Wednesday 26 March 2014

திருவோண திருமஞ்சனம் - கட்டளை திருமஞ்சனம்

பத்தாம் வகுப்பு பொது தேர்வு இன்று துவங்கும் சமயத்தில் ,கல்விக்கடவுளான ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு இன்று மாலை 6.00மணியளவில் இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் கட்டளை திருமஞ்சனம் நடைபெறும்.அனைவரும் வருக ! திருவருள் பெறுக!!
மேலும் தகவல் பெற
ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை
9500264545
8056901601
9942604383

Tuesday 25 March 2014

ஸ்ரீ கண்ணன் திருக்கோயில் (ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் வழிபாட்டுத்தலம்) இளங்காடு



இறையன்பு நிறை நெஞ்சீர் வணக்கம் !
      காக்கும் கடவுளான கண்ணபிரான் கல்விக்கடவுளான ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவருடன் இளங்காட்டில் கோயில் கொண்டிருப்பது யாவரும் நன்கு அறிந்ததே. தன்னை நாடி வரும் அன்பர்களின் குறைகளைப் போக்கும் பெருமானாக இக்கண்ணபிரான் விளங்குகிறார். இக்கோயிலின் வழிபாடுகள் அனைத்தும் அன்பர்களின் உபயங்கள் மூலமே நடைபெற்று வருகின்றன். இக்கோயிலிற்கு என்று எவ்விதமான நிரந்தர வருமானமும் இல்லை.எனவே   ஸ்ரீ கண்ணபிரான் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவரின் பூசை நாள்தோறும் தடையில்லாமல் நடைபெற நீங்கள் ஒரே ஒருமுறை ரூ.1000 /- மட்டும், செலுத்தினால் அதை வங்கியில் செலுத்தி அதிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையின் மூலம் தாங்கள் விரும்பும் நாளில்(பிறந்தநாள்/திருமணநாள்)கண்ணபிரான் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கும் அர்ச்சனை செய்து அன்றைய நாள் பூசை முழுவதும் தாங்கள் வழங்கிய தொகையின் மூலம் ,வங்கியில் கிடைக்கும் வட்டித்தொகையில் செய்யப்படும்.ஆண்டுதோறும் தொடர்ந்து,நீங்கள் குறிப்பிட்ட நாளில் அர்ச்சனை மற்றும் பூசைகள் செய்து திருவருட்பிரசாதம் தங்களுக்கு எங்கிருந்தாலும் அஞ்சல் மூலம் அனுப்பப்படும். எனவே ஒரு பிடி அவல் கொடுத்த குசேலனை குபேரனாக்கிய கண்ணபிரானுக்கு ஒருநாள் முழுவதும் ஆகும் நைவேத்யத்தினை வழங்கி நீங்களும் குபேரனாகவும், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கும் வழங்கி அள்ள அள்ள குறையாக கல்வி செல்வத்தையும் பெறலாம்.உடனே இணைக ! திருவருள் பெறுக!!

     
மேலும் தகவல் பெற
9500264545,
8056901601,
9942604383,
9345242611 &
9942718582


Friday 21 March 2014

கோபுர தரிசனம் கோடி புண்ணீயம்

ஞானிகள்,முனிவர்கள்,சித்தர்கள் சிறந்த கோயில்களையும்,அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்து கொடுத்து கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்றே என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.

ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து,அபிஷேகிக்கப்பட்டு,காலம் தவறாது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவிடுகிறது.அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி,புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை,நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம்.

இதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணீயம் என்று முன்னோர்கள் கூறினர்.

கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும்,வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.

சில குறியீடுகளும், யந்திர தகடுகளும், இந்த சக்தியை முழுவதும் ஈர்த்து விடுகின்றன.

இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ,000 போவிஸ்) நம் உடலில் உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது.

அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. அப்போது தீப ஆராதனை காட்டப்படும்போது , அந்த சக்தி தூண்டப்பட்டு - கைகளை இணைத்து , மேலே உயர்த்தி வணங்கும்போது - கை விரல்கள் வழியே அந்த சக்தி நம் உடம்புக்குள் ஊடுருவுகிறது.

