Tuesday 21 April 2020

சரணாகதி நீயேகதி

        
-- ஒரு குட்டிக் கதை!
        பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர்.

 குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு, பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர் படுத்திக்  கொண்டிருந்தனர். 

        ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று தன் நான்கு குஞ்சுகளுடன்  வசித்து வந்தது. அந்த மரம் அகற்றப் படும்போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்து விட்டது.

        தாய் சிட்டுக்குருவி, சுற்றுமுற்றும் பார்த்தபோது, அதன் பார்வையில் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் பட்டனர். சிட்டுக்குருவி, பறந்து போய், ஸ்ரீ கிருஷ்ணரது ரதத்தின் மீது அமர்ந்தது. “ கிருஷ்ணா! நாளை போர் ஆரம்பித்தால், என் குஞ்சுகள் அழிந்து விடும்! நீ தான் காப்பாற்ற வேண்டும்” என்று கெஞ்சிக் கேட்டது.

        “ நீ சொல்லுவது எனக்குக் கேட்கிறது! ஆனால் இயற்கை விதிகளை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியாது” என்று பதில் சொன்னார் ஸ்ரீ கிருஷ்ணர்.

        “ எனக்குத் தெரிந்ததெல்லாம், நீ தான் எங்களைக் காப்பவர்! எங்களைக் காப்பதையும், அழிப்பதையும் உன் கையில் விட்டு விடுகிறேன்” 
என்றது குருவி!

   *"காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது”*- இது ஒன்றே ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன பதில்!

        குருவிக்கும், ஸ்ரீகிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்கள் அர்ஜுனனுக்கு விளங்கவே இல்லை.

        போருக்கு முன், ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனிடம் தன் வில்லையும், அம்பையும் எடுத்துக் கொடுக்கச் சொன்னார்.

 அர்ஜுனனுக்கு ஆச்சர்யம்! போரில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று சொல்லி, தனக்கு சாரதியாக மாறிய ஸ்ரீ கிருஷ்ணர் எதற்காக தன் வில்லையும், அம்பையும் கேட்கிறார் என்று புரிய வில்லை. 

 ஆனாலும் அவற்றை எடுத்து ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து விட்டான்.

        ஸ்ரீகிருஷ்ணர், ஒரு யானை மீது அம்பைத் தொடுத்து, அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை அறுத்து எறிந்தார். 

யானையைக் குறி வைத்து, அதன் மீது அம்பை எய்து, அதனைக் கொல்ல முடியாமல், அதன் கழுத்தில் இருந்த மணி ஒன்றை மட்டும் அறுத்து எறிந்த ஸ்ரீ கிருஷ்ணரைக் கிண்டலாகப் பார்த்தான் அர்ஜுனன்.

 ஸ்ரீகிருஷ்ணரை விட தான் வில் வித்தையில் சாமர்த்தியசாலி என்னும் எண்ணம் அவனுக்குள் ஏற்பட்டது!

 மனிதன் தானே!
 “நான் வேண்டுமானால் அம்பு எய்து, யானையை வீழ்த்தட்டுமா?” எனக் கேட்டான் அர்ஜுனன். ஒரு புன்முறுவலுடன் வில்லையும், அம்பையும், அர்ஜுனனிடம் கொடுத்து, பத்திரமாகத் தேருக்குள் வைக்கச் சொல்லி விட்டார் ஸ்ரீ கிருஷ்ணர்!

        “பிறகு ஏன் யானை மீது அம்பை எய்தீர்கள்?” எனக்கேட்ட அர்ஜுனனிடம், “அப்பாவி சிட்டுக்குருவியின் கூட்டைக் கலைத்துப் போட்டதற்கு யானைக்கான தண்டனை இது” என்று மட்டும் சொன்னார் பகவான்!

 அர்ஜுனனுக்கு பகவான் சொன்னது எதுவும் விளங்க வில்லை!

        போர் நடந்து,  பாண்டவர்கள், 18-ம் நாள் யுத்தத்தில் வென்றும் விட்டனர்.

 அர்ஜுனனுடன் பரமாத்மா க்ருஷ்ணன் போர்க்களத்தை சுற்றி வருகிறார்! 

தான் முன்பு அறுத்து எறிந்த யானையின் மணிக்கருகில் வந்து நின்ற பகவான். 

ஹே அர்ஜுனா! "இந்த மணியைத் தூக்கி ஓரமாகப் போடுகிறாயா?” என்று கேட்கிறார்!

 “எத்தனையோ முக்கியக் காரியங்கள் இருக்கும் போது, இப்போது அறுந்து போய்க் கிடக்கும் இந்த மணி தான் பகவானுக்கு முக்கியமாகப் போய் விட்டதோ?” என்று எண்ணினாலும், அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணர் சொன்னபடி, மணியைக் கையில் எடுத்தான்.

       அந்த மணிக்குள் இருந்து ஒரு தாய் சிட்டுக் குருவியும், 4 குஞ்சுகளும் சந்தோஷமாகப் பறந்து சென்றன. 

தாய்க்குருவி, ஸ்ரீபகவானை வலம் வந்து, 18 நாட்களுக்கு முன் தான் ஸ்ரீகிருஷ்ணரிடம் அபயம் வேண்டியதையும், யானையின் மணிக்குள் தன் குடும்பத்தை வைத்து பகவான் 18 நாட்கள் தங்களுக்கு அபயம் அளித்ததையும் நன்றியோடு எண்ணி சிறகைக் கூப்பியது!

        “ பகவானே! என்னை மன்னித்து விடு! 

உன்னை மானுட உருவில் பார்த்துப் பழகியதால் , நீ உண்மையில் யார் என என் சிற்றறிவுக்குக் கொஞ்ச காலம் புலப்படாமல் போய் விட்டது! என்று கைகூப்பித் தொழுதான் அர்ஜுனன்.

        அண்டசராசரத்தில் உள்ள ஒவ்வொருவரையும் எப்படி இரட்சிக்க வேண்டும் என்பது பகவானுக்கு நன்குத் தெரியும்! 

அவனிடம் சரணாகதி அடையுங்கள்! மற்றதை அவனிடம் விட்டு விடுங்கள்.

