழுவதும் ஶ்ரீ ஹயக்ரீவரின் சக்தியே மக்களுக்குத் துணையிருந்து வழிகாட்ட இருப்பதால், ஶ்ரீஹயக்ரீவ பகவானின் பெண்ணாகிய இப்புத்தாண்டிற்கு "துர்முகி" என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அதாவது, பரி (குதிரை) முகத்தைத் கொண்டுள்ள ஶ்ரீஹயக்ரீவரின் அனுக்ரகத்தை அள்ளித்தரப் போகும் ஆண்டாகத் திகழப் போவதை துர்முகி என்ற பெயர் சூட்சம்மாக எடுத்துக்காட்டுகிறது.

தமிழ்ப் புத்தாண்டு என்னும் விஷூ புண்யகாலம்....

thanks to :
Sathasivam Bhaheethetran
நாளை தொடங்கும் "துன்முகி" வருஷம்.
எந்த மாதத்திலும் இல்லாத சிறப்பு சித்திரைக்கு மட்டும் உண்டு. சித்திரையில் மட்டும் அப்படி என்ன விஷேசம்? சித்திரை முதல் நாளுக்கு உள்ள முக்கியமானதும் முதன்மையானதும் சிறப்பு சித்திரை வருடப் பிறப்பு.
தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி,ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது.
தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன.
ஏன் என்றால், இம் மாதங்கள்,பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற,சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன.
இராசிச் சக்கரத்தில் மேஷ ராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும்.
சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும்.
சித்திரை முதல் மாதம் என்பதால்,இதுவே புதிய
ஆண்டின் தொடக்கமும் ஆகும்.இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
புதிய எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்து மங்களகரமான திருநாளாக சித்திரைப் புதுவருடம் வரவேற்கப்படுகிறது.சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம்’ என்னும் வசந்த காலம் தொடங்குகிறது.
வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது.
தமிழ்ப் புத்தாண்டு என்று நாம் சொல்லும் வருஷப் பிறப்பு, உலகத்துக்கே பிறந்த நாள் ஆகும். உலகம் என்றால் மக்கள் சமூகம் மற்றும் பிற உயிரினங்களும் சேர்ந்த ஒரு தொகுப்பாகும். இவை அனைத்தும் தோன்றிய நாள் உலகத்துக்குப் பிறந்த நாள் ஆகிறது. அந்தப் பிறந்த நாள் முதற்கொண்டு சதுர்யுகங்கள் கணக்கிடப்பட ஆரம்பித்தன.
அன்றைக்கு சூரியன் உள்ளிட்ட அனைத்து கிரகங்களும், (ராகு, கேது நீங்கலாக) மேஷ ராசியில் பூஜ்யம் பகையில் இருந்தன. அந்த இடத்தில் ஆரம்பித்து விண் வெளி மண்டலத்தை ஒரு முறை சுற்றி வர சூரியன் எடுத்துக் கொள்ளும் காலம் ஒரு வருடம் என்பதாகும். விண்வெளி மண்டலம் வட்ட வடிவமாக இருக்கவே, அதில் 360 பாகைகள் உள்ளன. அவற்றை 12 ஆகப் பிரித்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதமாகக் கணக்கிடப்படுகிறது. அதாவது 30 பாகை கொண்டது ஒரு மாதமாகும். 12 மாதங்கள் கொண்டது ஒரு வருடமாகும். இந்தப் பயணம் ஆரம்பித்த நாளை வருஷப் பிறப்பு என்று வழி வழியாகக் கொண்டாடி வந்திருக்கின்றனர்.
சித்திரையில் வரும் மேஷ ராசி தொடங்கி கால புருஷன் இயங்குகிறான். மக்கள் வாழ்க்கை, பிறப்பு, இறப்பு என எல்லாவற்றையும் இயக்குகிறவன் இந்தக் கால புருஷன் ஆவான். மக்களை ஆள்வதால் வருடத்துக்கு “ஆண்டு” என்று பெயர். 12 மாதங்களும் அந்த கால புருஷனின் உடல் உறுப்புகளாகச் சித்தரிக்கப்படுகின்றன.