இதனால் ஆன்மீக உணர்வு, சக்தி நம்மீது பரவி மனதில் உள்ள கவலைகள், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள்,உடல் நோய்கள் அனைத்தையும் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது. கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த துவாரத்தின் வழியே செல்கின்ற நீரிலும் கலந்து பிராண சக்தி வெளிப்படுகிறது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரை கோயிலை வலம் வரும் நாம் அந்த இடத்தில் வந்தவுடன் எடுத்து கண்ணிலும் சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம்.அந்த சில நிமிடங்களில் நம் மீதும் பிராணசக்தி பரகிறது. இந்த பிராணசக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது.

சிலையின் பக்கவாட்டில் தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக்கூடாது. ஒரு காலை வெளியிலும், மறு காலை கர்ப்பக்கிரகத்தின் வாயிலிலும் வைக்ககூடாது. கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் தான் கூறியுள்ளனர்.

சின்னக்கண்ணன் சிரிக்கிறான்


ரங்கநாதன் ஆடம்பரமாக வாழ்ந்தாலும், பாண்டுரங்கனின் பக்தராக இருந்தார்.
வாசனைத் திரவியம் ஏற்றுமதி செய்யும் வியாபாரம் நடத்தி வந்தார்.
நீதி, நேர்மை, நியாயம் இவை அனைத்தும் அவரின் இயல்புகள். நல்லதோ, கெட்டதோ எது நடந்தாலும் பாண்டுரங்கனின் விருப்பம் என்பது அவரின் ஆழமான நம்பிக்கை.
அவருக்கு மூன்றுமே பெண் குழந்தைகள். தங்களின் செல்வத்தை ஆள, ஒரு ஆண்பிள்ளை இல்லையே என்ற மனக்குறை அவரின் மனைவிக்கு வருவதுண்டு.
ரங்கநாதனோ, ""கவலைப்படாதே! பாண்டுரங்கனின் விருப்பம் எதுவோ அது கிடைக்கும்,'' என்று சமாதானம் சொல்வார். முதல் இரு பெண்களும் பணக்காரர்களுக்குரிய ஆடம்பரத்துடன் வளர்ந்தார்கள்.
மூன்றாவது மகள் யசோதா தந்தையைப் போல, பக்தியும் அடக்கமும் கொண்டவளாக இருந்தாள்.
காலம் ஓடியது. மூன்று மகள்களும் திருமண வயதை அடைந்தனர். மூத்த பெண்கள் இருவருக்கும் வசதி மிக்க இடத்தில் மணவாழ்வு அமைந்தது. யசோதா மட்டும் வீட்டில் இருந்தாள். விதி யாரை விட்டது?
அவர்கள் வாழ்வில் பாண்டுரங்கன்
திருவிளையாடல் நடத்த திருவுள்ளம் கொண்டான்.

அவருடைய உள்ளத்தை யாரால் அறிய முடியும்? வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. கடன் அதிகரித்தது.
சொத்துக்களை விற்று கடனை அடைத்தார். ஒரு கட்டத்தில், குடியிருக்கும் வீட்டைத் தவிர எல்லாம் காணாமல் போனது. அதையும் விற்கும் கட்டாயத்திற்கு ஆளானார்.
பல தலைமுறையாக வாழ்ந்த ஆடம்பரமான மாளிகை அது. முன்னோர் வாழ்ந்த அந்த வீட்டையும் விற்கத் துணிந்து விட்டார்.
கூடத்தின் நடுவே நாலடி உயர மேடையில், பஞ்சலோக விக்ரஹமாக இடுப்பில் கையை ஊன்றியபடி பாண்டுரங்கனும், ரகுமாயியும் நின்று கொண்டிருந்தனர்.
அன்றாடம் பூஜிக்கும் பாண்டுரங்கனைக் கண்டதும், ""பாண்டு ரங்கா! நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கு ஏன் இந்த கதி?'' என்று சொல்லி கண்ணீர் விட்டார்.
மந்தகாசப் புன்னகை தவழ, பாண்டுரங்கன் அப்போதும் சிரித்துக் கொண்டிருந்தான்.
ஒரு முடிவுக்கு வந்தவராக, ""யசோதா!யசோதா!'' எனக் கூவி அழைத்தார்.
""என்னப்பா கூப்பிட்டீங்களா? '' என அவளும் தன் அறையிலிருந்து ஓடி வந்தாள்.
""வீட்டை விற்கும் நேரம் வந்துவிட்டது. நமக்கேத்த மாதிரி எளிய வீட்டில் குடியேறும் முடிவுக்கு வந்து விட்டேன். இந்த விக்ரஹத்தை நம்மோடு எடுத்துச் செல்வது தான் சரி,'' என்று சொல்லி ரங்கநாதன் சிலையைத் தூக்க முயன்றார்.
யசோதாவும் அவருடன் சேர்ந்து கொண்டு சிலையைத் தூக்க கை கொடுத்தாள். ஆனால், அந்தச்சிலையை அசைக்க முடியவில்லை. இருவரும் விடாமல் முயற்சித்தனர்.
பீடத்தோடு பொருந்தி நின்ற சிலை,"பட்' என்று விடுபட்டது.
மெதுவாக, சிலையை கீழே இறக்கி விட்டு பார்த்த இருவரும் சிலையாகிப் போனார்கள். அந்த பீடத்தின் அடியில் "தங்கக்கட்டிகள்' மின்னிக் கொண்டிருந்தன.