        “பரித்ராணாய சாதூனாம், விநாசாய சதுஷ்கிருதாம், தர்ம சம் ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே”

*"சரணாகதி நீயேகதி"*  -- என்று சரணடைவோம் மற்றவை நம்மை படைத்தவனின் பொறுப்பு  

*நம்புவோம் நிம்மதியாக வாழ்வோம்*

Monday 20 April 2020

தக்ஷிண துவாரகை

ஈட்டு ப்ரவர்த்தகரான மணவாளமாமுனிகள் சோழ நாட்டு திவ்ய தேச யாத்திரையின் போது தக்ஷிண துவாரகை திவ்யதேசானது ஆழ்வார்களில் ஈரச்சொற்களான திவ்விய பிரபந்த பாசுரங்களில் ராஜமன்னார்குடி ஷேத்திரமானது விடுபட்டது நினைத்து மிகவும் மனம் வருந்தி, தம்முடைய ஞான திருஷ்டியினால் எம்பெருமானார் “ஒரு நாயகமாய்” பதிகத்தை மேல்கோட்டை திருநாராயணனுக்கு சமர்பித்தாரோ அதே போல் நம்மாழ்வாரின் “தீர்ப்பாரையாமினி” என்கிற பதிகத்தை இந்த க்ஷேத்திரத்திற்கு சமர்பித்து இதனையும் திவ்ய தேசமாக்கி ஆசார்யர்கள் உகந்தருளிய க்ஷேத்திரங்களுள் ஒன்றாக்கி இரண்டு மாதங்கள் இந்த திவ்விய தேசத்தில் தங்கியிருந்து எம்பெருமானை தினமும் மங்களாஸாஸனம் செய்து “தீர்ப்பாரையாமினி” பதிகத்தை நித்யானுஸந்தானமாக ஸேவிக்கச் செய்தார்.
 
 வருடத்தின் ஆடி மாதம் முதல் அடுத்த ஆடி மாத வரை பசலி கணக்குப்படி அர்ச்சகமுறைகளை பார்த்து வருகின்றனர். 
 சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு திருமாலைக் கட்டி சமர்ப்பித்திடும் கைங்கர்யம் உண்டு. அவர்களுக்கு தீர்த்த மரியாதையும் உண்டு. அவர்கள் கட்டியம், படிப்பு சேவிக்கும் உரிமை பெற்றுள்ளார்கள். தற்போது (2019) எந்த சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்களும் எந்தக் கைங்கர்யத்திலும் இல்லை.

 இத்திருக்கோயிலில் தினந்தோறும் காலை ஹரித்ரா நதியிலிருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டுவரப்படுகிறது. தீர்த்தக்குடம் வந்தபின்பு, திருமடைப்பள்ளியிலிருந்து மந்த்ர, பாசுர அனுசந்தானத்தோடு ஸ்ரீராஜகோபாலனக்கு  வெண்ணெய், நாட்டுச்சர்க்கரை, பால் கண்டருளப்பண்ணப்படுகிறது பின்பு ஆரத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு விச்வரூப ஆராதனம் கண்டருளியப்பின்பு, திருவனந்தல்தளிகை சமர்ப்பிக்கப்படுகிறது (தத்யோதனம்-தயிர்சாதம்), 

பின்னர் ஸ்ரீமூர்த்திகளுக்கும், ஸ்நபன பேரருக்கும் திருமஞ்சனம் செய்விக்கப்படுகிறது. காலைஸந்தி திருவாராதனம் நடைபெற்று தளிகைசமர்ப்பிக்கப்படுகிறது. அந்தத் தளிகை சுற்றுக் கோயில்களுக்கும் கண்டருளப்பண்ணப்படுகிறது. பின்னர் தீர்த்த விநியோகம் நடைபெறுகிறது. மதியம் சுமார் 12 மணி அளவில் உச்சி கால தளிகை (தேங்குழல், வடை, சுத்தன்னம்) கண்டருளியபின் திருக்காப்பு சேர்க்கப்படுகிறது.

 மாலை 4 மணி அளவில் திருக்காப்பு நீக்கி ஸேவை தொடங்குகிறது. 6 மணிக்கு சாயங்காலம் திருவாராதனம் நடைபெற்று தளிகை (தோசை) கண்டருளப்படுகிறது, நித்தியானுஸந்தானம் ஸேவை முடிவடைந்து கோஷ்டி விநியோகம் செய்யப்படுகிறது. பின்பு பெருமாளுக்கு மிளகுசம்பா தளிகை சமர்ப்பிக்கப்படுகிறது. இரவு அர்த்தசாம பூஜையில் சர்க்கரைப்பொங்கல், கொழுக்கட்டை, பால், பழம் கண்டருளிப்பண்ணி திரைசேர்த்து திருக்காப்புச் சேர்க்கப்படுகிறது.

 *** மோதகம் பெருமாள் பஞ்சபர்வ புறப்பாடு (மாதப்பிறப்பு, இரண்டு ஏகாதசி, ரோகிணி, திருவோணம், அமாவாசை?) ஆகிய தினங்களில் ஸ்ரீராஜகோபாலன் உள்வீதிகளில் புறப்பாடு கண்டருளி சந்நிதிருக்குள் எழுந்தரும்போது மகாமண்டபத்தின் தூணில் அமைந்துள்ள அச்சுதப்ப நாயக்கர் வியக்கராகவ நாயக்கர் ஆகியோருக்கு திருமாலை, பரியட்டம், ஸ்ரீசடகோபம் சமர்ப்பிக்கப்படுகிறது. இராப்பத்து திருநாள்களில் பெருமாள் சாற்றிக் களைந்த மாலை மரியாதையுடன் விஜயராகவநாயக்கருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. 

 மேற்சொன்ன பஞ்சபர்வ புறப்பாடு தினங்களில் வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வந்தால் பெருமாள், தாயார் இரட்டைப் புறப்பாடு நடைபெறும். அனைத்து வெள்ளிக்கிழமையும் தாயாருக்குத் திருமஞ்சனம் நடைபெறும். மேலும் கிரகணம், அயனம் முதலிய புண்ணிய காலங்களில் ஸ்நபன பேரருக்கு ஹரித்ரா நதியில் திருமஞ்சனம் நடைபெறும். பங்குனி உத்தரம் 18 நாள்கள் ப்ரஹ்மோத்சவ தினங்களுக்குள் வரவில்லை என்றால், பங்குனி உத்தர உத்ஸவம், தாயாருக்கு ஐந்து நாள்கள் நடைபெறும்.