மனிதனைப் பீடிக்கும் நோய் நொடி போன்றவை எல்லாம் அந்தந்த மாதத்தில்,அந்தந்த உறுப்புகளில் ஏற்படுகிறது. வெயில் அதிகமான சித்திரையில், அவனது தலை இருக்கிறது. வெயில் காரணமாக வரும் தலை வலி, மயக்கம் போன்றவை பீடிக்கும் மாதம் அது. தை மாதம் என்பது கால புருஷனது கால் முட்டியாகும். தை மாதக் குளிரில் மூட்டு நோய், முட்டி வலி போன்றவை அதிகரிக்கும். மேலும், தலையிலிருந்துதான் வருடம் ஆரம்பிக்க வேண்டும். தை மாதத்தில் வருடப் பிறப்பென்றால், முட்டியிலிருந்து ஆரம்பிக்கும். அது சரியல்ல.
கிரக அவஸ்தைகள் என்று ஜோதிடத்தில் உண்டு. ஒரு ராசியில் இருக்கும் 30 பாகைகளை 5 பாகங்களாகப் பகுப்பார்கள். ஒரு ராசியின் 0 பாகம் ஆரம்பித்து பாலன், குமாரன், இளைஞன், முதியவன், மரணம் என்று ராசியைச் சமமாகப் பகுப்பார்கள். ஒரு கிரகம் அவற்றுள் எங்கு இருக்கிறதோ அதைப் பொறுத்து அந்தக் கிரகம் பலனைக் கொடுக்கும். முதியவன், மரணம் போன்ற பாகைகளில் அது நல்ல பலனைக் கொடுக்காது.
இந்த முறை ஆண் ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் முதலிய ராசிகளுக்குப் பொருந்தும். மீதி ராசிகளான பெண் ராசிகளில் தலைகீழாகப் பலன்கள் தரும்.. அதாவது மரணம் தொடங்கி, பாலன் வரை பலன்கள் தரும். சித்திரை மாதம் ஆண் ராசியில் வருகிறது. அதன் 0 பாகையில் சூரியன் நுழையும் போது பாலன் என்றாகி மேலும் மேலும் வளர்ச்சியைக் கொடுக்கும். ஆனால் தை மாதம் பெண் ராசியான மகர ராசியாகும். அங்கு சூரியன் நுழையும் போது மரணகண்டத்தில் ஆரம்பிக்கும். .
· தை மாதம் துவங்கும் மகர ராசியில், சூரியன் நுழையும்போது இருக்கும் கரணம், ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. “கரணாத் காரிய சித்தி” என்பார்கள். அப்பொழுது இருக்கும் கரணத்தின் அடிப்படையில், எடுத்த காரியம் நடக்குமா என்று
மட்டுமே கணிக்க முடியும்.
ஆனால் சித்திரை மாதம் மேஷ ராசியில் சூரியன் நுழையும் நேரம் ‘ஜக லக்னம்’ எனப்படுகிறது. உலகத்தின் லக்னம் என்பது பொருள். உலக நடப்புகளை அதைக் கொண்டுதான் சொல்ல முடியும். சாதாரண மக்களுக்குப் பிறந்த லக்னமும், சந்திர லக்னமும் முக்கியம். அது போல உலகத்துக்குச் சூரிய லக்னம் முக்கியம். அதைக் கொண்டு ஒரு நாட்டுக்குப் பலன் சொல்ல முடியும்.
‘நவ நாயகர்கள்’ என்று ஒரு ‘மந்திரி சபையே’ சித்திரை வருஷப் பிறப்பின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. அதனால் பஞ்சாங்கம் படிப்பது வருஷப்பிறப்பின் முக்கிய அம்சமாகும். சித்திரை வருஷப் பிறப்பில் பஞ்சாங்கம் படிக்காமல், தை மாதப் பிறப்பின் போது எப்படிப் பஞ்சாங்கம் படிக்க முடியும்?