அதில் ஒரு செப்பேடு ஒன்றிருந்தது. அதில், ""எனது பரம்பரையில் வரும் வாரிசுகளுக்கு இந்த தங்கக்கட்டிகள் சொந்தமானது. பாண்டுரங்கனின் அருளால் அவர்களின் வாழ்வு நலம் பெறும்.. இப்படிக்கு விஷ்ணுவர்த்தன்'' என்று குறிப்பிட்டிருந்தது.
வாயடைத்துப் போன ரங்கநாதன், நிமிர்ந்து பாண்டுரங்கனைப் பார்த்தார். அப்போதும், சின்னக்கண்ணனான பாண்டுரங்கன் சிரித்தபடியே நின்று கொண்டிருந்தான்.
 ·

Friday 14 March 2014

கணவரின் ஆயுள் பலத்தை காக்கும் விரதம்

இந்த ஆண்டு நாளை (14-ந்தேதி, வெள்ளிக்கிழமை) காரடையான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. கணவரின் ஆயுள் பலத்தை காக்க வேண்டி சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் காரடையான் நோன்பு இன்று கொண்டாடப்படுகிறது. இந்து பெண்கள் காரடையான் நோன்பு என்கிற விரதத்தை ஒவ்வொரு ஆண்டும் கடைபிடித்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

இந்த நோன்பில் திருமணமான பெண்கள் தங்களின் கணவர் ஆயுள் கூடவும், நோய் நொடியின்றி வாழவும், திருமணமாகாத கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும், நல்ல கணவர்மார்களை அடையவும் மஞ்சள் சரடு அணிந்து கொள்வது வழக்கம்.


பூஜை செய்து எப்படி?

தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே
ஸஹாரித்ரம் தராம்யஹம்
பர்த்து ஆயுஷ்ய ஸித்யர்த்தம்
ஸுப்ரீதா பவ ஸர்வதா

ஸ்லோகத்தின் அர்த்தம்:

ஹே ஸுபகே! பாக்யத்தைத்தரும் தேவியே! மஞ்சளுடன் கூடிய இந்த மங்கள நாண் கயிற்றை (சரட்டை) முறையாக விரதமிருந்து நான் என் கழுத்தில் கட்டிக் கொள்கிறேன். இந்த விரதத்தால் நீ சந்தோஷப்பட்டு எனது கணவர் மற்றும் குழந்தைகளின் ஆயுளை நீட்டித்து எப்போதும் அருள் புரிய வேண்டும் என்று பொருள்.

பூஜையின் போது கணவர் ஆயுள் நீடித்திருக்க பெண்கள் மஞ்சள் சரடுகளை காமாட்சி அம்பாள் அருள்வேண்டி பூஜிக்க வேண்டும். இந்த பூஜையை மேற்கொள்வதின் மூலம் ஒவ்வொரு நாளும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை நீடிக்கும் என்கின்றனர் முன்னோர்கள்.

கார அடை பலகாரம் விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும்.

அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன், காரா மணிப் பயறும் அதோடு இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும். இதனை தயாரித்து இறைவனுக்கு படைத்து விரதம் இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அனைவரும் ஒவ்வொரு இலைக்கு முன் பாகவும் நின்று கொண்டு ஜலத்தினால் மும் முறை இலையைச்சுற்றி விட்டு, "உருகாத வெண்ணெயும் ஓரடையும் உண்டானாலும், ஒருக்காலும் என்னை விட்டு, என் கணவர் பிரியாதிருக்க வேண்டும்'' என்னும் வாக்கியங்களைச் சொல்ல வேண்டும்.

இந்த பெயராலேயே இந்த விரதத்திற்கும் பெயர் அமைந்தது. அன்று நல்ல நேரம் பார்த்து, பெண்கள் மாங்கல்ய கயிறு மாற்றிக்கொள்வர் சத்தியவான், சாவித்திரி சத்தியவானின் ஆயுள் ஒரு ஆண்டுதான் என்று அறிந்தும் மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி அவனையே விரும்பி திருமணம் முடித்தாள்.

அரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும், பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள். கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் பணிவிடை செய்தாள்.

சத்தியவானின் உயிர் பிரியும் நாள் வந்தது. அன்றைய தினம் கணவனை விட்டு சாவித்திரி பிரியவே இல்லை. இருப்பினும் அவன் திடீரென மயங்கி உயிரிழந்தான். அவனது உயிரை எமதர்ம ராஜா, எடுத்துச் சென்றதைக் கண்ட சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள்.

தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், அவளுக்கு காட்சி தந்த எம தர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார். ஆனால் அதற்கு சாவித்திரி மறுப்பு தெரிவிக்கவே, கணவரின் உயிரைத் தவிர வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாக வாக்களித்தார்.

சமயோசித புத்தி உடனே சாவித்திரி சமயோசிதமாக, என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள்.

சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார். எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார்.

பெண்களுக்கு எமனையும் வெல்லும் தைரியம் உண்டு என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவள் சாவித்திரி. அவளது வெற்றிக்கு காரணம் தைரியம், பொறுமை, கடமை, சமயோசிதம் ஆகியன.

இவை அத்தனையும் ஒருங்கே இணைந்த தெய்வப்பிறவியாக அவள் திகழ்ந்தாள். அதனால் தான் கணவரின் ஆயுள் நீடித்திருக்க வேண்டி இன் றைக்கும் பெண்கள் மாசியும், பங்குனியும் இணையும் சமயத்தில் காரடையான் நோன்பு கடைபிடிக்கின்றனர்.

Friday 7 March 2014

உரோகிணி திருமஞ்சனம் - திருப்பாவை கோஷ்டி

                   இன்று மாலை (08-03-2014) சனிக்கிழமை உரோகிணி திருநட்ச்சத்திரத்தை முன்னிட்டு மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறும். வாரந்திர திருப்பாவை கோஷ்டி சேவையும் அவ்வமையம் நடைபெறும்.


Monday 3 March 2014

விதுரர் மகாபாரதத்தில் இடுகையிட்டது

விதுரர் -மகாபாரதத்தில்
ஒருவன் ஒரு கொடிய காட்டை அடைந்தான்.அங்கு சிங்கம்,புலி முதலிய கொடிய விலங்குகள் அவனைத் துரத்தின.அவன் தப்பித்து ஓடினான்.

ஓட..ஓட..ஒரு புலி அவனை துரத்தியது.
விரைந்து அவன் ஒரு மரத்தின் மீது ஏறும் போது தவறிப் பாழுங் கிணற்றில் வீழ்ந்தான்.

பாதிக் கிணற்றில் கொடிகளைப் பற்றிக் கொண்டு தலை கீழாகத் தொங்கினான்.கிணற்றுக்கடியில் இருந்த கரும்பாம்பு சீறியது.

கிணற்றுக்கருகில் இரண்டு முகமும் ஆறு கொம்புகளும் பன்னிரெண்டு கால்களும் உடைய யானை ஒன்று பயங்கரமாகச் சுற்றித் திரிந்தது.