 ஒவ்வொ வருடமும் தை மாதம் நான்காம் நாள் பெருமாளும் தாயாரும் ஏகசிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கும்போது, உடையவர் அருளிச்செய்த கத்யத்ரயம் சேவிக்கப்படுகிறது.
 இராப்பத்துத் திருவிழாவின்போது அர்ச்சக நிர்வாகம் செய்யும் இரண்டாம் வம்சத்வர்களாக ஸ்ரீராஜவள்ளல் வம்சத்தைச் சார்ந்த அர்ச்சகமிராசுகளுக்கு திருமாலை, பரியட்டம், ஸ்ரீசடகோப மரியாதைகள் செய்யப்படுகின்றன. அவ்வம்சத்வர்களால் மட்டையடிபுராணம் (ஊடல்தீர்க்கும் வசனங்கள்) அர்ச்சிராதி, பேரிதாடனம், சப்தாவர்ணம் ஆகியவை ஸேவிக்கப்படுகிறது.

900 சமையல் கலைஞர்கள் பணிபுரியும் திருமடைப்பள்ளி கொண்ட திருத்தலம்

உலகிலேயே பெரிய மடப்பள்ளி கொண்ட கோயில்

Friday 17 April 2020

பாபமோசனி ஏகாதசி

அனைவருக்கும் இனிய நற்காலை வணக்கம்🙏


இன்று சார்வரி வருடம் சித்திரைத் திங்கள் 5 ம் நாள் சனிக்கிழமை  ஏப்ரல்  (18.04.2020) 
தேய்பிறை *ஏகாதசி* (பாபமோசனி ஏகாதசி)

ஏகாதசி என்றால் பதினொன்று என்று பொருள். ஞானேந்திரியம் ஐந்து; கர்மேந்திரியம் ஐந்து; மனம் ஒன்று என்னும் பதினொன்றும் பகவானிடம் ஈடுபடுவதே ஏகாதசி விரதம். அந்நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி விரதமிருந்தால், மனக் கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும்🙏

*ஏகாதசி' மகத்துவம்*

பாரதப் போருக்கு முன், பாண்டவ தூதுவராக அஸ்தினாபுரம் சென்றார் பகவான் கிருஷ்ணர். அங்கே, அரண்மனையில் தங்காமல் விதுரரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தி, இளைப்பாறினார். அவருக்காக காத்திருந்த துரியோதனன் முதலானோர், ''உனக்காக நாங்கள் காத்திருக்க... நீயோ, தகுதிக்குப் பொருந்தாத இடத்தில் தங்கி, உணவு உண்டிருக்கிறாயே...'' என்று ஏளனம் செய்தார்களாம்.

அவர்களிடம், ''இறை நாமத்தை அனுதினமும் உச்சரிக்கிற, இறைவனின் அற்புதங்களையும் லீலைகளையும் உபந்யாசம் பண்ணுகிற பாகவதர்கள் சாப்பிட்டுவிட்டு மீதம் வைக்கும் உணவு தூய்மையானது. சகல பாவங்களையும் போக்கும் சக்தி அந்த உணவுக்கு உண்டு... சுத்தம் பாகவதஸ்யான்னம்!''  என்று பதில் தந்த ஸ்ரீகிருஷ்ணர், விதுரர் வீட்டு உணவின் மேன்மையை அவர்களுக்கு உணர்த்திய துடன், மேலும் சில மேன்மைகளையும் பட்டியலிட்டார்.

''சுத்தம் பாகீரதி ஜலம் 
சுத்தம் விஷ்ணு பதத்தியானம் 
சுத்தம் ஏகாதசி விரதம்...''

அதாவது, பகவானின் திருவடியில் பட்ட ஒரு துளி தீர்த்தம்,கங்கைக்குச் சமமான புனிதம் வாய்ந்தது. பெருமாளின் திருவடியைத் தரிசிப்பது, வைகுண்ட தரிசனத்தைவிட பவித்திரமானது. இத்தனை நற்செயல்களுக்கும் ஈடானது ஏகாதசி விரதம் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.

காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை என்ற பழமொழியின் மூலம் இவ்விரதத்தின் சிறப்பினை அறியலாம்.

ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகிய மன்னர்கள் இவ்விரத முறையினைக் கடைப்பிடித்து பெரும் பாக்கியம் பெற்றவர்கள் ஆவார்.🙏

அமாவாசையை அடுத்து வரும் ஏகாதசி சுக்லபட்ச ஏகாதசி அல்லது வளர்பிறை ஏகாதசி என்றும், பௌர்ணமியை அடுத்து வரும் ஏகாதசி கிருஷ்ணபட்ச ஏகாதசி அல்லது தேய்பிறை ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.🙏

ஏகாதசி அன்று விரதமுறையைப் பின்பற்றி வழிபாடு செய்யப்படுவதால் உடல் மற்றும் உள்ளம் தூய்மை அடைகிறது.

இவ்விரத முறையை ஆண், பெண், ஏழை, பணக்காரர் ஆகிய வேறுபாடுகள் ஏதும் இன்றி எல்லோரும் இவ்விரதத்தினைக் கடைப்பிடிக்கலாம்.🙏

  சித்திரை மாத பாபநாசினி விரதம் மேற்கொள்வதால்  நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவச் செயல்களின் வினைப் பயன் போகும் என்பது ஐதீகம். மேலும் நம் வாழ்வில் துன்பங்கள் அதிகம் ஏற்படாமல் இருக்கவும், குல சாபங்கள், தெய்வ சாபங்கள் போன்றவை நீங்கி வாழ்க்கையில் சுபிட்சங்கள் பெருகவும்  இந்த பாபநாசினி ஏகாதசி விரதம் துணைபுரிகின்றது.

நாமும் நாளை பாபமோசனி ஏகாதசி விரதம் மேற்கொண்டு வாழ்வின் உன்னத நிலையை அடைவோம்.🙏

*ஓம் நமோ நாராயணா*

ஏகாதசி விரதம் இருந்து சகல சௌபாக்கியங்களையும் பெறுங்கள் !!
ஏகாதசி வழிபாடு..! 
. இது பாவநிவர்த்தி கொடுக்கும். இன்றைய தினத்தில் பழங்கள் தானம் செய்வதால் ஒளிமயமான வாழ்க்கை கிடைக்கும். இல்லறம் இனிக்கும். தை மாத ஏகாதசியில் பெருமாளை விரதமிருந்து வணங்குவதால் சகல சம்பத்துகளுடன் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்பது ஐதீகம்.