சித்திரை வருஷப் பிறப்பைப் பொறுத்தே, நாடு, மக்கள்,
பிற உயிரினங்கள், விலை வாசி, விவசாயம், செல்வப் பெருக்கு என்று எல்லாவற்றையும் கணிக்க முடியும். முற்காலத்தில் ராஜாக்கள் சித்திரை வருஷப் பிறப்பின் போது பயபக்தியுடன் கடவுளை வழிபட்டு, பஞ்சாங்கப் பலனைக் கேட்டார்கள். அந்தப் பலன்களின் அடிப்படையில், நாடு நலம் பெற,என்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்.
இந்தியாவில் பஞ்சாப் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் "விஷூ" போன்ற பண்டிகையை அதே நாளில் கொண்டாடுகின்றனர். அஸ்ஸாமில் பிஹூ என்றும், பஞ்சாபில் "பைசாகி" (ஆதியில் வைஷாகி) என்றும் தமிழ்நாட்டில் தமிழ்ப் புத்தாண்டு அல்லது விஷூ புண்யகாலம் என்று அழைக்கப்படுகிறது. கர்நாடகத்தில் துளுவர்களும் "பிசு" என்ற பண்டிகையை இதே நாளில் கொண்டாடுகின்றனர்.

சித்திரை அவதரித்தோர்

மஹா விஷ்ணுவின் தசாவதாரங்களில், இரண்டு அவதரங்களுக்கு இடம்கொடுக்கும் பெருமை, சித்திரைக்கு உள்ளது. சித்திரைமாதம் சுக்ல நவமி, "ஸ்ரீ ராம நவமி" ஸ்ரீராமபிரானின்ஜன்ம தினம் என்பது தெரியும். மற்றொரு அவதாரம்? முதல் அவதாரமான மத்ஸ்ய அவதாரம்! சித்திரை மாதம் சுக்ல பஞ்சமியில், மீன் வடிவில் அவதாரம் எடுத்து, பிரளயத்திலிருந்து உலகை மீட்டு, உயிர்கள் மீண்டும் தோன்ற வழி செய்தார் பகவான்.
சித்திரையின் சீர்மிகு விழாக்கள்
திருக்கோயில்களின் விழாக்கள், மிகவும் கோலாகலமாக நடைபெறும் மாதமும் சித்திரையாகும். மதுரை மாநகரில் அருள்மிகு மீனாட்சியம்மன் ஆலயத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவும், அதன் உள்நிகழ்வுகளான அம்பாள் பட்டாபிஷேகம், மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் போன்றவையும் உலகப் பிரசித்தம். அழகர் மலை கள்ளழகருக்குச் சித்திரையில் பிரம்மோற்சவம். அழகர் உலா புறப்பட்டு, வைகை ஆற்றில் இறங்கி, அகிலத்தோர் எல்லோருக்கும் அருள்பாலிப்பார்.
ஆழித்தேருக்குப் பெயர்போன திருவாரூர் தேர்த் திருவிழா சித்திரை மாதத்தில் நடைபெறுவது வழக்கம்
(சில பல காரணங்களால் இப்போது இது மாறக்கூடும்). சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் தேரோட்டமும் இம்மாதத்தில்தான். பற்பல திருத்தலங்களில் தேரோட்டம் சித்திரையில் நடைபெறும்.
வைணவத் திருக்கோயில்கள் பலவற்றிலும், சித்திரை மாதம், விமரிசையான கொண்டாட்ட காலம். ஸ்ரீவில்லிபுத்தூரில், பத்து நாள் விழா கண்டு, சித்திரா பவுர்ணமி நாளில் (அ)ரங்கமன்னாரோடு ஆண்டாள் நாச்சியார் தேரில் பவனி வருவாள்.

சித்திராப்பௌர்ணமி அன்று ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள்
(அரங்கனும்) காவிரியில் இறங்கி,கஜேந்திரமோக்ஷம் என்னும் சிறப்பான வைபவம் நடைபெறும்.