ஆதரவாகப் பிடித்துக் கொண்டிருந்த கொடிகளை கருப்பும், வெள்ளையுமான இரண்டு எலிகள் கடித்துக் கொண்டிருக்கின்றன.

அப்போது மரத்திலிருந்த தேன்கூட்டிலிருந்து தேன் சொட்டு சொட்டாகத்..துளித் துளியாகச் சிந்தியது.அவனோ தன்னைச் சூழ்ந்திருக்கும்..புலி,பாழுங்கிணறு,யானை,பாம்பு,எலிகள் ஆகிய ஆபத்துகளை மறந்து சிந்தும் தேன் துளியைச் சுவைத்திருந்தான்.

அந்த ஆபத்திலும் உயிர் வாழ்க்கையை விரும்பினான்..

மனிதன் சென்றடைந்த காடுதான் சம்சார வாழ்க்கை.நோய்கள் தாம் கொடிய விலங்குகள்.துரத்தி வந்த புலிதான் யமன்.

ஏற முயன்ற மரம் தான் முக்தி.நரகம் தான் பாழுங்கிணறு.
பற்றி பிடித்த கொடிகள் தாம் ஆசையும், பற்றும்.யானையின் இரு முகங்கள் அயணங்கள் (தக்ஷிணாயனம்,உத்தராயணம்).

ஆறு கொம்புகள் ஆறு பருவங்கள்.பன்னிரெண்டு கால்கள் பன்னிரெண்டு மாதங்கள்.வருடமே யானை.காலபாசம் தான் கரு நாகம்.கொடிகளைக் கடிக்கும் கருப்பு,வெள்ளை எலிகள் இரவு பகல்கள்.அவை மனிதனின் வாழ்நாளை குறைத்துக் கொண்டே இருக்கின்றன.

அவன் பெறுகின்ற தேன் துளி போன்ற இன்பமே இந்த உலக வாழ்வு.எனவே ஒவ்வொரு வினாடியும் நமது வாழ்நாள் குறைந்துக் கொண்டே வருகிறது என்பதை உணர வேண்டும்.
இறுதியில் மரணம் என்பது யாவராலும் தவிர்க்க முடியாததாகும்!

இது பாவம் செய்தவருக்கும் செய்யாதவருக்கும் சமமாக கொடுக்கப்படும் சம்பளம்.

'யாருக்குத்தான் மரணமில்லை.மரணத்திற்கு வயது வரம்பு கிடையாது.மரணம் எந்த வயதில் வேண்டுமானாலும் நிகழலாம்.

போர்க்களத்தில். போரில் ஈடுபடுவோர் பிழைப்பதும் உண்டு..வீட்டில் பலத்த பாதுகாப்போடு இருப்பவர் இறப்பதும் உண்டு.பழைய உடையை நீக்கிவிட்டு புதிய உடையை உடுத்துவது போல உயிர்கள் இந்த உடலை விட்டு வினைப்படி வேறு உடலை எடுத்துக் கொள்கிறது.

வினைப்பயன் யாரையும் விடாது பற்றும் தன்மை உடையது.நாம் விதைக்கும் விதை முளைப்பது போல நாம் செய்த வினைப்பயன் நம்மை வந்து அடையும்.
--
விதுரர்
மகாபாரதத்தில்
இடுகையிட்டது

பெருமாள் கோவில்களில் தீர்த்தமும் ,சிவாலயங்களில் விபூதியும் தருவதற்கான விளக்கம்:




வாழ்க்கையின் உயிர்த்தன்மைகளைக் கட்டுவது வைணவம்.நீர் இல்லை என்றால் உலகம் இல்லை என்பதைக் காட்டுவதற்கு (நீரின்றி அமையாது உலகு)ஆதாரமாக உள்ள தீர்த்தம்,பிரசாதமாகக் கொடுக்கபடுகிறது.

வாழ்க்கையின் எல்லையை தொட்டுக் காட்டுகிறது சைவம்.எவ்வளவு சம்பாதித்தாலும் ,எவ்வலு பெரிய ஆளாக இருந்தாலும் கடைசியில் ஒன்றும் இல்லை.பஸ்மம் சாம்பல்தான் என்கிற நிலையாமையை உணர்த்தவே சிவாலயத்தில் விபூதி பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. —