🙏 மனிதர்களாக பிறந்த நாம் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் முக்தி கிடைக்க வேண்டும். அந்த முக்தி நிலையை அடைவது என்பது அத்தனை எளிதான விஷயமல்ல. கங்கையில் குளித்தல், பகவத் கீதையை படித்தல், காயத்ரி மந்திரத்தை உச்சரித்தல், துளசியை கொண்டு வீட்டில் பூஜை செய்தல், சாளக்கிராம பூஜை செய்தல், ஏகாதசி விரதமிருத்தல், பகவான் நாமத்தை உச்சரித்தல் இவைகளை கடைபிடித்தால் நிச்சயம் முக்தி என்கிறது நாரயணீயம்.🙏

*புராணத்தில் ஏகாதசி*

🙏 விஷ்ணு பகவான் மனிதர்கள் வாழும் காலத்தில் அறிந்தும் அறியாமலும் செய்யக்கூடிய பாவங்களுக்கு தண்டனைகளை ஏற்படுத்தி, அதற்காக எமலோகத்தை சிருஷ்டித்து எமராஜனையும் அந்த லோகத்திற்கு நியமித்தார்.

🙏 எமலோகத்திற்கு ஒருநாள் விஷ்ணு விஜயம் செய்தபோது, அங்கு மனிதர்கள் படும் அவஸ்தையை கண்டு மனமிறங்கி ஏகாதசி விரதம் பற்றி அவர்களுக்கு கருணையுடன் எடுத்துரைத்தார். யார் இந்த விரதம் இருக்கிறார்களோ அவர்கள் பிறவிப்பயன் நீங்கி வைகுண்டம் சேர்வார்கள் என உறுதியளித்தார்.🙏

*ஏகாதசி விரத முறை*

  🙏 ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே குளித்து விட்டு, விரதத்தை தொடங்க வேண்டும்.

🙏 ஏகாதசி விரதத்தை மூன்று நாட்கள் என்னும் முறையில் அனுசரித்தால் பலன் நிச்சயம். தசமி அன்று ஒரு வேளை உணவு உண்டு மறுநாள் ஏகாதசி அன்று முழு பட்டினி இருந்து, அதற்கு மறுநாள் துவாதசி அன்று காலையிலேயே உணவு உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். 

🙏 ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவர்கள் பூரண உபவாசம் இருத்தல் பலன் தரும். ஏழு முறை துளசி இலையை பகவான் நாமம் சொல்லி சாப்பிடலாம். உடல்நிலை மற்றும் வயோதிகம் காரணமாக பூரண உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்கள், பால், தயிர் போன்றவற்றை பூஜையில் வைத்து இறைவனுக்கு படைத்து பின் பிரசாதமாக உண்ணலாம். ஏகாதசிக்கு அடுத்த நாளான துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை தான் நாம் பாரணை என அழைக்கிறோம்.

 சர்வ ஏகாதசி. இந்த நாளில், பெருமாளை ஆராதனை செய்யலாம். விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யலாம். முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம். நாராயண நாமம் சொல்லி, துளசி தீர்த்தம் பருகலாம். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, பெருமாளை வழிபடலாம். துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள். 🙏

🌹 *ஏகாதசி விரத மகிமை*🌹

🙏 சிவபெருமான், ஒருமுறை பார்வதிதேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்துச் சொன்னார். ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று விளக்கினார்.🙏

🙏 உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது விரதம். இதனால் உள்ளத்தூய்மை, உடலின் தூய்மை முதலான பலன்கள் கிடைக்கின்றன. எனவே, ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சௌபாக்கியங்களையும் பெறுவார்கள்.🙏

பெருமாளின் அருளால் வாழ்க வளமுடன் நலமுடன் நிறைவுடன்🙏

ஸ்ரீராமஜயம்னு சத்தமாகச் சொல்லு

*"ஸ்ரீராமஜயம்னு சத்தமாகச் சொல்லு!"*

மகாபெரியவர் திருத்தல யாத்திரைகள் செய்து கொண்டிருந்த காலகட்டம் அது. 

அந்த சமயத்தில் ஆந்திர மாநிலத்தில் ஓரிடத்தில் சில நாட்கள் முகாமிட்டிருந்தார் அவர். அந்த மாதிரியான சமயங்களில் உபன்யாசம் மாதிரியான சொற்பொழிவுகள் போன்றவை நடப்பது வழக்கம்.  அந்த மாதிரி ஒருநாள், மகாபெரியவர் முன்னிலையில் ராமாயண உபன்யாசம் நடத்தினார் ஒரு பண்டிதர். மிக அழகாக எளிமையாக ராம காவியத்தை அவர் சொன்னதை மகாபெரியவர் ரொம்பவே ரசித்துப் பாராட்டினார். 

பெரியவரின் பாராட்டால் நெகிழ்ந்துபோன உபன்யாசகர், நெகிழ்வோடு மகானை நமஸ்கரித்தார். அப்போது, "நீ இப்படி உபன்யாசம் செய்வது மட்டுமல்லாமல், இன்னொரு உபகாரமும் முன்பு செய்து கொண்டு இருந்தாயே, அதை இங்கேயும் செய்யலாமே" என்றார் மகான்.

அந்த உபன்யாசகர், தான் நிகழ்ச்சி நடத்தப் போகும்போது, சின்னச் சின்னதாக சில நோட்டுகளை கையோடு கொண்டு செல்வார். உபன்யாச நிகழ்ச்சி முடிந்ததும், அந்த நோட்டுகளை அங்கே இருக்கும் சிறுவர் சிறுமிகளிடம் தந்து ஸ்ரீராமஜயம் எழுதச் சொல்வார். அனால் கொஞ்சநாளாக அவருக்கு ஒரு விரக்தி இருந்தது. ஸ்ரீராமஜயம் எழுதச் சொல்லி நோட்டுகளை தருகிறோம். ஆனால், அவர்கள் எழுதுகிறார்களா இல்லையா? என்பதே தெரியாது. அதோடு, இப்படி எழுதச் சொல்வதால் என்ன பிரயோஜனம் என்ற விரக்திதான் அது. 