சித்திரா பவுர்ணமி நாளில், சிவபெருமானை வழிபடுவதும் வெகு சிறப்பு. மருக்கொழுந்து அபிஷேகம் செய்து, வெள்ளை வஸ்திரம் சாற்றி, சுத்தான்னம் (வெண் சாதம்) படைத்து வழிபட்டால், சகல ஐச்வரியங்களும் கிட்டும். திருநெல்வேலிப் பகுதிக்கே உரித்தான சித்ரா நதியில் நீராடி (அதுதான், நம்ம குற்றாலம் அருவியின் தோற்றுவாய் ஆறு) விரதமிருந்து திருக்குற்றால நாதரை வழிபடுவதும் விசேஷமானது.
சித்திரை மாதம் மிருக சீர்ஷ நட்சத்திரத்தில் தான் எம்பெருமானின் "பலராம" அவதாரம் நிகழ்ந்தது.சித்திரை மாதம் வளர்பிறை "திருதீயை" திதியே "அக்ஷய திருதீயை"
என்று கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில் அரங்கனும் இந்த சித்திரை மாதத்தில் "பிரம்மோற்சவம்" கண்டருளி, சித்திரை மாதம் ரேவதி நக்ஷத்திரத்தில் அரங்கத்தில் ஸ்ரீரங்கநாதன் "கோவிந்தா கோவிந்தா" என்னும் கோஷம் விண்ணை முட்ட "திருத்தேரில்" வலம் வருவார்.
ஆழ்வார்களில் மதுரகவியாழ்வார் அவதரித்தது இதே சித்திரை மாதம் சித்திரை நக்ஷத்திரமே ஆகும்.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

16 லட்சுமிகளும்அவர்களின்சிறப்புக்களும்!!


எட்டுவகையானலட்சுமிகளைத்தான்நாம்கேள்விப்பட்டிருப்போம். உண்மையில்பதினாறு (16) வகைலட்சுமிகள்உண்டு. அந்தபதினாறு (16) வகையானலட்சுமிகளின்பெயர்களும், அவர்களின்சிறப்புக்களும்!
1. ஸ்ரீதனலட்சுமி:-
நாம்எல்லாஉயிர்களிடத்திலும்அன்புடன்இருக்கவேண்டும், போதும்என்றமனதோடுநேர்மையுடன்வாழ்ந்தால்தனலட்சுமியின்அருளைபரிபூரணமாகப்பெறலாம்.
2. ஸ்ரீவித்யாலட்சுமி:-
எல்லாஉயிரினங்களிலும்தேவியானவள்புத்திஉருவில்இருப்பதால்நாம்நம்புத்தியைநல்லமுறையில்பயன்படுத்தவேண்டும். அன்பாகவும், இனிமையாகவும்பேசவேண்டும். யார்மனதையும்புண்படுத்தாமல்நடந்துகொண்டால்ஸ்ரீவித்யாலட்சுமியின்அருளைப்பெறலாம்.
3. ஸ்ரீதான்யலட்சுமி:-
ஸ்ரீதேவியானவள்பசிநீக்கும்தான்யஉருவில்இருப்பதால்பசியோடு, நம்வீட்டிற்குவருபவர்களுக்குஉணவளித்துஉபசரித்தல்வேண்டும். தானத்தில்சிறந்தஅன்னதானத்தைச்செய்துஸ்ரீதான்யட்சுமியின்அருளைநிச்சயம்பெறலாம்.
4. ஸ்ரீவரலட்சுமி:-
உடல்பலம்மட்டும்வீரமாகாதுமனதில்உறுதிவேண்டும், ஒவ்வொருவரும்தாங்கள்செய்ததவறுகளையும்பாவங்களையும்தைரியமாகஒப்புக்கொள்ளவேண்டும், நம்மால்பாதிக்கப்பட்டவர்களிடம்மன்னிப்புகேட்கவேண்டும், செய்தபாவங்களுக்காகமனம்வருந்தி, இனிதவறுசெய்யமாட்டேன்என்றமனஉறுதியுடன்ஸ்ரீவரலட்சுமியைவேண்டினால்நன்மைஉண்டாகும்.