மகாபெரியவர் எப்படியோ அதைத் தெரிந்து கொண்டு சொல்லவும், அந்த உபன்யாசகருக்கு ஆச்சரியம்! மகானே சொல்லிவிட்டதால், ஸ்ரீராமஜயம் நோட்டுகளை வழக்கத்தைவிட நிறையவே குழந்தைகளுக்குக் கொடுத்தார். 

குழந்தைகளும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிக் கொள்ள, "எல்லோரும் நாளைக்கு இதே நேரத்துக்குள் அந்த நோட்டு முழுக்க ஸ்ரீராமஜயம் எழுதிக் கொண்டு வந்து என்கிட்டே தரணும்!" சொன்னார், மகான். 

மறுநாள் எல்லாக் குழந்தைகளுமே ஸ்ரீராமஜயம் எழுதி முடித்த நோட்டுகளுடன் வந்து விட்டார்கள். 

அன்றைக்கும் உபன்யாசம் உண்டு என்பதால், உபன்யாசகரும் வந்திருந்தார். 

குழந்தைகள் வரிசையாக நின்று ஒவ்வொருவராக ஸ்ரீராமஜயம் நோட்டை பெரியவரிடம் சமர்ப்பிக்க, கல்கண்டு பிரசாதமும் வெள்ளிக்காசும் கொடுத்து ஆசிர்வதித்த பெரியவர், குறிப்பாக ஒரு பையன் வந்து நோட்டைத் தன்னிடம் சமர்ப்பித்ததும் அவனை ஆதூரத்துடன் உற்றுப் பார்த்தார். 

"நோட்டு முழுக்க ஸ்ரீராமஜயம் எழுதியிருக்கியே, எங்கே ஸ்ரீராமஜயம்னு உரக்கச் சொல்லு  பார்ப்போம்" என்று சொல்ல, அங்கே திடீரென்று அமைதி நிலவியது. 

நோட்டினைத் தந்த சிறுவன் மிரள மிரள விழிக்க, "உன்னைத்தான் சொல்றேன். ஸ்ரீராமஜயம் சொல்லு!" மறுபடியும் சொன்னார், மகான்.

"பெரியவா...அவனால பேச முடியாது....!" கூட்டத்தில் இருந்த இன்னொரு சிறுவன் சொல்ல, அங்கே திடீரென்று ஒரு சலசலப்பு எழுந்தது. 

சட்டென்று கையைச் சொடுக்கிய மகான், "கொஞ்சம் எல்லோரும் அமைதியா இருங்கோ... அந்தப் பையன் ஸ்ரீராமஜயம் சொல்லட்டும்!" கொஞ்சம் அழுத்தமாகவே சொல்ல, அங்கே பேரமைதி நிலவிய அந்த நிலையில்தான் நடந்தது அந்த அதிசயம்.

எந்தப் பையன் பிறவியிலேயே பேசும் திறன் அற்று இருந்தானோ அவன், மகாபெரியவர் முன்னிலையில், மெதுவாகத் திக்கித் திணறி..."ஸ்ஸ்...ரீ...ரா..ஆ.ஆ..ஆ..ம.. ஜ்..ஜய்ய்யம்ம்!" என்று மூன்றுமுறை தடுமாறிச் சொல்லிவிட்டு, பிறகு மளமளவென்று ஸ்ரீராமஜயம், ஸ்ரீராமஜயம் என்று உரக்கச் சொல்லத் தொடங்கினான்.   

ஆமாம்..அவனுக்குப் பேசும் திறன் வந்துவிட்டது. அதிசயித்துப் போனவர்கள் பெரியவரின் அனுகிரஹத்தை நினைத்து ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர என்று குரல் எழுப்ப, மெதுவாகக் கையை உயர்த்திய மகான், கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்த உபன்யாசகரை அழைத்தார். 

"நான் எதுவும் பண்ணலை ...எல்லாம் இவரால வந்தது. இவர் ஸ்ரீராமஜயம் எழுதச் சொல்லி நோட்டு கொடுத்தார் இல்லையா? ஸ்ரீராமஜயம் எழுதின புண்ணியம் இவனுக்கு வாக்கு வந்திருக்கு..! அதனால, இந்தப் பெருமை இவருக்குத்தான்!" உபன்யாசகரைச் சுட்டிக்காட்டி மகாபெரியவர் சொல்ல, அப்படியே நெக்குருகி நெகிழ்ந்து போனார் உபன்யாசகர். 

ஸ்ரீராமஜயம் எழுதச் சொல்கிறோமே, அதனால் என்ன பயன் என்று உபன்யாசகர் நினைத்தது மகானுக்கு எப்படித் தெரிந்தது? பேசாமல் இருந்த சிறுவன் பேசியது எப்படி? எல்லாம் அந்த மகானுக்கு மட்டுமே தெரிந்த தெய்வ ரகசியம்!      

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!

மகாபெரியவா சரணம்!! குருவே சரணம்!!

13 வகையான சாபங்கள்

*🍃🍃🍃🌸 சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?!*
1) பெண் சாபம், 
2) பிரேத சாபம், 
3) பிரம்ம சாபம், 
4) சர்ப்ப சாபம்,
5) பித்ரு சாபம், 
6) கோ சாபம், 
7) பூமி சாபம், 
8) கங்கா சாபம், 
9) விருட்ச சாபம், 
10) தேவ சாபம் 
11) ரிஷி சாபம் 
12) முனி சாபம், 
13) குலதெய்வ சாபம்
அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

*1) பெண் சாபம் :*

இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்
.
*2) பிரேத சாபம் :*
இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

*3) பிரம்ம சாபம்:*
நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது,
வித்தையை தவறாக பயன்படுத்துவது,
மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.

*4) சர்ப்ப சாபம்:*
பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,சர்ப்ப சாபம் உண்டாகும்.
இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.

*5) பித்ரு சாபம்:*
முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும்,பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.
பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.

*6) கோ சாபம்:*
பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

*7) பூமி சாபம்:*
ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.

*8) கங்கா சாபம்:*
பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.
கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

*9) விருட்ச சாபம்:*
பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

*10) தேவ சாபம்:*
தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

*11) ரிஷி சாபம்:*
இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.
ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

*12) முனி சாபம்:*
எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

*13) குலதெய்வ சாபம் :*
இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது.குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும்.தீயவர்களை அழிக்கும்.எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது.ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்.🍃🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🍃

Thursday 16 April 2020

உடல்கள் தான் வேறொழிய ஆன்மா ஒன்றே!-பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

சிற்றுயிர்களுக்கு இந்த புவியில் வாழ உரிமையுண்டு, அவர்களுக்கு உணா்வுகளும் உண்டு.

உடல்கள் தான் வேறொழிய ஆன்மா ஒன்றே!
-பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

நமது பண்பாட்டில் காலை எழுந்ததிலிருந்து ஓா் அறிவு ஜீவனான எறும்பில் ஆரம்பித்து காக்கை, ஆவினம் மற்றும் மனிதர்கள் அதை தொடா்ந்து இரவு படுக்கும் முன் நாய்களுக்கு பசிப்பினியகற்ற நம்மாளான கடமையாக அன்னமிடுதல் வலியுறுத்தப்படுகிறது.

இல்லங்களில் முன்பெல்லாம் கொசு விரட்டிகளையே பயன்படுத்தி வந்த நாம் ஆரோக்கியமாகவே இருந்தோம். தற்போது கொசு, கரப்பான், பல்லி (பல்லிகளை கொல்லுவது துலுக்க நம்பிக்கை) என அனைத்தையும் கொடூரமாக கொல்லும் மனோபாவத்தோடே கொல்லிகளான விஷங்களையே பயன்படுத்தி நாமும் அதனால் பாதிப்படைந்து மெல்ல மெல்ல அழிகின்றோம்.

மற்ற மற்ற உயிரனங்களை பார்கக நேர்ந்தால் உடனே கொல்ல முயல்கிறோம் அல்லது அதை துன்புறுத்தி விரட்ட முயல்கிறோம். இதில்  பல்லி, தவளை, காக்கை, அணில் , குயில், மயில், நாய், ஆவீனம் என ஏதுவும் மிஞ்சமில்லை பல சமயம் மனிதர்களும் தப்புவதில்லை. அவ்ளோ சுயநலம் மலிந்து கிடப்பது வெட்ககேடு!

எந்த உயிராேயினும் துன்பட்டால் அதன் மூலம் ஏற்படும் அதிர்வலைகள் நிச்சயம் சுற்றத்தை பாதிக்கும் என்பதைஉணர்ந்த நம் முன்னோர்கள்  எந்த உயிருக்கும் தீங்கிழைக்காத அறிய வாழ்கை முறையினை நமக்கு தந்தருளியுள்ளனர். அகங்காரத்தால் பல  புது புது காரணங்கள் சொல்லி நம் சமுதாயம் அதலிருந்து விலகி செல்வது கண்கூடு.

உலகின் சமநிலையை மனிதன் தன் அகங்காரத்தால் சீா்குலைத்து வருகிறான், தன் எதிா்கால சந்ததிகளுக்கு அழிவே பரிசாகும் என்பதை உணராமல்.

கவனம்:
#கா்மா அனைத்தையும் கவனித்து கொண்டேயிருக்கிறது.

முடவனை முரடன் அடித்தால் , முரடனை முனி அடிக்கும் என்பதே சனாதன தர்மத்தின் நம்பிக்கை. அது இன்றுவரை பலித்தே வருகிறது.

அப்பாவி ஆன்மாகள் சாந்தியடைய ப்ராா்த்தனைகள்...

பதிவு: Ranjeeth Vc

Sunday 12 April 2020

திருமாலிருஞ்சோலை எம்பெருமான் - கள்ளழகர்


உள்ளம் பெருங்கோயில் உன் உடம்பு
பேராலயமாக பேணி வளர்த்த உடம்பில்
எழுந்தருளிய எம்பிராமன் பிரிந்த செல்ல
துணிந்தமை கண்டு , அதனை ஆற்றாது
தடுத்து நிறுத்த திருமாலிருஞ்சோலை
எம்பெருமான் - கள்ளழகர் பெருமானை
பாடி மகிழ்கிறார்.

பாசுரம் - 1.
துக்கச் சூழலையைச் சூழ்ந்து கிடைந்த
வலையை அறப் பறித்து
புக்கினில் புக்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப்போகவிடுவதுண்டோ ?
மக்களது வரைக் கல்லிடைமோதஇழந்தவள்
வயிற்றில்
சிக்கனவந்துபிறந்துநின்றாய்திருமாலிருஞ்
எந்தாய்.


விளக்கவுரை .
திருமாலிருஞ்சோலை எந்தாய், கம்சனால்
தேவகி பெற்ற ஆறு குழந்தைகளையும்
கல்லில் மோதிக் கொல்ல, தேவகியின்
வயிற்றில் அவதாரம் செய்தருளியவனே!
நீ போகும் இடங்களில் எல்லாம் சென்று
உன்னைக் கண்டுகொண்டுதுன்பச்சூழலில்
சூழ்ந்து கிடந்த இந்த உடலை அவை முழு
மையாக அற்றுப் போகும்படி செய்தேன்.
இனி என்னை விட்டு பிரிந்துபோகமுடியுமா?
முடியாது.
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

பதிவுகள்

இத்தளத்தில் இடும் பதிவுகள் 

 ஸ்ரீ கண்ணன் திருக்கோயில் வாட்சப் குழுவில் இடம்பெற்றவைகளில் சிலவாகும்



உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு


சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

*சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.*

அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.

*தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் முஸ்லிம் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.*

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

*எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.*

உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

*வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.*

மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன. 

*ஏன் கோவிலை கட்டினார்கள்?*

*ஹிந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ???*

பாரத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.

*கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ????*

மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ????

*உலகின் குருவாக பாரதம் ஆனது எப்படி ???*

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் பட்ஜட் போடுவார்கள்.

இதையேதான் ஹிந்து கோயில்கள் செய்தன.

*கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.*

மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

*கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம்,  பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.*

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால்  கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.

*நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.*

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு  தொடர்ந்து வேலை.

*நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.*

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என, 
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள். 

*தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.*

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

*கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.*

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

*இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.*

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.

*12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.*

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் ஹிந்து கோயில்கள்.

*ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,* 

அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என, 
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை. 
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.

*மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.* 

இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன. இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.

*கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.*

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

*எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.*

உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி  அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக,  பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.*

இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு *தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, பாரதம் உலக குருவாக திகழ்ந்தது.*

அஷ்ட பைரவர்கள்

அஷ்ட பைரவர்கள்: 

1.   அசிதாங்க பைரவர்
2.   ருரு பைரவர்
3.   சண்ட பைரவர்
4.   குரோத பைரவர்
5.   உன்மத்த பைரவர்
6.   கபால பைரவர்
7.   பீஷண பைரவர்
8.   சம்ஹார பைரவர்

மேலும், வடுக பைரவர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர் என இரு நிலைகளும் உள்ளன.  வடுக பைரவரின் உருவங்களை நான்கு கரங்களுடனும், எட்டு கரங்களுடனும் காணலாம்.

எட்டு பைரவர்களின் வாகனங்கள்:

1.   அசிதாங்க பைரவர் -  அன்ன வாகனம்
2.   ருரு பைரவர் – காளை வாகனம்
3.   சண்ட பைரவர் – மயில் வாகனம்
4.   குரோத பைரவர் -  கருட வாகனம்
5.   உன்மத்தபைரவர் -  குதிரை வாகனம்
6.   கபால பைரவர் -  யானை வாகனம்
7.   பீஷண பைரவர் -  சிம்ம வாகனம்
8.   சம்ஹார பைரவர் -  நாய் வாகனம்

மகா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு பணிகளை செய்ய அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குவதாக நம்பப்படுகிறது. மேலும் சுவர்ண பைரவர் போன்ற சிறப்பு பைரவ தோற்றங்களும் காணப்படுகின்றன.

அஷ்ட(எட்டு) பைரவர்கள்
திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.

அசிதாங்க பைரவர்

அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். இப்பைரவர் காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்செய்கிறார். அன்ன பறவையினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.

ருரு பைரவர்

ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். ரிசபத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான காமாட்சிவிளங்குகிறாள்.

சண்ட பைரவர்

சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் துர்க்கை கோவிலில் அருள்செய்கிறார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரிவிளங்குகிறாள்.

குரோதன பைரவர்

குரோத பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவிவிளங்குகிறாள்.

உன்மத்த பைரவர்

உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பீம சண்டி கோவிலில் அருள்செய்கிறார்.குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.

கபால பைரவர்

கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள்செய்கிறார். கருடனைவாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில்ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.

பீக்ஷன பைரவர்

பீக்ஷன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் பூத பைரவ கோவிலில் அருள்செய்கிறார். சிங்கத்தைவாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில்ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.

சம்ஹார பைரவர்

சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார்.நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.

காசி மாநகரில் திசைக்கொன்றென எட்டு திசைகளிலும் பைரவர் கோவில் அமைந்துள்ளது. அவையாவன 

அசிதாங்க பைரவர் - விருத்தகாலர் கோயில்
குரோத பைரவர் - காமாட்சி ஆலயம் 
உன்மத்த பைரவர் - பீம சண்டி கோயில்
ருரு பைரவர் - அனுமன் காட்டில்
கபால பைரவர் - லாட் பஜாரில்
சண்ட பைரவர் - துர்க்கை கோயிலில்
பீஷண பைரவர் - பூத பைரவத்தில்
சம்ஹார பைரவர் - த்ரிலோசன சங்கம்.

அறுபத்து நான்கு பைரவர்கள்
பைரவ மூர்த்தி அறுபத்து நான்கு பணிகளைச் செய்யும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவராக தோற்றமளிக்கின்றார்.

1. நீலகண்ட பைரவர்
2. விசாலாக்ஷ பைரவர்
3. மார்த்தாண்ட பைரவர்
4. முண்டனப்பிரபு பைரவர்
5. ஸ்வஸ்சந்த பைரவர்
6. அதிசந்துஷ்ட பைரவர்
7. கேர பைரவர்
8. ஸம்ஹார பைரவர்
9. விஸ்வரூப பைரவர்
10. நானாரூப பைரவர்
11. பரம பைரவர்
12. தண்டகர்ண பைரவர்
13. ஸ்தாபாத்ர பைரவர்
14. சீரீட பைரவர்
15. உன்மத்த பைரவர்
16. மேகநாத பைரவர்
17. மனோவேக பைரவர்
18. க்ஷத்ர பாலக பைரவர்
19. விருபாக்ஷ பைரவர்
20. கராள பைரவர்
21. நிர்பய பைரவர்
22. ஆகர்ஷண பைரவர்
23. ப்ரேக்ஷத பைரவர்
24. லோகபால பைரவர்
25. கதாதர பைரவர்
26. வஞ்ரஹஸ்த பைரவர்
27. மகாகால பைரவர்
28. பிரகண்ட பைரவர்
29. ப்ரளய பைரவர்
30. அந்தக பைரவர்
31. பூமிகர்ப்ப பைரவர்
32. பீஷ்ண பைரவர்
33. ஸம்ஹார பைரவர்
34. குலபால பைரவர்
35. ருண்டமாலா பைரவர்
36. ரத்தாங்க பைரவர்
37. பிங்களேஷ்ண பைரவர்
38. அப்ரரூப பைரவர்
39. தாரபாலன பைரவர்
40. ப்ரஜா பாலன பைரவர்
41. குல பைரவர்
42. மந்திர நாயக பைரவர்
43. ருத்ர பைரவர்
44. பிதாமஹ பைரவர்
45. விஷ்ணு பைரவர்
46. வடுகநாத பைரவர்
47. கபால பைரவர்
48. பூதவேதாள பைரவர்
49. த்ரிநேத்ர பைரவர்
50. திரிபுராந்தக பைரவர்
51. வரத பைரவர்
52. பர்வத வாகன பைரவர்
53. சசிவாகன பைரவர்
54. கபால பூஷண பைரவர்
55. ஸர்வவேத பைரவர்
56. ஈசான பைரவர்
57. ஸர்வபூத பைரவர்
58. ஸர்வபூத பைரவர்
59. கோரநாத பைரவர்
60. பயங்க பைரவர்
61. புத்திமுக்தி பயப்த பைரவர்
62. காலாக்னி பைரவர்
63. மகாரௌத்ர பைரவர்
64. தக்ஷிணா பிஸ்திதி பைரவர்

சொர்ண ஆகர்ஷண பைரவர்

சுவர்ண கால பைரவர் , திருவண்ணாமலை
செல்வத்திற்கு அதிபதியான பைரவரை சொர்ண ஆகர்ஷண பைரவர் என்றழைக்கின்றார்கள். இந்த திருக்கோலத்தில் இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தந்தருளியவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திரமாக வைத்திருப்பதாக சொல்கிறார்கள். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றொரு சிறப்பு. 