5. ஸ்ரீசவுபாக்யலட்சுமி:-
ஸ்ரீதேவிஎங்கும்எதிலும்மகிழ்ச்சிஉருவில்இருக்கின்றாள். நாம்எப்பொழுதும்மகிழ்ச்சியாகஇருந்துகொண்டுமறற்றவர்களின்மகிழ்ச்சிக்கும்காரணமாகஇருக்கவேண்டும். பிறர்மனதுநோகாமல்நடந்தால்சவுபாக்கியலட்சுமியின்அருளைப்பெற்றுமகிழலாம்.
6. ஸ்ரீசந்தானலட்சுமி:-
எல்லாகுழந்தைகளையும்தன்குழந்தையாகபாவிக்கும்தாய்மைஉணர்வுஎல்லோருக்கும்வேண்டும். தாயன்புடன்ஸ்ரீசந்தானலட்சுமியைதுதித்தால்நிச்சயம்பலன்உண்டு.
7. ஸ்ரீகாருண்யலட்சுமி:-
எல்லாஉயிர்களிடமும்கருணையோடுபழகவேண்டும், உயிர்வதைகூடாது, உயிர்களைஅழிக்கநமக்குஉரிமைஇல்லை, ஜீவகாருண்யஒழுக்கத்தைகடைபிடித்தால்ஸ்ரீகாருண்யலட்சுமியின்அருளைப்பெறலாம்.
8. ஸ்ரீமகாலட்சுமி:-
நாம்நம்மால்முடிந்ததைமற்றவர்களுக்குகொடுக்கவேண்டும்என்றுமேநம்உள்ளத்தில்உதவவேண்டும்என்றஎண்ணம்உறுதியாகஇருந்தால்நமக்குஒருகுறையும்வராது. மேலும்ஸ்ரீமகாலட்சுமிநம்மைபிறருக்குகொடுத்துஉதவும்படியாகநிறைந்தசெல்வங்களைவழங்குவாள்.
9. ஸ்ரீசக்திலட்சுமி:-
எந்தவேலையும்என்னால்முடியாதுஎன்றசொல்லாமல்எதையும்சிந்தித்துநம்மால்முடியும்என்றநம்பிக்கையுடன்செய்தால்ஸ்ரீசக்திலட்சுமிநமக்குஎன்றும்சக்தியைக்கொடுப்பாள்.
10. ஸ்ரீசாந்திலட்சுமி:-
நாம்ஒவ்வொருவரும்வாழ்வில்வரும்இன்பதுன்பங்களைசமமாகபாவித்துவாழபழகவேண்டும். நிம்மதிஎன்பதுவெளியில்இல்லை. நம்மனதைஇருக்குமிடத்திலேயேநாம்சாந்தப்படுத்தமுடியும். ஸ்ரீசாந்திலட்சுமியைதியானம்செய்தால்எப்பொழுதும்நிம்மதியாகவாழலாம்.
11. ஸ்ரீசாயாலட்சுமி:-
நாம்சம்சாரபந்தத்திலிருந்தாலும்தாமரைஇலைதண்ணீர்போலகடமையைசெய்துபலனைஎதிர்பாராமல்மனதைபக்திமார்க்கத்தில்சாய்ந்துஸ்ரீசாயாலட்சுமியைதியானித்துஅருளைப்பெறவேண்டும்.
12. ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி:-
எப்போதும்நாம்பக்திவேட்கையுடன்இருக்கவேண்டும், பிறருக்குஉதவவேண்டும், ஞானம்பெறவேண்டும், பிறவிப்பிணித்தீரவேண்டும்என்றவேட்கையுடன்ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத்துதித்துநலம்அடையலாம்.
13. ஸ்ரீசாந்தலட்சுமி:-
பொறுமைகடலினும்பெரிது. பொறுத்தார்பூமியைஆள்வார். பொறுமையுடனிருந்தால்சாந்தலட்சுமியின்அருள்கிடைக்கும்.