கால பைரவர்

காசி மாநகரில் காவல் தெய்வமாகவும் காக்கும் கடவுளாகவும் காலபைரவர் திகழ்கிறார். காசியில் பைரவருக்கு வழி பாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடு கள் நடைபெறும் வழக்கம் உள்ளது. காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும் என்பது விதியாகும்.
வேறு பைரவ வடிவங்கள்
"அமர்தகர்" என்றும், "பாப பக்ஷணர்" என்றும் பைரவர் அழைக்கப் பெருகிறார். அமர்தகர் என்பதற்கு தான் என்ற அகங்காரத்தினை அழிப்பவர் என்றும், "பாப பக்ஷணர்" என்றால் பக்தர்கள் அறியாமையால் செய்யும் பாவங்களைப் போக்குவர் என்று பொருள்.

பைரவ வழிபாடு

தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
அபிசேகப்பிரியான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்ததாக கூறப்படுகிறது. அதனுடன் வாசனை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ. பச்சை கற்பூரம் ஆகியவையும் அபிசேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

பைரவ விரதம்

பைரவ விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்புவாய்ந்ததாகும்.பைரவ மூர்த்தி விரதத்தினை தொடர்ந்து இருபத்து ஒரு முறை இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.

தேய்பிறை அஷ்டமி நாளில் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்குகின்றனர். அந்த நாளில் நாம் பைரவரை வணங்குவதால் பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறுவோம். ராகு காலத்தில் பைரவர் சன்னதியில் அமர்ந்து சொர்ணாகர்ஷண பைரவரின் மூல மந்திரத்தை ஜெபித்து வந்தால் கடன் தொல்லை நீங்கும்.

1. கால பைரவாஷ்டகம் ஆதிசங்கரர் அருளியது

 இதனை சனிக்கிழமை தோறுமோ அல்லது அஷ்டமித் திதி அன்றோ பாராயணம் செய்து வந்தால் பிணிகள் அகலும். வாழ்க்கை வளம் பெருகும்.

2. சொர்ணாகர்ஷண பைரவர் ஸ்தோத்திரம்:

  “ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்
   ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய
   அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய
   ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
   மம தாரித்தர்ய வித்வேஷணாய
   ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:”

இந்த மந்திரத்தை தினம் தோறும், பைரவரை வழிபட்டுப் பாராயணம் செய்து வந்தால் செல்வ வளம் பெருகும். கடன்கள் தீரும்.

3.வடுக பைரவ மூல மந்த்ரம்:

  “ஓம்  வடுகாய நம

சர்வ சத்ரு நாசத்திற்கும் ஆபத்துகள் விலகவும் மேற்கண்ட மந்திரம்.

4.பைரவ காயத்ரி 1:

  “ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே                                     ஸ்வாந வாஹாய தீமஹி
   தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

இது நம்மைத் துன்பங்கள், துயரங்கள் அணுகாமல் இருக்க…

பைரவர் காயத்ரி 2:

  “ஓம் திகம்பராய வித்மஹே                 தீர்கதிஷணாய தீமஹி                                              தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

நீடித்த ஆயுளுக்கும், பகைவர்கள் தொல்லை அணுகாமல் இருக்கவும் மேற்கண்ட மந்திரம்.

Thursday 2 April 2020

ஸ்ரீரங்கத்துக் கைங்கர்யபரர்களின் பட்டியல்( என்னே தமிழ்ச் சொற்களின் இனிமை!)



எழுபத்து நான்கு முதலிகளான ஆசார்யபுருஷர்கள் சத்ர சாமரங்கள் 

திருவாலவட்டங்கள் 

திருப்பதாகைகள் 

திருப்பாது கைகள் 

தொடக்கமானவற்றை தரித்துக் கொண்டு செல்ல;
மற்றுமுண்டான சாத்தின, சாத்தாத முதலிகள் அனைவரும் நூற்றந்தாதி அநுஸந்தானத்தோடே நடந்துவர (திருவரங்கம் திருவீதிகளிலே இயல் ஸேவிக்கும் கைங்கர்யம் சாற்றின முதலிகளான யஜ்ஞோபவீதம் தரித்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும், 

அவ்வாறு யஜ்ஞோபவீதம் தரித்துக்கொள்ளாத, ஆனால் அனைத்து பகவத் பாகவத கைங்கர்யத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட சாத்தாத முதலிகளும் செய்து வந்தனர் என்பது இதனால் அறியப்படுகிறது); 

வேறே சிலர் 

விஜயத்வஜங்களான ஹம்ஸத்வஜம், ஹநுமத்வஜம் முதலான த்வஜங்களைத் தரிப்பாராய்; காஷாய வேஷ அநுரூபமான ஸமயக்குடை பிடிப்பாராய்;

பூரண பொற்குடங்களைத் தரிப்பார், 
திருவொண்பந்தம் பிடிப்பார்,
 திருவீதி செப்பனிடுவார், 
திருநீர் பரிமாறுவார், 
பூமழையாக மலர் சொரிவார், 
வாழைக்குலைகளைத் திருவீதி யெங்கும் நாட்டுவார், தோரணம் நிரைப்பார், 
பூந்தோப்புக்கள் சமைப்பார்,
 பொரிகளைச் சிதறுவார்,
 எண்ணெய் இறைத்து ஆடுவார், 
பரிவரான திருமேனி காவலர் ஆயுதங்களை ஏந்திச் செல்வார்; 

இப்படிப் பல்விதமான பணிவிடைகளில் அந்வயிப்பாராய் ஸேவித்துக் கொண்டுபோக;

கோயிலிலுண்டான சங்க, காஹள, பேரீ, ம்ருதங்க, பணவம் தொடக்கமான வாத்யங்கள் கடல்போல் கோஷிக்க; இராமாநுசனைத் தொழும் பெரியோர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் அந்த வாத்ய கோஷத்தைக் கேட்டு எழுந்திரைத்தாடி நகரிவலம் செய்து பெரிய திருநாள் போன்று தம்மை ஸேவித்துக் கொண்டு வருகிற அளவில்,

எம்பெருமானாரும் சப்தங்களையும் கோஷங்களையும் காண்பது கேட்பதாய்க் கொண்டு பெருமகிழ்ச்சியுடன் எழுந்தருளியிருந்தார்.