14. ஸ்ரீகிருத்திலட்சுமி:-
நாம்செய்யும்ஒவ்வொருசெயலையும், மனதைஒருநிலைப்படுத்திநேர்த்தியுடன்செய்தால், புகழ்தானாகவரும். மேலும்ஸ்ரீகீர்த்திலட்சுமியின்அருள்நிச்சயம்கிடைக்கும்.
15. ஸ்ரீவிஜயலட்சுமி:-
விடாதமுயற்சியும்உழைப்பும், நம்பிக்கையும்இருந்தால்நமக்குஎல்லாகாரியங்களிலும்வெற்றிதான். ஸ்ரீவிஜயலட்சுமிஎப்பொழுதும்நம்முடன்இருப்பாள்.
16. ஸ்ரீஆரோக்கியலட்சுமி:-
நாம்நம்உடல்ஆரோக்கியத்தைகவனித்தால்மட்டும்போதாது, உள்ளமும்ஆரோக்கியமாகஇருக்கவேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசைபோன்றநோய்க்கிருமிகள்நம்மனதில்புகுந்துவிடாமல்இருக்கஸ்ரீஆரோக்கியலட்சுமியைவணங்கவேண்டும்.
"ஸ்ரீ மகாலட்சுமி தாயார் திருவடிகளே சரணம்"

பாஞ்சாலி ஏன் சிரித்தாள் ?


பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்தவாறே , உத்திரியான புண்ய காலத்தை எதிர்நோக்கிக் , காத்திருந்தார் . அவர் மரணமடைவதற்கு முன்பு , அவரிடமிருந்து நீதி , நேர்மை , அரசியல் தர்மம் முதலியவற்றைக் கேட்டு தெரிந்து கொள்ள தர்மர் விரும்பினார் . தனது சகோதரர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு பாஞ்சாலியுடன் பிதாமகரிடம் சென்றார் .
பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி " தாங்கள் எங்களுக்கு நீதி , நேர்மை , அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும் " என்று கேட்க , பாஞ்சாலி மட்டும் பலமாகச் சிரித்தாள் . அதில் கேலி கலந்திருப்பதை உணர்ந்த தர்மர் , " நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய் ? " என்று கடுமையாகக் கேட்டார் .
" துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது , கண்ணன் மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும் ? தர்மம் தெரிந்த பீஷ்மர் , அந்தச் சபையில் அமர்ந்து , வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர , துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா ? இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றி கேட்கிறீர்களே என்று நினைக்கும்போது சிரிக்காமல் என்ன செய்வது ? " என்று சொல்ல , பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தார்கள் .
அப்பொழுது பீஷ்மர் பேசினார் . " பாஞ்சாலி சொன்னது முற்றிலும் உண்மை . அவள் கேள்விக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும் . அப்போதுதான் உங்களுக்கும் , உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும் .
துரியோதனன் , அன்னமிடுவதில் உயர்ந்தவன் . எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறைய உபசரிப்பான் . ஆனால் , அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல . சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு , அவர்களை தன் காரியங்களுக்கு பயன்படுத்திக் கொள்வான் . உண்டவர்கள் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க , வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள் . இதற்கு சல்லியன் ஓர் உதாரணம் .
" ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன் , மற்றவர்களுக்கு அன்னமிட்டால் , அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும் . நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது . அதனால்தான் பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோது எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன் ."
" ஆனால் இப்போது , பார்த்தன் அமர்த்திக் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த கெட்ட ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது . அத்தோடு தீய சக்திகளும் வெளியேறிவிட்டன . இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது . எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவன் . கேளுங்கள் " என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார் .
அதனால்தான் அந்தக் காலத்தில் விவரம் தெரிந்த சான்றோர்கள் , சாதுக்கள் , பண்டிதர்கள் பரான்னத்தை அதாவது வெளியில் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள்.